07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 28, 2008

வலைச்சரத்தில் என் 'தலை' எழுத்து!






எனக்குத்தெரிந்த வளைச்சரம் இதுதாங்க! என்னைப்போய் வலைச்சரம் தொடுக்க முத்துலட்சுமி அன்புக்கட்டளையிட்டப்போ கொஞ்சம் திகைப்பாயிருந்தது.!சீனாவும் வலைசரம் தொடுத்துடுங்க ஏதும் உதவிதேவைன்னா தயங்காம கேளூங்கன்னு மடல் அனுப்பிட்டார்.முதல்ல நன்றி முத்துலட்சுமிக்கும் சீனாவுக்கும்.

நான்பாட்டுக்கு பத்திரிகைளுக்கு கதை பண்ணிட்டு-ஸாரி-எழுதிட்டு இருந்தேன்…(இருக்கேன் !!)

ஆறுவருஷம் முன்பு இணையத்தில் மன்றமையம்ல கவிதைக்குக்கவிதைமூலமா தத்திதத்தி தட்டச்சி உள்ளவந்தேன்..இப்போ ஜீவ்சா இருக்கும் அன்புத்தம்பி ஐயப்பன் மன்றமையத்துல கவிதை எழுதுவாரு. என்னை மரத்தடி.காமுக்கு அழைச்சிட்டு வந்த பெருமை அவருக்கு சேரும்.மரத்தடில வந்ததும் நிறைய நட்பும்கிடைச்சிது ..அங்க
எழுதிக்குவிச்சேன் என்பதைவிட நிறைய குறும்பும் அன்புமாய் மடலிட்டுக்கொண்டு நட்பு வட்டத்தைக்கூட்டிக்கொண்டேன் என்பது நிஜம்! அங்கிருந்தபோதே பலருடைய வலைத்தளங்களை பார்வையிட்டு பின்னூட்டமிட்ட என்னை சொந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்படி சிலர் கேட்டுக்கொண்டர்கள்.



பாரதியைப்பிடிக்கும் ஆகவே அவருடைய வாக்கான எண்ணியமுடியவேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் என்ற வரிகளை என் வலைமொழியாய் வைத்து அமைத்தேன் . ஆரம்பிச்சேனே தவிர அப்படி ஒண்ணும் அதிகமா எழுதவே இல்ல எனலாம்.

தமிழ்சங்கம் மற்றும் கண்ணன்பாட்டுல ஓரளவு என்பங்கு இருக்கும். அதுவும் அதிகமில்லை!

வலை ஆரம்பிச்ச உடனே தேன்கூடு போட்டில ஆறுதல் பரிசு இந்தக்கவிதைக்குக் கிடச்சிது கொஞ்சம் காதல்ரசம் அதிகமிதுல

அன்னையர்தினத்துக்கு அம்மா பத்தி நான் எழுதின கட்டுரை எனக்கு ரொம்பவே பிடிச்சது. அம்மா பத்தி எழுதினாலே அது நல்லாத்தான் வருது இல்லையா?

போனவருஷம் …வா.வ.ச நடத்தின போட்டில ராயல்ராமினை மையமா வச்சி குழந்தைகள் அடிச்சலூட்டியினை கட்டுரை எழுதினதுல பரிசுகொடுத்தாங்க.

காக்ககாக்க காலணி காக்க ன்னு நகைச்சுவை கட்டுரை எழுதினேன். அது நிஜமா நட்ந்ததுதான் …எழுதறப்போவே நான் சிரிச்சது இதை!

சீரியசா எழுதின சிலகவிதைகள் சில மட்டும் இங்க…, இங்க

அப்புறம் அன்புடன் நடத்தின போட்டில ஒலிகவிதைக்கு பரிசைவாங்கிட்டு திரும்ப வலைமனையை பூட்டிட்டேன்.

அதை தூசிதட்டி எழுப்பவைச்ச பெருமை டாக்டர் வீஎஸ்கேவுக்கே சேரும்! அப்போவும் ஒண்ணும் இங்க வலைச்சரத்துல இதுவரை எழுதின மத்தவங்க மாதிரி நான் அதிகம் எழுதியதாய் தெரியல! இதுல இந்தவருஷ ஆரம்பத்துல புதுவருஷ உறுதிமொழின்னு எடுத்தபடி இனிமே அடிக்கடி வலைத்தளத்துல எழுதணும்னு ஓரளவு எழுதிட்டுதான் வரேன்.

நேரம் கிடைக்கிறப்போ எல்லாரும் வந்து படிச்சி கருத்து சொன்னீங்கன்னா மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..டாக்டர் வீ எஸ்கே அல்லது சுவாதி அல்லது மஞ்சூர்ராசா அல்லது கேஆரெஸ் விளக்கம் தருவாங்க) செஞ்சி தருவேன்!

ரொம்ப என்னைப்பத்தி சொல்லிக்க எதுவுமில்ல எல்லார்கிட்டயும் அன்பாய் பழகணும் என்கிற எண்ணம் இருக்கிற சராசரிப்பெண்தாங்க!

நாளைக்கு இணைய நண்பர்களின் + சிநேகிதிகளின் வலைப்பூக்கள் பறிச்சிட்டு சரம் தொடுத்திட்டு வரேன், என்ன?

72 comments:

  1. மங்களூர் சிவா said...
    me the firstu

    >>>அதான் சிவா எப்போவும் க்ரேட்டு!நன்றி சிவா!

    ReplyDelete
  2. மங்களூர் சிவா said...
    welcome shylajaa akkaa

    >>>>முதல்பதிவை இட்டாச்சு..பாஸா ஃபெயிலா தெரியலயே சிவா?:):)

    ReplyDelete
  3. திகழ்மிளிர் said...
    வாழ்த்துக்கள்
    >.நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  4. யக்கா... அவ்ங்க கேட்ட வலை ஒன்னு நீங்க போட்ட வளை ஒன்னு. ஹி ஹி ஹி... நக்கீரனாக்கும். குத்தம் குறை இருந்தா அப்பிடியே போட்டுடுவோமில்ல..

    பச்ச புள்ள‌

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா :)

    ReplyDelete
  7. சிறப்பாக இருக்கிறது.
    இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன்.
    -சூர்யா

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஷைலாக்கா. இன்னும் நிறைய எழுதுங்கள் காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  11. சைலு மாமி,

    வலை யோசை கல கலவென கவிதைகள் படிக்குது துடிக்குது நெஞ்சம் காற்றும் வீசுதே,,,,,,(பாடல் நினைவுக்கு வருகிறது)

    இந்த வலையில்
    உங்கள் வலை (எழுத்து)
    எவர் மனதையும்
    வளைக்காமல்தான்
    இருந்திட முடியுமா? :-)

    இன்னும் வளர வாழ்த்துக்கள்!

    ~தஞ்சை-மீரான்~

    ReplyDelete
  12. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே :-)

    ReplyDelete
  13. மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை! :))))))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஷைலஜா, உங்க அம்மா கட்டுரை மனசை நெகிழ வைத்தது

    ReplyDelete
  15. ஒருத்தருடைய தலையெழுத்து மோசமா இருந்துச்சுன்னா பாதிப்பு சுத்தியிருக்கிற நாலு பேருக்கும் அடி விழுகுமாம்..

    வாங்கிக்கத்தான் வேணும்.. இது எங்க தலையெழுத்து..

    ReplyDelete
  16. வலைச்சரம் மலர் தோரணமாக இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  17. // ramachandranusha(உஷா) said...

    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே :-)//


    நானும் ஒரு முறை

    " மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" போட்டுடறேன்

    அதாங்க ரிப்பீட்டேய்.. இனிமே எல்லாரும் மறுக்காச் சொல்லேய் சொல்லலாமே ;)

    இப்போ ஜீவ்சா இருக்கும் அன்புத்தம்பி ஐயப்பன் மன்றமையத்துல கவிதை எழுதுவாரு. என்னை மரத்தடி.காமுக்கு அழைச்சிட்டு வந்த பெருமை அவருக்கு சேரும்.//

    தன்யனானேன்!!
    //

    ReplyDelete
  18. yesmoorthy said...
    யக்கா... அவ்ங்க கேட்ட வலை ஒன்னு நீங்க போட்ட வளை ஒன்னு.>>

    ச்சும்மா தமாஷுக்குப்போட்டேன் பச்சபுள்ள!!

    ஹி ஹி ஹி... நக்கீரனாக்கும். குத்தம் குறை இருந்தா அப்பிடியே போட்டுடுவோமில்ல..

    பச்ச புள்ள‌//
    நாங்க நெத்திக்கண்ண திறக்கமாட்டோம்ல? பயப்படாம குத்தம்குறை சொல்லுங்க க்ரீன் சைல்டு!

    ReplyDelete
  19. எம்.ரிஷான் ஷெரீப் said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா
    >>வாங்க தம்பி
    மைசூர்பாக் ரெடி உங்களுக்கு!

    ReplyDelete
  20. .ஜி.எஸ் said...
    சிறப்பாக இருக்கிறது.
    இன்னும் சிறக்க வாழ்த்துகிறேன்.
    -சூர்யா

    >>>> நன்றி சூர்யா!!! சிறக்க எழுத முயலுகிறேன்.

    ReplyDelete
  21. ஜீவா (Jeeva Venkataraman) said...
    வாழ்த்துக்கள் மேடம்
    >>>>>>> நன்றி ஜீவா.

    ReplyDelete
  22. கோபிநாத் said...
    வாழ்த்துக்கள் அக்கா ;))

    >>>>நன்றி கோபிநாத்!!!

    ReplyDelete
  23. மின்னல் said...
    வாழ்த்துகள் ஷைலாக்கா. இன்னும் நிறைய எழுதுங்கள் காத்திருக்கின்றோம்

    >>>>>> நன்றி மின்னல்...இனிவரும் நாட்களில் இயன்ற அளவு எழுதுகிறேன்

    ReplyDelete
  24. MEERAN MYDEEN said...
    சைலு மாமி,

    வலை யோசை கல கலவென கவிதைகள் படிக்குது துடிக்குது நெஞ்சம் காற்றும் வீசுதே,,,,,,(பாடல் நினைவுக்கு வருகிறது)

    இந்த வலையில்
    உங்கள் வலை (எழுத்து)
    எவர் மனதையும்
    வளைக்காமல்தான்
    இருந்திட முடியுமா? :-)

    இன்னும் வளர வாழ்த்துக்கள்!

    ~தஞ்சை-மீரான்~

    /// மிக்க நன்றி மீரான்...வலைசரம் மூலம் வளைச்சிபோட்டுடலாமா எல்லாரையும்?:):)

    ReplyDelete
  25. ramachandranusha(உஷா) said...
    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே

    >>>>ஆ உஷா!! உங்க பதிவுகளின் பரம் ரசிகை நான்!! நீங்க இங்க எழுந்தருளியதில் மனம் குளிர்கின்றதே!! ஆமா உஷா மரத்தடி நினைவுகள் என்றும் மலரும் நினைவுகள்தானே!

    ReplyDelete
  26. கீதா சாம்பசிவம் said...
    மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை! :))))))

    >>>>ஆமா கீதா! தண்ணில(நம்மகுழுல) மீன் நீஞ்சும் இது வலையாச்சே சிக்கல் இல்லாமல் சரம் தொடுக்க
    சாமிகிட்ட வேண்டிகிட்டேன்:)

    ReplyDelete
  27. சின்ன அம்மிணி said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா, உங்க அம்மா கட்டுரை மனசை நெகிழ வைத்தது

    >>>>>நன்றிங்க சின்ன அம்மிணி.
    அந்தக்கட்டுரை பிடிச்சுதா? ஆமா அம்மா பத்தினதாச்சே?அதான்.அன்பில் நெகிழ்ந்துதான் போகும் .வருகைக்குநன்றி

    ReplyDelete
  28. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஒருத்தருடைய தலையெழுத்து மோசமா இருந்துச்சுன்னா பாதிப்பு சுத்தியிருக்கிற நாலு பேருக்கும் அடி விழுகுமாம்..

    வாங்கிக்கத்தான் வேணும்.. இது எங்க தலையெழுத்து..//

    அதாவது உண்மைத்தமிழன் நான் சொல்ல வந்தது தலையாய(முதல்) எழுத்து என்று அதை அப்படி தமாஷா எழுதினேன் நீங்களும் அப்படித்தானே பின்னூட்டமிட்டிருக்கீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    April 28, 2008 1:55

    ReplyDelete
  29. மஞ்சூர் ராசா said...
    வலைச்சரம் மலர் தோரணமாக இனிய வாழ்த்துகள்//

    நன்றி மஞ்சூர்ராசா.

    ReplyDelete
  30. Jeeves said...
    // ramachandranusha(உஷா) said...

    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே :-)//


    நானும் ஒரு முறை

    " மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" போட்டுடறேன்

    அதாங்க ரிப்பீட்டேய்.. >>>>
    வாங்க ஜீவ்ஸ் எனும் ஐயப்ஸ்...
    உங்க உதவியை நான் மறப்பேனாதம்பி?
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  31. கலக்குங்க, காத்திருக்கிறோம்

    ReplyDelete
  32. கானா பிரபா said...
    கலக்குங்க, காத்திருக்கிறோம்

    >>>>காஃபிதான் ஒழுங்கா கலக்கத்தெரியும்!! நன்றி கானா ப்ரபா உங்க வருகைகும் கருத்துக்கும். கண்டிப்பா கலக்கலா எழுத விருப்பமாய் செய்வேன் காத்திருங்க!

    ReplyDelete
  33. வளைக்கரம் திரட்டும் வலைச்சரமா?
    இப்போது தான் முன்னுரையா? அடுத்த உரையில் மை.பா செய்முறை இல்லை இல்லை மை.பா அடி தடி வகை வருமா?

    :):)

    வாழ்த்துகள் தோழி!

    மீண்டும் வருவேன் பகுதி பகுதியாக படித்து மகிழ......

    அன்புடன்
    சுவாதி.

    ReplyDelete
  34. ஸ்வாதி said...
    வளைக்கரம் திரட்டும் வலைச்சரமா?>>

    ஆமா சுவாதி இதுக்காகவே ஒருடஜன் வளை கைல போட்ருக்கேன் இப்போ!!

    இப்போது தான் முன்னுரையா? >>>>

    ஆமா அறிமுக இழை முதல்ல..அடுத்து உங்களமாதிரி நட்புகளின் வலைப்பூக்களை சொல்லப்போறேன்

    அடுத்த உரையில் மை.பா செய்முறை இல்லை இல்லை மை.பா அடி தடி வகை வருமா?

    :):)
    >>
    ஆஹா இப்படி மைபாவை ஓடஓட விரட்ட சுவாதிதான் வரணும்!!! நன்றி வருகைக்கு தோழி!
    வாழ்த்துகள் தோழி!

    மீண்டும் வருவேன் பகுதி பகுதியாக படித்து மகிழ......
    >>>
    :):) நன்றி.

    அன்புடன்
    சுவாதி.

    April 28, 2008

    ReplyDelete
  35. வாங்க ஷைலஜா அக்கா. முதல்ல வாழ்த்துக்கள் சொல்லிடுறேன்(அப்புறம் என்ன சொல்லுவேன்னு நினைக்குறீங்க தானே). நீங்க தானே மூலிகை ஆராய்ச்சி பண்ணினது. அத முழுசா படிச்சி ஏமாந்த அப்பாவி தான் தாங்க. நல்லா ஆராய்ச்சி பண்ணுனீங்க போங்க. உங்க ப்ளாக்குக்கு முதலும் கடைசியுமா போனது அப்ப தான். இப்ப கூட கொஞ்ச பயத்தோடு தான் இங்க வந்து இருக்கேன்.

    ReplyDelete
  36. ///எனக்குத்தெரிந்த வளைச்சரம் இதுதாங்க!///

    படத்த பார்த்தா வளைச்சரமா இல்ல வளைந்தசரமா ன்னு கேக்க தோணுதே?

    ReplyDelete
  37. ///பாரதியைப்பிடிக்கும் ///

    அடடா என்னைய உங்களுக்கு பிடிக்குமாக்கா சொல்லவே இல்ல?

    ReplyDelete
  38. ///அம்மா பத்தி எழுதினாலே அது நல்லாத்தான் வருது இல்லையா?///

    ஆமாம். ஆமாம். ஆமாம்.

    ReplyDelete
  39. ///நேரம் கிடைக்கிறப்போ எல்லாரும் வந்து படிச்சி கருத்து சொன்னீங்கன்னா மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..டாக்டர் வீ எஸ்கே அல்லது சுவாதி அல்லது மஞ்சூர்ராசா அல்லது கேஆரெஸ் விளக்கம் தருவாங்க) செஞ்சி தருவேன்!///


    ஆஹா இதபத்தி நான் எங்கயோ படிச்சேனே? எங்க..எங்க...இருங்க யோசிச்சி சொல்லுறேன்(தெரியும்னு சொன்ன மாதிரியும் ஆச்சு எப்படின்னு சொல்லாமலும் தப்பிச்சாச்சு)

    ReplyDelete
  40. ///ரொம்ப என்னைப்பத்தி சொல்லிக்க எதுவுமில்ல எல்லார்கிட்டயும் அன்பாய் பழகணும் என்கிற எண்ணம் இருக்கிற சராசரிப்பெண்தாங்க!///



    அடடா அன்பே உருவான ஷைலஜா அக்கா நீங்கதான்னு சொன்னாங்க. சரி தான்.

    ReplyDelete
  41. ///நாளைக்கு இணைய நண்பர்களின் + சிநேகிதிகளின் வலைப்பூக்கள் பறிச்சிட்டு சரம் தொடுத்திட்டு வரேன், என்ன?///

    சரி சரி வாங்க. அதுக்குள்ள இங்க உள்ள லிங்க் படிச்சுடுறேன்.

    ReplyDelete
  42. ///ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    me the firstu

    >>>அதான் சிவா எப்போவும் க்ரேட்டு!நன்றி சிவா!///


    சிவா கிரெட்டா? தெரியாம போச்சே?

    ReplyDelete
  43. ////ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    welcome shylajaa akkaa

    >>>>முதல்பதிவை இட்டாச்சு..பாஸா ஃபெயிலா தெரியலயே சிவா?:):)///



    பாஸ் தான்.

    ReplyDelete
  44. ///சின்ன அம்மிணி said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா, உங்க அம்மா கட்டுரை மனசை நெகிழ வைத்தது///


    என்னது அவங்க அம்மா கட்டுரையா? அப்ப ஷைலஜா அக்கா எழுதுனது இல்லையா?

    ReplyDelete
  45. ///ஷைலஜா said...
    எம்.ரிஷான் ஷெரீப் said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா
    >>வாங்க தம்பி
    மைசூர்பாக் ரெடி உங்களுக்கு!///



    அக்கா எனக்கு?

    ReplyDelete
  46. சரி நான் கிளம்புறேன்!

    ReplyDelete
  47. சரி வந்தது வந்தாச்சு. இது 50.

    ReplyDelete
  48. அச்சச்சோ ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்துட்டு போனத முத்தக்கா கிட்ட சொல்லிடாதீங்க.

    ReplyDelete
  49. இப்படியா கண்ணாடி வளையல்-ல வளைச்சரம் கோக்கறது!
    ஷைலு அக்கா கிட்ட இருக்கும் வைர வளையல்களை எல்லாம் எடுத்து கடைபரப்புங்க அக்கோவ்! :-)

    எனக்கு ரொம்ப பிடிச்சது காக்க காக்க காலணி காக்க! அம்புட்டு சூப்பர்! பாதுகா எக்ஸ்ப்ரெஸ்-ன்னு இன்னொரு பேரும் அந்தக் கதைக்கு உண்டு! :-)

    //மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..//

    ஆமா! ஆமா!

    //டாக்டர் வீ எஸ்கே//
    ஸைல்ஸ் பண்ண தப்புக்குப் பாவம் இவரு தான் பிட்டுக்கு மைசூர்பா சுமந்தது! :-)

    ReplyDelete
  50. //கேஆரெஸ் விளக்கம் தருவாங்க)//

    லேட்டாக் குடுத்தாலும் லால்-பாக்கில் மைசூர்-பாக் தான் சூப்பர்.
    லேட்டாக லேட்டாகத் தான் ஏதோ ஒன்னு நல்லா போதை ஏறுமாமே! :-)
    அதே போல ஷைலு அக்கா லேட்டாக் கொடுத்த மைசூர்பாவின் சுவையே சுவை! இன்னும் என் நாக்கில் கரைஞ்சிக்கிட்டே இருக்கு! :-)

    ReplyDelete
  51. இதனால் தமிழ் கூறும் பதிவுலகத்துக்குச் சொல்லிக்கிறது என்னான்னா...
    இந்த மை.பா பிரசாதத்தின் மகிமையே மகிமை!
    ஒரு மை.பா சாப்பிட்டாப் போதும்! ஓவர் நைட்ல ஸ்டார் ஆயிடுவீங்க! இன்னும் வேற என்னன்னமோ எல்லாம் ஆயிருவீங்க!

    அதுனால எல்லாரும் அக்கா கிட்ட மை.பாவைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :-)
    சரி தானே ஜீவ்ஸ் அண்ணாச்சி? :-)

    ReplyDelete
  52. வளையல்களை இப்படி சாய்கிறதுக்கு முன்னாடி அவற்றை நிறக வைக்கணுமே.

    எப்படி நிறக வச்சீக சாய்லஜா?

    ReplyDelete
  53. நிஜமா நல்லவன் said...
    வாங்க ஷைலஜா அக்கா. முதல்ல வாழ்த்துக்கள் சொல்லிடுறேன்//

    நன்றி நிஜமா நல்லவன்,ஆமா அதென்ன நலல்வன்போதாதா இதுல நிஜம் எதுக்காம்?:) ச்சும்மா கிட்டிங்.

    //(அப்புறம் என்ன சொல்லுவேன்னு நினைக்குறீங்க தானே). நீங்க தானே மூலிகை ஆராய்ச்சி பண்ணினது. அத முழுசா படிச்சி ஏமாந்த அப்பாவி தான் தாங்க. நல்லா ஆராய்ச்சி பண்ணுனீங்க போங்க. உங்க ப்ளாக்குக்கு முதலும் கடைசியுமா போனது அப்ப தான். இப்ப கூட கொஞ்ச பயத்தோடு தான் இங்க வந்து இருக்கேன்//

    அட்டே அது ஏப்ரல்முதல்தேதிவரவேண்டிய பதிவுங்க
    அதுலயும் ஏமாத்திட்டேன்....பயப்படாதீங்க உங்க அன்பு அக்கா இல்லையா நான்?:) வருகைக்கு நன்றி

    ReplyDelete
  54. நிஜமா நல்லவன் said...
    !///

    படத்த பார்த்தா வளைச்சரமா இல்ல வளைந்தசரமா ன்னு கேக்க தோணுதே?//

    வளைன்னாலே வளைஞ்சிதானே வட்டமாகும்? அதனால்தான் வளைந்துகொடுக்கும் பெண்கள் அணிகிறார்களோ?:)

    April 28, 2008

    ReplyDelete
  55. ஜமா நல்லவன் said...
    ///பாரதியைப்பிடிக்கும் ///

    அடடா என்னைய உங்களுக்கு பிடிக்குமாக்கா சொல்லவே இல்ல?
    //

    உங்கள என்ன எல்லாரையும் பிடிக்குமே?:)

    ReplyDelete
  56. நிஜமா நல்லவன் said...
    ///அம்மா பத்தி எழுதினாலே அது நல்லாத்தான் வருது இல்லையா?///

    ஆமாம். ஆமாம். ஆமாம்.//
    அதே அதே!




    நிஜமா நல்லவன் said...
    ///நேரம் கிடைக்கிறப்போ எல்லாரும் வந்து படிச்சி கருத்து சொன்னீங்கன்னா மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..டாக்டர் வீ எஸ்கே அல்லது சுவாதி அல்லது மஞ்சூர்ராசா அல்லது கேஆரெஸ் விளக்கம் தருவாங்க) செஞ்சி தருவேன்!///


    ஆஹா இதபத்தி நான் எங்கயோ படிச்சேனே? எங்க..எங்க...இருங்க யோசிச்சி சொல்லுறேன்(தெரியும்னு சொன்ன மாதிரியும் ஆச்சு எப்படின்னு சொல்லாமலும் தப்பிச்சாச்சு)

    தெரில்லனா யாரு விட்டா?:)

    ReplyDelete
  57. நிஜமா நல்லவன் said...
    ///ரொம்ப என்னைப்பத்தி சொல்லிக்க எதுவுமில்ல எல்லார்கிட்டயும் அன்பாய் பழகணும் என்கிற எண்ணம் இருக்கிற சராசரிப்பெண்தாங்க!///



    அடடா அன்பே உருவான ஷைலஜா அக்கா நீங்கதான்னு சொன்னாங்க. சரி தான்.>>>>>

    உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்றார் பாரதி அதன்படி நடக்க பிரியப்படறேன் என்ன சொல்றீங்க? (அதட்டலைங்க அன்பாத்தான் கேக்கறேன்:):)

    April 28, 2008 7:19

    ReplyDelete
  58. நிஜமா நல்லவன் said...
    ///நாளைக்கு இணைய நண்பர்களின் + சிநேகிதிகளின் வலைப்பூக்கள் பறிச்சிட்டு சரம் தொடுத்திட்டு வரேன், என்ன?///

    சரி சரி வாங்க. அதுக்குள்ள இங்க உள்ள லிங்க் படிச்சுடுறேன்
    //

    படிச்சாச்சா?:)

    ReplyDelete
  59. நிஜமா நல்லவன் said...
    ///ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    me the firstu

    >>>அதான் சிவா எப்போவும் க்ரேட்டு!நன்றி சிவா!///


    சிவா கிரெட்டா? தெரியாம போச்சே?

    >>>>>மங்களூர்சிவா க்ரேட்டுதான் தெரியாதா?:)டக்குனு எனக்கு முதல்பின்னூடமிட்டா நீங்களும் க்ரேட்டு:)

    ReplyDelete
  60. நிஜமா நல்லவன் said...
    ////ஷைலஜா said...
    மங்களூர் சிவா said...
    welcome shylajaa akkaa

    >>>>முதல்பதிவை இட்டாச்சு..பாஸா ஃபெயிலா தெரியலயே சிவா?:):)///



    பாஸ் தான்.//

    >>>> இருங்க அம்மாக்கு போன் போட்டு சொல்லிட்றேன்...

    "ஆத்தாஆஆஆ நான் பாசாயிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:):)"

    April 28, 2008 7:

    ReplyDelete
  61. நிஜமா நல்லவன் said...
    ///சின்ன அம்மிணி said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா, உங்க அம்மா கட்டுரை மனசை நெகிழ வைத்தது///


    என்னது அவங்க அம்மா கட்டுரையா? அப்ப ஷைலஜா அக்கா எழுதுனது இல்லையா?

    //>>>>>>ஹிஹி நிஜமா குறும்பானவருதான் நீங்க:)

    ReplyDelete
  62. நிஜமா நல்லவன் said...
    சரி நான் கிளம்புறேன்!

    April 28, 2008 7:29:00 PM IST


    நிஜமா நல்லவன் said...
    சரி வந்தது வந்தாச்சு//

    >>>அரைசதம் செய்துவைத்த
    அன்புத்தம்பியே
    உரைக்கிறேன் இங்கே இனி வாழ்வில்
    கரைகாணா மகிழ்ச்சியுடன் வாழ்கநீவிர்!(ஐஸ் அல்ல):)

    ReplyDelete
  63. நிஜமா நல்லவன் said...
    ///ஷைலஜா said...
    எம்.ரிஷான் ஷெரீப் said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா
    >>வாங்க தம்பி
    மைசூர்பாக் ரெடி உங்களுக்கு!///



    அக்கா எனக்கு?>>

    என்ன கேள்வி உடன்பிறக்காத உடன்பிறப்பே! தட்டாமல் தட்டோடு எடுத்துக்கொள்க!

    ReplyDelete
  64. நிஜமா நல்லவன் said...
    சரி நான் கிளம்புறேன்!

    >>>இன்று போய் நாளைசதம் அடிக்க வா!!!

    ReplyDelete
  65. நிஜமா நல்லவன் said...
    அச்சச்சோ ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்துட்டு போனத முத்தக்கா கிட்ட சொல்லிடாதீங்க.

    >>>>>> அவங்கதான் நீங்க வந்துபோனதை இப்போ பிபிசில சொன்னாங்க:)

    ReplyDelete
  66. நிஜமா நல்லவன் said...
    அச்சச்சோ ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்துட்டு போனத முத்தக்கா கிட்ட சொல்லிடாதீங்க.

    >>>>>> அவங்கதான் நீங்க வந்துபோனதை இப்போ பிபிசில சொன்னாங்க:)

    ReplyDelete
  67. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இப்படியா கண்ணாடி வளையல்-ல வளைச்சரம் கோக்கறது!
    ஷைலு அக்கா கிட்ட இருக்கும் வைர வளையல்களை எல்லாம் எடுத்து கடைபரப்புங்க அக்கோவ்! :-)>>>

    ஐயா ஆன்மீக செம்மலே வாங்க...நாந்தான் நல்ல மைபா இங்கவந்தப்போ கொடுத்தேன் இலல் அப்றோம் ஏன் என்னை இப்படிவைரவளையல்ல மாட்டி விடறீங்க?:தங்கமே அரைடஜன் தான் இருக்காம்:)

    //எனக்கு ரொம்ப பிடிச்சது காக்க காக்க காலணி காக்க! அம்புட்டு சூப்பர்! பாதுகா எக்ஸ்ப்ரெஸ்-ன்னு இன்னொரு பேரும் அந்தக் கதைக்கு உண்டு! :-)//

    அதை வைத்ததே தாங்கள்!

    //மைசூர்பாக்(இதுக்கு ஒரு பெரிய கதையே இருக்குங்க..//

    ஆமா! ஆமா!

    //டாக்டர் வீ எஸ்கே//
    ஸைல்ஸ் பண்ண தப்புக்குப் பாவம் இவரு தான் பிட்டுக்கு மைசூர்பா சுமந்தது! :-)>>>

    பேரு சங்கர் அதான் சுமந்தார்!! விடுங்க நீங்கவேற அப்றோம் அவர் வந்து கலாய்கக்போறார்:0:)

    ReplyDelete
  68. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கேஆரெஸ் விளக்கம் தருவாங்க)//

    லேட்டாக் குடுத்தாலும் லால்-பாக்கில் மைசூர்-பாக் தான் சூப்பர்.
    லேட்டாக லேட்டாகத் தான் ஏதோ ஒன்னு நல்லா போதை ஏறுமாமே! :-)//

    ஏதோ ஒன்னு? என்ன அது? ஓ!! அதுவா?:):) பேதையிடம் போதை பற்றி கேட்டா..?:)

    அதே போல ஷைலு அக்கா லேட்டாக் கொடுத்த மைசூர்பாவின் சுவையே சுவை! இன்னும் என் நாக்கில் கரைஞ்சிக்கிட்டே இருக்கு! :-)//

    ம்ம் குட்பாய் ரவி!

    ReplyDelete
  69. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இதனால் தமிழ் கூறும் பதிவுலகத்துக்குச் சொல்லிக்கிறது என்னான்னா...
    இந்த மை.பா பிரசாதத்தின் மகிமையே மகிமை!
    ஒரு மை.பா சாப்பிட்டாப் போதும்! ஓவர் நைட்ல ஸ்டார் ஆயிடுவீங்க! இன்னும் வேற என்னன்னமோ எல்லாம் ஆயிருவீங்க!//

    ஓஓஓஓவர்ப்பா:)

    அதுனால எல்லாரும் அக்கா கிட்ட மை.பாவைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :-)
    சரி தானே ஜீவ்ஸ் அண்ணாச்சி//

    அவரு பாவம் காமிராவே கதின்னு கிடக்காரு ...ஜூனியர் பிசி ஸ்ரீராம்!

    ReplyDelete
  70. Raju said...
    வளையல்களை இப்படி சாய்கிறதுக்கு முன்னாடி அவற்றை நிறக வைக்கணுமே.

    எப்படி நிறக வச்சீக சாய்லஜா?//

    என்ன சாய்லஜாவா? வளை சாயும் நான் சாய்வேனா?:) அதுவந்து ராஜூ ... வளையல்களை கீழ கார்பெட்ல சரமா அமைச்சி டக்குனு போட்டோ எடுத்தேன் அவ்ளோதான்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது