07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 5, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அருண் பிரசாத், ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருமே புதிய பதிவர்கள் தான். நாளுக்கு ஒன்றாக, ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 770 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். மறுமொழிகளின் எண்ணிக்கையினைப் பார்க்கும் போது, இவரது நட்பு வட்டம் மிகப் பெரியதாகத் தோன்றுகிறது.

இவர் புதுமையான முறையில் பல்வேறு துறைகளை -ஒவ்வொரு பூவின் பெயரிட்டு, அத்துறையில் சிறந்த இடுகைகளை நாளுக்கு ஒன்றாக, ஆறு நாட்களிலும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது உழைப்பு கடும் உழைப்பு. தேடித்தேடி இடுகைகளைக் கண்டறிந்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

நண்பர் அருண் பிரசாத்தினை, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை டிசம்பர்த் திங்கள் ஆறாம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இணக்கம் தெரிவித்து, மிகக் குறுகிய காலத்தில், ஏற்ற பொறுப்பினை அருமையாக நிறைவேற்றுவதற்கு வருகிறார் நண்பர் பன்னிக்குட்டி ராமசாமி. இவர், சூரியன் படத்தில் கவுண்டமணி ஏற்ற பாத்திரத்தின் பெயரான பன்னிக்குட்டி ராமசாமி என்ற பெயரினையே புனைப்பெயராக வைத்துக் கொண்டு பதிவில் எழுதி வருகிறார். இடுகை இடும் போதும், மறுமொழிகள் போடும் போதும், படிப்பவர்க்கு ஒரு நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வண்ணம், புனைப்பெயர் இருப்பதனால், அதனை பலர் மாற்றச் சொல்லியும் - மாற்றாது தொடர்ந்து வருகிறார்.

இவர் பதிவில் எழுத ஆரம்பித்து , ஆறே மாதங்களில் ஏறத்தாழ ஐம்பது இடுகைகளுக்கு மேல், பல்வேறு தலைப்புகளில் எழுதி இருக்கிறார். இவரை, ரசிக்கும் வண்ணம், ஏறத்தாழ 250 பதிவர்கள் - நண்பர்கள் பின் தொடர்கின்றனர். பெரும்பாலும் நகைச்சுவையாகவே எழுதி வருகிறார்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.

நண்பர் பன்னிக்குட்டி ராமசாமியை வருக ! வருக ! என நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அருண் பிரசாத்
நல்வாழ்த்துகள் பன்னிக்குட்டி ராமசாமி

நட்புடன் சீனா

36 comments:

 1. வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள், ஒரு வாரம் போனதே தெரியவில்லை. நன்றி அருண்!

  ReplyDelete
 3. @ அருண்
  நன்றி

  @ பன்னி சார்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. உங்க ப்லாக் மாதிரியே இங்கயும் கலக்கணும்.

  ReplyDelete
 5. //நண்பர் அருண் பிரசாத்தினை, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.///

  அப்பாடி தொல்லை விட்டதுன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 6. /இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.///

  யோவ் பன்னி அங்க போய் என்னய்யா ஆராய்ச்சி பண்ணுற? உங்க தலைவர் போல டாக்டர் பட்டம் வாங்கிடுவியோ?

  ReplyDelete
 7. அப்பா ஒரு வாரம் பன்னிகுட்டி ஆபீஸ் லீவா? ப்ளாக் ல போய் கும்மலாமா?

  ReplyDelete
 8. வலைச்சர குழுவிற்கும், சீனா அய்யாவிற்கும், மறுமொழியால் என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி!

  குறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி!!

  வாங்க ராம்ஸ்... இவரும் நம்ம கும்மி டீம் தான் அதனால சரவெடி தொடரும்....

  கலக்குங்க...

  ReplyDelete
 9. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  /இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தற்போது மத்தியக் கிழக்காசிய நாடான சவுதியில், ஒரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.///

  யோவ் பன்னி அங்க போய் என்னய்யா ஆராய்ச்சி பண்ணுற? உங்க தலைவர் போல டாக்டர் பட்டம் வாங்கிடுவியோ?////

  என்னது என்ன ஆராய்ச்சியா? ஒட்டகத்துக்கு எப்பிடி வலிக்காம பல்லு வெளக்குறதுன்னு கண்டுபுடிக்கத்தான் அது! நாளைக்கு உங்களுக்குலாம் ரொம்ப யூசாகும் ஆமா!

  ReplyDelete
 10. ////அருண் பிரசாத் said...
  வலைச்சர குழுவிற்கும், சீனா அய்யாவிற்கும், மறுமொழியால் என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி!

  குறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி!!

  வாங்க ராம்ஸ்... இவரும் நம்ம கும்மி டீம் தான் அதனால சரவெடி தொடரும்....

  கலக்குங்க.../////

  தேங்ஸ் அருண்...!

  ReplyDelete
 11. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அப்பா ஒரு வாரம் பன்னிகுட்டி ஆபீஸ் லீவா? ப்ளாக் ல போய் கும்மலாமா?////

  அப்படியெல்லாம் எதுவும் ஆகிடக் கூடாதுன்னுதான் இன்னிக்கு அவசரமா அப்பிடி ஒரு பதிவே போட்டேன், அதுக்கும் மேலே அங்க போவியா, போவியா..? (இனி விருதகிரியப் பத்தியோ, கேப்டனப் பத்தியோ பேசுவியா... பேசுவியா...பேசுவியா....?)

  ReplyDelete
 12. //நாளைக்கு உங்களுக்குலாம் ரொம்ப யூசாகும் ஆமா!//

  நாளைக்கு சரி... இன்னைக்கு பல்லு விலக்கினீங்களா?

  ReplyDelete
 13. ////அருண் பிரசாத் said...
  //நாளைக்கு உங்களுக்குலாம் ரொம்ப யூசாகும் ஆமா!//

  நாளைக்கு சரி... இன்னைக்கு பல்லு விலக்கினீங்களா?////

  இது ஆராய்ச்சி, அதுனால டெய்லி வெளக்க மாட்டோம்.. ஹி..ஹி... (இன்னிக்கு டூட்டி டெர்ரருக்குத்தான்...!)

  ReplyDelete
 14. சரி நாளைக்கு உங்க டியூட்டிதான நல்லா விலக்கிட்டுவந்து விளக்குங்க... உங்க பதிவை

  ReplyDelete
 15. //குறிப்பாக கமெண்ட் மழை பொழிந்த நம்ம கும்மி டீமிற்கு ஸ்பெஷல் நன்றி!!///

  அடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி

  ReplyDelete
 16. //அடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி//
  அட விடுங்க போலீசு... நமக்குள்ள மாத்தி மாத்தி கலாய்சிக்கர்து சகஜம்தானா... நீங்க கூடதான் போன வாரம் நம்ம குரூப் கிட்ட அடிவாங்கினீங்க அதை நான் வெளில சொல்லிட்டா இருக்கேன்

  ReplyDelete
 17. /////அருண் பிரசாத் said...
  //அடப்பாவி அருணு ஒருவாரமா உங்ககளை கலாய்ச்சது கூட தெரியாமா நன்றியாம்ல ஹிஹி//
  அட விடுங்க போலீசு... நமக்குள்ள மாத்தி மாத்தி கலாய்சிக்கர்து சகஜம்தானா... நீங்க கூடதான் போன வாரம் நம்ம குரூப் கிட்ட அடிவாங்கினீங்க அதை நான் வெளில சொல்லிட்டா இருக்கேன்/////

  இன்னிக்கும் பலத்த அடிதான் போலீசுக்கு, நம்ம கடைல பாக்கலியா?

  ReplyDelete
 18. ////அருண் பிரசாத் said...
  சரி நாளைக்கு உங்க டியூட்டிதான நல்லா விலக்கிட்டுவந்து விளக்குங்க... உங்க பதிவை////

  நாளைக்கு வெளக்குற வெளக்குல இருக்கு.....!

  ReplyDelete
 19. சனி, ஞாயிறு நெட்டுக்கு போன வூட்டம்மா உதைக்கும்.... அதான் வரலை...

  சிரிப்பு போலீசு அடிவாங்கத நாள் இருந்தா சொல்லுங்க... இது ஜகஜம் தான

  ReplyDelete
 20. வா மச்சி வா

  ReplyDelete
 21. //அருண் பிரசாத் said...

  சனி, ஞாயிறு நெட்டுக்கு போன வூட்டம்மா உதைக்கும்.... அதான் வரலை...

  சிரிப்பு போலீசு அடிவாங்கத நாள் இருந்தா சொல்லுங்க... இது ஜகஜம் தான///


  தியாகிகள்ன்னா அடி விழத்தான் செய்யும்

  ReplyDelete
 22. ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள் அருண்...
  ப‌ன்னிக்குட்டிக்கு வெல்க‌ம் பார்ட்டி... க‌ல‌க்குங்க‌ உங்க‌ ஸ்டைலிலேயே...

  ReplyDelete
 23. //தில்லு முல்லு said...

  வா மச்சி வா///

  Still alive? hehe

  ReplyDelete
 24. //தில்லு முல்லு said...

  வா மச்சி வா///

  ங்கொய்யால... உன்னைபத்தி பெருமையா இன்னைக்கு சொல்லி இருக்கேன் போய் பாரு

  ReplyDelete
 25. ////தில்லு முல்லு said...

  வா மச்சி வா /////


  வாடி மாப்ள, என்ன ஒரு வழியா தெளிஞ்சு எந்திரிச்சு வந்துட்டியா?

  ReplyDelete
 26. சிறப்பாய் பதிவுகளிட்ட சிறப்பாசிரியர்
  அருண் பிரசாத்திற்கு பாராட்டுக்கள்.

  வாங்க ப்ன்னிக்குட்டியார் அவர்களே,
  நல்லா ஆரம்பியுங்க உங்க கச்சேரியை!

  ReplyDelete
 27. //இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் //
  அப்படியா? நமக்கும் அந்த மாவட்டம் தான் :))

  இனிதே பணி தொடங்கி நல்ல முறையில் நிறைவேற்ற வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 28. @பன்னிகுட்டி

  பார்மாலிட்டி பண்ணது போதும்.. நீ சீக்கிரம் பதிவ போடு... :) நான் ரெடி...

  ReplyDelete
 29. பன்னிகுட்டி ராமசாமிக்கு, கையதட்டி வரவேற்குறோம்சாமி

  ReplyDelete
 30. அட்ரா அட்ரா.. அட்ரா சக்க.. அட்ரா சக்க..

  ReplyDelete
 31. பிரபல பதிவர் பன்னி குட்டி வாழ்க..வாழ்க..!!

  வளர்ந்து விட்ட பதிவர் பன்னி குட்டி வாழ்க..வாழ்க..!!

  சோடா பிளீஸ்..!!

  ReplyDelete
 32. @ அருண்
  நன்றி

  @ பன்னிகுட்டி சார்
  வாழ்த்துக்கள்.கலக்குங்க..

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது