07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 27, 2011

வலைச்சரத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவு


வணக்கம் மக்களே...

ஒருவழியாக என்னுடைய ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. வலைச்சரத்திலிருந்து (தற்காலிகமாக) விடைபெறுகிறேன். முதலில் நன்றி அறிவிப்புகள். எனக்கு இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்து எனது இந்த பதிவுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை அமைத்துக் கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஒருவாரகாலத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த, பாராட்டிய, உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

முதல்முறையாக நேற்று சீனா அய்யாவுடன் பேசினேன். மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டுமொரு வாரம் தொடரச்சொல்லி அழைத்தார். மிகவும் வருத்தத்துடன் மறுப்பு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை. அதற்காக சீனா அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ந்தால் வாசகர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு அது வலைச்சரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதே உண்மை. எனினும், வலைச்சர விதிகள் அனுமதித்தால் மீண்டும் சில மாதங்கள் கழித்து எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர விரும்புகிறேன்.

இது காலையிலேயே வெளியட வேண்டிய இடுகை. ஆனாலும், தமிழ்மண ரேங்க் பட்டியலுக்காக காத்திருந்தேன். தமிழ்மண பட்டியலில் இரண்டாவது இடம் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். முக்கியமாக பன்னிக்குட்டி ராம்சாமியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பெரும்பாலான இடுகைகளுக்கு தமிழ்மணத்தில் ஏழாவது வாக்கை பதிவு செய்தவர் அவராகத்தான் இருக்கும். அந்த ஏழாவது வாக்கின் அருமை பற்றி தெரியும்தானே...?

ஏராளமான வலைப்பூக்களையும் இடுகைகளையும் அறிமுகப்படுத்தியும் இன்னும் நிறைய வலைப்பூக்களை தவறவிட்ட ஒரு கவலை இருக்கிறது. நம் நண்பர்கள் தானே கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ரீதியில் நிறைய பேரை தெரிந்தே தவிர்த்துவிட்டேன். அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அடுத்து வர இருக்கும் வலைச்சர ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்த தவறியதாக நண்பர்கள் மெயிலிலும் பின்னூட்டங்களிலும் தெரிவித்திருந்தார்கள். அந்த லிஸ்டை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நான் தவறவிட்ட தளங்களை நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுபடி ஒருமுறை சீனா அய்யாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றியையும் எதிர்கால வலைச்சர ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

20 comments:

  1. அருமையான அறிமுகங்கள் நண்பரே... கண்டிப்பாக அடுத்த இன்னிங்ஸ் ஆட சீனா அய்யா அழைப்பார்.

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  2. அட மொத ஆளா வந்திருக்கோம் போல! எப்புடி?

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் உங்கள் பணி மிகவும் சிறப்பாகவே இருந்தது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. கலக்கீட்டீங்க பிரபா, ஒருவாரகாலமாக வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல... :)

    ReplyDelete
  5. வகை வாரியாகத் தொகுத்துக் கொடுத்தது உபயோகமாக இருந்தது..நன்றி பிரபா!

    ReplyDelete
  6. அற்புதமாக பணியாற்றினீர்கள். கடும் உழைப்பு. அற்புத அறிமுகங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. கலக்கீட்டீங்க பிரபா!வாழ்த்துகள்!! :-)

    ReplyDelete
  9. மிகச் சிறப்பான பணி!
    எனது மனமார்ந்த பாராட்டுக்கள், பிரபா!

    ReplyDelete
  10. அதுக்குள்ளயா?? வேகமாய் ஓடிய வாரம் இது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. உங்கள் வாரத்தில் பதிவர்களுக்கு உபயோகமாகும் படியாக தகவல்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. CONGRSTS PIRABA......WELL DONE JOB.GREAT EFFORDS....MY BEST WISHES TO YOU FOREVER.

    ReplyDelete
  13. உண்மையில் பிரபா....உங்களின் பணியில் அனைவரும் திருப்தியடைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். சீனா அய்யாவின் வேண்டுகோளை ஏற்று இன்னும் ஒருவாரம் நீங்களே தொடர்ந்திருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  14. இட்ட பணியை செவ்வனே, சிற்ப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. சிறப்பாக ஒருவாரம் பணியாற்றியிருக்கிறீர்கள் நண்பரே! வலைச்சரத்தின் இந்த வாரம் உங்களுக்கு மட்டுமின்றி, நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கும் மேன்மேலும் வெற்றிகுவிக்க உதவும் என்பது திண்ணம். வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள்

    தொடரட்டும் உங்கள் பனி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது