07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 23, 2010

சீனியர்ஸ் ஆல்வேஸ் ஜீனியஸ்

வலைச்சரத்தோட விதிமுறையை மீறப்போகிறேன். ஆமா ஒரு நல்ல காரியத்துக்கக மீறுறதுன்னா நல்லது தானே? அப்படியென்ன நல்ல காரியமா? சொல்றேன் சொல்றேன். புது பதிவர்களை அறிமுகப்படுத்த பல புது சைட் லின்ங்கை தேடிகிட்டு இருந்தப்ப ஒரு சீனியர் ப்ளாக்கர் லின்ங் கிடைச்சுது. ரொம்ப அருமையா எழுதி இருந்தார். இவ்வளவு நாள் இவரை படிக்காம விட்டுட்டோமேன்னு உடனே ரீடர்ல போட்டுட்டேன். அவருக்கு வந்திருக்கிற கமெண்ட்ஸை பார்த்தப்ப ஒரு புது பதிவர்கள் கூட போடல. ஒரு வேளை அவங்களை பத்தி தெரியாம கூட இருந்திருக்கும். அவங்களும் இந்த கமெண்ட்ஸ், ஓட்டு இதை எதைப்பத்தியும் கவலைப்படாம நிறைகுடம் தழும்பாம எழுதிட்டு இருக்காங்க.

உடனே சில நண்பர்கள் கிட்ட பழைய பதிவர்கள் லின்ங் கேட்டேன். அவங்க கொடுத்ததும் கடந்த சில வாரம் முழுக்க படிக்க ஆரம்பிச்சு அசந்து போயிட்டேன். அப்படி பட்டவங்களோட பதிவர்களை என்னை மாதிரி புது பதிவர்களுக்கு தெரியப்படுத்தப்போகிறேன். அறிமுகப்படுத்துறேன்னு அதிகப்பிரசிங்கித்தனமா சொல்ல கூடாதுல்ல.. அதான் தெரியப்படுத்துறேன்னு சொல்றேன்.

”கற்றது கையளவு” அப்படின்னு கேள்விபட்டிருப்போம். “கற்றது கடலளவு” கேள்வி பட்டிருக்கீங்களா? கடல் கணேசன் தன் அனுபவங்களை எழுதியிருக்கார். கொஞ்ச வருடம் முன்ன ஆனந்த விகடன் கூட தொடரா வெளிவந்திருக்காம்! (நமக்கு எங்க புஸ்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு!) இவரோட கடல் அனுபவத்தை தொடரா எழுதியிருக்கார். கொஞ்சம் படிச்சேன். படிச்சுட்டும் இருக்கேன். இன்னும் முடிக்கல. படிக்கவே ரொம்ப சுவாரஸியமா இருந்துச்சு. நீங்களும் படிச்சு பாருங்க நிச்சியமா உங்களுக்கும் பிடிக்கும்.

முன்னெல்லாம் ஆங்கில பத்திரிக்கை வாங்கினாலே முதல்ல தேடுறது குறுக்கெழுத்துப்போட்டி தான். நானும் என் தங்கையும் அதை போட்டி போட்டுட்டு விடையை கண்டு பிடிப்போம்.(அவ எப்பவும் ஜெயிப்பான்னு நான் சொல்லி தான் தெரியனுமா என்ன?) ஆனா இதுவரைக்கும் தமிழ்ல அந்த குறுக்கெழுத்துப்போட்டிய முயற்சி பண்ணினது இல்ல. ஆனா முதல் முறையா ஆசை வந்திருக்கு இவரோட குறுக்கெழுத்து போட்டிய பார்த்த பிறகு. இலவச கொத்தனார் ரொம்ப பிரபலமாம். எனக்கு இப்ப தான் தெரியுது :( எவ்ளோ பேரை மிஸ் பண்ணியிருக்கேன்!. இவர் தமிழ் இலக்கணம் வேற ஈஸியா “தமிழ்பேப்பர்” சைட்ல சொல்லிதர்ரார் (ஐ ஜாலி!). இவரையும் என்னை மாதிரி புதியவங்க மிஸ் பண்ணாம படிங்க.

கிராமம் எனக்கு பரிட்ச்சயமில்லாத ஒன்னு :( பல பேர் அவங்க கிராமத்து பால்யகால அனுபவங்களை பதிவு வழியா நினைவுகூறும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். நாம நகரத்துல இருந்துட்டு எவ்ளோ விசயங்களை மிஸ் பண்ணியிருக்கோம்னு. அதுவும் இவரை மாதிரி ஒரு அனுபவ பதிவர் அவருக்கே உரித்தான நடையில சுவாரசியமா சொல்லும் போது படிக்க அருமையா இருந்துச்சு. இவர் ரொம்ம்ம்ம்ப சீனியர் பதிவர் கார்த்திகேயன். "கார்த்தியின் கனவுலகம்"னு பதிவு வச்சிருக்காரு. போய் படிச்சு பாருங்க ஒரு நல்ல அனுபவமா இருக்கும்.

சில பேரோட பதிவு படிச்சா பிடிக்கும். சில பேரோட பேரெ வித்தியாசமா நல்லா இருக்கும். ஆனா சில பேர் பதிவுகளுக்கு வச்சிருக்கிற தலைப்பே ரொம்ப பிடிச்சுப்போகும். அப்படி ஓபன் பண்ணினதும் பிடிச்சுப்போனது இந்த ”மாதவிப்பந்தல்”. KRSன்னு ஒரு சீனியர் பதிவர் எழுதிட்டு இருக்கார். கடவுள் பத்தி இவர் எழுதி இருக்கிற பல பதிவுகள்ல சில பதிவுகள் படிச்சதுக்கே மெய் மறந்துட்டேன். இந்து. கிறிஸ்த்துவம்,இஸ்லாம்ன்னு அனைத்து மதங்களை பத்தியும் எழுதுறார். இவரையும் மிஸ் பண்ணாம படிங்க நியூ ப்ளார்கஸ்.
 
அடுத்தவர் பெயரை கேட்டாளே சிரிப்பு வரும். "கைப்புள்ள" :) "கைப்புள்ள காலிங்..."னு தளம் வச்சிருக்காரு. காமெடியில பல கட்டுரைகள் வெளுத்து வாங்கியிருக்கார். பல சமூக பொறுப்புள்ள கோப கட்டுரைகளும் இருக்கு! இப்ப அப்பாவானதால அடிக்கடி எழுத முடியல போல. "வருத்த படாத வாலிபர் சங்கம்"த்தை கூட ஆரம்பிச்சு இன்னமும் சங்கம் கலையாம ஓடிகிட்டு இருக்குறதா சொல்றாங்க. இவரையும் தொடர்ந்து வாசிச்சுட்டு வாங்க.
இவரை கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஏன்னா இப்பவும் நிறைய எழுதிட்டு வரார். இருந்தாலும் இவரோட கலக்கல் பதிவுகள் யாரும் மிஸ் பண்ண வேணாம்னு புதியவங்களுக்காக சொல்லிக்கிறேன்...
"டுபுக்கு".  உம்மனாமூஞ்சிங்க கூட இவரோட பதிவை படிச்சா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும். அவ்ளோ ஜாலியா எழுதுறார். குறும்படம் கூட ட்ரை பண்ணியிருக்கார். இவரை பத்தி சொல்ல முன்னமே நோட் பண்ணி வச்சிருந்தாலும் வலைச்சரத்துல என்னோட ரெண்டாவது பதிவுல இவர் கமென்ட்!!. ரொம்ப சந்தோஷமா போயிடுச்சு :)

இவரையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நிறைய சைட்ல இவரை பார்த்திருப்பீங்க. பல வருடங்கள் ஆனாலும் இன்னமும் ஆக்டிவா இருப்பவரு. ஆயிரம் பதிவுக்கு மேல எழுதியிருப்பவரு (காயத்ரி நீ இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் முடியாது!) பயணக்கட்டுரை, கோவில் தளம்னு எழுதி கலக்குபவரு, புதிய பதிவர்கள் பல பேருக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துபவர்...இதுக்கு மேல இவரை பத்தி நான் சொன்னா சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரி இருக்கும்.. அவர் வேற யாருமில்ல நம்ம துளசி டீச்சர். இவரை எல்லாம் மிஸ் பண்ணவே கூடாது. என்னை மாதிரி புதுசா வந்திருக்கிற பதிவர்கள்  நோட் பண்ணிக்கங்க. முன்னமே சொன்னமாதிரி பால்யகால கிராமத்து அனுபவங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க இந்த டீச்சர். கொஞ்சம் பதிவுகள் தான் படிச்சேன். இன்னும் படிக்கனும். 

என்னடா இவ்ளோ பெரிய பதிவர்களை வலைச்சரத்துல போட்டுருக்காளே இந்த பொண்ணுன்னு யாரும் கோபப்பட வேண்டாம். எனக்கு இவங்கெல்லாம் அறிமுகமாகி கொஞ்ச வாரம் தான் இருக்கும். ஒவ்வொருத்தரையும் இப்ப தான் நல்லா வாசிச்சுட்டு வரேன். பல புதிய பதிவர்களுக்கு இவர்களைப்பத்தி தெரிஞ்சுக்காம இருக்கலாம். அவங்களுக்கு இந்த பதிவு உபயோகப்படும்ல? அட்லீஸ் ஒரு அஞ்சு பேருக்கு இந்த பதிவு உபயோகப்பட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்.

சரி இன்னைக்கு கோட்டா முடிஞ்சுது... நாளைக்கு மீண்டும் சந்திக்கலாம். டாடா பை பை :)

35 comments:

  1. காலை வணக்கம் மேடம்,

    அறிமுகப்படுத்திய அனைவருமே எனக்கு புதியவர்கள்தான் அவர்களின் தளம் சென்று பார்க்கிறேன்

    சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...

    ReplyDelete
  2. அட நீங்க சொன்ன எல்லாமே எனக்கு புதுசு போய் பார்க்கறேன்,.நன்றி

    ReplyDelete
  3. எல்லாருமே எனக்கும் புதுசுங்கோய்...

    ReplyDelete
  4. காயத்ரி , இவங்க எல்லாம் பதிவுலக பிதாமகர்கள்.. இப்ப நமக்கு இவ்வளவு ஈசியா தமிழ் டைபிங் வருது. இவ்வளவு வசதி இல்லாத டைம்ல கூட இவங்க எல்லாம் எழுதி இருக்காங்க...

    ReplyDelete
  5. அனைத்தும் அறிந்திராத அருமையான அறிமுகங்கள்..

    ReplyDelete
  6. //(நமக்கு எங்க புஸ்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு!)///

    உங்களுக்குன்னு சொல்லுங்க. நாங்கெல்லாம் படிப்போம்...

    ReplyDelete
  7. //இவரையும் என்னை மாதிரி புதியவங்க மிஸ் பண்ணாம படிங்க. ///

    அப்போ நான் படிக்க வேணாமா?

    ReplyDelete
  8. அட! எதிர்பார்க்கலைப்பா.

    கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பது மகிழ்ச்சி.

    நன்றி காயத்ரி.

    ReplyDelete
  9. மிஸ் பண்ண வேணாம்னு மிஸ் பண்ண வேணாம்னு சொல்றீங்க. நீங்க மிஸ் பண்ணாம ஒழுங்க ஸ்கூல் பக்கம் போனீங்களா?

    ReplyDelete
  10. //மாணவன் said...

    காலை வணக்கம் மேடம்,

    அறிமுகப்படுத்திய அனைவருமே எனக்கு புதியவர்கள்தான் அவர்களின் தளம் சென்று பார்க்கிறேன்

    சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...///

    அப்படியா உனக்கு இத படிச்சதும் ஆபீஸ்ல போனஸ் கொடுத்தாங்களா? சரி சரி

    ReplyDelete
  11. @ மாணவன்

    உங்கள் பொன்னான பணி தொடரட்டும். இதை விட்டுட்டியே...

    ReplyDelete
  12. @ காயத்ரி

    சீக்கிரம் வந்து நன்றி சொல்லுங்க..

    ReplyDelete
  13. "சீனியர்ஸ் ஆல்வேஸ் ஜீனியஸ்"

    நீங்க தமிழ்ல சொல்லிருந்தா நம்பிருக்க மாட்டேன். நீங்க இங்கிலீஷ்ல சொன்னா சரியாத்தான் இருக்கும்...

    ReplyDelete
  14. //வெறும்பய said...

    அனைத்தும் அறிந்திராத அருமையான அறிமுகங்கள்..//

    அதுக்கு பிளாக் படிக்கணும்.

    ReplyDelete
  15. //சி.பி.செந்தில்குமார் said...

    அட நீங்க சொன்ன எல்லாமே எனக்கு புதுசு போய் பார்க்கறேன்,.நன்றி//

    கமெண்ட் போட்டா தமிழ்மணத்துல முதலிடம் வரலாமா? # டவுட்டு...

    ReplyDelete
  16. அறியாத ஆனா,அருமையான பிரபல பதிவர்களை தெரியா வச்சிருக்கீங்க..!! நன்றி..!!

    ReplyDelete
  17. எல்லாருமே எனக்கும் புதுசு.

    சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் said...
    அட நீங்க சொன்ன எல்லாமே எனக்கு புதுசு போய் பார்க்கறேன்,.நன்றி///

    அதேதான் நானும் சொல்றேன்.... :)

    ReplyDelete
  19. //விதிமுறையை மீறப்போகிறேன். ஆமா ஒரு நல்ல காரியத்துக்கக மீறுறதுன்னா நல்லது தானே?//

    அப்போ நல்லகாரியத்துக்கு விதியை மீறலாமா?

    விதியேனு உங்க பதிவை படிச்சிட்டு இருக்கேன்....இருங்க அப்போ முதல்ல உங்க பிளாக்ல இருந்து unfollow பண்ணுறேன் :)

    ReplyDelete
  20. கடல் கனேசன் கடைசியா 2007 பிப்ரவரில எழுதி இருக்கார் போல.... இப்போ எழுதறது இல்லையோ!

    ReplyDelete
  21. @ அனைவருக்கும் நன்றி !
    இவ்ளோ பேருக்கு இந்த பதிவுலகுல
    இருக்குற சீனியர் பதிவர்களை இந்த பதிவு மூலமா தெரிஞ்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
  22. @ எல்கே : ஆமா ப்ரோ பெரிய விஷயம்தான். அப்பொழுது கூட அவங்க தமிழ்ல எழுதனும்னு நினைத்திருப்பது பெரிய விஷயம்

    ReplyDelete
  23. @ துளசி கோபால் : உங்களை பற்றி எழுதவாய்ப்பு கிடைத்ததே எனக்கு பெரிய விஷயம் மேடம் , நன்றி எதற்கு ஆசிர்வாதம் போதும்

    ReplyDelete
  24. @ ரமேஷ் : ஸ்கூல்க்கு நான் ஒழுங்கா போய் படிசுருந்தா ஏன் இப்படி தமிழை வதைக்க போறேன் ? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் இப்படி லாம் பப்ளிக்கா கேக்க கூடாது

    ReplyDelete
  25. @ அருண் : விதி வலியது

    ReplyDelete
  26. கனேசன் மட்டும் எனக்கு புதிது.

    போலீஸ்கார்-ன் நக்கல் பதிவை விட நன்றாக இருந்தது.

    ReplyDelete
  27. அட இது கூட நல்லா இருக்கே

    ReplyDelete
  28. கைப்புள்ள ப்ளாக்ம் , டுபுக்கு ப்ளாக்ம் போய் பார்த்தேங்க ..
    நல்லா இருக்கு .. நிச்சயமா படிக்கணும் .. ஏன்னா எனக்கு காமெடி தான் பிடிக்கும் ..!

    ReplyDelete
  29. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி காய்த்ரி!!! (இந்த சார் மோர்லாம் வேண்டாமே....:))) நீங்களும் மிக நன்றாக எழுதிவருகிறீர்கள். நீங்கள் அறிமுகப்படுத்தும் முறை வித்தியாசமாக அருமையாக இருக்கிறது.

    எல்.கே - //காயத்ரி , இவங்க எல்லாம் பதிவுலக பிதாமகர்கள்.. // விழுந்து விழுந்து சிரித்தேன். இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு டயலாக் தான் நியாபகத்துக்கு வருது (அட்லீஸ்ட் எனக்கு மட்டும் இது பொருந்தும்) :)))

    கோமாளி செல்வா - மிக்க நன்றி

    ReplyDelete
  30. //அறிமுகப்படுத்திய அனைவருமே எனக்கு புதியவர்கள்தான் அவர்களின் தளம் சென்று பார்க்கிறேன்//

    தெரியப்படுத்தியற்கு நன்றிகள்.
    அந்த மூத்த பதிவர்களுக்கு எம் வணக்கங்கள்.

    ReplyDelete
  31. 'என் மனம் அலைபாயுதே' வலைப்பூ,
    'இலவசம்-ஃப்ரீயா விடு மாமே' வலைப்பூ,
    'கார்த்தியின் கனவுலகம்' வலைப்பூ,
    'மாதவிப் பந்தல்' வலைப்பூ,
    'கைப்புள்ள காலிங்...' வலைப்பூ,
    'டுபுக்கு' வலைப்பூ,
    'துளசி தளம்' வலைப்பூ
    -ஆகிய பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்திய
    காயத்ரி, உங்களுக்கு என் நன்றிகள்.
    31.

    ReplyDelete
  32. நீங்கள் கூறிய அனைவரின் தளத்தினை பார்த்துவிட்டு வருகிறேன் ..

    நல்ல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  33. பதிவுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று தூண்டும் அறிமுகங்கள்.சென்று பார்க்கிறேன்--
    உங்கள் வலைப்பூவையும்! வாழ்த்துகள் காயத்ரி.

    ReplyDelete
  34. எனக்கு எல்லோருமே புதுசு..
    Thanks..

    ( நாம ரொம்ப பின்தங்கி
    இருக்கோமோ..?!! )

    ReplyDelete
  35. All r new except Dubukku & Thulasi teacher... you're right...this is a good intros for new bloggers like us... thanks Gayathri

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது