07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 1, 2011

வலையில் சிக்கிய கவியலைகள்.


அன்பு நிறைந்த உள்ளங்களே! நேற்று நம்மோட  சுயபுராணம் ஓட்டியாச்சு. இதோ இன்று அடுத்தவாளோட சரித்திரத்தை அலசி ஆராயணுமுன்னு ஆவலோடு அனைவரும் கேட்டதால ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் வலையைவீசி ஆராய்ந்துள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்க,  இன்று வலையில் சிக்கியவைகள் எப்படியிருக்கிறதென்று .
ஒருவழியாக இன்றிலிருந்து நம்மளோட பணியை திறம்பட செய்யவேண்டுமென வலையை எடுத்துக்கொண்டு நீரோடையில் கிடந்த  படகில் ஏறியமர்ந்து இன்று என்ன சிக்கினாலும் விடக்கூடாது  கிடைப்பதையெல்லாம் அப்படியே அள்ளிக்கொண்டு வந்துவிடலாமுன்னு போனா நம்ம வீசிய வலையில் முதல் சிக்கியது அலைகள்தான்.  அடடே என்ன ஆச்சர்யம்! அதுவும் கவியலைகள்! சந்தோஷம் தாங்கல, இருக்காதா பின்ன? என்னயிருந்தாலும் நம்ம வலையில் முதலில் அதுதானே சிக்கும்
 
இன்றைய தினத்தில் சிக்கிய பெரிய அலை, சிறிய அலை, அழகிய அலை, ஆர்ப்பாட்ட அலை, ஆனந்த அலை, ஆளையிழுக்கும் அலை அமைதியான அலை, ஆர்ப்பரிக்கும் அலை, அடித்துச்செல்லும் அலையென அத்தனை அலைகளையும் அள்ளிக்கொண்டுவந்துட்டோமுல்ல.
[மீதமுள்ள அலைகள் அடுத்துவரும்].
அலைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்று யோசித்தேன். அதனை அறிமுகப்படுதுவதைவிட நேரிலேயே காண்பித்துவிட்டாலென்ன? அப்படியே அலைகள் தன்னிலைகளைத் தானே அடித்துச்சொல்லட்டும் என்று தோன்றவே அப்படியே வலைக்குள் கட்டிவந்து இதோ உங்க முன்னால நிறுத்திவிட்டேன்.
  கொஞ்சமாவது சுவாரஸ்யமாக இருக்கனுமல்லவா அதான் .

எல்லாம் ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமேன்னுதான் இந்த ஏற்பாடு. எப்புடியிருக்கு? நமக்கு வலைவீசியெல்லாம் பழக்கமில்லைங்கோ. முதன்முதலா இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, அதை விட்டுவிடக்கூடாதுன்னு ஓடைவழியாக, கடலுக்கே போய் வலையை வீசியாச்சி. இனி உங்க கையில்தான் இருக்கு. வலையை சரியாக வீசியிருக்கேனா சிக்கியவைகள் சிறப்பானவைகளான்னு நீங்கதான் சொல்லனும். சொல்லுவீகதான?
ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணக்கட்டுதே!
கவியெழுதும் விரல்கள் தொட்டால்
கள்ளியிலும் தேன் வடியும்
கற்பனையின் உச்சத்திற்கு
கரைகட்டினால் உடைத்தெறியும்


சின்னஞ்சிறிய சொல்லெடுத்து
சிற்பிகள்போல் சீர்பட செதுக்கும்
சிந்தனைகள் செழிப்பதுபோல்
சிறக்கவைக்கும் கவிப்படைக்கும்


நற்சிந்தினைகள் வளர்த்திடவும்
நற்போதனைகள் புரிந்திடவும்
நானிலமே அறிவதுபோல்
நற்கவிகள் பலபடைக்கும்


கவிதைக்கு பொய்யழகென்று 
கற்பனைக் குதிரைகளை
கடிவாளமின்றி கட்டவிழ்த்துவிடும்
கவிதைகளுமிருக்கும்

உணர்ச்சிகளில்லா சிலதிற்கும்
உணர்வுகளில்லா பலதிற்கும்
உணர்ச்சிகொடுத்து உணர்வூட்டி
உருவாக்கும் கவி பலர்கள்

பொய்மைவிட உண்மைசேர்த்து
பொதிந்துதரும் கருதுக்களில்
உள்ளம்நெகிழ உருவாக்கும் கவிகளிலே 
உருக வைக்கும்  கவி பலர்கள்


தன்நிலையில்லா இவ்வுலகில்
தன்னெழுத்து நிலைபெறுவதுபோல்
நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும்
நிஜமான உணர்களை
மனமாரப் போற்றிடுவோம்
மனநிறைந்து வாழ்த்திடுவோம்...

இன்றைக்கு  சிக்கியவைகள் அவ்வளவுதான்
நாளைக்கு எதில் என்ன சிக்குதுன்னு பார்ப்போம்..


அன்புடன் மலிக்கா

75 comments:

  1. அலைகள் நல்லாத்தான் சிக்கியிருக்கு
    முங்கி பாக்க ஆரம்பிச்சாச்சு

    ReplyDelete
  2. raji said...
    அலைகள் நல்லாத்தான் சிக்கியிருக்கு
    முங்கி பாக்க ஆரம்பிச்சாச்சு//

    வாங்க ராஜி. அன்பான வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆரம்பிங்கோ ஆரம்பிங்கோ..

    ReplyDelete
  3. கவிதைகளுக்கு நன்றி..

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்கள.

    கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.
    கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. மிக அருமையான தேர்வுகள் கவிதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர் மலிக்கா. ஒரு ரவுண்டு போய்விட்டு மீண்டும் வருகிறேன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. //சே.குமார் said...
    azhaka arimugam seithulleergal.//

    மிக்க நன்றி குமார்..

    //Samudra said...
    கவிதைகளுக்கு நன்றி..//

    மிக்க நன்றி சமுத்ரா.

    ReplyDelete
  7. இந்திரா said...
    அருமையான அறிமுகங்கள.

    கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.
    கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்.//

    வாங்க இந்திரா. கருத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி..

    ReplyDelete
  8. teedummanam said...
    மிக அருமையான தேர்வுகள் கவிதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர் மலிக்கா. ஒரு ரவுண்டு போய்விட்டு மீண்டும் வருகிறேன் வாழ்த்துக்கள்..//

    வாங்க தேடும்மனம். தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி.

    போய்பார்த்துவிட்டு வந்து சொல்லுங்க எப்படின்னு..

    ReplyDelete
  9. முகவரி இல்லாதவனுக்கு ஓர் முகவரி...

    அன்பால், கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பால் என் வலைப்பக்கத்தையும் இங்கே அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றி கலந்த முதற்கண் வணக்கங்கள்...

    ReplyDelete
  10. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
    முகவரி இல்லாதவனுக்கு ஓர் முகவரி... //

    வாசத்துக்கு முகவரி தேவயில்லை
    அது தன்னை பரப்பும் மணத்தை நுகர்பவர்கள் தேடிவருவார்கள் முகவரியை..

    //அன்பால், கவிதையின்பால் கொண்ட ஈர்ப்பால் என் வலைப்பக்கத்தையும் இங்கே அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றி கலந்த முதற்கண் வணக்கங்கள்...//

    திறமைகள் எங்கு காணப்படுகிறதோ அதை வெளிக்கொண்டுவருவது சிறப்பல்லவா. அதைதான் செய்துள்ளேன். தொடர்ந்து தாங்களின் எண்ணங்களை திறம்பட சிறப்பாக வெளிப்படுத்துங்கள் வாசன்..

    வருகைக்கும் கருதுக்களுக்கும்
    மிக்க நன்றி ..

    ReplyDelete
  11. மிக்க அருமையான, தேர்வுகளாகத்தான் இருக்கும் சகோதரி, தங்களின் தயவால் நானும் நீங்கள் சொன்னவற்றில் நீந்தி பார்க்கிறேன்....... மிக்க நன்றி..

    ReplyDelete
  12. ஆஹா... அறிமுகப்படுத்தும் விதமும் அருமையாக இருக்குதுங்க.

    ReplyDelete
  13. புதுமையான நல்ல அறிமுகங்கள்! எங்கயோ போய்ட்டிங்க....

    ReplyDelete
  14. isaianban said...
    மிக்க அருமையான, தேர்வுகளாகத்தான் இருக்கும் சகோதரி, தங்களின் தயவால் நானும் நீங்கள் சொன்னவற்றில் நீந்தி பார்க்கிறேன்....... மிக்க நன்றி..//

    வாங்க காஜா. நீந்திபாருங்கள் நிறைய நிறைவுகள் கிடைக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா.

    ReplyDelete
  15. //Chitra said...
    ஆஹா... அறிமுகப்படுத்தும் விதமும் அருமையாக இருக்குதுங்க.//

    மெய்யாலுமா அப்பாடா ரொம்ப சந்தோஷம் சித்ரா மேடமக்கா.
    மிக்க நன்றிங்கோ

    ReplyDelete
  16. //வைகை said...
    புதுமையான நல்ல அறிமுகங்கள்! எங்கயோ போய்ட்டிங்க....//

    வாங்க வைகை. எங்கேயோவாஆஆஆஅ எங்கும்போகலை வலைக்குள்தான் கிடக்கிறேன் ஹா ஹா..

    ரொம்ப ரொம்ப சந்தோஷமுங்க
    மிக்க நன்றி..

    ReplyDelete
  17. நல்ல தொகுப்பு கலக்குங்க

    ReplyDelete
  18. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    நல்ல தொகுப்பு கலக்குங்க//

    வாங்க செல்வா மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  19. என்னவோ சொல்லியிருக்கீங்க...!
    ஆனா...! நல்லா சொல்லியிருக்கீங்க...!

    இவர்கள்...
    எனக்கு "புதுமுகம்"...!
    தங்களால் "அறிமுகம்"...!

    எதனையும்
    "புதுமை"யாய் செய்வதில்... ஓர்
    புதுமையானவர் என்பதை...
    மீண்டுமொருமுறை நிருபித்துள்ளீர்...!

    ஆனா...
    அப்பப்ப சொல்வீங்க பாருங்க..
    ஒரு பொய்யை...
    அப்பொய்யை
    "பொய்"யாக்கிவிட்டீர் மலிக்கா...!
    அதானுகோ "பச்சப்புள்ள"ன்னு...
    அதச் சொல்ற...!

    வாழ்த்துக்கள்...!
    நாளை சந்திப்போம்...!

    ReplyDelete
  20. காஞ்சி முரளி said...
    என்னவோ சொல்லியிருக்கீங்க...!
    ஆனா...! நல்லா சொல்லியிருக்கீங்க...!

    இவர்கள்...
    எனக்கு "புதுமுகம்"...!
    தங்களால் "அறிமுகம்"...!//

    ரொம்ப சந்தோஷம் சகோ..

    //எதனையும்
    "புதுமை"யாய் செய்வதில்... ஓர்
    புதுமையானவர் என்பதை...
    மீண்டுமொருமுறை நிருபித்துள்ளீர்...!//

    அப்படியா நெசமாவா

    //ஆனா...
    அப்பப்ப சொல்வீங்க பாருங்க..
    ஒரு பொய்யை...
    அப்பொய்யை
    "பொய்"யாக்கிவிட்டீர் மலிக்கா...!
    அதானுகோ "பச்சப்புள்ள"ன்னு...
    அதச் சொல்ற...!//

    பொய்யா சகோ அதை நீங்க சொல்லலாமா நான் பொய் சொல்கிறேன்னு. இப்பவும் சொல்கிறேன் உங்களுக்கெல்லாம் முன்னால் நான் ரொம்பச் சின்ன பச்சப்புள்ளதான் சகோ.அனைத்திலும் உண்மையா இல்லையில்லையான்னு பொய் சொல்லாம சொல்லனும்..

    //வாழ்த்துக்கள்...!
    நாளை சந்திப்போம்.//

    வாழ்த்துக்களுக்கும் அன்புநிறைந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  21. வேணா...! வேணா....!

    போதும்...!
    இதோட நிறுத்திக்கிவோம்...!

    இது "வலைச்சரம்"... அதனால..!

    ReplyDelete
  22. அருமையான அறிமுகங்கள.
    கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  24. கவிக்கடலடைந்து அலைகள்பலதிரட்டி
    அரிய சிந்தையில் அற்புதமாய் படம்பிடித்து அனைவரையும் மகிழச்செய்யும் நல்ல உள்ளம்
    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
    எங்கோ ஒரு மூலையில் உதித்த என்னையும் உங்கள் பார்வையில் முகவரிஇட்டு அறிமுகம் செய்தமைக்கு என்றும் கடமைப்படுகிறேன்
    அனைவரோடும் நட்புறவாடி என்றும் பயணித்திட மனதின் தவிப்பை இனிஎன் பயணமாக்குகிறேன்
    நன்றி சகோதரி.....
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  25. செம கலக்கல் அனைத்து அறிமுகங்களும்
    அருமை வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  26. சமுத்திரத்தின் ஏதோ ஒரு புள்ளியில்... சிக்கியிருப்பவனை கரை கொண்டு வரும் முயற்சிக்கு என் வணக்கங்கள்... வாழ்த்துக்கள்!
    இந்த வலைத்தளம்.... ஒரு சங்கமம்!

    எனது "ரசிகன் பக்கங்களுக்கு" - ஒரு அறிமுகம் அவசியப்பட்டதாகவே தோன்றுகிறது இன்று உங்களோடு சங்கமித்ததில்....

    அன்பின் நன்றிகள் மலிக்கா!
    -ரசிகன்

    ReplyDelete
  27. கவியரசியின் வலையில் சிக்கிய கவி மீன்களுக்கு வாழ்த்துக்கள்....வித்தியாசமான அறிமுகங்கள் ....தொடரட்டும் உங்கள் சேவை ..

    ReplyDelete
  28. காஞ்சி முரளி said...
    வேணா...! வேணா....!

    போதும்...!
    இதோட நிறுத்திக்கிவோம்...!

    இது "வலைச்சரம்"... அதனால..!//

    சரி சரி அப்பால பாத்துக்கலாமுங்குறீங்க சகோ சொல்லி கேட்காமயிருப்பேனா..

    ReplyDelete
  29. S Maharajan said...
    அருமையான அறிமுகங்கள.
    கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றிங்க மகராஜன்


    //விஜய் said...
    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே.

    ReplyDelete
  30. நேசமுடன் ஹாசிம் said...
    கவிக்கடலடைந்து அலைகள்பலதிரட்டி
    அரிய சிந்தையில் அற்புதமாய் படம்பிடித்து அனைவரையும் மகிழச்செய்யும் நல்ல உள்ளம்
    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
    எங்கோ ஒரு மூலையில் உதித்த என்னையும் உங்கள் பார்வையில் முகவரிஇட்டு அறிமுகம் செய்தமைக்கு என்றும் கடமைப்படுகிறேன்
    அனைவரோடும் நட்புறவாடி என்றும் பயணித்திட மனதின் தவிப்பை இனிஎன் பயணமாக்குகிறேன்
    நன்றி சகோதரி.....
    அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வாங்க ஹாசிம். தாங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்புகள்தான் இதுபோன்ற வலைதளங்கள் எனக்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தில் எனக்கு தெரிந்தவர்களை தெரியாத மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

    தாங்களின் பணியை திறம்படச்செய்து நற்விதைகளை விதையுங்கள்.

    தாங்களின் வருகைக்கும் அன்புஆன கருதுக்களுக்கும் மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  31. சிவா said...
    செம கலக்கல் அனைத்து அறிமுகங்களும்
    அருமை வாழ்த்துக்கள் ..//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  32. ரசிகன்! said...
    சமுத்திரத்தின் ஏதோ ஒரு புள்ளியில்... சிக்கியிருப்பவனை கரை கொண்டு வரும் முயற்சிக்கு என் வணக்கங்கள்... வாழ்த்துக்கள்!
    இந்த வலைத்தளம்.... ஒரு சங்கமம்!
    எனது "ரசிகன் பக்கங்களுக்கு" - ஒரு அறிமுகம் அவசியப்பட்டதாகவே தோன்றுகிறது இன்று உங்களோடு சங்கமித்ததில்....

    அன்பின் நன்றிகள் மலிக்கா!
    -ரசிகன்//

    வாங்க ரசிகன். காதல் நினைவுகளை கடலலைபோல் கடகடவென உங்கள் கைவிரல்கள் எழுதித்தள்ளியவைகளை சிலதளத்திலும் உங்கள் தளத்திலும் கண்ட பின்பும் அதை இங்கு கொண்டுவரவில்லையென்றால் எப்படி. அறிமுகம் என்பது அவசியமாகப்படுகிறது அதை அறிந்துதான் வலைச்சரம் இதுபோன்ற பணியை செவ்வன செய்துவருகிறது.

    தாங்களின் வருகைக்கும் அன்புநிறைந்த கருத்துக்கும் மிக்க நன்றி ரசிகன். தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்துவரும் நினைவுகளொடு..

    ReplyDelete
  33. ஜெய்லானி said...
    கவியரசியின் வலையில் சிக்கிய கவி மீன்களுக்கு வாழ்த்துக்கள்....வித்தியாசமான அறிமுகங்கள் ....தொடரட்டும் உங்கள் சேவை ..//

    வாங்க அண்ணாத்தே! வலையில் சிக்கிய கவிமீன்களென்றுதான் முதலில் தலைப்புவைதுவிட்டு பின்பு மாற்றினேன் அப்பால வச்சிக்கலாமுன்னு. இங்கே வந்துபாத்தா நீங்க வச்சிட்டீங்க..

    வித்தியாசமிருக்கா நெசந்தானா இல்லை சந்தேகமாவா!!!!!!!!

    என்னவாகயிருந்தாலும் ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றிங்கண்ணாத்தே..

    ReplyDelete
  34. எல்லா கலை அலைகளும் படத்துடன் அற்புதம் மலிக்கா .

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் //
    அறிமுகங்கள் அனைத்தும் அசத்தல்

    ReplyDelete
  36. கவியலைகளை, புகைப்பட அலைகளுடன்
    வித்தியாசமாய் - விறுவிறுப்பாய்
    அறிமுகங்கள் செய்திட்டீர்கள், கவிஞர்
    மலிக்கா! பாராட்டுக்கள்!!
    37

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. காணாமப் போன என்னை வலையில் அள்ளி எடுத்து வந்துடீங்க மலிக்கா...அக்கா...நானும் சிலரை புதிதாய் கண்டுகொண்டேன்...நன்றி கா...

    ReplyDelete
  39. வலைப்பதிவர்களின் அறிமுகங்கள்
    அனைத்தும் அருமை!
    -கலையன்பன்.

    (இது பாடல் பற்றிய தேடல்!)
    ஒரு ஊரில் ஊமை ராஜா!

    ReplyDelete
  40. அருமையான கவிதை தொகுப்பு.... அறிமுகம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. வலைப்பதிவர்களின் அறிமுகங்கள்
    அனைத்தும் மிகஅருமை மலிக்கா

    ReplyDelete
  42. //Jaleela Kamal said...
    எல்லா கலை அலைகளும் படத்துடன் அற்புதம் மலிக்கா.//

    வாங்கக்கா ரொம்ப சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா..

    ReplyDelete
  43. அரசன் said...
    வாழ்த்துக்கள் //
    அறிமுகங்கள் அனைத்தும் அசத்தல்.//

    வாங்க அரசன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  44. சீமான்கனி said...
    காணாமப் போன என்னை வலையில் அள்ளி எடுத்து வந்துடீங்க மலிக்கா...அக்கா...நானும் சிலரை புதிதாய் கண்டுகொண்டேன்...நன்றி கா...//

    காணவில்லையின்னு விளம்பரம்கொடுத்தா வருவீங்களான்னு யோசித்தேன். ”இன்னும் மறக்கலடி” என்ற கவிதையை உங்க ஆளுக்காக போட்டுவிட்டு நீங்க எல்லாரையும் மறந்துட்டா எப்புடி அதான் இப்படி வலைவீசி தேடிபிடிச்சிட்டோமுல்ல..

    வருகைக்கும் கருதுக்கும்
    மிக்க நன்றி கனி..

    ReplyDelete
  45. NIZAMUDEEN said...
    கவியலைகளை, புகைப்பட அலைகளுடன்
    வித்தியாசமாய் - விறுவிறுப்பாய்
    அறிமுகங்கள் செய்திட்டீர்கள், கவிஞர்
    மலிக்கா! பாராட்டுக்கள்!!
    37//

    வாங்கண்ணா. தாங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    அப்பவே கேட்கனுமுன்னு நெனச்சேன் அதென்ன முன்பு 42. இப்ப 37. மார்க் போடுறீங்களா வாத்தியாரண்ணா..

    ReplyDelete
  46. கலையன்பன் said...
    வலைப்பதிவர்களின் அறிமுகங்கள்
    அனைத்தும் அருமை!
    -கலையன்பன்.//

    வாங்க கலை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  47. /மதுரை சரவணன் said...
    அருமையான கவிதை தொகுப்பு.... அறிமுகம் .வாழ்த்துக்கள்.//

    வாங்க சரவணா. அன்பான கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

    ReplyDelete
  48. //குமரன் said...
    வலைப்பதிவர்களின் அறிமுகங்கள்
    அனைத்தும் மிகஅருமை மலிக்கா//

    வாங்க குமரன் அன்பான கருதுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  49. வலைகளில் அலைகளையே சிக்கவைப்பது நல்ல கலையாகத்தான் இருக்கிறது

    பாராட்டுவதற்குப் பெரிய மனது வேண்டும்.

    அந்த மாபெரும் மனதுக்குள் சிக்காத அலையோ கலையோ வலையோகூட இருக்க முடியுமா?

    அன்புக்கு நன்றி!

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  50. அன்புடன் புகாரி said...
    வலைகளில் அலைகளையே சிக்கவைப்பது நல்ல கலையாகத்தான் இருக்கிறது

    பாராட்டுவதற்குப் பெரிய மனது வேண்டும்.

    அந்த மாபெரும் மனதுக்குள் சிக்காத அலையோ கலையோ வலையோகூட இருக்க முடியுமா?

    அன்புக்கு நன்றி!

    அன்புடன் புகாரி/

    வாங்க ஆசான்.
    வலைக்குள் அலைகள் மாட்டியது விந்தையல்ல
    கலைகளை கற்றுக்கொடுக்கும்
    கவிகளே மாட்டியதுதானே விந்தை

    கவிமான்களை அறிமுகப்படுத்துவதில் எனக்குதான் மிகுந்தமகிழ்ச்சி

    ரொம்ப சந்தோஷம் ஆசான் தாங்களின் வருகைக்கும் அன்புமிகுந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  51. புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் மலிக்கா !

    ReplyDelete
  52. நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”

    ReplyDelete
  53. எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே நிறைய இதயங்கள் சேர வேண்டுமென்பதே எனது ஆசை. தங்களது உறுதுணையால் அது இன்னும் துரிதமாகிறது. அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மல்லிகா.

    இத்தனை பேர் கவிதை எழுதுகிறார்கள் என்பது இன்னும் உவப்பான செய்தி. அவ்வரிமுகங்களுக்கு தனியான நன்றிகள்.

    ReplyDelete
  54. அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிங்க மேடம்...

    ReplyDelete
  55. நேசமித்ரன் said...
    புதிதான அறிமுகங்கள் .நன்றிகள் மலிக்கா !//

    வாங்க நேசமித்ரன்.தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  56. கலாம் காதிர் said...
    நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”

    வாங்க காக்கா.கவிமீன்களை புசிக்காதவர்கள் எவருமுண்டோ விதிவிலக்கானவர்களைத்தவிர.

    என்னது கற்றுகுட்டியா. நீங்களெல்லாம் இப்படிச்சொன்னால் என்னாகும் இந்த பிஞ்சிக்குழந்தை..

    ரொம்ப சந்தோஷம் காக்கா
    அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  57. வருணன் said...
    எனது கவிதைகள் நிறைய விழிகள் வழியே நிறைய இதயங்கள் சேர வேண்டுமென்பதே எனது ஆசை. தங்களது உறுதுணையால் அது இன்னும் துரிதமாகிறது. அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மல்லிகா.

    இத்தனை பேர் கவிதை எழுதுகிறார்கள் என்பது இன்னும் உவப்பான செய்தி. அவ்வரிமுகங்களுக்கு தனியான நன்றிகள்.//

    வாங்க வருணன் . தங்களின் ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். வருடும் தென்றாலாய்
    வடிக்கும் கவிதைகளை விதைத்து
    வலம்வர வாழ்த்துக்கள்.

    இதுமட்டுமல்ல இன்னும் பலபேர் எழுதுகிறார்கள் அதையெல்லாம் தொகுக்க சமயம் போதாது..
    கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  58. //மாணவன் said...
    அனைத்து கவிஞர் (கவிதை) பக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிங்க மேடம்..//.

    வாங்க மாணவன். தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  59. அன்பின் மலிக்கா...
    கடலில் வீழ்ந்து, கரையேர தத்தலித்த எமக்கு அன்பு கரம் நீட்டி நாடறியசெய்த தங்களின் மேலான அன்புக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!!

    அன்புடன் கவிக்குயில்கள்.
    மகேந்திரன்

    ReplyDelete
  60. அன்புடன் மலிக்காவுக்கு என்னை தமிழ் மணத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.தொடர்ந்தும் இணைந்திருப்போம்.
    சகோதரன்
    அஸ்மின்.

    ReplyDelete
  61. கவிதை யாத்திடும் அளவுக்கு யான் கணிணியில் அறிவு உங்கள் அளவுக்கு இல்லை; பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே அள்ளி வீசும் உங்கள் கவிதை+கற்பனை+கண்ணிச் செயல்பாடு ஆகியவற்றில் உங்களோடு ஒப்பிட்டால் அடியேன் “கற்றுக்குட்டி” என்பது தான் உண்மை.

    வலைக்குள் மீன்கள் சிக்கியதா
    அல்லது
    மீன்(விழி)கள் வலை(ப்பூ)க்குள் சிக்கியதா

    ReplyDelete
  62. "கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்

    ReplyDelete
  63. "கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்

    ReplyDelete
  64. கவிகளின் வருசையை பார்த்தவுடன்
    ஒரே ஆனந்தம் . அவர்களைப்போல் உங்களைப்போல் என்னால் ஒரு கவிதையாவது படைக்க முடியுமா என ஆதங்கம்.
    எனக்கும் கொஞ்சம் சொல்லிதருவீங்களா?
    (சொல்லித்தந்தாளும் ஏறாது)எல்லாம் நப்பாசைதான்.

    ReplyDelete
  65. Blogger கலாம் காதிர் said...

    நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”
    -----------------------------------
    Blogger கலாம் காதிர் said...

    நீரோடையின் படகினில் ஏறிக் கொண்டுக் கவிமீன்களை “வலைச்சரம்” வலைக்குட் சிக்க வைத்த, வளைக்கரங்கட்கு வாழ்த்துக்கள்; அடியேனும் அவ்வலைக்குள் அகப்பட்டு விட்டேனே என்பதால் யோசிக்கின்றேன்:”எவரேனும் புசிப்பார்களா;இரசிப்பார்களா இந்தக் கற்றுக் குட்டி மீனை?”

    ReplyDelete
  66. திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் முதல்வனே!
    மூத்தவனே! மிகையாய் உம்மை கற்றுகுட்டி மீன் என்றது எவ்வாறு பொருந்தும்?.இந்த கவி வானில் நீர் ஒருதுருவ நட்சத்திரம்.
    இப்படி உம்மை சுருக்கி சொன்னால் மற்ற கவி எம்மாத்திரம்?. மருபடியும் சொல்வேன் ...நீர் திமிங்கலம்.
    சிரு மீனல்ல.
    Mohamed Thasthageer (crown

    ReplyDelete
  67. அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  68. கவிக்குயில்கள் said...
    அன்பின் மலிக்கா...
    கடலில் வீழ்ந்து, கரையேர தத்தலித்த எமக்கு அன்பு கரம் நீட்டி நாடறியசெய்த தங்களின் மேலான அன்புக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!!!

    அன்புடன் கவிக்குயில்கள்.
    மகேந்திரன்.//

    வாங்க மகேந்திரன். கவிகுயிலாக கூவும் கவிதைகளை கூவும் தாங்களின் குரலை பதிவுசெய்து இங்குகொண்டுவந்து அனைவருக்கும் கேட்கவைத்துள்ளேன் அவ்வளதான்.

    இன்னுமின்னும் சிறப்பாக கூவி குயில்களின் கவிகானத்தை சிறப்பாக்குங்கள்.

    தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
  69. Poet Asmin said...
    அன்புடன் மலிக்காவுக்கு என்னை தமிழ் மணத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.தொடர்ந்தும் இணைந்திருப்போம்.
    சகோதரன்
    அஸ்மின்.

    வாங்க அஸ்மின்.கவிதைகளில் கருக்கள் வைத்து கவிபடைக்கும் திறமைகள் தாங்களிடம் நிறைந்து இருக்கு சகோ.

    மிகுந்த மகிழ்ச்சி
    தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
  70. கலாம் காதிர் said...
    கவிதை யாத்திடும் அளவுக்கு யான் கணிணியில் அறிவு உங்கள் அளவுக்கு இல்லை; பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே அள்ளி வீசும் உங்கள் கவிதை+கற்பனை+கணினிச் செயல்பாடு ஆகியவற்றில் உங்களோடு ஒப்பிட்டால் அடியேன் “கற்றுக்குட்டி” என்பது தான் உண்மை.

    வலைக்குள் மீன்கள் சிக்கியதா
    அல்லது
    மீன்(விழி)கள் வலை(ப்பூ)க்குள் சிக்கியதா//

    காக்கா. அதெல்லாம் ஒரு குருட்டு தைரியம்தானே தவிர. தங்களைபோன்ற திறமை நிறைந்த கவிப்புலவரல்ல. கற்றறிந்த கணிணிப் புலமையுமில்லை.
    சும்மா பேசுக்கெல்லாம் சொல்லக்கூடாது கற்றுக்குட்டின்னு ஓகே...

    இந்த தங்கையின் வளர்ச்சிக்கு காக்காவின் துஆக்கள் என்றும் வேண்டும்..

    ReplyDelete
  71. கலாம் காதிர் said...
    "கணிணிச் செயல்பாடு” என்று வாசிக்கவும்; மீள்பார்வை இன்றி தட்டச்சுப் பிழையுடன் பதிவானதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.//

    எழுதுபிழைகள் வருவது சகஜமே. இதற்கெதற்கு மன்னிப்பு..

    நன்றிகாக்கா தாங்களின் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  72. crown said...
    கவிகளின் வருசையை பார்த்தவுடன்
    ஒரே ஆனந்தம் . அவர்களைப்போல் உங்களைப்போல் என்னால் ஒரு கவிதையாவது படைக்க முடியுமா என ஆதங்கம்.
    எனக்கும் கொஞ்சம் சொல்லிதருவீங்களா?
    (சொல்லித்தந்தாளும் ஏறாது)எல்லாம் நப்பாசைதான்.//

    வாங்க சகோ வாங்க. ஏன் இப்படி நீங்கள் எழுதும் கவிதைகளைவிடவா நாங்கள் எழுதிவிட்டோம். இப்படியெல்லாம் சொல்லி எங்களை கிண்டல்தானே செய்றீங்க..

    கவிகிரவ்ன் அவர்களே! அப்படின்னு சொல்லி அழைப்பதெல்லம் எனக்குத்தெரியாதுன்னு நெனச்சீங்களா.

    நீங்கதான் கற்றுத்தரனும் எங்களுக்கு கவியெழுத. நாங்க சும்மா ஜுஜிபி.

    மிக்க நன்றி சகோ.தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
  73. crown said...
    திமிங்கலமே(கலாமே)!இந்த கவி கலத்தின் முதல்வனே!
    மூத்தவனே! மிகையாய் உம்மை கற்றுகுட்டி மீன் என்றது எவ்வாறு பொருந்தும்?.இந்த கவி வானில் நீர் ஒருதுருவ நட்சத்திரம்.
    இப்படி உம்மை சுருக்கி சொன்னால் மற்ற கவி எம்மாத்திரம்?. மருபடியும் சொல்வேன் ...நீர் திமிங்கலம்.
    சிரு மீனல்ல.
    Mohamed Thasthageer (crown//

    அதானே அப்படிசொல்லுங்க. எல்லாரும் தன்னை சும்மா சும்மான்னு சொல்லிகிறாங்கப்பா. பெரிய ஆளுங்களெல்லாம் இப்படிதான் சொல்லிப்பாங்களோ! [தங்களைபோல்]

    ReplyDelete
  74. Anonymous said...
    அலைகள் நல்லாத்தான் அடிக்கிறது சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

    அப்படியே கொஞ்சூண்டு தங்களின் பேரை சொல்லிட்டு போயிருக்கலாம்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது