07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 29, 2011

முத்துச்சிதறல்களில் என் முன்னுரை:



முதலில் என்னை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்ள‌ விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பேயே என்னைப் பரிந்துரைத்த திருமதி.லக்ஷ்மி, திரு.வை.கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் அன்பு நிறைந்த நன்றி! 

என் மகன் தனது படிப்பு காரணமாக 2004-ல் அமெரிக்கா கிளம்பிய போது, 'மையம்' என்ற வலைத்தளத்தில் எனக்காக ஒரு சமையல் பிரிவை[http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food] ஆரம்பித்து வைத்து கணினியுடன் எனக்கான உறவைத்தொடர வைத்துச் சென்றார். நானே எதிர்பார்க்காத வகையில் நிறைய பேருக்கு அது பெரும் துணையென மாற, எனக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்களையும் அது ஈட்டித் தந்தது. ஆனால் மனதின் அனைத்து தாகங்களுக்கும் ஒரு வடிகாலாக ஒரு வலைப்பூ எனக்கென உருவாக்க விழைந்ததில் உருவானது தான் 'முத்துச் சிதறல்'.

என் 'முத்துச் சிதறலில்' உள்ள‌‌ முத்துக்கள் தரம் வாய்ந்ததாகவும் அழகானதாகவும் சிந்தையைக்கவர்வனவாகவும் இருக்க வேன்டுமென்பதில் நான் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறேன். முதலில் இல்லத்தரசி என்ற பதவியின் பொறுப்புகள், சுமைகள், அதற்குப்பிறகு தான் பதிவர் என்ற நிலையில் இருப்பதால் கடந்த மார்ச்சிலிருந்து இது வரை 94 பதிவுகள் தான் எழுத முடிந்தது. இருப்பினும் இந்த வலைப்பூ மூலம் கிடைத்த அபிரிதமான உற்சாகம், அருமையான‌ தோழமைகள், அவர்களின் அன்பான பின்னூட்டங்கள், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்!! இளமையில் கிடைத்து, அனுபவித்து, நடு வயதின் அழுத்தங்களில், மின்வேக சுழற்சிகளில், மற‌ந்து போன தமிழ்க்கவிதைகளும் நூல்களும் இலக்கிய அலசலும் அவற்றின் இனிமையும் அனுபவங்களும் இப்போது புதிதாய்ப் பிறந்தது போல திரும்பக் கிடைத்திருக்கின்றன!  மனதை நெக்குருக வைக்கும் கவிதைகள் எத்தனை! அசர வைக்கும் ஓவியச் சிதறல்கள் எத்தனை! நெத்தியடியாய் நெஞ்சில் அறைவது போல மனதை ஊடுருவும் எண்ணச் சிதறல்கள் எத்தனை! ஆக்கப்பூர்வமாய் உதவும் கரங்களாய் செயல்படும் வலைத்தளங்கள் எத்தனை! தெளிந்த சிந்தனையுடன், நகைச்சுவை உணர்வுடன், சமுதாய நோக்குடன், செந்தமிழின் தாக்கத்துடன் எத்தனை எத்தனை பதிவர்கள்!! பிரமிக்க வைக்கும் இந்த மகா சமுத்திரத்தில் சிறு துளியாக நான்!

இந்தச் சிறு துளியிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று இருக்கிறது!

மகாத்மா காந்தியின் முழுமையான தத்துவமே உண்மையும் அன்பும்தான். பார்வையிழந்தவர்களால்கூடப் பார்க்க முடிகின்ற. பேசும் திறனில்லாதவர்களால்கூட பேச முடிகின்ற, செவிப்புலன்களை இழந்தவர்களால்கூட கேட்க முடிகின்ற ஒரே மொழி அன்பு ஒன்று தான். அதே போல, ‘ எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கு தான் உண்மையான அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கின்றன, இம்மூன்றையும் தனித்தனியே இனம் பிரித்தல் இயலாததொன்று’ என்கிறார் காந்தி!

இன்றைய இயந்திர உலகில் இவையெல்லாம் மறந்து போன விஷயங்களாகி விட்டன. வளரும் சிறு குழந்தைகளுக்கு அலைபேசி, கணினி தெரிந்த அளவிற்கு,  நல்ல பண்புகள், சினேகிதம், கருணை, அன்பு- இதெல்லாம் தெரிவதில்லை. சொல்லித்தரப்படுவதுமில்லை. வலையுலகமும் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம்தான். கிட்டத்தட்ட தேய்ந்தே போய்விட்ட இது போன்ற நல் உணர்வுகளை மையப்படுத்தி அவ்வப்போது தங்கள் வலைப்பூக்களில் எழுத வேண்டுமென்று அனைத்து அன்புத் தோழமைகளிடம் இங்கே நான் வேண்டுகோள் விடுக்கிறேன்!

நாளையிலிருந்து, ஒவ்வொரு முத்துக்குவியலாய் பார்க்க
ஆரம்பிக்கலாம்!!     

 எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் சில:


53 comments:

  1. வணக்கம் அம்மா
    சுவையான முத்துக்களைக் கோர்த்து முத்துமணிக்குவியலாக தங்கள் எழுத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ....

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    ஆரம்பமே அசத்தலா இருக்கு
    தொடர்ந்து கலாக்குங்க.

    ReplyDelete
  3. மனோ அக்கா உங்கள் முதல் முத்துசிதறலே மிக அருமை..
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. மிகுந்த மகிழ்ச்சி. அன்பு பற்றி தாங்கள் கூறியது முழுக்க உண்மை. தஞ்சையை எப்போதும் மறக்காதிருப்பது பாராட்டுக்குரியது இந்த வாரம் அசத்துங்கள்

    ReplyDelete
  5. உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி இனிதே சிறக்க எமது இனிய நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  8. வணக்கம் அம்மா...

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    சுவையான தங்கள் எழுத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  9. அருமையான முன்னுரை.ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உங்களின் எதிர்பார்ப்பினை ஓரள‌வாவது சிற‌ந்த முறையில் நிறைவேற்றுவேனென்ற நம்பிக்கை இருக்கிறது தினேஷ்குமார்! அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  11. வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி லக்ஷ்மி!

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  13. வெளி நாட்டில் பல வருடங்களாக வாழ்ந்தாலும் வேர்கள் நம் சொந்த ஊரில்தானே இருக்கின்றன மோகன்குமார்?
    விரிவான பாராட்டுரைக்கு உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  14. தங்களின் இனிமையான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி பாரத் பாரதி!

    ReplyDelete
  15. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சித்ரா!

    ReplyDelete
  16. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் குமார்!!

    ReplyDelete
  17. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராம்வி!!

    ReplyDelete
  18. வரவேற்பிற்கு அன்பு நன்றி பிரகாஷ்!

    ReplyDelete
  19. வணக்கம் அம்மா

    வருக ... வருக...


    பணி இனிதே சிறக்க எமது இனிய வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  20. ”பாலை”,

    கன்ணீர் முத்துக்களை தொடுத்தச் சரம். அதில்,

    // இனி 3 வருடங்களுக்கு ஊர்ப்பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என்று ரத்தக் கண்ணீர் விட்டழுதவர்களைப் பார்த்திருக்கிறோம். திரும்பவும் ஆறு மாசத்திலேயே அவர்களே ‘ ”இதெல்லாம் பிரசவ வைராக்கியம் மாதிரிதான்”//

    இந்த உவமையை வெகுவாக ரசித்தேன். காரணம்,

    எங்கள் ஊரில் ஒரு பெண்மணி, வருடத்திற்கு ஒன்று தவறாமல்
    பெற்றெடுப்பதை “கடமை”யாய்க் கொண்டிருந்தார். பிரசவத்தின் போது ஊரே காதைப் பொத்திக் கொள்ளும், அவ்வளவு வசையை அவிழ்த்து விடுவாள் -கணவனுக்கு. (ஆனால் வருஷம் தவறாமல் - பிரசவம்)

    ReplyDelete
  21. இந்த வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள அன்புக்குரிய திருமதி மனோசுவாமிநாதன் அவர்களை வருக! வருக!! வருக!!! என்று வாழ்த்தி வரவேற்கிறோம்.

    அறிமுகமே அசத்தலாக அமைந்துள்ளது.

    தங்களின் இந்த அரியப் பணி மிகச்சிறப்பாகவும், அருமையாகவும் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் மனோ மேடம். சிறப்பான பதிவுகளின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  23. வலைச்சர சிறப்பாசிரியர் பணிக்கு வாழ்த்துகள்... முன்னுரையே படத்திலும் எழுத்திலும் முத்தாக இருக்கிறது...

    ReplyDelete
  24. வலைச்சர சிறப்பாசிரியர் பணிக்கு வாழ்த்துகள்... முன்னுரையே படத்திலும் எழுத்திலும் முத்தாக இருக்கிறது...

    ReplyDelete
  25. வலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  26. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. அன்புச் சகோதரி மனோ - ஆசிரியப் பொறுப்பேற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள். முதல் நாள் பதிவு நன்று. சுட்டிகள் அருமை. நட்புடன் சீனா

    ReplyDelete
  28. அன்பு பற்றிய கருத்துக்களும், வேண்டுகோளும் நெகிழ்வாக இருந்தது அம்மா.

    ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. நல்வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  30. என் 'பாலைவன வாழ்க்கையின் லாப நஷ்டங்கள்' பதிவிற்கு அருமையான பின்னூட்டம் கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி சத்ரியன்!!

    ReplyDelete
  31. அன்புள்ள‌ திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!

    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு அளப்பரியா உற்சாகத்தைக் கொடுத்து, என் பணியின் மீது இன்னும் அதிகப்படியான பொறுப்பைத் தந்துள்ளது. தங்களின் இனிய வரவேற்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மனங்கனிந்த நன்றி!

    ReplyDelete
  32. அன்பான வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சாகம்பரி!

    ReplyDelete
  33. அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி சகோதரர் பத்மநாபன்!

    ReplyDelete
  34. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் செள‌ந்தர்!

    ReplyDelete
  35. அன்பான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மாலதி!

    ReplyDelete
  36. அன்புச் சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு!

    முதல் நாள் பதிவிற்கும் எனது சுட்டிகளுக்குமான தங்களின் பாராட்டு எனக்கு மகிழ்வு நிறைந்த உற்சாகத்தையும் என் பணியின் மீது அதிக பொறுப்புணர்ச்சியையும் தந்திருக்கிறது. தங்களின் நல்வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் இதையம் நிறைந்த‌ நன்றி!

    ReplyDelete
  37. 'அன்பு' பற்றிய எனது கருத்துக்களுக்கும் வேன்டுகோளுக்கும் உங்களின் நெகிழ்வான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது ஆதி! உங்களின் வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றி!!

    ReplyDelete
  38. நல்முத்துடன் ஆரம்பித்திருக்கிறது உங்களது வலைச்சர பயணம். தொடரட்டும் உங்கள் ஆசிரியப் பணி.... இன்னும் நிறைய முத்துகளை அள்ளி வழங்குவீர்கள் என்ற நினைவுடன் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  39. அன்பு வணக்கங்கள் அம்மா....

    படிக்க படிக்க என்னையே நான் படிப்பது போல் உணர்கிறேன்....

    அன்பை பிரதானப்படுத்தி நீங்கள் சொன்ன விஷயங்கள் அத்தனையும் சிறப்பு.... படிக்க படிக்க அத்தனை அருமையாக இருக்கிறது....

    உண்மையே அன்பு யாருமே அறியும் ஒரு எளிய மொழி....

    உண்மையும் அன்பையும் மிக அழகா சொல்லி இருக்கீங்கம்மா....

    முத்துக்கள் மிக அழகாய் உங்க அன்பு மனதை போலவே பிரகாசிக்கிறதும்மா...

    என்றோ கவிதையும் கதையும் ஓவியமும் பாட்டும் நடனமும் கைவிட்டு போனது....

    இத்தனை வருடங்கள் கழித்து 2007 ல திரும்ப என்னுடைய அபிலாஷைகள் எல்லாமே துளிர்க்க ஆரம்பிக்க முத்தமிழ் மன்றம் முக்கிய பங்கு வகித்தது....

    இன்னைக்கு நீங்க சொன்னது போல ப்ளாக்ஸ்பாட்டில் நாம் விரும்பியபடி படைப்புகளை படைத்து எல்லோரும் மனம் கவரும்படி ரசிக்கும்படி மெனக்கெடுகிறோம்... சோ க்யூட் நா அம்மா?

    ஆர்வத்துடன் தொடர்கிறேன் உங்களை....

    அன்பு வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் அம்மா ...

    ReplyDelete
  41. வாழ்த்து க்கள். முத்துசிதறல் போல வலைச்சரமும் ஜொலிக்கும்.

    ReplyDelete
  42. அக்கா!! இன்ப அதிர்ச்சி எனக்கு!! மிகுந்த மகிழ்ச்சியும்கூட. வாழ்த்துகள்.

    இவ்வாரம், பெருநாள் பிஸியில் தினமும் உங்கள் வலைச்சர உரைகளைப் படிக்க முடியாவிட்டாலும், பின்னராவது வந்து படித்திடுவேன் அக்கா, இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  43. முன்னுரை அழகான நடையில் இருந்தது...வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. முதல் முத்தாய் முன்னுரை முத்து நன்றாக ஒளி வீசுகிறது.
    வித விதமான அறிமுக முத்துக்களுக்கு காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  45. அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  46. மனந்திற‌ந்த உங்களின் விரிவான பின்னூட்டம் மிகவும் மகிழ்வை அளித்தது மஞ்சுபாஷி‌ணி! நமக்கெல்லாம் இந்த வலைப்பூ என்பது ' மீன்டும் வசந்தம்' என்பது போலத்தான்!!

    ReplyDelete
  47. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சித்ரா கிருஷ்ணா!

    ReplyDelete
  48. வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி தமிழ் உதயம்!

    ReplyDelete
  49. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!
    அதோடு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றியும் கூட!

    ReplyDelete
  50. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் உள‌மார்ந்த நன்றி 'மாய உலகம்' ராஜேஷ்!!

    ReplyDelete
  51. பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜி!

    ReplyDelete
  52. வலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது