என்னுடைய சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று......
உங்களிடம் சொல்லாமல் எப்படி????
நானே பள்ளிக் கூடம் ஒன்று ஆரம்பித்து நடத்த வேண்டும்.
அதுவும் என் இஷ்டப் படி.....
ஏட்டுப் படிப்பு வேலைக்காகாது........
தற்போதைய படிப்பு முறை என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று....
ஆசிரியர்கள் சிலபஸ் பின்னாலும்...
மாணவர்கள் மதிப்பெண்கள் பின்னாலும்...
அலையும் காலமிது..!
புரிந்து படிக்கும் நிலை வகுப்பிற்கு ஒன்றிரண்டு மாணவர்களிடம் இருந்தாலே அதிகம்..!
மதிப்பெண்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களையும் கண்டிருக்கிறேன்..!
இதை எல்லாம் மாற்றுவதென்பது??????
என் வரையில் முயன்றுதான் பார்க்கலாமே......
என்னும் எண்ணம்தான் ஒரு பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் ஆசைக்கு வித்திட்டது....
என் பள்ளியில் சிலபஸ்....
அதை முடிப்பது என்ற சிக்கலே இருக்காது...
தேர்வு...
மதிப்பெண்கள்...
என்னும் மன நோய் பிடிக்க வைக்கும் வேதனைகள் இருக்காது...
கல்வி என்பது, உருப் போடுவதாக அல்லாமல் கற்றுக் கொள்வதாக இருக்கும்.....
விரும்பிக் கற்றுக் கொள்வதாக இருக்கும்.....
வாழ்வியலுக்கு ஏற்ற கல்வி முறையாக இருக்கும்......
வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த கல்வியாக இருக்கும்.......ம்ம்ம்ம்...
கனவுகள் பல..பல...கனவு காணக் கூடாதா என்ன????????
இந்த என் கனவு நிச்சயம் பலிக்க வேண்டும்..!
இனி இன்னிக்கு கனவுப் பதிவுகள்.....
இது
சம்பத்தின் கனவு.....அழகிய உருப்படியான கனவுகள்தான் ...ஆனால் பலிக்க வேண்டுமே??????
அப்புறம்
அருள்குமாரின் கனவுப் பெண் பற்றிய பதிவு.....
மணியம் செல்வனின் பெண்களை நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கமுடியுமா???
அந்த நெடிதுயர்ந்த உருவமும்,
நீளக் கூந்தலும்,பூவும்,
வெடு வெடுவென்று நீளும் விரல்களும் ...
ம்ம்ம் பெண்களுக்குப் பொறாமை தரும் அழகல்லவோ???
அதை இவர் ரசித்துச் சொல்வது மட்டுமல்லாமல் வரைந்துமிருக்கிறார்...
அப்புறம்
நாட்டியின்( இதுதாங்க பெயர்) உயிர் வளர்க்கும் கனவுகள்.......உணர்வு பூர்வமான பதிவு....
"உயிருக்கு உவகை பாய்ச்சும் உரம்
உணர்வுக்கு மட்டுமே உள்ளது...."
அடுத்ததாக நம்ம
கலையரசியின் உயிர்ப்பு..... அவரின் கனவுகள் பற்றி ரொம்ப விரிவாகச் சொல்லியிருக்கிறார்.......கொஞ்சம் விசித்திரக் கனவுகள் கூட உண்டு....
"விசித்திரமான கனவுகள். நாவல் (நீண்ட கனவுகள்), சிறு கதைகள் (குறுகிய கனவுகள்), தொடர்கதைகள் (சொன்னா நம்புங்க, எனக்கு ஒரு கனவின் தொடர்ச்சி, ஒரு விழிப்பின் பின்னர் அடுத்த தூக்கத்தில் தொடரும்) எல்லாம் வரும். ஒரு கனவு கண்டு எழுந்த பின்னர், அந்த கனவு கண்டதாக அடுத்த கனவில் வேறு யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பேன்"
படிச்சுப் பாருங்க....
அப்புறம்
பா.நம்பியின் வைகறை வானம்....கொடுக்கும் கனவு.கனவும் காட்சியும்..
அழகான எளிமையான வார்த்தைகள்தான் இருந்தும் மனதைத் தொடுகின்றன....
"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே பல நேரங்களில்
நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது! மாற்றியும் வைக்கின்றது
நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!
நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும் அதற்கே விலையாய்
இன்றே தருவோம்!!
நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை"
இது கொஞ்சம் வருத்தக் கனவு .....
பத்மா அர்விந்த்துடையது..."சுதந்திரக் காற்றும் கூண்டுக் கிளியும்"பதிவும் அருமையானது...பதிவின் முடிவில் இருக்கும் கனவுக் கவிதையும் ரொம்ப அருமை.....
"கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க
என்ற கவிதை வரிகள் போல
இங்கே இன்னமும் கனவுகளாகவே
சுதந்திரமும் இருக்கிறது. "
கனவுக்கு உள்ள சுதந்திரம் வேற எதற்கும் கிடையாது...
ஏன் என்றால் கனவு வெளியில் நம்முடன் நாம் மட்டுமே.
மனவருத்தத்தை பளிச்சென்று காட்டக் கூடிய முகம் கிடையாது கனவுக்கு.....
சூரியனில் கூடப் போய் குடியிருந்ததாகக் கனவு காணலாம்....
சூரியன் சுடாது...
கனவுக்கு வானமே எல்லை.
கனவு என்றால்
அப்துல் கலாமோடு முடிப்பதுதானே பொருத்தம்???
இது அப்துல் கலாமின் சிறிய வயது விவாதம்.....பதிந்தவர்
ஸ்ரீநிவாசன்.அ.பால்ராஜ்.