07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2008

நன்றிகள்.



சென்றவார வலைச்சர ஆசிரியராக எனக்கு ஒரு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். என் பதிவுகளுக்கு அதிகமாய் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த தமிழ் வலைப்பதிவிடுதல் பற்றி நானே அறிந்துகொண்டு, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன். மற்ற பதிவர் நண்பர்களுடன் அதிகம் பரிச்சயமில்லை. இருந்தும், என்னை இங்கும் அழைத்து வந்து, என் எழுத்தையும் அனைவரும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திய நண்பர் சீனா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மீண்டும் நன்றிகள் சினா!!

இந்த வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு எனக்கு பல புதிய வலைப்பதிவுகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்ததுடன், அதிகமான வலைப்பதிவ நண்பர்களையும் பெற்றுத்தந்தது. மிக்க மகிழ்ச்சி.

நான் தமிழ்மணம் மற்றுமான தமிழ் திரட்டிகள் பற்றியும் மிக அதிக அளவில் கற்றுக்கொண்டது சமீபமாய்த்தான். அதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது வலைச்சரம் தான்.

யான் வாசித்த இன்பம் பெறுக தமிழுலகம் என்னும் முயற்சியிலமைந்த இந்த வலைச்சரம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த வலைச்சரம் மேலும் மேலும் சிறப்பாக நடைபோட என் வாழ்த்துக்கள்!

இன்னும் அனேக வலைப்பூக்கள் வாசித்தும், குறிப்பெடுத்து வைத்தும் நேரமின்மை காரணமாக அவற்றை அனைத்தும் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நான் இனி உங்கள் அனைவருடனும் நட்பென்னும் ஒற்றையடிப்பாதையில் மிக நெருக்கமாக பயணிக்க விரும்பும் என் ஆசைகளையும் தெரிவித்துகொள்கிறேன்.

எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

நன்றிகளுடன்,
என்றும் உங்கள் நண்பன்,
கோகுலன்
gokulankannan@gmail.com

6 comments:

  1. வலைச்சரம் பகுதியை மிக வித்தியாசமாகவும்,அருமையாகவும் செய்திருக்கிறீர்கள் கோகுலன்.
    வாழ்த்துக்கள் நண்பா :)

    ReplyDelete
  2. கோகுலன்,

    உங்களின் ஒரு வார ஆசிரியப் பணி வித்தியாசமானது, பாராட்டத்தக்கத்து :)

    ReplyDelete
  3. கோகுலன்

    புரிகிறது - உங்களின் பணிச்சுமையும் நேரமின்மையும். இருக்கும் சிறிது நாட்களிலேயே சிறந்த முறையில் பொறுப்பு வகித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. உங்களின் ஆசிரியப் பணி பாராட்டத்தக்கத்து. வாழ்த்துக்கள் கோகுலன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்
    நண்பரே

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்
    நண்பரே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது