07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 22, 2008

நானும் என் வலைப்பூக்களும்

நன்றிகள் சீனா!

அன்பு நண்பர் சீனா அவர்கள் என்னைபற்றியதொரு நல்ல அறிமுகம் ஏற்கனவே தந்து விட்டார். இருந்த போதிலும் என்னை பற்றி மேலும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்களாயின் இதோ என் அறிமுகம்

நான் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட நான் கவிதைகள், கதைகள் எழுதுவேன் என்று நினைத்தும் கூடப் பார்த்ததில்லை.

திடீரென என் தோழி ஒருவரின் திருமணநாளுக்காய் பரிசு வாங்கிவைக்க மறந்த சூழ்நிலையில் தான் அவசரமாய் ஒரு கவிதை எழுத தீர்மானித்தேன். அது தான் என் இரண்டாவது கவிதை. அப்படின்னா, முதல் கவிதை என்னவென்று கேட்கிறீர்களா?

அது நான் ஆறாம்வகுப்பில் படிக்கும் பொழுது எனது வகுப்பாசிரியர் மாணவர்கள் அனைவரையும் ஒரு கவிதை எழுதிவரச்சொன்னபோது நான் எழுதியது. அந்தக்கவிதை,

'நெற்கதிர்
ஏன் தலைசாய்ந்து நிற்கிறது,
அறுவடைக்கு செல்லும்
வெட்கமோ?'

அது நல்லாயிருக்குன்னு எனது ஆசிரியர் ஒரு வாரபத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆனது. அதன்பின்பு இரண்டாவது கவிதைக்கு பதினைந்து வருடங்களாகி விட்டன.

ஆரம்பம் முதலே எனக்கு சித்தர் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த அந்த சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் என்னை எப்பொழுதுமே கவர்ந்தவை. அதன் சாரத்தில் ஆரம்பத்தில் கவிதைகள் எழுத முயன்றேன். அதில் ஒரு கவிதைதான் நான் ஆரம்பத்தில் எழுதிய ஞானம்.

என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமான கண்ணனை நினைத்து ராதையின் மனநிலையில் எழுதியது கடவுளர் காதல்.
ஐயப்ப அந்தாதியும், தாய்மடியும் என் நண்பர்கள் அதிகம் பாராட்டிய கவிதைகள்!

சமீக காலமாய் என் சகோதரர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தால் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்துள்ளேன்.

மேலும் என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் என் தமிழ்கவிதைகளை மொழிபெயர்த்து சொல்லிசொல்லி சோர்ந்து போய், இறுதியில் ஆங்கிலத்திலும் எழுதவே ஆரம்பித்து விட்டேன். அதற்கான வலைப்பூவும் உண்டு.

என் சுயபுராணத்தை கொஞ்சம் அதிகமாகவே நீட்டி முழக்கிட்டேன்னு நினைக்கிறேன். இந்த வலைச்சரத்து மக்கள் என் வலைப்பூக்களின் பக்கம் அதிகம் வந்ததில்லை என்பதால் என்னைபற்றியும் என் வலைப்பூக்கள் பற்றியும் ஒரு தெளிவான அறிமுகம் தரலாம் என் நினைத்தேன்.

அடுத்த பதிவு முதல் என்னை கவர்ந்த பல வலைப்பூக்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும் நானும் இந்த வலைச்சரம் குறித்து மிக சமீக காலமகத்தான் அறிந்தேன். எனக்கும் ஆசிரிய வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கும் வலைச்சர நண்பர்களுக்கும் மிக்க நன்றிகளுடன் அன்பான நண்பர்களுடன் கைகோர்த்தே பயணிக்கும் உங்கள் கோகுலன்.

12 comments:

  1. //'நெற்கதிர்
    ஏன் தலைசாய்ந்து நிற்கிறது,
    அறுவடைக்கு செல்லும்
    வெட்கமோ?'//


    அட ரொம்ப நல்லா இருக்கே!

    ReplyDelete
  2. ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அருமையான கவிதை எழுதி இருக்கிறார். கண்ணன் - பாராட்டுகள். அறுவடைக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் நெற்கதிர் தலை குனிந்து மணப்பெண் போல வெட்கத்துடன் நிற்கிறதாம். என்ன ஒரு சிந்தனை அச்சிறு வயதில்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    /நெற்கதிர்
    ஏன் தலைசாய்ந்து நிற்கிறது,
    அறுவடைக்கு செல்லும்
    வெட்கமோ?/

    கலக்கல்

    ReplyDelete
  4. முதல் கவிதை அருமை. ஆனால் இடைவெளி தான் ரொம்ம்ம்ம்ப அதிகம். :))

    இந்த வார பயணத்தை தொடருங்கள். படிக்க நாங்களிருக்கிறோம்.

    ReplyDelete
  5. மிக்க நன்றிங்க நல்லவன் :))

    ReplyDelete
  6. மிக்க நன்றிங்க நல்லவன் :))

    ReplyDelete
  7. பாராட்டுக்களுக்கு நன்றிகன் நண்பரே சீனா..
    :))

    ReplyDelete
  8. நன்றிகள் திகழ்மிளிர்!!

    ReplyDelete
  9. அன்பு நண்பர் அம்பி,

    தங்கள்,பின்னூட்டம் மிகுந்த ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது.

    நன்றிகள்..

    ReplyDelete
  10. வரவேற்பிற்கு நன்றிகள் மங்களூர் சிவா..

    ReplyDelete
  11. வரவேற்பிற்கு நன்றிகள் மங்களூர் சிவா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது