07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 19, 2008

சுட்டிகளின் உலகிற்கு சுட்டிகள்

ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்? அப்படி இணையத்தில் இறைந்து கிடக்கும் மழலைக்குறும்புகள் பற்றிய பதிவுகளும் குழந்தைகளின் உலகைச் சார்ந்த பதிவுகளும் இன்று

***

ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு நேசிப்பாள் என்று சொல்ல தேவையில்லை। ஆனால் ஒரு குழந்தையாய் மட்டும் பாராமல், தன் சினேகிதியாகவே தன் குழந்தையை பாவிக்கிறார் கலையரசி. என் குட்டி சினேகிதி!

***

ஒரு குழந்தைப்பட்டாளம் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது முத்தலெட்சுமி அக்காவின் கோன் பனேகா கோரோர்பதி பதிவு

***

தன் குட்டி தேவதையின் ஒவ்வொரு செயலையும் உருகி உருகி ரசிக்கும் சந்தனமுல்லை நம்மையும் அந்த தேவதையின் குறும்புகளுக்கு சிரிக்க வைக்கிறார் பப்புஸ் டே அவுட் பதிவில்

***

முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம் :)

***

இந்த பிள்ளைக்கு கதை சொல்லி தூங்கும் வைக்கும் முன்னே நான் முதலில் தூங்கிப்போகிறேன் என்பது தான் பல கதைசொல்லிகளின் குறை :)அப்படித்தான் ஐந்து தலை யானை முட்டைக் கதை வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறாள் ஜனனி। அருட்பெருங்கோ அலறியடித்துக்கொண்டு ஒரு யானையின் மேல் ஐந்து தலை நாகத்தை உட்காரச் சொல்லிவிட்டு முட்டைக்கு எங்கே போவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது கொலைவெறியோடு யோசித்து ஆகாயநதி சொன்ன - ஐந்து தலை யானை முட்டைக் கதை

***

ஒரு குட்டிப்பாப்பா தன் அப்பாவுடன் சேர்ந்து அழகாய் சொல்லும் கதை கேட்கனுமா? கதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை

***

உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி பற்றியும் மாண்டிசோரி கல்வி முறை பற்றியும் தெளிவாக விளக்கிறார் புதுகை தென்றல்

***

போன வாரம் ரிலயன்ஸ் ப்ரேஷில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது ஒரு குழந்தை தன் அம்மா பின்னாடியே 'அம்மா, தாபிகானா சூ.... தாபிகானா சூ' என்று கத்தியபடியே சென்றது (வேறொன்றுமில்லை ட்ராபிக்கானா ஜீஸ் வேண்டுமாம்). எங்க மாமா பொண்ணுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது. குர்குரே என்றால் அவ்வளவு பிரியமாய் சாப்பிடுகிறாள். JUNK FOOD சாப்பிடும் பழக்கம் இப்போதிலிருந்தே ஆரம்பித்தால் உடல்நிலை என்னாவது? குழந்தைக்களுக்கான உணவு முறை பற்றி விளக்குகிறது பேரண்ட்ஸ் கிளப்பின் பதிவு

***

சொல்வதற்கு ஏதுமில்லை.... நீங்களே பதிவு பாருங்க‌ :)
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்

18 comments:

  1. //ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்?///


    நல்ல ஐடியா :))

    சுட்டிகளை பற்றி சுட்டிகள் சூப்பர் :))

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஆயில்யன் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. வலைப்பூவில் வகையினை தேர்ந்தெடுத்து கொடுத்த சில சுட்டிகள் வேலை செய்யவில்லை. இப்போது அந்த பதிவிற்கே சுட்டி கொடுத்துவிட்டேன். எங்கேனும் கொடுத்த சுட்டி வேலை செய்யாவிடில் தெரிவிக்கவும்.

    தடங்கலுக்கு வருந்துகிறேன் :(

    ReplyDelete
  4. \\ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்?//

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆகாய நதி :)

    ReplyDelete
  6. வாங்க அக்கா, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    :-))

    ReplyDelete
  7. / ஆகாய நதி said...
    மிக்க நன்றி :)
    /

    /பிரேம்குமார் said...
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆகாய நதி :)
    /

    அடப்பாவிகளா... உங்க அலப்பறைக்கு ஒரு அளவில்லையா??????

    அப்பறம்… சுட்டிக்கு நன்றி தல!!!

    ReplyDelete
  8. சுட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  9. montissori pathivin chuttiku mikka nandri.

    Endrum anbudan,

    Pudugaithendral.

    ReplyDelete
  10. //ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்?///

    ஆமாங்க, இதே வார்த்தைகளை என் தங்கையிடம் இரண்டு நாட்களுக்கு முன் சொல்லிக் கொண்டிருந்தேன், அவளது மகளின் குறும்புப் பேச்சுக்களை பதிவிட (குழந்தையின் படத்தைச் சேர்க்க) அனுமதி கேட்கும் போது.

    //குழந்தை வளர்ந்தபின்// வளரும் வரை காத்திருக்க வேண்டாங்க. இப்போது அவர்ளுக்கு 5 வயது முடியப் போகிறது. இந்தக் கோடை விடுமுறையில் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள், பிறந்ததிலிருந்து அவளை நான் எடுத்த வீடியோக்களை போட்டுக் காண்பித்த போது "பெரியம்மா" என சந்தோஷ மிகுதியில் நெகிழ்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னையும் நெகிழச் செய்து விட்டாள்.

    நீங்கள் சுட்டிய இடங்களுக்குச் சென்று 'சுட்டிகளை' ரசித்து வந்தேன்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலட்சுமி

    //அவளை நான் எடுத்த வீடியோக்களை போட்டுக் காண்பித்த போது "பெரியம்மா" என சந்தோஷ மிகுதியில் நெகிழ்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னையும் நெகிழச் செய்து விட்டாள்.//

    எங்களையும் நெகிழ செய்துவிட்டீர்கள்.
    உங்கள் தங்கையின் குழந்தைக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சுட்டிகள் எல்லோமே சூப்பர் !

    ReplyDelete
  13. அதுலயும் அந்த முழு நீள மொக்கை கலக்கல்...

    ReplyDelete
  14. நிலா பற்றி சொல்லவே தேவையில்லை போட்டோக்கு போஸ் குடுக்கிறதுல அவளை மிஞ்ச யாரு...

    ReplyDelete
  15. நான் ரொம்ப ரசிச்சது ஜனனியும், நிலாவும்தான் மத்த சுட்டிகளை இனிதான் பாக்கணும்...

    ReplyDelete
  16. //ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்?///


    நிஜமாவே ரொம்ப பெறுமதியான பரிசுதான்...

    ReplyDelete
  17. இன்றுதான் எனது பக்கத்தில் இருந்த உங்களது பின்னூட்டம் பார்த்து இங்கே வந்தேன். எனது இடுகைக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி.

    உண்மைதான், குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய நல்ல பரிசு அதுதான்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது