07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 25, 2008

சில வலைப்பூக்களின் வாசங்கள்..



என் முதல் கவிதைகளை தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் தட்டச்சுசெயலி தேடும்போது தான், இணையத்தில் சிதறிக்கிடக்கும், அல்ல அல்ல, குவிந்து கிடக்கும் தமிழ் வலைப்பூக்கள், குழுமங்கள் பற்றி அறிந்தேன். அப்படியொரு குழுமத்தில் முதலாய் இணைந்தேன், வலைப்பூக்கள் வாசித்தேன். அதிசயித்து போனேன் இணையத்தில் இவ்வளவு தமிழா என. தமிழின் காலத்திற்கேற்ற, நவீனத்திற்கேற்ற வளர்ச்சியில் மிகவும் மகிழ்ந்தேன்.

அவ்வாறு ஆரம்ப காலத்தில் நான் வாசித்த வலைப்பூக்களுள் மிக முக்கியமான ஒன்று நண்பர் ஹரண் பிரசன்னாவினுடையது. அவரது கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. திருநெல்வேலி பேச்சுவழக்கில் அமைந்த கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. வாசிக்கையில் இணையத்தில் தமிழ் வாசிக்கும் என் ஆர்வத்தை அதிகம் தூண்டின.

அவரது கதைகளின் மூலமே அறிந்து கொண்டேன், அவரும் எனது ஊர்க்காரர்தான் என்று. சொல்லப்போனால் என் பக்கத்து தெருக்காரர்.

----------ooooo000))$((000ooooo-----------

மேலும், அப்பொழுது எனக்கு வாசிக்க கிடைத்த ஒரு கவிதைகள் வலைப்பூ நிலவுநண்பனுடையது

புகைவண்டி பயணமொத்த இந்த வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒருவரை சிநேகத்துடன் புன்னகைக்கும் விதமாய் அமைந்த இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. உலகின் வாழ்க்கையில் சக மனிதருடனான நட்பு நிறைந்த வாழ்க்கையை அழகாக சொல்லும் வரிகள் இவை.

............
என் பயணத்தின்
இறுதிவரையிலும் அப்படியே
இனிய துணையாக அமைந்துவிட்டால்

அழகாகவே இருக்கக்கூடும்
இரயில் பயணமும் வாழ்க்கையும்!!

----------ooooo000))$((000ooooo-----------

சமீபமாய் என்னை அதிகமாக பாதித்த ஒரு பதிவு நண்பர் அந்தோணிமுத்து அவர்களுடையது. கர்ணனை நண்பனாக பாவித்து அவர் எழுதியுள்ள அந்த பதிவில் வாங்குதலின் வலியை வலியுடன் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் சோதனைகளை முறியடித்து சாதனை படைக்கும் இந்த இளைஞர் மிகவும் பாராட்டுக்குரியவர்.

----------ooooo000))$((000ooooo-----------

காலமாற்றத்தில் இயல்பாய் மாறிப்போகின்ற சாதாரண நிகழ்வையும் அழகாக கவிதை வடிவில் சொல்லியிருக்கும் நண்பர் சேவியர் அவர்களின் குடுகுடுப்பைகாரன்.

----------ooooo000))$((000ooooo-----------

யதார்த்தக் கவிதைகளும் காதல் கவிதைகளும் நிறைந்த நண்பர் தணிகையின் வலைப்பதிவுகளும் நான் தவறாமல் வாசிக்கும் வலைப்பதிவுகள்.

----------ooooo000))$((000ooooo-----------

சதங்கா அவர்களின் ஓவியங்களுக்கான வலைப்பூ மிகவும் பாராட்டத்தக்கது. பென்சில், பேனா, ஆயில் பெயிண்டிங், கணிப்பொறியில் வரைந்த மின்னோவியம் என அனைத்து முறைகளையும் பயன்படுத்தி இவர் வரைந்த ஓவியங்கள் மிக மிக அழகானவை.

நானும் ஓவியம் வரைவதில் என் திறமை என்னவென்று அறிய பெயிண்டிங் சம்பந்தமான எக்கச்சக்க பொருட்களை வாங்கி என்னறையில் குவித்திருக்கிறேன். ஓரிரு முறை முயற்சிகளுக்கு பின்னால் அது அப்படியே இருக்கிறது. எப்பொழுது மீண்டும் ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை.. :)

----------ooooo000))$((000ooooo-----------

அன்பு ஒரு அதிசயம்!
அது ஒரு அக்ஷய பாத்திரம்!

எடுக்க எடுக்க நிறையும்!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

என அன்பை பற்றி அழகான சொல்லும் சகோதரி கவிநயா அவர்களும் தன் பதிவுகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்தவர்.

----------ooooo000))$((000ooooo-----------

10 comments:

  1. அன்பின் கோகுலன்,

    அழகாகச் செல்கிறது வலைச்சரம்

    பலப்பல பதிவர்களைப் பற்றி எழுதிய பதிவு. பாராட்டத்தக்கது.

    நல்வாழ்த்துகள்.

    அன்பின் அந்தோணி முத்து பற்றி தனி மடல் அனுப்புகிறேன். ஏதேனும் செய்ய வேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  2. கோகுலன் என் வலைப்பூவை பற்றியும் எழுதியமைக்கு நன்றி...


    அந்தோணி முத்துவின் வலைப்பூவை எனக்கு அறிமுகபடுத்தியமிக்கும் நன்றி...

    ReplyDelete
  3. கடந்த மாதம்தான் வலை தளத்தில் வலம் வர ஆரம்பித்தேன். வலைப் பூக்களில் கவிநயாவை அடுத்து என்னைக் கவர்ந்த கவிஞர் தாங்கள் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    சதங்காவின் நேர்த்தியான எழுத்துக்கள் எனக்குப் பிடித்தவையே. அவரது இன்னொரு பக்கமான ஓவியத் திறமை நான் அறியாதது. அறிய உதவியதற்கு நன்றி.

    நீங்கள் சுட்டியிருக்கும் மற்ற வலைப் பூக்களையும் கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. கோகுலன்,

    மிக அருமையாக பதிவுகள் பதிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    'சித்திரம் பேசுதடி' தளத்தைப் பற்றி எடுத்து சொல்லியதற்கும் மனம் திறந்த நன்றிகள் பல. ரொம்பப் புகழ்ந்திருக்கிறீர்கள். அந்த அளவிற்கு பெரிதாக இன்னும் ஒன்றும் செய்துவிடவில்லை, நிறைய கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.

    நீங்கள் அறை முழுதும் நிறப்பிய பொருட்களை வெகு சீக்கிரம் பயன்படுத்தி, நிறைய படங்கள் வரைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மிக்க நன்றிகள் நண்பர் சீனா!!

    நண்பர் அந்தோணி முத்து அவர்களூக்கு உதவ நான் மிக ஆர்வமாக உள்ளேன். தனிமடல் மூலம் பேசுகிறேன்!:)

    ReplyDelete
  6. மிக்க நன்றிகள் நண்பர் சீனா!!

    நண்பர் அந்தோணி முத்து அவர்களூக்கு உதவ நான் மிக ஆர்வமாக உள்ளேன். தனிமடல் மூலம் பேசுகிறேன்!:)

    ReplyDelete
  7. மிக்க நன்றிகள் நண்பர் சீனா!!

    நண்பர் அந்தோணி முத்து அவர்களூக்கு உதவ நான் மிக ஆர்வமாக உள்ளேன். தனிமடல் மூலம் பேசுகிறேன்!:)

    ReplyDelete
  8. பின்னூட்டங்களுக்கு நன்றி தணிகை

    ReplyDelete
  9. //கடந்த மாதம்தான் வலை தளத்தில் வலம் வர ஆரம்பித்தேன். வலைப் பூக்களில் கவிநயாவை அடுத்து என்னைக் கவர்ந்த கவிஞர் தாங்கள் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    சதங்காவின் நேர்த்தியான எழுத்துக்கள் எனக்குப் பிடித்தவையே. அவரது இன்னொரு பக்கமான ஓவியத் திறமை நான் அறியாதது. அறிய உதவியதற்கு நன்றி.//

    மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  10. //மிக அருமையாக பதிவுகள் பதிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    'சித்திரம் பேசுதடி' தளத்தைப் பற்றி எடுத்து சொல்லியதற்கும் மனம் திறந்த நன்றிகள் பல. ரொம்பப் புகழ்ந்திருக்கிறீர்கள். அந்த அளவிற்கு பெரிதாக இன்னும் ஒன்றும் செய்துவிடவில்லை, நிறைய கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.//

    உங்கள் தன்னடக்கம் பாராட்டத்தக்கது!!
    :)

    நீங்கள் அறை முழுதும் நிறப்பிய பொருட்களை வெகு சீக்கிரம் பயன்படுத்தி, நிறைய படங்கள் வரைய வாழ்த்துக்கள்.//

    உற்சாகமூட்டும் ஊக்கத்திற்கு நன்றிகள் சதங்கா!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது