07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 28, 2009

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்


வலைப்பூவின் இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்.
ஆறாக ஊறினால் மட்டும் போதுமா? அது ஒரு வழி அமைத்துக் கொண்டு ஓட வேண்டும், வற்றாத நதிகளாக. அந்த காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலத்தில், மக்கள் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று தான் போக வேண்டிய இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால் ஆறு என்பதை வழி என்றும் சொல்வதுண்டு. மக்கள் ஆறுகளுக்கு அருகில் வாழ்ந்து வந்ததால் நாகரிகமும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கியதாக அறிகிறோம்.
ஆறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் போது, அறிமுகங்களில் உறவுகளின் உணர்வலைகளை ஓரளவேனும் உள்வாங்கிப் பரிமாறிய நிறைவு ஏற்படுகிறது. ஆறாவது குழந்தை பெண் குழந்தை பிறந்தால்(அந்த காலமாக இருக்கும் போலிருக்கிறது, இந்த காலத்தில் ஏது ஆறாவது குழந்தை?!) ஆறா பெருகினாலும் பெருகும், இல்லாட்டி நீரா வடிச்சாலும் வடிக்கும்(செல்வத்தை தான் அப்படிச் சொல்கிறார்கள்) என்று நம்மவர்கள் கிராமங்களில் சொல்வது வழமை. இந்த காலத்தில் அதற்கான காரணத்தைக் கூட தெரிந்து கொள்ள தேவையில்லாமல் போய் விட்டது . இருப்பினும் கிராமபுரங்களில் இன்னும் ஐந்து,ஆறு என்று குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு செவிலியரின்(தாதியர்) ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த செய்தி தெரிந்து வேறு ஊரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் தாய் ஒப்பாரியுடன் அலறியடித்துக் கொண்டு வருகிறார். ஏன் இப்படி அழுதுகொண்டு வருகிறீர்கள் என்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கேட்கிறார்கள். என் மகளை கொல்வதற்குள்ள வேலை செய்திருக்கிறார்கள். என் மகளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்? எனக்குச் சொல்லுங்கள் நான் போய் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்கிறார். அதற்கு அக்கம் பக்கத்தவர்கள், ஒன்றும் பயம் இல்லை, ஏன் இப்படிக் கத்துகிறீர்கள், குடும்பக் கட்டுப்பாடு என்பது நீண்ட நாட்களாக எல்லோரும் செய்து கொள்ளும் வழக்கமாகிவிட்டது, உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கிறார்கள். அப்பவும் அந்த பெண்ணின் தாயை சமாதானப் படுத்த முடியவில்லை. பின்னர் மருத்துவ மனைக்குச் சென்று தன் மகளை அழைத்து வந்து விட்டார் அந்தத் தாய். இதிலிருந்து நமக்குப் புலப்படுகின்ற செய்தி, அந்தத் தாய்க்குத் தெரிந்ததெல்லாம், முப்பதாண்டுகளுக்கு முன் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் அறுவைச் சிகிச்சையின் போது எவ்வளவு வலியைத் தாங்கிக்கொண்டு சிரமப் பட்டார்கள் என்பது மட்டுமே. மேலும், அந்த சிரமத்தையும், வலியையும் விட இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தால் கூட வளர்த்து விடலாம் என்பது அந்தத் தாயின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அழியாத எண்ணம். அதற்கு முக்கிய காரணம் கல்வியின்மை. அந்தத் தாயின் பிடிவாதத்த்தால் அவரின் பேரக்குழந்தைகளும் சிறந்த கல்வியைப் பெற இயலாமல், சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் நிலைதான் ஏற்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்த நாட்களில், ஆண்களும் இத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் ஊக்குவித்தது. குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் ஆண்களுக்கு அரசாங்கம் நிலம் கூட கொடுத்தது. பின்னர் இன்று வரை ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஒரு வேலை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிலம் இல்லையோ என்னவோ?
கிராமங்களில் கள், பதநீர் போன்ற பானங்கள் இறக்கப் படுவதுண்டு. தற்போது அதற்கான விற்பனை அனுமதி கிடையாது. பதநீர் எனும் பனஞ்சாறு பனை மரத்திலிருந்து இறக்கப் படுவது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை இதைக் குடிக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களும், நடுத்தர வயதினரும்(குழந்தைகளல்லாதவர்கள்) கள்ளைத்தான் விரும்பி குடிக்கிறார்கள். கள்ளில் போதை இருப்பதாக உணரப்படுவதால் குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு மாலை நேரத்து மயக்கம் கள் போதைதான். மாலை நேரங்களில் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் கொக்கு மற்றும் மடையான்களைப் போன்று படைப் படையாக கள்ளுக்கடைகளை நோக்கி பயணம் செய்வதைப் பார்க்கலாம். தென்னங்கள்,பனங்கள் என்று தென்னை மரத்தில் இருந்தும் பனை மரத்தில் இருந்தும் கள் எடுக்கிறார்கள். காலை மாலை என்று இரு வேளைகளில் இம்மரங்களின் பாளைகளை சீவி(அறுத்து) விட்டு அதில் இருந்து வடியும் சாரை, கலயம் கட்டி இறக்குகிறார்கள். இது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, தமிழர்கள் புலம் பெயர்ந்த மலேசியா போன்ற நாடுகளில் புகழ் பெற்றது. இந்தக் கள்ளுக்கடைகளை எதிர்த்துதான் தந்தை பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
குடிக்கிற கள் பற்றி பார்த்துவிட்டு நாம் எழுதுகிற, பேசுகிற "கள்" பற்றி பார்க்காமல் போனால் எப்படி? என்று கேட்பது உணரப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஒரு சொல்லை ஒரு வகையில் எழுதிக்கொண்டு வந்தால், அதையே மற்றவர்களும் பின்பற்றுவது நம்மிடையே வழக்கமாகவே இருக்கிறது. நம்மவர்களில் பலர் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள் என்று பயன் படுத்துவதைப் பார்த்திருப்போம். அது சரியா தவறா என்று சற்றும் சிந்தித்திருக்கமாட்டோம். ஏனென்றால் பிரபலமனவர்களே அதைத்தான் பயன் படுத்துகிறார்கள் என்று சாக்கு போக்கு சொல்லி பிழைத்துக்கொள்கிறோம்.
கள் என்பது ஒரு இடைச் சொல். அவ்விடைச்சொல் வாழ்த்து, எழுத்து, கருத்து என்னும் உயிரெழுத்துக்களை(.கா : த்+=து ) இறுதியில் உடைய சொற்களின் பின்னால் வரும்போது ஒற்றெழுத்து மிக வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம்.
சொல் அறிமுகம் செய்தாயிற்று. வலைப்பூக்களை அறிமுகம் செய்யவேண்டும். எண்ணற்ற வலைப்பூக்களில், நம்மக்கள் எழுதி வருகிறார்கள். பல சிறந்த முன்னணி பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பற்றி இங்கு பேசவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர்களெல்லாம், பெரும்பாலான பதிவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதே நேரத்தில், இலைமறை காய்களாக இருக்கும் திறனாளர்கள் சிலரை அறிமுகப் படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அறிமுகம்
இளவேனில் இவரது வலைப்பூ, தமிழ்நதி தென்றலாகவும், புயலாகவும் வீசுகிறார். தனது தாய்நாட்டிற்கு, தாய் வாழும் இடத்திற்கு சென்ற விசயத்தைக் கூட திக் விஜயமாகப் பதிவு செய்திருக்கிறார். இலங்கையில், தமிழர்கள் எப்படியெல்லாம் தடுத்துவைக்கப் படுகிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது இவரது "ஒரு பயணம்...! சில குறிப்புகள்...!" கட்டுரை. நாமும் அவரது அழகிய வலைப்பூவிற்கு பயணம் செய்து செய்து உணர்ந்து கொள்வோமே!
கிளிஞ்சல்களில் மணி செய்து கவிதைகளாகக் கோர்த்து வருபவர் திரு விஷ்ணு. கலையாத மௌனத்தை அழகாகச் சொல்லி இருக்கிறார். ஏக்கம் மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஒரு தோழியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார். சொல்லவும்(கேட்கவும்) முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. அவர்படும் கஷ்டம் நான் சொல்லி மாளாது. நீங்களே வந்து பாருங்கள், படியுங்கள்! நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார் !
தனிமையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் உண்டோ?திரு. மதுமதி தனிமையின் வெறுமையைத் தனது மதுரன் வலைப்பூவில் கொட்டிவைத்திருக்கிறார். இறுதியில் இட்டுச் செல்லும் நம்பிக்கையுடன் முடிக்கிறார். இன்னும் பல கவிதைகளை பதிவு செய்திருக்கிறார். நாமும் தேனீக்களைப் போல் படையெடுத்து தேனெடுக்கலாமே !
திரு முபாரக் அவர்கள், முடிவற்ற அன்பின் தேடலில் சுவாசித்துக் கொண்டிருக்கிறார். அவற்றின் தேடலில் கிடைத்த தேனமுதாய்
முடிவற்ற தேடல் எனும் கவிதையில் எதை எதையெல்லாம் தேடுகிறார் என்று பாருங்கள். எது கிடைத்ததோ, அவற்றிலும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார். கிடைத்தா என்ன? நாமும் போய் பார்ப்போமே!
கண்ணாடி மழை, குத்தி விடுமென்ற பயம் வேண்டாம். கண்ணாடி மழையில் காதல் மழையை வர வைத்து, இதமாக இருக்கிறது என்கிறார் எழில் பாரதி. சின்னச் சின்ன விசயங்களை பதிவு செய்து சிறப்பு செய்திருக்கிறார். தொடக்கமும் முடிவும் அறியா நெடுந்தூரப் பயணம் காதல் என்கிறார்! நாம யாருக்காவது காதலில் தொடக்கம், இறுதி தெரியுமா? முதலில் கண்ணாடி மழையில் பயமில்லாமல் நனைவோம்!

தொடரும்...!
அன்பன்,
ஜோதிபாரதி.
ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!
வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்


கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


47 comments:

  1. வாழ்த்துகள்

    தொடரட்டும்

    ReplyDelete
  2. //எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
    இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம். //

    அருமை

    ReplyDelete
  3. /இன்பங்கள் ஆறாக ஊறும்.
    ஆறாக ஊறினால் மட்டும் போதுமா? அது ஒரு வழி அமைத்துக் கொண்டு ஓட வேண்டும், வற்றாத நதிகளாக. அந்த காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலத்தில், மக்கள் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று தான் போக வேண்டிய இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால் ஆறு என்பதை வழி என்றும் சொல்வதுண்டு. மக்கள் ஆறுகளுக்கு அருகில் வாழ்ந்து வந்ததால் நாகரிகமும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கியதாக அறிகிறோம்.
    ஆறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் போது, அறிமுகங்களில் உறவுகளின் உணர்வலைகளை ஓரளவேனும் உள்வாங்கிப் பரிமாறிய நிறைவு ஏற்படுகிறது. ஆறாவது குழந்தை பெண் குழந்தை பிறந்தால்(அந்த காலமாக இருக்கும் போலிருக்கிறது, இந்த காலத்தில் ஏது ஆறாவது குழந்தை?!) ஆறா பெருகினாலும் பெருகும், /

    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு விதமான தேனமுது


    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. /ஒரு வேலை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிலம் இல்லையோ என்னவோ?/

    இது வேற எங்கயோ இடிக்குதே.....:)))

    ReplyDelete
  5. /கிராமங்களில் கள், பதநீர் போன்ற பானங்கள் இறக்கப் படுவதுண்டு./


    எங்க தோட்டத்தில் கூட இறக்குவாங்க....காலைல பதநீர் குடிச்சிட்டு வேற வேலையா பார்க்க போவோமே....இப்ப எல்லாம் எங்க??????

    ReplyDelete
  6. /காலை மாலை என்று இரு வேளைகளில் இம்மரங்களின் பாளைகளை சீவி(அறுத்து) விட்டு அதில் இருந்து வடியும் சாரை, கலயம் கட்டி இறக்குகிறார்கள்./


    ராத்திரில திருட்டு கலயம் இருக்குறாங்கன்னு சில சமயம் ஊமத்தை கலந்து கலயம் கட்டி விட்டுடுவாங்க.....

    ReplyDelete
  7. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. / கள் என்பது ஒரு இடைச் சொல். அவ்விடைச்சொல் வாழ்த்து, எழுத்து, கருத்து என்னும் உயிரெழுத்துக்களை(எ.கா : த்+உ=து ) இறுதியில் உடைய சொற்களின் பின்னால் வரும்போது ஒற்றெழுத்து மிக வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும்./


    அடடா...இது தெரியாம போச்சே...திகழ்மிளிர் வாழ்த்துகள் ன்னு போடும் போதே நினைச்சேன்....இது தான் சரியாக இருக்கும் என்று....ஆனால் நான் இன்று கூட 'வாழ்த்துக்கள்' என்றே பின்னூட்டம் இட்டுள்ளேன்....இனி திருத்திக்கொள்கிறேன்....நன்றி!

    ReplyDelete
  9. அடடா சனி அதிகாலையிலேயே 6 வது பதிவா..:-)

    ReplyDelete
  10. ஆறு--ஆறாவது நாள்--கள்--

    ம்ம் ஒரே கவித்துவமாகத் தான் இருக்கின்றது:-)

    ReplyDelete
  11. /வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
    இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம். /

    ஒரு மாதத்திற்கு முன் தான் கள் மயக்கம் -1 என்னும் இடுகையை இட்டிருந்தேன். பல தகவல்களைத் திரட்டியப் பின் பதிவு
    எழுத எண்ணி இருந்தேன், இந்தப் பதிவின் தொடர்ச்சியாக

    அன்புடன்
    திகழ்

    மீண்டும் ஒருமுறை
    வாழ்த்துகள்

    ReplyDelete
  12. //Blogger திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள்

    தொடரட்டும்//

    தொடர் ஆதரவுக்கு நன்றி திகழ்!

    ReplyDelete
  13. //திகழ்மிளிர் said...

    //எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
    இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம். //

    அருமை//

    நன்றி!

    ReplyDelete
  14. //திகழ்மிளிர் said...

    /இன்பங்கள் ஆறாக ஊறும்.
    ஆறாக ஊறினால் மட்டும் போதுமா? அது ஒரு வழி அமைத்துக் கொண்டு ஓட வேண்டும், வற்றாத நதிகளாக. அந்த காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலத்தில், மக்கள் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று தான் போக வேண்டிய இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால் ஆறு என்பதை வழி என்றும் சொல்வதுண்டு. மக்கள் ஆறுகளுக்கு அருகில் வாழ்ந்து வந்ததால் நாகரிகமும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கியதாக அறிகிறோம்.
    ஆறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் போது, அறிமுகங்களில் உறவுகளின் உணர்வலைகளை ஓரளவேனும் உள்வாங்கிப் பரிமாறிய நிறைவு ஏற்படுகிறது. ஆறாவது குழந்தை பெண் குழந்தை பிறந்தால்(அந்த காலமாக இருக்கும் போலிருக்கிறது, இந்த காலத்தில் ஏது ஆறாவது குழந்தை?!) ஆறா பெருகினாலும் பெருகும், /

    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு விதமான தேனமுது


    வாழ்த்துகள்//

    நெகிழ்ச்சியைத் தருகிறது!

    ReplyDelete
  15. //நிஜமா நல்லவன் said...

    வாழ்த்துக்கள்!//


    வாழ்த்துகளுக்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  16. // நிஜமா நல்லவன் said...

    /ஒரு வேலை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிலம் இல்லையோ என்னவோ?/

    இது வேற எங்கயோ இடிக்குதே.....:)))//

    சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். இல்லை என்பது தான் உண்மை!

    ReplyDelete
  17. // நிஜமா நல்லவன் said...

    /கிராமங்களில் கள், பதநீர் போன்ற பானங்கள் இறக்கப் படுவதுண்டு./


    எங்க தோட்டத்தில் கூட இறக்குவாங்க....காலைல பதநீர் குடிச்சிட்டு வேற வேலையா பார்க்க போவோமே....இப்ப எல்லாம் எங்க??????//

    அப்படியா! பனைமரத்தில் இருந்து இறக்கியது என்று எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  18. //நிஜமா நல்லவன் said...

    /காலை மாலை என்று இரு வேளைகளில் இம்மரங்களின் பாளைகளை சீவி(அறுத்து) விட்டு அதில் இருந்து வடியும் சாரை, கலயம் கட்டி இறக்குகிறார்கள்./


    ராத்திரில திருட்டு கலயம் இருக்குறாங்கன்னு சில சமயம் ஊமத்தை கலந்து கலயம் கட்டி விட்டுடுவாங்க.....//

    ஓ! அப்படியா! அப்படி செய்தால் திருடனுக்கு ஏதேனும் ஊறு விளையுமோ?

    ReplyDelete
  19. //T.V.Radhakrishnan said...

    ஆறாம் நாள் வாழ்த்துகள்//

    வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  20. //நிஜமா நல்லவன் said...

    / கள் என்பது ஒரு இடைச் சொல். அவ்விடைச்சொல் வாழ்த்து, எழுத்து, கருத்து என்னும் உயிரெழுத்துக்களை(எ.கா : த்+உ=து ) இறுதியில் உடைய சொற்களின் பின்னால் வரும்போது ஒற்றெழுத்து மிக வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும்./


    அடடா...இது தெரியாம போச்சே...திகழ்மிளிர் வாழ்த்துகள் ன்னு போடும் போதே நினைச்சேன்....இது தான் சரியாக இருக்கும் என்று....ஆனால் நான் இன்று கூட 'வாழ்த்துக்கள்' என்றே பின்னூட்டம் இட்டுள்ளேன்....இனி திருத்திக்கொள்கிறேன்....நன்றி!//

    நன்றி!

    ReplyDelete
  21. // ’டொன்’ லீ said...

    அடடா சனி அதிகாலையிலேயே 6 வது பதிவா..:-)//

    ஆறாகப் பெருகட்டும் என்றுதான்!

    ReplyDelete
  22. //’டொன்’ லீ said...

    ஆறு--ஆறாவது நாள்--கள்--

    ம்ம் ஒரே கவித்துவமாகத் தான் இருக்கின்றது:-)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொன் லீ!

    ReplyDelete
  23. //திகழ்மிளிர் said...

    /வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
    இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம். /

    ஒரு மாதத்திற்கு முன் தான் கள் மயக்கம் -1 என்னும் இடுகையை இட்டிருந்தேன். பல தகவல்களைத் திரட்டியப் பின் பதிவு
    எழுத எண்ணி இருந்தேன், இந்தப் பதிவின் தொடர்ச்சியாக

    அன்புடன்
    திகழ்

    மீண்டும் ஒருமுறை
    வாழ்த்துகள்//

    தங்கள் பதிவு அருமை, கள் மயக்கம் கருத்து எடுக்கிறது!
    வாழ்த்துகளுக்கு நன்றி!

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் தங்களின் ஆறாம்நாள் வெற்றி பயணத்திற்கு எனது வாழ்த்துகள்.( தவறுகளை சுட்டிகாட்டிய தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. //அன்புமணி said...

    வலைச்சரத்தில் தங்களின் ஆறாம்நாள் வெற்றி பயணத்திற்கு எனது வாழ்த்துகள்.( தவறுகளை சுட்டிகாட்டிய தங்களுக்கு நன்றி.//

    தொடர் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி அன்புமணி!

    ReplyDelete
  26. இளவேனில்,தங்களின் நீ்ண்ட எழுத்தையும் வாசிக்க வாசிக்க... அங்கு அனுபவித்து வரும் இன்னல்களையும், அவலங்களையும் உணரமுடிகிறது. உணரத்தான் முடிகிறது.... என்ன செய்ய? காலங்கள் விடியாதா என்று கண்கலங்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  27. //அன்புமணி said...

    இளவேனில்,தங்களின் நீ்ண்ட எழுத்தையும் வாசிக்க வாசிக்க... அங்கு அனுபவித்து வரும் இன்னல்களையும், அவலங்களையும் உணரமுடிகிறது. உணரத்தான் முடிகிறது.... என்ன செய்ய? காலங்கள் விடியாதா என்று கண்கலங்க காத்திருக்கிறேன்.//

    வெறும் ஆதங்கங்களோடு மட்டுமே வாழும் ஓர் இனம், உலகத்தில் தமிழினம் மட்டும்தான் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  28. இன்று அறிமுகப்படுத்தியுள்ள அனைவருமே எனக்கு புதியவர்கள். அறிமுகப்படுத்திய ஜோதிபாரதிக்கு நன்றி!

    ReplyDelete
  29. //அன்புமணி said...

    இன்று அறிமுகப்படுத்தியுள்ள அனைவருமே எனக்கு புதியவர்கள். அறிமுகப்படுத்திய ஜோதிபாரதிக்கு நன்றி!//

    தங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமாயின் எனக்கும் மகிழ்ச்சியே!
    நன்றி அம்பு!

    ReplyDelete
  30. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  31. கள் வைத்து
    சொல் விளையாட்டு

    பல விடயங்கள் கற்க முடிகிறது இங்கே வலைச்சரத்திற்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. எல்லாமே துகள்கள் தான்

    கருத்து துகள்
    எழுத்து துகள்
    வாழ்த்து துகள்

    இன்னும் இன்னும்

    இவற்றை இப்படி இனம் காண தந்தமைக்கு நன்றிகள் பல ஜோதிபாரதி

    ReplyDelete
  33. ஆறு மணமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    ஓஹ்! ஆண்டவன் காட்டிய வழிகள் தானா அது ...

    ReplyDelete
  34. இனி வாழ்த்துகளையும் , கருத்துகளையும், எழுத்துகளையும் எங்கும் உற்று நோக்கலாம்.

    ReplyDelete
  35. சரியான சொன்னீங்க திகழ்

    ReplyDelete
  36. இனி திகழும் மிளிர்ந்து

    ReplyDelete
  37. //நட்புடன் ஜமால் said...

    ஆறாம் நாள் வாழ்த்துகள்//

    நன்றி ஜமால்!
    தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும்!

    ReplyDelete
  38. //நட்புடன் ஜமால் said...

    கள் வைத்து
    சொல் விளையாட்டு

    பல விடயங்கள் கற்க முடிகிறது இங்கே வலைச்சரத்திற்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி.//

    நானும் கூறிக் கொள்கிறேன், அதற்கான நேரம் இதுதான்!

    ReplyDelete
  39. //நட்புடன் ஜமால் said...

    ஆறு மணமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    ஓஹ்! ஆண்டவன் காட்டிய வழிகள் தானா அது ...//

    பண்டைய மக்களுக்கு, ஆறு வழி காட்டியது.

    ReplyDelete
  40. //திகழ்மிளிர் said...

    இனி வாழ்த்துகளையும் , கருத்துகளையும், எழுத்துகளையும் எங்கும் உற்று நோக்கலாம்.///

    கண்டிப்பாக!

    ReplyDelete
  41. 'கள்', தமிழ் எல்லாம் கலந்து எழுதியதைப் படிக்கும் போதே ஒரு வித மயக்கம் ஏற்படுகிறது.

    வலைச்சரத்தில் தமிழ்சரம் தொடுத்த ஜோதி பாரதிக்கு வாழ்த்துகள் ! 'க்' போடாமல் சரியாக எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  42. //கோவி.கண்ணன் said...

    'கள்', தமிழ் எல்லாம் கலந்து எழுதியதைப் படிக்கும் போதே ஒரு வித மயக்கம் ஏற்படுகிறது.

    வலைச்சரத்தில் தமிழ்சரம் தொடுத்த ஜோதி பாரதிக்கு வாழ்த்துகள் ! 'க்' போடாமல் சரியாக எழுதி இருக்கிறேன்.//

    நமீதாவின் பால் ஏற்படுகின்ற மயக்கத்தை விட கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்வேன்! (நமீதா ரசிகர் (கள்) கோவி காதீங்க)
    கோவியாரே! தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  43. அறிமுகம் பகுதியில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே ..

    உங்கள் ஆதரவு இனியும் எனது எழுத்துக்களை மெருகேற்ற மிக பெரிய உதவியாக இருக்கும் ..
    மனமார்ந்த நன்றிகளுடன்

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  44. //Vishnu... said...

    அறிமுகம் பகுதியில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே ..

    உங்கள் ஆதரவு இனியும் எனது எழுத்துக்களை மெருகேற்ற மிக பெரிய உதவியாக இருக்கும் ..
    மனமார்ந்த நன்றிகளுடன்

    அன்புடன்
    விஷ்ணு//

    திரு விஷ்ணு, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
    தங்கள் கவிதையின் கரு நன்று!

    ReplyDelete
  45. கடந்த சில நாட்களாக வேலை பளு காரணம்
    வலைச்சரம் வர முடியவில்லை ...
    இன்றே உங்கள் பதிவுகளை படித்துவிடுவேன் ..

    வாழ்த்துக்கள் பற்றி ( வாழ்த்துகள் )

    மிக நீண்ட நாட்களாக சந்தேகத்தோடு இருந்தேன் ..
    உங்கள் பதிவு மூலம் நல்ல தெளிவு பெற்றேன் ..நன்றிகள் நண்பரே ..

    அன்புடன்
    விஷ்ணு ..

    ReplyDelete
  46. உங்கள் வலைச்சரப்பதிவுகள் அனைத்துமே வாசித்தேன். முன்னுரைக்குறிப்புகள் அனைத்தும், நன்றாகவிருந்தது. எனது கவிதையொன்றையும் நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    அன்புடன்,
    முபாரக்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது