07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 8, 2011

ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறது

கடவுள் ஏன் ஏவாளை படைத்தார் 10 சுவாரசியமான காரணங்கள், கீழிருந்து மேலாக வரிசைபடுத்தப்பட்டுள்ளது

10 )  அடிக்கடி ஆதாம் தோட்டதில் தொலைந்து போய்விடுகிறான், கடவுளுக்கு தெரியும் ஆண்கள் எப்போதும் வழி கேட்க தயங்குகிறார்கள்

9)    கடவுளுக்கு தெரியும் ஆதாமூக்கு எப்போதும் டி‌வியின் ரிமோட் கண்ட்ரோல்-ஐ வேறு ஒருவர் கையில் வைத்து இருக்க விருப்பம்,  ஏனெனில் ஆண்களுக்கு டிவியில் வருவதை தவிர டிவியில் வேறு என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில் ஆர்வம் அதிகம்

8)    கடவுளுக்கு தெரியும் ஆதாம் சாப்பிட உட்காரும் முன் இலை/தட்டை தானாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை அதனால் அதை எடுத்து வைக்க ஏவாள் தேவை

7)    ஆதாமுக்கு டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் எடுத்துக்கொள்ள தெரியாது என்று கடவுளுக்கு தெரியும்

6)    ஆதாமுக்கு தெரியாது எந்த இரவு வீணாய் கழிந்தது என்று, அதை ஆதாம் நினைவில் கூட வைத்து இருப்பதில்லை என்று கடவுளுக்கு தெரியும்

5)     இந்த உலகத்தில் மனித இனம் தழைக்க வேண்டும் எனில் குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ள அல்லது பராமரிக்க வேண்டும், ஆதாமுக்கு அந்த சம்ர்த்து இல்லை என கடவுளுக்கு தெரியும்

4 )    தோட்டத்தை காக்கும் பொறுப்புள்ள ஆதாம் தன் கருவிகளை அல்லது உடைமைகளை எங்கே வைத்தோம் என்பது நினைவில்  இருக்காது என்று கடவுளுக்கு தெரியும்

3)    தன்னுடைய தவறுகளுக்கு குற்றம் சுமத்த இன்னொருவர் தேவை என்று ஆதாம் நினைத்ததால்

2)    மனிதன் தனிமையில் இருப்பது பாவம், அவனுடைய எல்லா பாவங்களுக்கும் அதுவே முதல் காரணம் என்று கடவுள் நினைத்ததால்

கடைசி மற்றும் முக்கியமான காரணம்

1)    ஆதாமை கடவுள் படைத்து முடித்த பின் தலையை சொறிந்து கொண்டே சரியில்லையே இதை விட சிறப்பாய் இன்னொன்றை  என்னால் செய்யமுடியும் என்று கடவுள் நினைத்ததால்

23 comments:

  1. சுவாரசியமான காரணங்கள்

    ReplyDelete
  2. அடப் பாவமே,...ஆதாம் ஏவாள் வடிவில் பலரின் உள் வீட்டு டீவி மேட்டரையும் அல்லவா அலசியிருக்கிறீங்க.

    ஆண்கள்- பெண்கள் படைப்பு வேறுபாட்டினையும், அவர்களின் குணாம்சங்களையும் அருமையாக அலசியிருக்கிறீங்க.

    ReplyDelete
  3. அன்பின் ரமேஷ் பாபு - விதி முறைகளின் படி - முதல் பதிவு ஆசிரியருடைய பதிவுகளில் மற்றவர்கள் படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுக படுத்தியும் - சுய அறிமுகம் செய்து கொள்ளவும் பயன்படுத்த வேண்டும். ஏவாள் படைப்பின் இரகசியும் உடைகிறது என்ற பதிவு விதி முறைகளுக்கு முரணானது. விதி முறைகளைத் திரும்ப ஒரு பார்வை பார்த்து விடுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete
  4. ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறது - அருமையான பகிர்வு...

    ஆனால் இதில் அறிமுகங்கள் இல்லையே நண்பரே... இது உங்களின் இரண்டாவது பதிவு அல்லவா?

    முதல் பதிவு சுய அறிமுகம்... மற்றவை மற்றவர்களை அறிமுகப்படுத்தும் பகிர்வாக அல்லவா இருக்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பதிவுகள் போட எண்ணமோ? வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  5. ரமேஷ் இன்று தங்களைப்பற்றிய அல்லவா சொல்லியிருக்கனும்...

    அறிமுகங்களை நாளைச் செய்யலாம் இன்று தங்களைப்பற்றிய செய்திகளை பேர்டுங்கள்...

    நன்றி..

    ReplyDelete
  6. தங்களைப் பற்றிய விபரங்கள் எங்கே???
    அறிமுகங்கள் அடங்கிய பட்டியல் எங்கே???

    ReplyDelete
  7. பெண்கள் பற்றி உயர்த்திப் பேசியதுபோல இருக்கிறது..
    அதுக்காகவே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  9. அன்பார்ந்த நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வலைச்சர வாசகர்களுக்கும்
    பிழை நேர்ந்து விட்டது மன்னிக்கவும். என்னுடைய சுயஅறிமுகம் தற்போது வந்தனமையா வந்தனம் - பதிவில் அப்டேட் செய்துள்ளேன். தயை கூர்ந்து ஒருமுறை அதை வாசிக்கவும் ஏதேனும் தவ்ருகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் உடனே அது திருத்தப்படும்

    ReplyDelete
  10. சுவாரசியமான காரணங்கள்

    ReplyDelete
  11. சுவாரசியமான காரணங்கள்

    ReplyDelete
  12. ரைட்டு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை பகிர்வு வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  14. ஆண்களை தாக்கிட்டீங்களே ஹி ஹி ஹி

    ReplyDelete
  15. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு....

    அன்பு வாழ்த்துகள் ரமேஷ்பாபு....

    ReplyDelete
  16. தங்களைப் பற்றியா கூறியிருக்கிறீர்கள்????

    ReplyDelete
  17. // விதி முறைகளின் படி - முதல் பதிவு ஆசிரியருடைய பதிவுகளில் மற்றவர்கள் படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுக படுத்தியும் - சுய அறிமுகம் செய்து கொள்ளவும் பயன்படுத்த வேண்டும்//
    Cheena (சீனா)
    முதல் பதிவு ”சோதனை” பதிவாகத்தானே இருக்கும். ஆதாம் “சோதனை” பதிவா அல்லது சோதனை மேல் சோதனை தரும் பதிவா?

    ReplyDelete
  18. ஏவாள் படைப்பு ரகசியம் சுவாரசியமாக இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கைவலி இருந்ததால் என்னால் படித்தும் ஒரு வரியில் பதிவு போட்டுவிட்டேன்...

    இப்ப மறுபடி போட வந்ததன் காரணம்... இத்தனை நச் நச் நு மண்டையில் சுத்தியில் அடிப்பது போல வரிகளை அனாயசமா அள்ளித்தெளிச்சிருக்கீங்களே சிறப்பாக அதனால தான் இப்ப வந்தேன்...

    அதெப்படி ஆதாமின் ரகசியங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் உடைத்துவிட்டீர்களே...

    ஆதாம் இப்படி கூட இருப்பதுண்டு தானே ஏவாள் இல்லாமல் போனால் உலகில் வாழவும் தெரியாமல் திண்டாடி போவதுமுண்டு....

    அருமையான வரிகள் இந்த வரிதான் அருமையா இருக்கு அப்டின்னு தேர்ந்தெடுத்து சொல்லமுடியாதபடி எல்லா வரிகளுமே ஒரே வார்த்தையில் சொல்லனும்னா “ நச் “

    அன்பு வாழ்த்துகள் ரமேஷ்பாபு....தொடருங்கள் அடுத்த வித்தியாச சிந்தனை என்னவா இருக்கும்?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது