07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 18, 2014

பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்

என்னால் எழுத முடியாமல் தடைபட்டு போன நான் சிம்லா சென்ற பயண அனுபவங்களை உங்களுடன் பகிர விரும்பி, எனது அறிமுகங்களுக்கு முன் சிறு பகுதியாய் தினமும் எழுதவுள்ளேன்.

***************************************************************************************
சில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது.    

டிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது.       
   ​
ஏழு பேர் என்பதால், நால்வர்  மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு.  மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன். 

எனக்கும் எனது  நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய  என் பயணம் ஆரம்பமாகியது.  

எனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம்  ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன்.     

பயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுகாக்க உதவும் என்று சொல்லி,  அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது.  

எனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:

1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.

2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.

3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)


இந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில்  நான்  ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது.    

இரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது   பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.

ஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர்  என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல  முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை தான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.         

மதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும்  (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த  சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில்  பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார்.      

ஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.

தொடரும்.... 
***************************************************************************************
இன்றைய அறிமுகங்கள்:

நான் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் முன்னமே, மிகவும் ரசித்து படித்த பதிவை இங்கு முதலில் அறிமுகம் செய்யக் கடமைப்பட்டுள்ளேன். அது ஒரு பயணக் கட்டுரை. அந்த கட்டுரையை படித்த பின் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் என் மனதினுள் எழுந்தது. அந்தப் பதிவின் தாக்கம் அடுத்த ஆறு மாதத்தில் என்னை அங்கு அழைத்துச் சென்றது.

'திடங்கொண்டு போராடு' என்னும் வலையில் சீனு அவர்கள் எழுதிய 'தனுஷ்கோடி' பற்றிய பயணக்கட்டுரை அது.  

***************************************************************************************

சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்ததால், வலையில் இருக்கும் நல்ல சிறுகதைகள் தேடும் பொழுது, எனக்கு ஒரு கதை அறிமுகமானது. இதுவரை நான் படிக்காத, சற்று கருப்பு நிறமாக பிறந்து, திருமணத்திற்கு பல இன்னல்களுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் உணர்சிகளை மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட கதை.

சிவகாசிக்காரன் என்ற வலையில் நண்பர் ராம் குமார் எழுதிய 'கலர்க்காதல்' என்னும் சிறுகதை தான் அது.

***************************************************************************************
நான் வலையில் ஆராம்ப காலத்தில் எப்படி என் தளத்தை பிரபலப் படுத்துவது என்று தவித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு மிகவும் உதவிய பதிவு இது. அவர் சொல்லியது அனைத்தையும் பின்பற்ற முடயாததால் ஏனோ என்னால் என் வலையின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். வலை எழுதத் துவங்கும் புதியவர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பயன்படும்.

'அவர்கள் உண்மைகள்' என்ற தளத்தில் மதுரைத் தமிழன் அவர்கள் எழுதிய 'புதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டிப்ஸ்' என்னும் பதிவு.
  
***************************************************************************************

ஒரு கூட்டு முயற்சியாக, புத்தக விமர்சனங்கள் பற்றி மட்டும் எழுத உருவான தளம் 'வாசகர் கூடம்'. இதில் நானும் ஒரு பங்குவகிக்கின்றேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் மட்டுமல்ல நீங்களும் இதில் பங்குகொள்ளலாம். நீங்கள் எழுத விரும்பும் புத்தகத்தின் விமர்சனத்தை vasagarkoodam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பினால், அது வாசகர் கூடத்தில் வெளியிடப்படும்.

நீங்கள் அனுப்பும் பதிவு ஏற்கனவே வெளியானதாக இல்லாமல் புதிய பதிவாக இருக்க வேண்டும். வாசகர் கூடத்தில் வெளியான பின், அந்தப் பதிவை உங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொள்ளலாம்.

***************************************************************************************  
எனக்கு கல்லூரி காலத்தில் சுஜாதாவை அறிமுகம் செய்த எனது நண்பன், சில காலங்களுக்கு முன்னிருந்தே ஆங்கிலத்தில் வலையில் எழுதிக்கொண்டிருந்தான். 'வெட்டி பிளாக்கர் சிறுகதைப் போட்டியை' முன்னிட்டு தமிழில் வலை தொடங்கி சிறுகதை எழுதினான். நிறைய வாசிக்கும் வழக்கம் உள்ளவன்.

சரித்திர காலத்தில் நடப்பது போன்ற சிறுகதை, அதன் முடிவு என்னை மிகவும் ரசிக்கச் செய்தது. கதையின் தலைப்பே அவன் செய்த ஆராய்சிகளை பிரதிபளிக்கும்.

'பேச்சு காற்றோடு போகும். எழுது...' என்ற வலையில் அவன் எழுதிய சிறுகதை 'வளரி'.      

சென்ற ஆண்டு அவன் ஆங்கிலத்தில் எழுதிய பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப்போன சிறுகதை, தற்போது தமிழில் மேலும் மெருகேற்றி 'நாலு இட்லி ஒரு கலக்கி'  என புது உருவம் பெற்றுள்ளது.

இதுவரை மூன்று பதிவுகள் மட்டுமே எழுதி தமிழ் வலையுலகில் புதியவனாக உள்ள அவனை, உங்களது ஊக்கம் தமிழில் தொடர்ந்து எழுத தூண்டும் என்று நம்புகிறேன்.

***************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்

29 comments:

  1. மூன்றாவது ஒற்றுமை சிரமம் தான்... ஹிஹி... "பேச்சு காற்றோடு போகும். எழுது..." தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. DD க்கே தெரியாத ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. எந்த திரட்டியிலும் இணையாத தளம் அது :)

      Delete
  3. இதே ரயில் பயண ராசிதான் எனக்கும் அமைகிறது. தாத்தாக்களும் அரட்டை மன்னர்களும்...1 ஹும்...! அறிமுகங்கள் நன்று. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்//

    ம்ம்ம்... அசால்டு ஆறுமுகம் டெல்லியில காலடி எடுத்து வச்சிட்டான்.. அப்புறம்?

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அசால்டு டில்லியில் நகரத் தொடங்கியாச்சு இன்றைய பதிவில்

      Delete
  5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    தில்லி வரை வந்திருக்கீங்க.... சொல்லவே இல்லை! சொல்லி இருந்தால் சந்தித்து இருக்கலாம் ரூபக்.....

    ReplyDelete
    Replies
    1. சாரே இது நடந்தது 2012 இல், அப்பொழுது நான் வலை கூடத் தொடங்கவில்லை. தங்கள் அறிமுகம் இல்லாத காலம் அது. மீண்டும் தலைநகர் வரின் தங்களைக் காணாமல் இருப்பேனா

      Delete
  6. பயண அனுபவம் நல்லா எழுதியிருக்கீங்க..
    உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  7. எனது தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரூபக். அது போல தெருவில் விளையாடும் பையனை சட்டையை பிடித்து இழுத்து வந்து வீட்டில் உட்கார வைத்து நல்ல படிப்பை சொல்லி தருவது போல நம்ம தனபாலன் அவர்கள் எனது தளம் எப்பொழுதெல்லாம் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறதோ அப்போது எல்லாம் என்னை இங்கு இழுத்து வந்து நல்ல பல பதிவுகளை அறிமுகப்படுத்துகிறார் அந்த நல்ல உள்ளத்திற்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் நன்றி தன்பாலன்

    ReplyDelete
  8. //எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)///

    ரூபக் ரூபக்....என்னப்பா இப்படி அப்பாவியா இருக்கே....ஆண்டிகள் மற்றும் பாட்டிகளுடன் பயணித்து இருக்கிறாய் அப்படி கிடைக்கும் வாய்ய்பு அல்வா போன்றது. பாட்டிகளுக்கும் ஆண்டிகளுக்கும் பயணத்தில் பல உதவிகள் செய்து இருந்தால் ஆண்டிகளின் அழகான பெண் பிள்ளைகளோ அல்லது பாட்டியின் பேத்திகளோ உன் வாழ்க்கை பயணத்தில் சேர்ந்து செல்ல கிடைத்து இருப்பார்கள் நல்ல சான்ஸை விட்டு விட்டாயே ரூபக்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. தங்களைப் போல் நான் சிந்திக்கத் தவறிவிட்டேன் :)

      Delete
  9. அருமை ரூபக் அய்யா ...அறிமுகள் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நிஜாமுதீன் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் நிற்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பயணம் நகர்ந்து விட்டது. மிக்க நன்றி

      Delete
  11. காஷ்மீர் பயணக்கதை ஆரம்பமே அசத்தல்! அறிமுகம் செய்த பதிவர்களும் அசத்தல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீர் இல்லை சாரே, சிம்லா. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்,

    ReplyDelete
  13. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்,பணி தொடரட்டும் ஐயா!

    ReplyDelete
  15. சிறந்த அறிமுகங்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  16. என் போன்ற கடைநிலை பிளாக்கரை அறிமுகம் செய்த ரூபக் ராம் அவர்களுக்கு என் நன்றி! :)

    ReplyDelete
  17. வலைச்சரத்தின் கலைச்சிறப்பை விலை பேச இயலாது அலையிலும் ஆடாது மலையிலும் மறையாது வலைதளங்களின் வல்லரசாக வலம் வரும் "வலைச்சரத்தை வாழ்த்துதிகிறேன்! வணங்குகிறேன்
    புதுவை வேலு.(kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது