07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 1, 2015

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு (01.02.2015 ) ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட சக  பதிவர் சகோதரி கலையரசி   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள்                                                                                 :  007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                                                              :  097
அறிமுகப் படுத்திய பதிவுகள் :  ( சுய அறிமுகம் உள்ளிட்ட )   : 098
பெற்ற மறுமொழிகள்                                                                                : 302
பெற்ற தமிழ் மண வாக்குகள்                                                                 : 033
வந்து பார்வையிட்ட சக பதிவர்கள்                                                     : 1390
சகோதரி கலையரசி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ( 02.02.2015 |) ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகோதரி உமையாள் காயத்ரி இணக்கம் தெரிவித்துள்ளார். 

இவரது சொந்த ஊர் தேவகோட்டை
திருமணமான பின் 22 1/2 வருடங்கள் ஓசூர் வாசம்.
பின் கணவரின் பணியின் நிமித்தமாக 3 1/2 வருடங்கள் ஆந்திரா (கடப்பா பக்கம்) வாசம்
இப்போதும் கணவரின் பணியின் காரணமாய் 2 1/2 வருடங்களாக எகிப்தில் வசித்துக் கொண்டு இருக்கிறார்.
அன்பாய் ஒரு மகன் ஆஸ்திரேலியாவில் எம்.பி ஏ.படிக்கிறான்.
உமையாள் காயத்ரி என்கிற  பெயரிலெயே எளிமையான யதார்த்தம் என்கிற  ப்ளாகில் எழுதி வருகிறார்.
கவிதை, சிறுகதை, சமையல், அனுபவம், கலை, பார்த்த இடங்கள்,
புகைப்படம், என இவருடைய ரசனைகளை பகிர்ந்து கொள்கிறார்.

நல்வாழ்த்துகள் கலையரசி 

நல்வாழ்த்துகள் உமையாள் காயத்ரி  


நட்புடன் சீனா

43 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் தாங்கள் கொடுத்த இப்பணியை என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் ஐயா.

      வரவேற்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி

      இந்தவாரம் சிறப்பாக பணியாற்றிய கலையரசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

      Delete
    2. பொறுப்பை ஏற்கும் காயத்ரியை வருக வருக என வரவேற்கிறேன். பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!

      Delete
    3. அக்கா தங்களின் வரவேற்புக்கும், பணி சிறப்பாக அமைய வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி

      Delete
  2. வலைச்சரத்தில் பணியினை சிறப்புடன் நிறைவு செய்த
    அன்பின் சகோதரி கலையரசி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    தொடர்ந்து பணியேற்று வழிநடத்த இருக்கும்
    அன்பின் சகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு தந்த துரை செல்வராஜூ ஐயாவிற்கு மிக்க நன்றி

      Delete
    2. வாழ்த்துக்கு நன்றி துரை சார்!

      Delete
  3. ஆகா!.. இன்னும் ஒருவாரத்திற்கு -
    பதிவுகளும் பலகாரங்களுமாக சங்கம் களைகட்டும்!..

    அறுவகைச் சுவைகளுடன் அருஞ்சுவையாக கவிச்சுவையையும்
    வழங்க வரும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. ஆகா!.. இன்னும் ஒருவாரத்திற்கு -
      பதிவுகளும் பலகாரங்களுமாக சங்கம் களைகட்டும்!//

      ஹஹஹா...!!!

      அறுவகைச் சுவைகளுடன் அருஞ்சுவையாக கவிச்சுவையையும்
      வழங்க வரும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!.//

      அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

      Delete
  4. வணக்கம்
    சிறப்பாக பணியை செய்து முடித்த கலையரசிக்கு நன்றிகள் வருகிற வாரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் உமையாள் காயத்ரி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் வலைச்சரத்திற்கு.. இந்த வாரம் நல்ல அசத்தலாக அமைய வாழ்த்துக்கள் த.ம5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவேற்பிற்கும், அசத்தலாக அமைய வாழ்த்தியமைக்கும் நன்றி ரூபன்.

      Delete
  5. ஆசிரியப்பொறுப்பேற்ற‌தற்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் வழங்கிய மனோ சாமிநாதன் சகோதரிக்கு மிக்க நன்றி.

      Delete

  6. நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ( 02.02.2015 ) ஆசிரியை பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் வருகை தரும் சகோதரி உமையாள் காயத்ரி அவர்களின் இணக்கத்தினை, இன்முகம் கொண்டு வணக்கத்துடன் வரவேற்கின்றோம்!
    வருக வருக என்று!
    வென்று!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இன்முகத்துடன் வரவேற்ற புதுவை வேலு தம்பிக்கு இனிமையான நன்றி.

      Delete
  7. இன்றுடன் முடிந்துள்ள தனது ஒரு வார வலைச்சரப்பணியினை மிகவும் அழகாக, பொறுமையாக, அருமையாக மேற்கொண்டு, வெற்றிகரமாக முடித்துவிட்டு, நம்மிடமிருந்து இன்று பிரியாவிடை பெற்றுக்கொண்டு, மீண்டும் ’ஊஞ்சல்’ ஆடச் செல்லும் திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாரமுழுமையும் தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்து ஊக்கம் கொடுத்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோபு சார்!

      Delete
  8. நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் Ms. R. உமையாள் காயத்ரி அவர்களை வருக ! வருக !! வருக !!! என வரவேற்று மகிழ்கிறோம். அவர்களின் இந்தப்பணியும் மிகச் சிறப்பாக அமைய நம் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வருக ! வருக !! வருக !!! என வரவேற்றும், பணி சிறப்பாக அமைய அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் வழங்கிய வை. கோபலகிருஷ்ணன் ஐயாவிற்கு மிக்க நன்றி.

      Delete
  9. புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் தி கிரேட் தேவகோட்டை சகோதரி R. உமையாள் காயத்ரி அவர்களை வருக வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் இந்த வாரம் அறுசுவை உணவுடன் செல்லும் 80ல் சந்தோஷமே.....

    தமிழ் மணம் 5
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் வரவேற்கும் சகோ கில்லர்ஜிக்கு மிக்க நன்றி வாக்கிற்கும்.

      Delete
  10. Sorry தமிழ் மணம் 1

    ReplyDelete
  11. வலைச்சரத்திற்கு வரவேற்கிறோம் அக்கா !!!

    ஒருவாரம் சிறப்பாய் பணியைச்செய்தமைக்கு வாழ்த்துகள் கலையரசி அக்கா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேஷ் கே திருமுருகன்

      Delete
    2. அக்கா ! இடையூறுக்கு மன்னிக்கவும் . என்னுடைய பெயர் மெக்னேஷ் . மகேஷ் அல்ல . (பெயருக்கு என்ன விளக்கம் என்று கேட்டுவிடாதீர்கள் . சத்தியமாய் எனக்கும் தெரியாது , பெயர் சூட்டிய என் தாய் தந்தைக்கும் தெரியாது . அது ஒரு சேலத்து ரகசியம்)

      Delete
  12. இந்த வாரமும் அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...!

    வாருங்கள்... அசத்துங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமான....வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ

      Delete
  13. வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  14. வாழ்த்துக்கள் உமையாள் !

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் உமையாள்.

    ReplyDelete
  16. வருக வருக பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாருங்கள் சகோதரி! வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றதற்கு வாழ்த்துக்கள்! கலக்குங்க!

    அட! இத்தனை நாள் நீங்கள் மிகச் சிறிய (மணமான) பெண் என்று நினைத்திருந்தோம். அட! உங்கள் எழுத்தும் அதைத்தான் உணர்த்தியது.. வயதானாலும் நாங்க ஸ்வீட் 16 ல என்று நீங்கள் சொல்லுவது காதில் விழுகின்றது...அடிக்க வராமல் இருந்தால் சரி...விடு ஜூட்....வருகின்ரோம் நாளை காலை!

    ReplyDelete
  18. என்னாது ? இவர்கள் எகிப்தில் வாழ்கின்றார்களா? அப்ப பிரமீடுகளை பற்றி பிரமிப்பா பத்து பதவிகள் வரும் போல இருக்கே.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. எகிப்து பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆசை. வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது