07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 17, 2008

தமிழ் வலையில் பின்நவீன இலக்கியங்கள்

பள்ளி நாட்களில் சிறுவர்மலரில் ஆரம்பித்து, அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆரம்பித்தது எனது வாசிப்பு, அதிலும் படக்கதைகளே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காமிக்ஸ் உலகில் ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ராணி காமிக்ஸ் மற்றவைகளை விட வெகுவாக கவரவில்லை என்பதே உண்மை.

படக்கதைகள் இல்லாமல் போரடிக்கும் நேரம் அம்புலிமாமாவில் உள்ள குட்டிகதைகளை(இது அம்புலிமாமா குட்டிகதை) படிக்க ஆரம்பித்தேன். பின்னாளில் அதுவே ஆனந்த விகடன், குமுதம் என்று விரிந்து குறுநாவல் வரை சென்றது. அந்நாளில் குமுதம்,விகடனை விட பாக்யா எனக்கு பிடிக்கும். பயணங்களில் போது படிக்க ஆரம்பித்த குறுநாவல் ராஜேஷ்குமார், சுபா,பி.கே.பி, ஆகியோரின் ரசிகன் ஆக்கியது. இவையெல்லாம் ஜனரஞ்சக எழுத்துகள் என்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த மரபில் இருந்து வெளியேறி புதிய அனுபவத்தை பெற்றது ஆர்னிகா நாசரின் எழுத்துகளை படிக்கும் போது தான். ஆர்னிகா நாசரின் எழுத்துகள் பின்நவீனம் இல்லை என்று யாராவது சொன்னால் அது பற்றி விவாதிக்க என் வலையில் காத்திருக்கிறேன்.

தடித்த புத்தகங்களை பார்க்கும் பொழுது இதையெல்லாம் மாதக்கணக்கில் உட்கார்ந்து படிப்பார்கள் போல என்று நினைத்து கொள்வேன். ஒரு நண்பரின் வீட்டில் எதேட்சையாக
சுஜாதாவின் கொலையுதிர் காலம் படிக்க நேர்ந்த போது வேறொரு புது அனுபவம் கிடைத்தது. முழுதாக முடிக்கும் வரை அதை கீழே வைக்கவில்லை. பின்னாளில் எம்.ஜி.சுரேசின் "அலைக்சான்டரும் ஒரு கோப்பை தேநீரும்" படிக்க நேர்ந்தது. அது ஒரு பின்நவீன நாவல் என்று அறியபட்டேன். ஆனாலும் அதன் மொழி நடையில் எனக்கு எந்த சலிப்பும் ஏற்ப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக அவரின் "அட்லாண்டிஸ் மனிதம் மற்றும் சிலருடன்" "சிலந்தி" "யுரேகா என்றொரு நகரம்" "37" புத்தகத்தின் பெயரே நுப்பதிஏழு தான். சில வித்தியாச அனுபவங்களை கொடுத்தது.

அதன் பிறகு அவருடைய நண்பர் என்று அறியப்பட்ட ரமேஷ்.பிரேமின் "கனவில் பெய்த மழையை பற்றி சில இசை குறிப்புகள்" கிடைத்தது. முதல் இரண்டு பக்கங்களில் எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இது தான் உண்மையான பின்நவீனமா என்று சந்தேகம் வந்தது. எம்.ஜி சுரேஷ் பின்நவீனத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கேள்வி பட்டு அதை வாங்கி படித்தேன். பின்நவீனம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

பின்நவீனத்தை பற்றிய எனது ஆராய்ச்சி
சலிப்பு தரலாம் நேரம் இருந்தால் மட்டும் பார்க்கவும்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
என்னுடைய பின்நவீன பதிவுகள் (அப்படீனு நான் தான் நினைச்சுக்கிறேன்)

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

பின்நவீனம் ஒரு அனுபவம். அது கொஞ்சம் வித்தியாசமானது. மாற்று கோணத்தில் யோசிக்கவைப்பது. அதை வெறுமனே வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சாதாரண எழுத்துகளில் ஒரு பாராவுக்கும் மறு பாராவுக்கும் இடையில் நமது சிந்தனை ஆயிரம் முடிவுகளை தீர்மானிக்கும். பின்நவீனத்தை பொறுத்தவரை உங்கள் சிந்தனை சிறிது நகர்ந்தாலும் நீங்கள் ஒரு அருமையான அனுபவத்தை வீணடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஓஸோ சொல்லுவார், ரோஜா என்ற மலரை ரசி, அங்கே நீ ஒரு காண்பவன் மட்டுமே, அதை விட்டு ரோஜாவின் வாசம், அதை சூடி வரும் பெண்ணின் கோணம் என்று சிந்தனை ஓடினால் அது கடைசியில் மலத்தில் வந்து நிற்கும் என்பார். பின்நவீனமும் அதை அதுவாக ரசிக்க மட்டுமே. அது ஆசிரியனுக்கு மட்டுமே உரியது. பல்வேறு கோணத்தில் சிந்திக்கும் உங்களின் சிந்தனைகளின் சிக்கலுக்கு அது பொறுப்பாளியல்ல.

மேலுள்ளவை என் வாசிப்பனுபவமும், பின்நவீனத்தை நான் புரிந்து கொண்ட முறையும் தான். வெறும் அனுபவங்களையும் உலக தத்துவங்களை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பெயருடன் சிலாகித்து சொல்வதையும் பின்நவீனமாக நான் பார்ப்பதில்லை.

இனி வருவது தமிழ் வலைகளில் பின்நவீனத்தை கலந்து கட்டி அடிப்பவர்களில் நான் விரும்பி படிப்பவர்கள். சென்ற பதிவில் சில நகைச்சுவை பதிவர்கள் விட்டுபோனதாக குற்றசாட்டு. அதில் இம்சைஅரசியை நான் படித்ததில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அபிஅப்பா விட்டு போனதற்கு வருத்தபடுகிறேன்.

அய்யனார்

தமிழ் வலைகளில் எனக்கு பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர். அவருடைய பதிவுகளை என் நண்பர்களை அழைத்து படித்து அர்த்தம் சொல்லுங்கள் என்று பந்தயம் கட்டுவேன். மிகவும் அனுபவித்து எழுதுபவர். ஆயிரம் அர்த்தகளுடன் இவரது கவிதை இருக்கும். சினிமாவில் இவரது ரசனை கூட மரபு சார்ந்து இருக்காது. இலக்கிய தரம் வாய்ந்த படைப்புகளாக இவரது பல பதிவுகளை உணர்ந்திருக்கிறேன். பலகை மிக இனிமையானவர் என்பது பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அய்யனாரின் புனைவுகள் , கவிதைகள்

சென்ஷி

எனக்கு மிக சமீபத்தில் தான் பழக்கம். இவரது படைப்புகள் அய்யனாரின் பதிவுகளை படிக்கும் அனுபவத்தை தந்தாலும், இவரது கோணம் வேறு என்பது உண்மை. இவரது கவிதைகளும், பின்நவீன கதைகளும் வாசிப்பனுபவத்தை வேறு கோணத்திற்கு மாற்றுகிறது. இவருடைய பதிவுகளை முழுவதுமாக என்னால் படிக்க முடிவதில்லை என்றாலும் அதை அவரிடமே ஒத்து கொள்வேன். எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரவில்லை என்பது தான் உண்மை.
சென்ஷியின் புனைவுகள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

இவரது கவிதைகள் எனக்கு அந்த அனுபவத்தை தரும். எதிர் கருத்துகளை இவர் நாகரிகமாக தான் விவாதிக்கிறார். இவருடைய காம கதைகள் ஆழ்ந்து படிக்கும் போது ஒரு வித்தியாச அனுபவத்தை தரும். பல சர்ச்சைகளுக்கு உட்பட்டாலும், என் பார்வையில் காமம் ஒரு நடைமுறை இலக்கியமாக தான் தெரிகிறது.

இன்னும் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்.
பதிவின் நீளம் கருதி பின்நவீன காமெடி எழுத்தாளர் நிஜமா நல்லவனுக்கு மட்டும் நன்றி சொல்லி கொள்கிறேன். மாற்ற பதிவர்களை எனது வலையில் கண்டிப்பாக நினைவு கூறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்

22 comments:

  1. என்னது ஆர்னிகா நாசர் பின்நவீன எழுத்தாளரா??? :)))

    ReplyDelete
  2. என்னது நிஜமா நல்லவன் பின்நவீனத்துவ எழுத்தாளரா? ;)))

    ReplyDelete
  3. என்ன விட்டுடீங்களே :((

    ReplyDelete
  4. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    என்னது ஆர்னிகா நாசர் பின்நவீன எழுத்தாளரா??? :))) //

    இத பத்தி அங்கே வச்சுக்கலாம்.
    நான் புரிந்த வரை அவரது மேஜிக்கல் ரியலிசம் வகையை சார்ந்தது

    ReplyDelete
  5. // தமிழ் பிரியன் said...
    என்னது நிஜமா நல்லவன் பின்நவீனத்துவ எழுத்தாளரா? ;)))//

    உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்
    சமீபத்தில் அவருடைய வட்ட புனைவு பார்த்தீர்களா இல்லையா

    ReplyDelete
  6. //Bleachingpowder said...
    என்ன விட்டுடீங்களே :((//

    அதான் என் பேர்ல போட்டுட்டேனே!
    இந்த பேர்ல வேற போடனுமா

    ReplyDelete
  7. போட்டாச்சு...போட்டாச்சு...

    ReplyDelete
  8. ஐய்யோ பெருமாளே, திரும்பவும் தலையெல்லாம் சுத்தறதே. ஷங்கர் சார்... அந்த டாக்டர் அட்ரஸ் கேட்டேனே...

    ReplyDelete
  9. நாம் இப்போ எங்க இருக்கேன்....

    ReplyDelete
  10. //ஷங்கர் சார்... அந்த டாக்டர் அட்ரஸ் கேட்டேனே... //

    நீங்க அந்நியனா இருக்கும் போது

    நீங்க அம்பியா

    இல்லை நீங்க அந்நியனா இருக்கும் போது

    அதான் நீங்க அம்பியா

    நீங்க அந்நியனா இருக்கும் போது

    ம்ம்ம்ம்

    அந்நியனாவே இருங்க

    ReplyDelete
  11. இங்கே என்ன நடக்கிறதுன்னே புரியல...

    "ஐடி மாத்தி பின்னூட்டம் போட்ட தப்பா..."

    "இல்லீங்க"

    "மூனு ஐடி வச்சுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டு படிக்குறவங்கள குழப்புன அது தப்பா..."

    "கொஞ்சம் தப்பு மாதிரி தாங்க தெரியுது"

    "மூனு ஐடிய வச்சுட்டு, மூனு மாசாமா, முன்னூறு பின்னூட்டம் போட்டா, அது தப்பா...?"

    "பெரிய தப்பு தாங்க..."

    அதாண்டா இங்க நடந்திட்டிருக்கு...

    ReplyDelete
  12. நல்ல அனுபவங்களை தருகிற எழுத்துக்கள்...

    ReplyDelete
  13. Hey vaal...whatz up yaar...Office bore me to death dude...come, lets party for the weekend...

    ReplyDelete
  14. பெருமாளே நேக்கு என்னாச்சு...

    ReplyDelete
  15. என்னது ஆர்னிகா நாசர் எழுத்துகள் மேஜிக்கல் ரியலிசா??? :))

    ஏங்க வால், இப்படில்லாம்?? சரி, மேஜிக்கல் ரியலிசம் பின்நவீனமா? என்னமோ போங்க :(

    ReplyDelete
  16. //Hey vaal...whatz up yaar...Office bore me to death dude...come, lets party for the weekend... //

    sorry dude
    i have weekend dating with my girlfriend

    remo(நல்லதந்தி)

    ReplyDelete
  17. //ஏங்க வால், இப்படில்லாம்?? சரி, மேஜிக்கல் ரியலிசம் பின்நவீனமா? என்னமோ போங்க//

    பினவீனமாக நான் அறியப்பட்டது அல்லது குழப்பபட்டது அல்லது குழம்பியது மரபுகளை கட்டுடைத்தல், சாதாரண பாணி அதாவது வாழ்வியல் சார்ந்த எழுத்துநடைகளுக்கு மத்தியில் புதிதாக நான் உணர்ந்தது ஆர்னிகா நாசரின் எழுத்துகள் தான்.

    எனக்கு பின்நவீனத்தில் அறிவு குறைவு தான், ஆனாலும் முடிந்த வரை எனக்கு தெரிந்த வரை வாதம் புரிவது எனது பழக்கம் ஹீ ஹீ

    நீங்கள் கொடுத்த சுட்டியை சேமித்த வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  18. என்னது நிஜமா நல்லவன் பின்நவீனத்துவ எழுத்தாளரா? ;)))

    என்னது ஆர்னிகா நாசர் பின்நவீன எழுத்தாளரா??? :)))

    என்னது நான் பின்நவீனத்துவ எழுத்தாளர் இல்லியா?

    ReplyDelete
  19. //Bleachingpowder said...
    இங்கே என்ன நடக்கிறதுன்னே புரியல...

    "ஐடி மாத்தி பின்னூட்டம் போட்ட தப்பா..."

    "இல்லீங்க"

    "மூனு ஐடி வச்சுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டு படிக்குறவங்கள குழப்புன அது தப்பா..."

    "கொஞ்சம் தப்பு மாதிரி தாங்க தெரியுது"

    "மூனு ஐடிய வச்சுட்டு, மூனு மாசாமா, முன்னூறு பின்னூட்டம் போட்டா, அது தப்பா...?"

    "பெரிய தப்பு தாங்க..."

    அதாண்டா இங்க நடந்திட்டிருக்கு...//

    சும்மா,வுட்டு வணக்கறீங்க போலிருக்கு! :)

    ReplyDelete
  20. எதிரிகளை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி.

    இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  21. நீ school பக்கம் மழைக்கு கூட ஒதுங்கனது இல்ல , அப்புறம் எப்படி பள்ளிநாட்கள் மாப்பி

    ReplyDelete
  22. நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

    நன்றி தமிழ்பிரியன்

    நன்றி ப்ளீச்சிங் பவுடர்

    நன்றி தமிழன்.. (கறுப்பி..)

    நன்றி பரிசல்

    நன்றி நல்லதந்தி

    நன்றி குசும்பன்

    நன்றி தியாகு
    நெருங்கிய நண்பர்களை வலைக்கு அறிமுகப்படுத்தினால்
    இப்படி தான் மானம் போகும்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது