07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 9, 2008

வரம் பெற்றேன்! வரப்பெற்றேன்..!!

பெரும்பாலான புத்தகங்கள்ல வந்துக்கிட்டிருந்த பேரு! பெரிசா ஒண்ணும் கதைகள் கட்டுரைகள்னு இல்லைன்னாலும் சின்னதா வாசகர் கடிததில் குரல் கொடுக்க ஆரம்பிச்சு.அண்ணன் அசத்திக்கிட்டிருந்தாரு! எல்லா பத்திரிக்கைகளுக்கும் வந்த நாளன்னைக்கே உட்கார்ந்து எழுதி அனுப்புறதுக்கு,அதிகமில்லை ஜென்டில்மேன் 25 பைசா கார்டுதான்! ஆனா பாருங்க பெயர் வர்றது மட்டுமில்ல புக்கும் வீடு தேடி வரும்ல! (இதுதானே முக்கியம் 25காசு போட்டு 4 ரூபா லாபம்!)

பட்ஜெட் கொஞ்சம் குறைச்சு, வேகத்தை கூட்டி, புக்க வாங்கிட்டு வந்து தனியா போய் உக்கார்ந்து படிக்க, படிக்க விமர்சனம் மாதிரி எதையாவது வார்த்தை ஜாலம் காட்டி எழுதுறது(நாங்க யாரு டி.ஆர் ஊர்ல..!) அடுத்த ஒரு மணி நேரத்துல போஸ்ட் பண்ணிடறது! அப்பவும் கொஞ்ச நாள வரவேயில்லை என்னாடா மந்திரம் பண்றாரு அண்ணன் மட்டும்ன்னு யோசிச்சி ஒரு நாள் கண்டுபிடிச்சேன் ஆஹா இதுதானா மேட்டருன்னு! வேற ஒண்ணுமில்லைங்க அவரு நேரடியா ஹெட்போஸ்ட் ஆபிஸ்ல போஸ்ட் பண்ணுவாரு நான் அங்கெல்லாம் போகாம சின்னகடைத்தெரு பிள்ளையார் கோவில் பின்னாடி இருக்கற போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடுவேன்!

அதையும் மாத்துனதுக்கப்புறமும் சரியா வரலை சரி என்னானு அவர்கிட்டயே கேட்டுடுவேம்ம்னு கேட்டா? அது பத்திரிக்கை காரங்க கையிலத்தான் இருக்கு சீனியாரிட்டிதானாம்! கத்துகுட்டிகள் நிறையா எழுதி தள்ளிக்கிட்டே இருந்தா ஒரு நாளைக்கு போனா போகுதுன்னு போட்டுடுவாங்க்ன்னு சொன்னாரு! அத மனசுல வைச்சுக்கிட்டு, எழுதி,கடைசியா ஒரு நாள்ல் கல்கியில அவரு பேருக்கு கீழயே என் பேரும் வந்துடுச்சி!

நம்மளையும் அக்செப்ட் பண்ணிட்டாங்கன்னு! ஒரே குஷி! ஆனா கொஞ்ச நாள்லயே காலேஜ் படிப்புல (அட உண்மையாத்தாம்ப்பா!) பிசியானதுல அதெல்லா மறந்துப்போச்சு!

உத்தேசமாய் 2003 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு ஞாயிற்று கிழமையில் டேய் உன் போட்டோ பாருடா? என்று அழைத்த அண்ணனை மட்டுமல்ல,அப்போது திரையில் தெரிந்த என் போட்டோ! அதில் சில பல தமிழ் வார்த்தைகளை பார்த்து ஆச்சர்யத்தோடு கேட்ட கேள்விகள் இன்றும் நினைவில் இருக்கிறது! எப்படி என் போட்டோ அஙக் வரும்? டேய் தமிழ் கூட தெரியுது இது எப்படி? ஆமாம் நீ என்னமோ பேரு போட்டிருக்கியே அது என்ன? என்று வரிசையாய் வந்த கேள்விகளுக்கு,அண்ணனிடமிருந்து பதில் எதுவும் இல்லை சிரிப்பை காட்டிக்கொள்ள சந்தோஷத்தை மட்டுமே கண்டேன்! அப்போது அவர் ஆசிரியராக இருந்து தொகுத்த வலைப்பூவில் என் 7 வயசு போட்டோவுடன்! வலைப்பூ ( அதற்குப்பிறகு இப்பொழுது அதே பதிவினை தேடி தேடி களைத்துப்போய்விட்டேன்!) அதிலிருந்து,என் அண்ணன் ரஜினி ராம்கியின் சில்லுண்டியின் சிந்தனைகள்!
பதிவுகள் படித்து பிளாக் உலகம் அவ்வப்போது படிக்க மட்டும் கொஞ்சம் பழக்கமானது

ரொம்ப காலம் கழிச்சு திரும்பவும் 2007 ஜுன் மாதம் ஒரு ஆசை அல்பமாய் பிறந்தது, கடகமாக வளர்ந்தது! இப்ப நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு!(??)

என்ன சொல்றது கரெக்ட்தானே...???

வலைச்சரம் எழுதும் வரம் பெற்றேன்
இனிய வாரமாக தொடங்கும் இந்த திங்களில்,
வலையுலக குடும்பத்தினரின்
வாழ்த்துகளோட வலைச்சரம் தொடுக்க...
வரப்பெற்றேன்!

18 comments:

  1. மீ த பர்ஸ்டு

    சிவா - பாரதி - தூங்கறீங்களா

    நல் வாழ்த்துகள் ஆயில்யன்

    ReplyDelete
  2. ஆயில்யன் மாமாதான் இந்த வாரமா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கும்மி குரூப் வந்த பின்னாடி வர்ரேன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஆயில்யன்!

    ReplyDelete
  5. /
    cheena (சீனா) said...
    மீ த பர்ஸ்டு

    சிவா - பாரதி - தூங்கறீங்களா
    /

    இது பின்னூட்ட கயமை தனம்
    செல்லாது செல்லாது

    ReplyDelete
  6. ஆயில்யன் மாமாதான் இந்த வாரமா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கும்மி குரூப் வந்த பின்னாடி வர்ரேன்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஆயில்யன்!

    ReplyDelete
  9. நிலா செல்லம்தான் பர்ஸ்ச்டா???

    குட்!!

    ReplyDelete
  10. /
    2007 ஜுன் மாதம் ஒரு ஆசை அல்பமாய் பிறந்தது, கடகமாக வளர்ந்தது
    /

    ஆயில் அண்ணே 2007 ஜூனா நீங்க??? அப்ப மூத்த வலைப்பதிவர்தான் நான் 2007 ஆகஸ்ட்டு

    :))

    ReplyDelete
  11. என்னோட நட்ச்சத்ரகாரரா !

    வாழ்த்துக்கள் ஆயில்யன்!

    ReplyDelete
  12. கடகராசிக்கு இந்த வாரம் நல்ல வாரம்தான்! ஆயில்யன்!
    ஜமாயுங்கோ!!

    ReplyDelete
  13. ஆயில்யன் மீண்டும் வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்...அண்ணன்...

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் thala

    ReplyDelete
  17. நல்வாழ்த்துகள் ஆயில்யன்.

    பிறந்த நாளுக்கும் சேர்த்துத்தான்.
    உங்க அண்ணன் ரஜினி ராம்கியா!!!!

    ReplyDelete
  18. எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது