07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 11, 2008

உடன் பிறப்புக்கள்


சகோதரர்களாலும் சகோதரிகளாலும் நிறைந்த வாழ்க்கை என்றுமே நிச்சயம் அன்பினையும் பாசத்தையும் சந்தோஷத்தினையுமே கொண்டு வந்து தரும் வாழ்க்கையாகத்தான் இருக்கும் பலருக்கும்!

பெரும்பாலும் சின்ன சின்ன சண்டைகளிலேயே காலத்தை கழித்திருந்து,பிரிவு வந்தப்போதுதான் பெரிதும் உணர்ந்துக்கொண்டேன்!உடன்பிறப்புகளை பற்றி...!

என்னைப்போன்றே, சகோதர சகோதரிகளை பற்றிய எண்ணங்களில் விளைந்த பதிவுகளிலிருந்து சில...

۞۞۞۞۞

வெவ்வேறு சூழ்நிலைகளில் பிரிவுகளால் தவிக்கும்போது ஏற்படும் எண்ண அலைகளில் சகோதரியினை அக்காவினை நினைத்து பார்க்கும் தங்கையின் மனத்தின் வெளிப்பாடாய்....

கொட்டிக்கிடந்த நட்சத்திர குவியல்களின் அடியில், அடி முதுகு விரைத்துக்கிடந்த வேளையில் ஒர் நாடகம் போலும் அந்த நிகழ்வுகள் மீண்டும் வந்து போனது. அப்போதுதான் அந்தக் கோள்வி தொக்கி நின்றது, எது வந்து நின்றது எம்மிடையே, எங்கணம் நான் அவளுள் நின்றேன்? கேள்வி வந்த மறுகணம் ஓர் ஒற்றை நட்சத்திரம் உருவி விழுந்தது. அட இது கூட தெரியவில்லையா, உம்மிடையேயுள்ள அன்பின் பரிணாமம் என்று நகைத்துச்சொன்னது.

۞۞۞۞۞

சிலருக்கு சில சூழ்நிலைகளால் திருமணமாகி சென்ற அக்காவின் வீட்டிலேயே தாமும் சென்று தங்கி கல்வி கற்கும் அல்லது வேலைபார்க்கும் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும் அது போன்ற சமயங்களில் அக்காக்கள் அன்னையாக மாறி நம்மை பிள்ளையாக்கி கவனித்துக்கொள்ளும் பாசத்தை சொல்லும் பெனடிக்ட் கவி வரிகள் உண்மைதானே!

அத்தனையும் அன்னை செய்திட்டால்
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
அடுத்தவனை மணமுடித்துச் சென்றிட்ட
அக்கா செய்திட்டதனால்
அவளையே தெய்வம் என்றிடுவேன்

۞۞۞۞۞

அக்கா பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்து செல்லும்போது பிரிவின் வேதனைகளினை புலப்படுத்தும் வரிகளாக சிலரின் வரிகள் சிறப்பித்து நிற்கும் அது போன்ற வரிகளாக நி.நல்லவனின் அம்முவுக்கு ஒரு கடிதம்

காலச்சக்கரத்தின் பிடியில்
நாம் ஆளுக்கொரு தேசத்தில்
அன்பு
அன்று கரம்பற்றி பரிமாறியது
இன்று கரம்பற்றிய அலைபேசியில்

۞۞۞۞۞

சகோதர பாசங்களில் சில சமயங்களில் தம்மையே மீறிய தவறுகளும் கூட சில உண்டு! சிறுவயதிலேயே ஆதரவு தந்து வாழ்ந்து வந்த அண்ணன் பிற்காலத்தில் சரியானதொரு உதவியினை தம்மால் செய்ய இயலாமல் போனது பற்றிய குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாய் வரும் கவிதை இது!

அண்ணன்
அண்ணன் எனக்கு அன்னியனாகி
போனது அன்றுதான்....
அப்பாவின் காலத்திற்குப்பின் அண்ணன்
எனக்கு அப்பாவானான்.....
நான் பொறியியல் படித்து முடித்தபோது
நான் அறியாதது அண்ணனுக்கு
என்னால் ஏற்பட்ட கடன்கள்....
அண்ணன் ஒரு நாள் தொலைபேசியில்
பேசினபோது குரலில் தெரிந்த
தன்மான்க்குறைவு என்னை
அடித்துப்பர்த்ததே?

۞۞۞۞۞

கூடப்பிறந்திருந்தாலும், சூழ்நிலைகளால் பிரித்திருக்கும் அக்கா தம்பிகளுக்கிடையில் உண்டாகும் பாசத்தின் பரிணாமம்!சகோதரியின் பிறந்த நாளில் தூரத்திலிருக்கும் உறவுகளில் ஞாபக நிகழ்வுகளை மீட்டு தந்து சகோதரியை வாழ்த்தும் ஜே.கேவின் பிறந்த நாள் வாழ்த்தாக....

இப்போது அவள் குழந்தை, குடும்பம் என்று ஆனபின்பும் கூட அவள் குழந்தைக்கு அடுத்தபடியாக நேசிக்கும் ஜீவன் நானாக தான் இருக்கும். அப்பா, அம்மா கூட என்னை அடித்து தான் வளர்த்திருப்பார்கள். ஆனால் என்றுமே என்மீது அன்பு மட்டுமே கொண்ட ஒரு ஜீவன்.


۞۞۞۞۞


அடித்து பிடித்து கொண்டாடிய தீபாவளி நினைவுகளை மீட்டு தரும் குசும்பனின் இந்த பதிவு கண்டிப்பாய் எல்லோருடைய வீட்டிலும் அக்கா தம்பிகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வாகவே இருக்கும் கண்டிப்பாக...!

۞۞۞۞۞


இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....!

நீங்களும் கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்களது உடன்பிறப்புக்களை மனம் மகிழ வாழ்த்தியதில், எண்ண அலைகளில் கொஞ்சம் ஸ்கேன் செய்து சிறந்த பதிவாக தாருங்களேன்!

12 comments:

  1. இருப்பா பதிவ கண்ணுலயாவது பாத்துட்டு வரேன்

    ReplyDelete
  2. கிருத்திகா , நெஜமா நல்லவன், ஜேகே, குசும்பன் பதிவுகள் படித்தவை. அருமையான சுட்டிகள்

    ReplyDelete
  3. மிச்சத்தை பொறுமையா அப்புறம் படிக்கிறேன்

    ReplyDelete
  4. உடன்பிறப்புகள்னு தலைப்பு வெச்சி அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி 4 கேடகிரிய ஒன்னா செஞ்சிட்ட கில்லாடி மாமு நீயி

    இன்னும்

    பாட்டி
    அண்ணி
    நாத்தனார்
    மச்சான்
    மச்சினிச்சி
    கொளுந்தியா
    அத்தை
    மாமா
    மாமி
    சித்தப்பு
    சித்தி
    ஒன்னுவிட்ட......
    ரெண்டுவிட்ட.........

    ஆயில் உனக்கு வலைச்சரத்துல ஒரு வாரம் பத்தாது போல இருக்கே!?!?!?

    ReplyDelete
  5. //மங்களூர் சிவா said...
    கிருத்திகா , நெஜமா நல்லவன், ஜேகே, குசும்பன் பதிவுகள் படித்தவை. அருமையான சுட்டிகள்
    //

    மிக்க நன்றி சிவா அண்ணா :)

    ReplyDelete
  6. /
    ஆயில்யன் said...

    //மங்களூர் சிவா said...
    கிருத்திகா , நெஜமா நல்லவன், ஜேகே, குசும்பன் பதிவுகள் படித்தவை. அருமையான சுட்டிகள்
    //

    மிக்க நன்றி சிவா அண்ணா :)
    /

    நான் உனக்கு அண்ணனா!?!?

    ஊருக்குள்ள இப்பிடித்தான் புரளிய கிளப்பிவிடறதா????

    நான் சின்ன பையன்யா :((

    ReplyDelete
  7. எல்லாஞ்சரி.. கடேசியா என்ன தான் சொல்ல வர்றீங்க? (நாங்கெல்லாம் 'கோனார் நோட்ஸுக்கே' 'தென்றல்' வாங்கி மீனிங் கேட்குற பார்ட்டிங்க!)

    ReplyDelete
  8. அனைத்துமே மிக மிக நல்ல பதிவுகள். பிற சந்தர்பங்களில் தெரியாமல் விட்டு போன பல பதிவுகள் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. //நாங்கெல்லாம் 'கோனார் நோட்ஸுக்கே' 'தென்றல்' வாங்கி மீனிங் கேட்குற பார்ட்டிங்க// cute punch

    ReplyDelete
  10. உடன் பிறப்புகள் இல்லாத உலகம் ஒரு உலகமா.ஏற்கனவே ஒரு உறவை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
    முழுதும் பிரிந்து விட்ட என் தம்பியைப் பற்றி எழுத எனக்கு இப்போதும் வழியில்லை.
    நன்றி ஆயில்யன்.

    ReplyDelete
  11. ஆயில்ஸ் அண்ணே என்னோட பதிவுமா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது