07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 5, 2010

5.சுற்றுலா தரும் சுகங்கள்

(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்
சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.

சுற்றுலா என்பது மனசுக்கு சுகமான ஒன்று பலரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று மனசுக்குள் பெரிதும் விரும்புவார்கள் ஆனால் விருப்பத்திற்கு மாற்றமாக வேலை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் சம்பவங்கள் நடந்து சுற்றுலா செல்லமுடியாமல் சில காலங்கள் அதை மறந்தே கூட போயிருப்போம். சுpல தருணங்களில் நமது நண்பர்கள் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி சுவாரஸ்யமாக பேசும்போது நாமும் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். வருகின்ற ஆசைகள் அனைத்தையுமே நாம் நிறைவேற்றி விடுகின்றோமா?

சிறுவயதிலிருந்தே சுற்றுவதற்கு எனக்கு மிக விருப்பம் ஆசை. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புறப்பட்டேன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்னையும் சென்னையும் சுற்றிப்பார்க்க சென்றேன்.இதுதான் எனது முதல் சுற்றுலா.

என்னுடன் பணிப்புரியும் மும்பையைச் சார்ந்த நண்பன் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வருவான் அவன் சுற்றிய இடங்களை புகைப்டத்தில் பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும் ஆனால் ஆண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் இல்லாமல் அது தட்டிபோகும்.

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்க்கையை துவங்கிய பிறகு சுற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கூட்டு குடும்பம் போல அண்டை நாடுகளுக்கும் தூரமான ஊர்களுக்கும் காரில் சென்று வருவது அலாதியான நிகழ்வு.

அதுபோல் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி தொடர்கதை எழுதுகிறார் அன்புடன் ஆனந்தி அதில் ஆனந்த அனுபவம் இருக்கிறது.

எப்பவுமே வேலை வேலை என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது சம்பாதித்ததை நமக்காக கொஞ்சமாவது சிலவு பண்ணக்கூடிய இடம் சுற்றுலாவில்தான். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் அந்த ஒருவாரக் காலத்திற்கு ஒருவரையொருவர் பிரியாமல் ஒவ்வொரு மணித்துளியிலும் இணைந்தே இருப்பதற்கு சுற்றுலா மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கிறது.

பள்ளியில் கல்லூரியில் என சக நண்பர்களுடன் அரட்டை அடித்து சுற்றிருப்போம் அந்த நிகழ்வை அசைபோட்டால் இன்றும் கூட அது சுகமாகவே இருக்கும். அப்படி அசைப்போடுகிறார் பூமகளின் பூக்களம்.

கல்லூரியில் சுற்றுலா செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தில்லை ஆனால் அமீரகப்பதிவர்களுடன் சென்ற சுற்றுலா மறக்க முடியாதது.

இன்று நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமது சுற்றுலா தளங்களை தேர்வு செய்யலாம் அங்கு தங்குவதற்கு விடுதி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் நாம் தேர்வு செய்திருக்கும் சுற்றுலா தளத்திற்கான சிலவினங்கள் எவ்வளவு? ஆகும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துவிடக் கூடிய அளவிற்கு இணையதளத்தில் வழிகாட்டிகள் நிறைந்து இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு எனது குடும்பத்தார்களுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்றேன். மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக எனது பயணத்தினை பதிவு செய்தேன் அந்த சுற்றுலாவின் அனுபவம் தான் மனம்கவர்ந்த மலேசியா கட்டுரை.

இந்த ஆண்டு ஜூலையில் நமது இந்தியாவின் வடமாநில சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து திட்டமிட்டபடி சுற்றுலாவை நிறைவு செய்தேன்.

இவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் சுற்றுலா செல்வது கடினமல்ல அதற்காக நேரத்தை நாம் ஒதுக்கினால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் அதுமட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றிய விபரங்களையும் முன்னரே நாம் தயார் செய்துக் கொள்ளலாம் அவ்வளவும் எளிமையே.

இந்த உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது அமெரிக்கா முதல் ஆப்ரிக்காவரை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்று வரலாம் பணமும் மனமும் இருந்தால் மட்டும்.

அந்தமான் சுற்றுவதற்கு ஆசை நேபாளும் சுற்றுவதற்கு ஆசை ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆண்டு தோறும் சுற்றிக் கொண்டிருப்பது மனசுக்கும் உடலுக்கும் வயசு குறையும் என்று சொல்வது உண்மை.

தமிழர்களின் சிந்தனை களத்திற்குள் சென்றால் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை முழுமையாக காணமுடிகிறது.

இந்த சுட்டிகளை முழுவதும் படித்தீர்கள் என்றால் சுற்றுலா இதுவரையில் செல்லாதவர்கள் இனி செல்வார்கள் என்று உறுதியுடன் என்னால் கூறமுடியும்.

7 comments:

  1. அன்பின் கிஸ்மத் - சுற்றுலாவினைப் பற்றி இவ்வளவு சுட்டிகள் உள்ளனவா - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சுற்றலாபற்றிய தகவல்கள் தங்கள் பதிவின் மூலம் அறிய முடிந்தது.அருமையான அறிமுகம்.

    ReplyDelete
  3. இமயமலைப்பயணம் குறித்து நானும் எழுதி வருகிறேன்.

    எனக்குப்பிடித்த தகவல்களுக்கு மகிழ்ச்சி கிளியனூர் இஸ்மத்

    ReplyDelete
  4. நன்றி ஐயா சீனா
    நன்றி சகோதரி ஸாதிகா

    ReplyDelete
  5. இமயமலை பயணக்கட்டுரைக் குறித்து நல்வாழ்த்துக்கள்....நிகழ்காலத்தில்

    ReplyDelete
  6. இடுகை படித்து முடித்தபோது நிறைய
    சுற்றுலா சென்று வந்ததுபோல்
    மனநிறைவு. மேலும் நாமும்
    சுற்றுலா செல்லவேண்டும் என்கிற
    ஆவல்.

    ReplyDelete
  7. அமெரிக்க வாழ்க்கை பற்றிய எனது பதிவுகளை.. அறிமுகப் படுத்தியதற்கு.. மனதார்ந்த நன்றிகள்..!

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!

    (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது