07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 30, 2010

கதம்பம் ஒன்று

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா

நேற்று டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு. இன்னைக்கு பேட்டிங் அதுவும் பவர் ப்ளேவோட. பேட்ஸ்மேன், பெளலர், ஆல்ரவுண்டர் என இருப்பதை போல வலை உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையாக பதிவிடுகின்றனர். இதில் சமூகபார்வை, கவிதை, கதைகள், திரைவிமர்சனம், அனுபவ பதிவுகள், நகைச்சுவை, பொது என  எட்டு வகையில் வரிசைபடுத்தி  ஒவ்வொரு  திறமைக்கும் ஒரு பதிவராக தினமும் குறைந்தபட்சம் 8 பதிவுகளை/பதிவர்களை களம் இறக்குகிறேன்...

சூரியகாந்தி (சமூகப்பார்வை):

சமூகத்தில் திருநங்கைகளை பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை என வருத்தப்படுகிறார் ஸ்மைல் பக்கம் வித்யா. இவருடைய பதிவுகளில் சமூகத்தின் மேல் கோபம் அதிகமாகவே காணமுடிகிறது.

(கவிதை) ரோஜாக்கள்:
                                                     தாய்வீடு:
                                                     பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
                                                     விருந்தாளியாய் சென்றாள்.

                                                     உரிமையிழந்தவளாய்! 

இப்படி இரு வரிகளில் கவிதைகள் எழுதி பதிவிடுகிறார் சங்கீதா. இவருடைய சங்கதியில் சதமடிக்க போகும் இவர் சில பழைய பாடல்களின் வரிகளையும் பதிவிடுகிறார்.

தாமரை (சிரிப்பு):
நான் பாராசூட்ல போய் அவஸ்த்தைபட்டது போல் என் பேர் கொண்ட இவரும் ஸ்கூபா டைவிங் போய் காமெடி பீசாகி இருக்கார். ஊரை சுத்துறதுல முதல் ஆளா இருப்பார் போல இந்த  சுற்றுலா விரும்பி.

வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
பல பதிவுலக சக்கரவர்த்திகள் திரைப்படங்களை பற்றிய விமர்சனங்களை வழங்கினாலும் ஆங்காங்கே குறுநீல மன்னர்களும் இந்த ஏரியாவில் கோலோச்சிதான் வருகிறார்கள்.
குறிப்பாக பதிவுலகில் பாபு ஆங்கில திரில்லர் படவிமர்சனங்களை அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் தருகிறார். இவர் பரிந்துரைக்கும் பதிவுகளை பார்த்தால் கண்டிப்பாய் அந்த படங்களை பார்க்க தூண்டுகிறது.

(கதை சொல்லும்) காந்தள்:
நம்ம மனம்+ எஸ் கே நல்ல படங்களை டிசைன் பண்ணுவாருன்னு தெரியும் ஆனா அவர் நல்லா கதையும் எழுதுவாருன்னு உங்களுக்கு தெரியுமா? அவருடைய மற்றோரு வலைப்பூ “எதுவும் நடக்கலாம்”ல் இந்த வித்தியாசமான கதையை படிச்சே ஆகணும்

(அனுபவ) அல்லி:
கஸ்டமர் கேர் - இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கு எரிச்சல்தான் வரும். ஆனால், கால் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் சாதக பாதகங்கள், அது செயல்படும் முறை என பல தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் எல் கே. அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது தெரிந்துகொள்ள!

(பல்சுவை) பாரிஜாதம்:
எமெர்ஜன்சி, மிசா - பற்றிய வரலாற்று தொடரை எழுதி வருகிறார்

(நெடுநாளாய் எழுதாத) குறிஞ்சி:
பட்டனத்துக்கு வந்த பட்டிக்காட்டான் தன் அனுபவங்களை நகைச்சுவையுடன் வழங்கிவந்தார். ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தபட்சம் 100 கமெண்டுகளை பெற்று வந்த இவர் சில நாளாக எழுதுவதில்லை. @ ஜெய், உங்கள் சேவை வலையுலகத்துக்கு தேவை (கும்மி அடிக்க ஒரு கை குறையுதுப்பா)

சரி, இவங்க பேட்டிங் திறமை எப்படினு நீங்க அவங்க கிரெளண்டுக்கே போய் பார்த்துட்டு வாங்க....

கடைசியாக,


ஒரு டவுட்டு: Black & White டிவில கலர் படம் தெரியாது ., அதே மாதிரி கலர் டிவிலயும் Black & White படம் தெரியக்கூடாதுல..! ஏன் தெரியுது ..? - கேட்டது செல்வா

அதிரடி தொடரும்....

88 comments:

 1. அருமையான அறிமுகங்கள்... குறிப்பாக ஸ்மைல் வித்யா...

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம்...

  ReplyDelete
 3. ஏன் லேட்டு. பெஞ்சு மேல ஏறி நில்லு

  ReplyDelete
 4. உங்க சேவை எங்களுக்கு தேவை...
  நல்ல முயற்சி...

  ReplyDelete
 5. அருமையான அறிமுகங்கள்...

  ReplyDelete
 6. கலக்கிடீங்க, என் அறிமுகதிற்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். தம்பியை அறிமுக படுத்துவது அண்ணனின் கடமை. கடமையை நிறைவேற்றிய என் கடமை M .G .R வாழ்க.

  ReplyDelete
 7. //ஏன் லேட்டு. பெஞ்சு மேல ஏறி நில்லு //

  வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா.............

  ReplyDelete
 8. செல்வாவின் டவுட் நியாயமானது தானேங்க???

  ReplyDelete
 9. நல்ல அமர்க்களமான அறிமுகங்கள்!

  ReplyDelete
 10. அருமை. Nice introductions.

  ReplyDelete
 11. November 30, 2010 10:47:00 AM GMT+05:30
  இம்சைஅரசன் பாபு.. said...
  //ஏன் லேட்டு. பெஞ்சு மேல ஏறி நில்லு //

  வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா........///

  அப்போ அருணை மக்கு சொல்றிங்களா

  ReplyDelete
 12. வலைச் சரத்தில் இன்றைய மலர்களின் வாசனை நன்று அருண்..:)

  ReplyDelete
 13. யோவ், எனக்கும் கொஞ்சப்பேர விட்டு வைய்யா.. அப்புறம் தலையப் பிச்சுக்க வெச்சிடாதே!

  ReplyDelete
 14. @பன்னிகுட்டி

  //யோவ், எனக்கும் கொஞ்சப்பேர விட்டு வைய்யா.. அப்புறம் தலையப் பிச்சுக்க வெச்சிடாதே!//

  நீ ஆணியே புடுங்க வேண்டாம்.... :))

  ReplyDelete
 15. அருமையான அறிமுகம்

  ReplyDelete
 16. அருமை தொடருங்கள்....!

  (அச்சச்சோ.... கோபத்துல கத்திய எடுத்துகிட்டு அருண் ஓடி வர்றானே.....மக்கா இப்டித்தானே போடுறாங்க எல்லாம் கேட்டா இதுக்கு பேரு கமெண்ட்டுன்னு கமெண்ட்றாங்க....

  ஒரு சட்டம் கொண்டு வரணும்....அருமை தொடருங்கள்னு யாரும் கமெண்ட் போட நினைச்சா..ப்ப்ப்ப்ளீஸ்....கமேண்டே போட வேணாம்...(ஆணியே புடுங்க வேணாம்...) என்னத்துக்கு ஸ்டாம்ப் அடிக்கணும்...ஹா..ஹா..ஹா.)


  டம்ம்பி.... கவிதை அறிமுகங்கள் புதுசு... படிக்கிறேன்...! எவ்ளோ தெகிரியம் இருந்தா செல்வாவ அறிமுகம் பண்னி வச்சு இருப்ப...ஹா..ஹா..ஹா...!

  அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா...!

  ReplyDelete
 17. //ஒரு டவுட்டு: Black & White டிவில கலர் படம் தெரியாது ., அதே மாதிரி கலர் டிவிலயும் Black & White படம் தெரியக்கூடாதுல..! ஏன் தெரியுது ..? - கேட்டது செல்வா//

  நம்ம டீம்ல செல்வா பேரு மட்டும் வந்திருக்கு. அதுக்கு செல்வாகிட்ட எவ்ளோ காசு வாங்கினீங்க?

  ReplyDelete
 18. வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா........///

  அப்போ அருணை மக்கு சொல்றிங்களா///

  அருண் அப்டின்னு பேர் வெச்சா அறிவாளிங்கபா

  ReplyDelete
 19. //நீ ஆணியே புடுங்க வேண்டாம்.... //
  டெர்ரர் நோ பொறாமை ,வாயிற்று எரிச்சல் எல்லாம் இருக்க கூடாது ...........நீ என்ன ரமேஷ .........அவன் தான் அப்படி ...........நல்ல எழுத்தாளரை நாம் வரவேற்க வேண்டும் .........சரியா .......போ போய் ஆணி புடுங்கு .............

  ReplyDelete
 20. //அருண் அப்டின்னு பேர் வெச்சா அறிவாளிங்கபா//
  வாங்க அறிவாளி .....பின்னாடி ஒளிவட்டம் தெரியுது கொஞ்சம் .குறைச்சு வைங்க .கண்ணு எல்லாம் கூசுது ..........

  ReplyDelete
 21. அன்புள்ளம் கொண்ட அருண் , உனது என்னத்தை போலவே உனது செயலும் உயர்வாகவே உள்ளது . மிக அருமையாக, திறமையாக , விழிப்புணர்வோடு , நேர்மையாக , நியாயமாக .............. உஸ்,,,,,,,,,,,, அனைவரையும் அறிமுகப்படுத்தியுள்ளாய் . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  ReplyDelete
 22. //நம்ம டீம்ல செல்வா பேரு மட்டும் வந்திருக்கு. அதுக்கு செல்வாகிட்ட எவ்ளோ காசு வாங்கினீங்க?//

  நண்பன்டா ..........நீ தான் கரெக்ட் அ பாயிண்ட் அ புடிச்சிருக்க .........(வயித்து எரிச்சல் புடிச்ச பய )

  ReplyDelete
 23. மங்குனி..@ என்ன ஒரே பவ்யமா இருக்கு... பங்காளி..(அருணு பொட்டி கிட்டி கொடுத்துட்டானா????)

  ReplyDelete
 24. //dheva said...

  மங்குனி..@ என்ன ஒரே பவ்யமா இருக்கு... பங்காளி..(அருணு பொட்டி கிட்டி கொடுத்துட்டானா????)///

  செல்வாகிட்ட வாங்கி மங்குனிக்கு போயிருக்குமோ? # டவுட்டு

  ReplyDelete
 25. @இம்சை

  //...........நல்ல எழுத்தாளரை நாம் வரவேற்க வேண்டும் //

  குட் ரைட்டர்?? பன்னிகுட்டு?? யு மீன் அவர் பன்னிகுட்டி? மிஸ்டர்.பன்னிகுட்டி ஒன் ஸ்டெப் முன்னாடி வாங்க...அந்த முகத்த கொஞ்சம் காட்டுங்க.... அட ஆமாம்யா படிச்சபய போல... நான் தான் கவனிக்காம விட்டேன்... :) வங்க பன்னி சார் வாங்க.... வந்து எழுதுங்க... :)

  ReplyDelete
 26. dheva said...

  மங்குனி..@ என்ன ஒரே பவ்யமா இருக்கு... பங்காளி..(அருணு பொட்டி கிட்டி கொடுத்துட்டானா????)//

  இல்ல தல , நம்ம டிபார்ட்ட்மென்ட் வரட்டும் அப்புறம் அருணுக்கு மாலை மரியாதை பண்ணுவோம் ..... இவுங்கல்லாம் டீசன்ட்டான ஆளுக நாம் ஏதாவது சொல்ல அப்புறம் அவுங்க தப்ப எடுத்துக்கிட்ட சிக்கல் ...அதான் ..........

  ReplyDelete
 27. //மங்குனி..@ என்ன ஒரே பவ்யமா இருக்கு... பங்காளி..(அருணு பொட்டி கிட்டி கொடுத்துட்டானா????)//

  பொட்டினா என்ன ? கிட்டி னா என்ன? விளக்கம் தேவை தேவா அண்ணா............(ஒருவேளை புட்டி ன்னு போடறதுக்கு பதில் மாத்தி போட்டுடறோ ?)

  ReplyDelete
 28. @ரமேஷ்

  //செல்வாகிட்ட வாங்கி மங்குனிக்கு போயிருக்குமோ? # டவுட்டு//

  உன் மேனஜர் ஊருக்கு போய்ட்டாரா?? #டவுட்.. :)

  ReplyDelete
 29. @மங்கு

  //இவுங்கல்லாம் டீசன்ட்டான ஆளுக நாம் ஏதாவது சொல்ல அப்புறம் அவுங்க தப்ப எடுத்துக்கிட்ட சிக்கல் ...அதான் ....//

  அஹா..அஹா.. என்ன ஒரு லாவகமான சிந்தனை.... க.க.க.போ...

  (தூ... நீயும் உன் கண்டுபிடிப்பும்...)

  ReplyDelete
 30. //இவுங்கல்லாம் டீசன்ட்டான ஆளுக நாம் ஏதாவது சொல்ல அப்புறம் அவுங்க தப்ப எடுத்துக்கிட்ட //

  அப்போ நம்ம ரமேஷ் ,டெர்ரர் ,பன்னி,சௌந்தர் எல்லோரும் இண்டீசென்ட் ஆள்களா........யோவ் மங்குனி உனக்கு இந்த குசும்பு ஆகாது ...........மக்கா டெர்ரர் ,ரமேஷ் எல்லோரும் வாங்க இந்த மங்குனி நம்மள என்ன சொல்லிட்டாருன்னு பாருங்க .............

  ReplyDelete
 31. ஸ்மைல் வித்யா வலைப்பூ புதுசா இருக்கு பாத்துடுறேன்.

  ReplyDelete
 32. நல்ல அறிமுகங்கள்..!!

  ReplyDelete
 33. கலக்கல் அறிமுகங்கள்!

  ReplyDelete
 34. அட யாராவது ஜெய் பத்தி பேசுங்கப்பா...

  ReplyDelete
 35. என்னை சொல்லி இருக்கீங்க . கவனிக்கவே இல்லை

  ReplyDelete
 36. @பிரசாத்

  //கலக்கிடீங்க, என் அறிமுகதிற்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். தம்பியை அறிமுக படுத்துவது அண்ணனின் கடமை. கடமையை நிறைவேற்றிய என் கடமை M .G .R வாழ்க.//

  மச்சி இவன் சரி இல்லை. இவன் லிங்க் தூக்கிடு.. :)

  ReplyDelete
 37. அருமையான அறிமுகங்கள்...

  ReplyDelete
 38. என்னையும் ஒரு பதிவராக மதித்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி வலை நண்பர்களிடம் என்னை அழைத்துசென்ற உங்களுக்கு நன்றி தல....

  ReplyDelete
 39. Arun Prasath said...
  வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா........///

  அப்போ அருணை மக்கு சொல்றிங்களா///

  அருண் அப்டின்னு பேர் வெச்சா அறிவாளிங்கபா////

  எதுக்குபா இப்படி நீங்களே பதில் சொல்லி மாட்டிகிறீங்க.

  ReplyDelete
 40. Nice! Nice! நிறைய புதியவர்களாக இருக்கிறார்கள் எனக்கு! கண்டிப்பாக போய் பார்த்துவிட்டு வரவேண்டியது தான்.

  கலக்கல் ஆரம்பம்! தொடருங்கள்!

  ReplyDelete
 41. TERROR-PANDIYAN(VAS) said...
  @பிரசாத்

  //கலக்கிடீங்க, என் அறிமுகதிற்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். தம்பியை அறிமுக படுத்துவது அண்ணனின் கடமை. கடமையை நிறைவேற்றிய என் கடமை M .G .R வாழ்க.//

  மச்சி இவன் சரி இல்லை. இவன் லிங்க் தூக்கிடு.. :)///

  என்னா ஒரு வில்லத்தனம். கடைசில ஸ்மைலி வேற

  ReplyDelete
 42. சௌந்தர் சொன்னது.....
  இம்சைஅரசன் பாபு.. said...
  //ஏன் லேட்டு. பெஞ்சு மேல ஏறி நில்லு //

  வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா........///

  அப்போ அருணை மக்கு சொல்றிங்களா////

  அட யாருங்க அப்படி சொன்னது? வாத்தியார் மகன் மார்க்குன்னு சொல்லுங்க...அதாவது அதிக மார்க் எடுப்பாங்களாம். அதுதான் மருவி மக்குன்னு ஆகிப்போச்சு. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிக்கடன். ஏதோ என்னால முடிஞ்சது.

  ReplyDelete
 43. @Karthikumar

  //என்னா ஒரு வில்லத்தனம். கடைசில ஸ்மைலி வேற//

  அவன நன்றி சொல்ல சொல்லி இப்பொ யார் கேட்டா? M.G.R சொன்னா கோவம் வராத மச்சி??? அப்பொ நீ என்ன விஜயகாந்தா?? :)

  ReplyDelete
 44. //// ரஹீம் கஸாலி said...
  சௌந்தர் சொன்னது.....
  இம்சைஅரசன் பாபு.. said...
  //ஏன் லேட்டு. பெஞ்சு மேல ஏறி நில்லு //

  வாத்தியார் மகன்ன்னு நிருபிசுட்டேடா........///

  அப்போ அருணை மக்கு சொல்றிங்களா////

  அட யாருங்க அப்படி சொன்னது? வாத்தியார் மகன் மார்க்குன்னு சொல்லுங்க...அதாவது அதிக மார்க் எடுப்பாங்களாம். அதுதான் மருவி மக்குன்னு ஆகிப்போச்சு. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிக்கடன். ஏதோ என்னால முடிஞ்சது.////

  மேட்டர் சரியில்லியே..., இந்த லிங்கையும் தூக்குங்கப்பா!:))

  ReplyDelete
 45. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @Karthikumar

  //என்னா ஒரு வில்லத்தனம். கடைசில ஸ்மைலி வேற//

  அவன நன்றி சொல்ல சொல்லி இப்பொ யார் கேட்டா? M.G.R சொன்னா கோவம் வராத மச்சி??? அப்பொ நீ என்ன விஜயகாந்தா?? :)////

  என்னது விஜயகாந்த்துக்குக் கோவம் வராதா?

  ReplyDelete
 46. //மேட்டர் சரியில்லியே..., இந்த லிங்கையும் தூக்குங்கப்பா!:))//
  பன்னி நீங்க ஏன் லேட்ட்டு நீங்களும் பென்ச் மேல ஏறி நில்லுங்க ..........ஒரு கமெண்ட் முதல்ல போட்டுட்டு வீட்டுக்கு போனாலும் ......இந்த தண்டனை உண்டு .........

  ReplyDelete
 47. அவன நன்றி சொல்ல சொல்லி இப்பொ யார் கேட்டா? M.G.R சொன்னா கோவம் வராத மச்சி??? அப்பொ நீ என்ன விஜயகாந்தா?? :)

  நன்றி சொல்வது நம்ம பழக்கம்... நன்றி சொல்ல கூடாது என்று சொன்ன டெரர் அண்ணன் வன்மையான கண்டிப்புக்கு உள்ளாகிறார். பங்காளி karthikkumarரை விஜயகாந்த் என்று சொன்னதுக்கு, விருத்தகிரி படத்தை 20 முறை அவரை பார்க்க வெய்க வேண்டும்.

  ReplyDelete
 48. பட்டிகாட்டான் ஜெய் மறுபடியும் வர வேண்டும்..உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 49. எல்லாமே சூப்பர்

  ReplyDelete
 50. கதம்பம் 2 இன்னும் கலக்கலா இருக்குமோ

  ReplyDelete
 51. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க அருண்..

  ReplyDelete
 52. இதில் ஜெய் பட்டிகாட்டான் பட்டினத்தில் பதிவரை பத்தி சொல்லி இருக்காரு நம்ம அருண் ..........நான் பதிவுலகில் வந்த புதுசில் அவரோட எழுத்துகளை பார்த்து தான் நானும் இன்னும் எழுதனும்னு ஆசை நிறைய வந்துச்சு என்ன காரணத்தினாலோ அவர் பதிவு எழுத வில்லை .....ஒரு நல்ல எழுத்தாளரை ,நல்ல பதிவரை இந்த பதிவுலகம் எழந்து விட்டது என்று எண்ணுகிறேன் .......மீண்டும் எழுத வருவார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 53. //பங்காளி karthikkumarரை விஜயகாந்த் என்று சொன்னதுக்கு, விருத்தகிரி படத்தை 20 முறை அவரை பார்க்க வெய்க வேண்டும்.//
  எனது நண்பன் டெர்ரர் தவறுதலாக கூறிவிட்டார் ..ரஜினி காந்த ,விஜய் காந்த வரிசையில் ...........விருச்சக காந்த ன்னு சொல்லுறதுக்கு பதில் விஜய் காந்த என்று சொல்லிவிட்டார் (விருச்சக காந்த யாருன்னு தெரியல ன்ன காதல் படம் பார்க்கா )

  ReplyDelete
 54. ///பல ஆறிய முடியாத விஷயங்கள்... தொடருங்கள்.... கண்டிப்பாய் தெரிந்து கொள்ளவேண்டும் எல்லோரும்///

  வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி, அருண் பிரசாத்.

  உங்களை போல் தினம் பதிவிட ஆசை. ஆனால் முடியவில்லை. உங்கள் சுறுசுறுப்புக்கும், புதிய பதவிக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 55. ////// இம்சைஅரசன் பாபு.. said...
  //மேட்டர் சரியில்லியே..., இந்த லிங்கையும் தூக்குங்கப்பா!:))//
  பன்னி நீங்க ஏன் லேட்ட்டு நீங்களும் பென்ச் மேல ஏறி நில்லுங்க ..........ஒரு கமெண்ட் முதல்ல போட்டுட்டு வீட்டுக்கு போனாலும் ......இந்த தண்டனை உண்டு .........///////

  இல்ல நான் டேபிள் மேலதான் நிப்பேன்!

  ReplyDelete
 56. எனது நண்பன் டெர்ரர் தவறுதலாக கூறிவிட்டார் ..ரஜினி காந்த ,விஜய் காந்த வரிசையில் ...........விருச்சக காந்த ன்னு சொல்லுறதுக்கு பதில் விஜய் காந்த என்று சொல்லிவிட்டார் (விருச்சக காந்த யாருன்னு தெரியல ன்ன காதல் படம் பார்க்கா )///

  இம்சை வாய்ல வெச்சிருக்க அருவாள புடிங்கி வெடுங்கப்பா

  ReplyDelete
 57. இங்கையும் கும்மியா...!!!!
  வெளங்கீரும்

  ReplyDelete
 58. அறிமுகத்திற்கு நன்றி!:-)

  ReplyDelete
 59. //இம்சை வாய்ல வெச்சிருக்க அருவாள புடிங்கி வெடுங்கப்பா//

  மக்கா அறிவாளி ....சி .தூ .அருண் பிரசாத் .அந்த அருவா என் குரு டெர்ரர் தந்தது ..அது பல்லு அனைத்துமே கீழ விழுந்தாலும் அருவ கீழ விழாது மக்கா புடுங்கவும் முடியாது ....குருவின் ஆசிர்வாதம் அப்படி ....

  ReplyDelete
 60. இம்சை அரசன் எங்கள் தலைவர் பன்னிக்குட்டி யை அறிமுகம் படுத்தாமல் இருப்பதை நான் கண்டிக்கிறேன்

  ReplyDelete
 61. முதல் நாள் பெரிய ஆளை அறிமுகம் செய்யாமல் ஏதோ சின்ன பசங்களை எல்லாம் அறிமுகம் செய்து இருக்கீங்க....

  ReplyDelete
 62. அருமையான அறிமுகங்கள்..(டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவோர் சங்கம்)

  ReplyDelete
 63. நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 64. நமக்குத் தெரிந்த அறிமுகங்கள்தான் அண்ணா .,
  நல்லா இருக்கு ..!!

  ReplyDelete
 65. ஆனா என் கேள்விக்கு விடை சொன்னா பரவாயில்லை ..!!

  ReplyDelete
 66. அருண் நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 67. //அன்புள்ளம் கொண்ட அருண் , உனது என்னத்தை போலவே உனது செயலும் உயர்வாகவே உள்ளது . மிக அருமையாக, திறமையாக , விழிப்புணர்வோடு , நேர்மையாக , நியாயமாக .............. உஸ்,,,,,,,,,,,, அனைவரையும் அறிமுகப்படுத்தியுள்ளாய் . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்//

  ReplyDelete
 68. வலைச்சரத்தின் புதிய ஆசிரியர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  (தனியா வந்திருக்கீங்கனு பார்த்தா, இங்கியும் கும்மி, குச்சுப்புடி, கரகாட்டம் எல்லாம் நடக்குது.)
  இனி வலையுலகத்திற்கு கொண்டாட்டம் தான் போங்க..

  ReplyDelete
 69. கதம்பம்1 அருமை.
  உண்மையாகவே தகுதியுள்ளவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 70. நல்ல அறிமுகங்கள்
  வாழ்த்துக்கள்.

  (ஏம்பா அப்படிதானே சொல்லணும்)

  ReplyDelete
 71. @ சௌந்தர்.,

  // எங்கள் தலைவர் பன்னிக்குட்டி யை
  அறிமுகம் படுத்தாமல் இருப்பதை நான் கண்டிக்கிறேன் //

  நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி..?

  ReplyDelete
 72. @ மங்குனி.,

  // வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் //

  உங்களுக்கே இன்னும் ரிட்டையர்டு
  ஆக 12 வருஷம் இருக்குன்னு கேள்விபட்டேன்..

  உங்களுக்கே வாழ்த்த வயதில்லைன்னா..
  அப்ப.. அருண்..?

  ReplyDelete
 73. Arumai thodarungal..!
  Dheva manasukkul: indhamadhiri alungalukkunne innoru trailer series podanum pola iruke.

  ReplyDelete
 74. அருமையான அறிமுகங்கள்.. :))))

  ReplyDelete
 75. மிக நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 76. நல்ல அறிமுகங்கள்!!

  சுவாரசியமான பல தளங்கள் அறிந்துக்கொண்டேன்

  ReplyDelete
 77. நல்ல அறிமுகங்கள்
  (டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு சாரி)

  ReplyDelete
 78. மிகச் சுவையான அறிமுகங்கள், அ.பி.!

  //விமர்சனங்களை வழங்கினாலும் ஆங்காங்கே குறுநீல மன்னர்களும்//

  அவர் ஏன் குறு"நீ'ல மன்னராய் இருக்கிறார்?
  பச்சை, பச்சையாய் எழுதுவாரோ? (சும்மா
  தமாஸ்-தான்)

  ReplyDelete
 79. உள்ளேன் ஐயா..!! ம்..பட்டைய கிளம்புங்க ..!! :-)

  ReplyDelete
 80. நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 81. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு என் நன்றிகள் அருண்.

  ReplyDelete
 82. நல்லதொரு தொகுப்பு, அறிமுகம்...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது