07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 7, 2010

7.மானிடம் தேடும் மனிதநேயம்

இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. ஆனால் மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறது. நமது தேவைகளுக்காக வேண்டி எத்தனையோ மறியல்களை போராட்டங்களை செய்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்மிடம் மனிதநேயத்தை வளர்க்க பேதங்களை களைக்க இன்னும் போதிய போராட்டங்கள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தேடல் இன்றி வந்தப் பொருள்
வாழ்வில் நிலைப்பதுமில்லை
தேடிதேடி கிடைத்தப் பொருள்
எளிதில் தொலைந்ததுமில்லை
என்பது பாடல் வரிகள்

இன்று தேடப்படுவது மனிதநேயம்
அது கிடைப்பதற்கு அனைவரும் சேரவேண்டும்;.
அனைவரும் ஒன்று சேருவதற்கு மனம் வேண்டும்
அந்த மனதில் தெளிவுவேண்டும்
இவைகளை பெறுவதற்கு மனிதன் மனிதனாக வேண்டும்.

மனிதர்களிடத்தில் இருக்கும் மனிதமும் மனிதநேயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சுயநலம் மட்டுமே இருந்துவருவதாக எனக்கு பட்டது நீங்கள் சொல்லுங்கள் இந்த மனித நேயமில்லாத உலகில் வருங்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள்? என்ற கேள்வியுடன் சாலை விபத்தில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் சக்திவேல்.

ஒரு கவிஞன் சொல்கிறான்
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும் முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
மனிதநேயம்.

உலகின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது வீட்டுக்குள்ளே நிறவெறியும் இனவெறியும் மரித்துப்போன மனிதாபிமானமுமாக வீச்சமடிக்கிறது என்று அமெரிக்காவின் மனிதநேயத்தைப் பற்றி அலசல் செய்திருக்கிறார்.

இளங்கோவனுக்கும் கார்த்திக்காயனிக்கும் பிறந்ததால் இந்துவானேன்.
டேவிட்டிற்கும் எலிசபத்திற்கும் பிறந்ததால் கிறிஸ்துவனானேன்
அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் முஸ்லிம்மானேன்
யாருக்கும் யாருக்கும் பிறந்தால் மனிதனாவேன்.!
என்று செப்புப்பட்டயம் செப்புகின்றார்.

சென்ற ஆகஸ்ட்டில் சிலி நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மனித உயிர்களை அந்நாடு மனிதநேயத்துடன் கொடுக்கப்பட்ட கால அளவைவிட துரிதமாக காப்பாற்றிய நிகழ்வை இந்த உலகமே கண் கொண்டுப்பார்த்தது. இந்த மனிதநேய உணர்வு எல்லா நாடுகளிலும் பேதமில்லாமல் பேணப்படவேண்டும். சுரங்கமே வீடாக மாற்றிக் கொண்டு வாழ்ந்த நிகழ்வை விவரிக்கிறார் ஹுஸைனம்மா.

மனிதநேயமென்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக்குறித்த ஒரு தத்துவப்பார்வை அதன் அடிப்படைக்கூறு மனிதர்களுக்குள் செய்யப்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிக்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்வதுமாகும் என்று ஒரு ஆய்வு கட்டுரையை வரைந்துள்ளார் அ.ராமசாமி.

முன்னேற்றத்திற்கு பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியது மனிதநேயமாகும். ஆப்படி என்றால் மனிதநேயம் என்றால் என்ன? என்றக் கேள்வி எழுகிறதல்லவா?
சகமனிதர்களை நேசிக்கின்ற மாண்பு சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற அணுகுமுறை தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும் தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கின்ற தன்மை சகமனிதனைப் பாசத்தோடும் பரிவோடும் கருணையோடும் நோக்கும் அன்புநிலையே மனிதநேயம் என்கிறார் கடலோரம்.

மதம் மொழி நிறம் இவைகளுக்கு அப்பால் ஆழ்மனதிலிருந்து பொங்கிவரும் நேயத்தை பகிருபவர்கள்தான் மனிதர்கள்.ஆதலால் என்றும் எப்போதும் நம்மிடம் வளர்ப்போம் மனிதநேயம்.

இதோ விரைவில் நன்றியுரையுடன் …

8 comments:

 1. அன்பின் இஸ்மத் - நல்லதொரு மனித நேயம் - அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. உங்களின் உழைப்பு வியக்க வைப்பதாய் இருக்கின்றது.

  ReplyDelete
 3. மிகப்பயனுள்ள தொகுப்பு. மனிதம் வளர்ப்போம்.

  ReplyDelete
 4. அறிமுகங்கள் அருமை.
  மிகப்பயனுள்ள தொகுப்பு.

  ReplyDelete
 5. //ஆழ்மனதிலிருந்து பொங்கிவரும் நேயத்தை பகிருபவர்கள்தான் மனிதர்கள்.//

  அழகான கருத்து.

  என் பதிவும் இங்கே கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  ReplyDelete
 6. இன்றய மனித சமுதாயத்திற்கு அவசியம் தேவை முதலில் மனித நேயம் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. சகோதரரே!தலைப்பை மிக அழகாக தேர்ந்தெடுத்து அழகிய அறிமுகங்களை வலைச்சரம் மூலம் கொணர்ந்த தங்களுக்கு ஒரு பூங்கொத்து.

  ReplyDelete
 8. மனிதநேயம் நல்ல தொகுப்பு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது