07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 29, 2010

ஆட்டம் ஆரம்பம்!

ஊருக்கு நல்லது சொல்வேன்...
எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்...
சீருக்கெல்லாம் முதலாகும்....
ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்...

ஓகே, கடவுள் வணக்கம் முடிஞ்சது. இப்போ ஸ்டார்ட் மியூசிக்....

இதுனால சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னன்னா, சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி நம்ம தேவா அண்ணனால வலைசரத்தில் அறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.

இது ஜாம்பவன்கள் உட்கார்ந்த சிம்மாசனம், என்னால முடியுமான்னுலாம் சீன் போடப்போறது இல்லை.... மேல உள்ள வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க..... எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் அதுக்கு முன்னாடி என்னைபத்தி தெரிஞ்சிக்கோங்க... (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)

நான் பதிவுலத்துல பிரபலம் ஆனதே ஒரு பிராப்ளமாலதான். அதுவும்  என் வளர்ச்சிய தடுக்க ஒரு பிரபலம் ஒரு சின்ன பூச்சிய (அதாங்க  Bug ) அனுப்ப, அதை தூக்கி கூவத்துல போட்டு பிரபலம் ஆனேன் (என்ன என் பிளாக்கை தூக்கி கூவத்துல போட்டு இருந்தா நீங்க தப்பிச்சி இருப்பீங்க.....)

கவிதை எழுதறேன் பேர்விழினு சிலது கிறுக்கினேன். என் மனைவி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி கொடுக்காம கவிதை எழுதி சமாளிச்ச அனுபவமும் உண்டு. ஆங்.. அனுபவம்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது. சொந்த அனுபவத்தை வெச்சே பல பதிவுகளை தேற்றி இருக்கேன். அதுவும் பயணம் போறதுல பல அனுபவம் இருக்கும். ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.

திடீருனு ஞானோதயம் வந்து சில நல்ல பதிவுகளை எழுதுவேன். அதிலும் ஒரு மவுஸ் கிளிக்ல அன்னதானம் செய்யறது, அதுவும் இலவசமா செய்யறது, சாதாரணவிஷயமா? முடிஞ்சா நீங்களும் உங்க பிளாக்ல இந்த விட்ஜெட்டை வைங்க. ஓட்டு போடும் போது இதையும் ஒரு கிளிக் செய்து ஒரு பிடி உணவு கொடுத்துட்டு போவோமே....

சினிமா பற்றி விமர்சிக்கற அளவு பெரிய ஆளா இல்லைனாலும் சினிமாவை வைத்து ஒரு புதிர் போட்டி நடத்துறது நல்லாவே போகுது. என்ன அந்த போட்டிக்கு படத்தை டிசைன் செய்யுறதுக்குள்ள விழி பிதுங்குது.

                கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
                எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

அட இது அருண்வள்ளுவர் எழுதினதுங்க... காமெடியோ மொக்கையோ எழுதுனாதான் கஷ்டம் தெரியும். எப்படி பதிவு எழுதனும்னு உங்களுக்கு நான் சொல்லி குடுக்கவேண்டியது இல்லை... ஆனா கொஞ்சம் பதிவுகளையும் பதிவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வலைசரம் மூலமா அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....

அடுத்த ஆறு நாளும் சரவெடி கொண்டாட்டம்தான்.... நமது எப்பவும் மசாலா மிக்ஸ்.... பொருத்து இருந்து பாருங்க....

Game Starts Now....

124 comments:

 1. @அருண்

  //ஆட்டம் ஆரம்பம்//

  ஆனா ஆட போரது நாங்க தான்.. :))

  ReplyDelete
 2. வாங்க! ஆட்டம் ஆரம்பம்!

  ReplyDelete
 3. முதல் நாள் ஆட்டம் அருமை!

  ReplyDelete
 4. இந்த வாரம் full அ வலை சரம் தான் மக்கா பதிவு எல்லாம் எழுத போறது இல்லை ..........ராணுவம் ரெடியாக உள்ளது ............அருண் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருண்! கலக்குங்க! புந்து விளையாடுங்க! வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. கலக்கல் ஆட்டம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ஸ்டார்டிங் தூக்கலாதான் இருக்கு.. வாழ்த்துக்கள்..
  இன்ட்லில இணைக்கவில்லையா ? (பழக்க தோஷம்..)

  ReplyDelete
 8. //Game Starts Now....//

  கிட்டிப்புல்லா..? கபடியா..?:))
  நல்லா அடிச்சி ஆடுங்க..!!

  ReplyDelete
 9. @அருண்

  //ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//

  பிரிச்சி பேசாத மச்சி!! ஆட போறோம்...

  ReplyDelete
 10. ஆரம்பமே அமர்க்களம் மச்சி.. தூள் கெளப்பு!

  ReplyDelete
 11. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  //ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//

  பிரிச்சி பேசாத மச்சி!! ஆட போறோம்.../////

  அல்லக்கைகள சேத்துக்காத மச்சி...!

  ReplyDelete
 12. @பன்னிகுட்டி

  //அல்லக்கைகள சேத்துக்காத மச்சி...!//

  அதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)

  ReplyDelete
 13. சரி ஸ்கூல் ஆரம்பிச்சாச்சுல்ல, என்ன அங்க பேசிட்டு.... பாடத்தை போய் படிங்க... மதியமா விளையாடலாம்...

  ReplyDelete
 14. அறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.////

  எனக்கு டெஸ்ட் மெச் பிடிக்காதே....

  ReplyDelete
 15. ///// TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //அல்லக்கைகள சேத்துக்காத மச்சி...!//

  அதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)/////


  சரிங்க பப்ளிக்!
  (என்னது பொதுமக்களா.... இவரு பெரிய கட்சி மாநாடு நடத்தறாரு... அப்பிடியெ பொதுமக்களுக்கு கருத்துச் சொல்லப் போறாரு, படுவா அந்த முக்குல உக்காந்து திருவொடு ஏந்தப் போகுது, அதுக்கு லவுசப்பபாரு?)

  ReplyDelete
 16. இப்பதான் அருணை காணலைன்னு ப்ளூ கிராஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்தேன். வந்தாச்சா.

  ReplyDelete
 17. என்னது நானு யாரா? said...
  அருண்! கலக்குங்க! புந்து விளையாடுங்க! வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள்////////

  ஆமா ஆருண் நல்லா கலக்குங்கள் அப்படியே ரோஸ்மில்க் கலக்கி கொடுங்க

  ReplyDelete
 18. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இப்பதான் அருணை காணலைன்னு ப்ளூ கிராஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்தேன். வந்தாச்சா////

  அவர் என்ன சுறா வா இல்லை குருவியா ....

  ReplyDelete
 19. @ரமேஷ் & பன்னிகுட்டி

  மச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு?? இது எந்த பட விமர்சனம்???

  ReplyDelete
 20. //ஆமா ஆருண் நல்லா கலக்குங்கள் அப்படியே ரோஸ்மில்க் கலக்கி கொடுங்க//

  ரோஸ்மில்க் எதுக்கு சௌந்தர்! ஆடப்போறது அருண்! நீங்க வெறும் வேடிக்கை பாக்குற மன்னர்தானே!

  ReplyDelete
 21. @ ரமெஷ்
  பழக்க தோஷத்துல உங்க காப்பகத்துக்கு போய்டீங்க போல... அதான் கண்டுபிடிக்க முடியல

  ReplyDelete
 22. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @ரமேஷ் & பன்னிகுட்டி

  மச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு?? இது எந்த பட விமர்சனம்???////

  உன்னை யாரு இதெல்லாம் படிக்க சொன்னது, நேரா கமென்ட்ஸ் ஏரியாவுக்கு வாடான்னா சொல் பேச்சுக் கேக்க மாட்டேங்கிரானே?

  ReplyDelete
 23. November 29, 2010 10:37:00 AM GMT+05:30
  TERROR-PANDIYAN(VAS) said...
  @ரமேஷ் & பன்னிகுட்டி

  மச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு?? இது எந்த பட விமர்சனம்??////

  இல்ல மக்கா இது சமையல் குறிப்பு

  ReplyDelete
 24. @பன்னிகுட்டி

  //உன்னை யாரு இதெல்லாம் படிக்க சொன்னது, நேரா கமென்ட்ஸ் ஏரியாவுக்கு வாடான்னா சொல் பேச்சுக் கேக்க மாட்டேங்கிரானே?//

  மச்சி!! ஒரு வாரம் இங்க அருண் என்ன பண்ண போறாரு?? ஆசிரியர் சொல்றாங்க பாடம் நடத்துவாரா??

  ReplyDelete
 25. @ALL
  இன்றைக்கு ஆட்டத்தில்
  கெமிஸ்ரி எப்படி?
  synchronization எப்படி?
  எவ்வளவு மார்க் போடலாம்?

  ReplyDelete
 26. //மச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு?? இது எந்த பட விமர்சனம்??? //

  அருண் இவன பெஞ்சுக்கு மேல நிப்படி வச்சு படம் எடுங்க ...............பய புள்ள கொஞ்சம் மக்கு மக்கா

  ReplyDelete
 27. @எஸ்.கே

  //synchronization எப்படி?//

  தயவு செய்து கெட்ட வார்த்தை பேச வேண்டாம் ப்ளீஸ்...

  ReplyDelete
 28. @இம்சை

  //அருண் இவன பெஞ்சுக்கு மேல நிப்படி வச்சு படம் எடுங்க //

  புரியலை சொன்னா பெஞ்சு மேல நிக்க வைப்பிங்க. புரிஞ்சா உங்க மேல பெஞ்ச வைப்பாங்களா??

  ReplyDelete
 29. ஆசிரியர் சொல்றாங்க பாடம் நடத்துவாரா??////

  அதானே lkg இல்லை ukg யா எந்த வகுப்புக்கு ஆசிரியர் அருனுக்கே ஒன்னும் தெரியாதே அவருக்கே ஒரு ஆசிரியர் தேவை இதில் இவர் ஆசிரியரா

  ReplyDelete
 30. /அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....
  //
  காட்டுங்க அருண் காட்டுங்க!

  டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா?

  ReplyDelete
 31. @அருண்

  //அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....//

  அப்பொ பவுளிங் (கமெண்ட்) போடறவங்கள ஆட்டத்துக்கு சேர்க்க மாட்டிங்களா??

  ReplyDelete
 32. ரைட்டு பத்து ஆடு ....... ஏதாவது புலி , சிங்கம் அடிச்சிடப் போகுது

  ReplyDelete
 33. //டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா?//
  பதிலுக்கு யாராவது உடனே எதிர் பதிவால அவரை அடிப்பாங்க

  ReplyDelete
 34. TERROR-PANDIYAN(VAS) said...

  @அருண்

  //ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//

  பிரிச்சி பேசாத மச்சி!! ஆட போறோம்...///

  இரு டெர்ரர் ஆட்ட தனியா விட்டுத்தான் அடிக்கணும்

  ReplyDelete
 35. //காட்டுங்க அருண் காட்டுங்க!

  டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா?//

  செஞ்சுரின்ன பட்டாசு தானே எஸ் .கே (அத பொய் எப்படி அடிக்க முடியும்

  ReplyDelete
 36. TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  //அல்லக்கைகள சேத்துக்காத மச்சி...!//

  அதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)///

  அன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர்

  ReplyDelete
 37. நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்////

  சுயநலம் சுயநலம் அது எப்படிங்க நீங்களே பதிவு போட்டு நீங்களே கமெண்ட் போட்டு கொள்விர்களா என்ன நியாயம்

  ReplyDelete
 38. //இரு டெர்ரர் ஆட்ட தனியா விட்டுத்தான் அடிக்கணும்//

  அது யாருப்பா என் குருவ தனியாய் அடிக்கணும் சொல்லுறது .............நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் .............

  ReplyDelete
 39. @மங்கு

  //அன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர் //

  நீ மனுஷன் மங்கு.. என்னா மரியாதை... நீர் தான் வருங்கால முதல் அமைச்சர்...

  ReplyDelete
 40. @இம்சை

  //அது யாருப்பா என் குருவ தனியாய் அடிக்கணும் சொல்லுறது .............நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் ..........//

  மக்கா அவரு சொன்னது அருண... ஏன் இப்படி???

  ReplyDelete
 41. @அருண்

  //இதுனால சகலமானவர்களுக்கு//

  எதுக்கு இந்த விளம்பரம்? இருக்கரது நீயும் நானும்தான் மச்சி!! அதனால நேர என்கிட்டே சொல்லு...

  ReplyDelete
 42. //மக்கா அவரு சொன்னது அருண... ஏன் இப்படி???//

  மக்கா,அருண் னை அடிச்சா என்ன உன்னை அடிச்சா ஏன்னா எல்லாம் ஒன்னு தானே ......கூடி கழிச்சி பாரு கணக்கு sariya varum ............

  ReplyDelete
 43. ஏங்க மழையினால் ஆட்டம் தடைபடாதே!

  ReplyDelete
 44. @எஸ்.கே

  //ஏங்க மழையினால் ஆட்டம் தடைபடாதே!//

  புயலே அடிச்சாலும் நிக்காது... :)

  ReplyDelete
 45. //புயலே அடிச்சாலும் நிக்காது...//ஏற்கனவே பின்னூட்ட சூறாவளி சுத்தி சுத்தி அடிச்சுகிட்டு இருக்கு!:-)

  ReplyDelete
 46. பட்டய கெளபுங்க தல...

  ReplyDelete
 47. 51 ?????????????????????????????????????????

  ReplyDelete
 48. வலைச்சரத்துக்கு எழுதறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியும். முயற்சிக்கு வாழ்த்துகள், அருண்!

  ReplyDelete
 49. @ கும்மி டீம்
  யப்பா, ரொம்ப அடிச்சு ஆடாதீங்கப்பா, வலைச்சர வாசர்கள் பயந்துடப் போறாங்க!

  ReplyDelete
 50. யோவ் தில்லு முல்லு நீ உயிரோட தான் இருக்கீயா ?

  ReplyDelete
 51. @தில்லு முல்லு

  //51 ?????????????????????????????????????????//

  வந்ததும் பல்பு வாங்கியா தில்லு முல்லு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

  ReplyDelete
 52. ////// யோவ் தில்லு முல்லு நீ உயிரோட தான் இருக்கீயா ? ////

  யெஸ் மை லார்ட் ........,கூடிய விரைவில் இந்த யூசெர் நேம் மறந்திடுவேன்

  ReplyDelete
 53. ////// வந்ததும் பல்பு வாங்கியா தில்லு முல்லு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்..///////

  நன்றி நன்றி ...,இந்த என்னக்கு இனிய வாரம் ....,

  ReplyDelete
 54. //ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.//

  ஏனப்பா அருண் அது எப்படி செத்த பிறகு பிழைக்க முடியும் ................(முதல்ல சாவு அப்புறம் உன்னை பிழைக்க வைகிறேன்னு யாராவது சொன்ன ...எனக்கு கெட்ட கோவம் வரும் ........)

  ReplyDelete
 55. ///// @மங்கு

  //அன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர் //

  நீ மனுஷன் மங்கு.. என்னா மரியாதை... நீர் தான் வருங்கால முதல் அமைச்சர்..//////////
  யோவ் டெர்ரர் ,

  இது உகாண்டா மொழி படத்துல வர்ற வசனம் ..,நம்ம ஊரு பராசக்தி வசனம் மாதிரி ...,அதுக்கு நீ வேற பாரட்டிகிட்டு ..,இழுத்து போட்டு வெட்டுவிய !!!!! அத உட்டுட்டு

  ReplyDelete
 56. @அருண்

  ////டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா?//
  பதிலுக்கு யாராவது உடனே எதிர் பதிவால அவரை அடிப்பாங்க ////

  ஆமா இது யாரு ...அந்த பதிவர் பெயர் என்ன ...சீக்கிரம் சொல்லுங்க மக்கா

  ReplyDelete
 57. @ இம்சை
  //ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.//

  ஏனப்பா அருண் அது எப்படி செத்த பிறகு பிழைக்க முடியும் ................(முதல்ல சாவு அப்புறம் உன்னை பிழைக்க வைகிறேன்னு யாராவது சொன்ன ...எனக்கு கெட்ட கோவம் வரும் ........///////

  இம்சை ,

  நீ இம்ம்சைன்றதை மணிக்கொரு தடவை நிருபிகீரிர் ...,போ போ போய் என் தலைவனின் ''' சிவாஜி ''' படத்தை பாரு ..அதுல தெரியும் சேது பிழைகறது எப்படின்னு ..,கேக்காறாரு detail ....,

  ReplyDelete
 58. @தில்லுமுல்லு

  //ஆமா இது யாரு ...அந்த பதிவர் பெயர் என்ன ...சீக்கிரம் சொல்லுங்க மக்கா //

  டாய்!! நோ வண்முறை!!! பிச்சிடுவேன்... :)

  ReplyDelete
 59. @ இம்சை
  ///// .எனக்கு கெட்ட கோவம் வரும் ......../////

  ஆமா இம்சை .....,இந்த நல்ல கோவம் எப்படி வரும் ? ,கெட்ட கோவம் எப்படி வரும் ?

  ReplyDelete
 60. @அருண்

  // என் மனைவி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி கொடுக்காம கவிதை எழுதி சமாளிச்ச அனுபவமும் உண்டு.//

  அப்பொ வேற யாருக்கு வாங்கி கொடுத்திங்க?? #டவுட்..

  ReplyDelete
 61. //ஆமா இம்சை .....,இந்த நல்ல கோவம் எப்படி வரும் ? ,கெட்ட கோவம் எப்படி வரும் ?//

  யோவ் naan கெட்ட கோவம் தான் varumnu sollirukken ................terrorkku than நல்ல கோவம் வரும் .......அல்லது நமது ஆசிரியர் அருண் வந்து விளக்கம் கொடுப்பார் .........கொஞ்சம் பொரும் .......

  ReplyDelete
 62. @அருண்

  //என்ன அந்த போட்டிக்கு படத்தை டிசைன் செய்யுறதுக்குள்ள விழி பிதுங்குது.
  //

  நீங்க எப்பொழுதாவது ஆபிஸ்ல் ஆபிஸ் வேலை செய்தது உண்டா?? # டவுட் - 2

  ReplyDelete
 63. //திடீருனு ஞானோதயம் வந்து சில நல்ல பதிவுகளை எழுதுவேன்//

  அது (ஞானோதயம்) எந்த கடைல கிடைக்கும் ........கிலோ என்ன விலைன்னு அருண் மக்கா கொஞ்சம் சொல்லேன் நம்ம terrar ஐ எழுத வைக்கணும் ...............

  ReplyDelete
 64. //நீங்க எப்பொழுதாவது ஆபிஸ்ல் ஆபிஸ் வேலை செய்தது உண்டா?? # டவுட் - ௨//

  பூவுடன் சேர்ந்த நறும் மணப்பது போல (தத்துவம் no ௯௧௫)

  ReplyDelete
 65. @அருண்

  //கொஞ்சம் பதிவுகளையும் பதிவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வலைசரம் மூலமா//

  இப்பொ அவங்க இருட்டுல இருக்காங்களா?? கரண்ட் இல்லையா? வலைச்சரம் என்ன மின்துறையா?? # டவுட் - 3

  ReplyDelete
 66. @ Terror pandiyan

  ஆபிஸ்ல ஆணி இல்லையோ? # டவுட்டு எக்கசெக்க நம்பர்

  ReplyDelete
 67. நீ ஆட்டத்த அம்சமா ஆரம்பிச்சுட்ட.. அமர்க்களப் படுத்து :)

  ReplyDelete
 68. @அருண்

  //ஆபிஸ்ல ஆணி இல்லையோ? # டவுட்டு எக்கசெக்க நம்பர்//

  விழா குழுவின் சார்பா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று... இங்க கலவரம் வராமா பாத்துகிறேன் மச்சி...

  (இன்னும் 30 மினிட்ஸ்.. டேமேஜர் வந்துடுவாரு.. அப்புறம் எஸ்கேப்ப்ப்ப்)

  ReplyDelete
 69. கலக்குங்க அருண்.....வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 70. " மாபெரும் சபைகளில் நீ நடந்தால் மாலைகள் உன் தோளில் விழ வேண்டும்...."

  மீன் குஞ்சுக்கு நீச்சல் அவசியமும் இல்லை அது நீந்துவதை பார்த்து கைதட்டவும் வேண்டியது இல்லை... ஆனாலும்...அது வளர்வது கண்டு ஒரு பூரிப்பும்..அதன் செழுமையில் ஒரு சந்தோசமும் இருக்குமே....அது எனக்கு இருக்கு தம்பி....

  தாயுள்ளத்தோடு...வரவேற்று காத்திருக்கிறேன்...அதிரடியான அடுத்தடுத்த நாட்களுக்காக...

  நீ அடிச்சி தூள் கிளப்பு தம்பி....!

  ReplyDelete
 71. // கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
  எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்
  //

  இது எனக்காக எழுதிய குறள் அல்லவா ..?

  ReplyDelete
 72. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.


  // மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க...//

  நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள், பாரதியாரின் முரசு பாடலில் வருபவை.

  வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
  வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
  நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
  நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

  ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
  குண்மை தெரிந்தது சொல்வேன்;
  சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
  தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

  ReplyDelete
 73. அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 74. யாரையும் காணோமே ..?!

  ReplyDelete
 75. வாழ்த்துக்கள் அருண்!!

  ReplyDelete
 76. @ அருண்.,

  // மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க... //

  // கும்மி Said.,
  நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள்,
  பாரதியாரின் முரசு பாடலில் வருபவை. //

  ஹி., ஹி., ஹி..!!

  வாத்தியாரே சரியா படிக்கலை..
  இதுல இவர் பாடம் நடத்தி
  பசங்க உருப்பட்டாப்ல தான்..!!

  ReplyDelete
 77. @ அருண்.,

  // சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி
  நம்ம தேவா அண்ணனால வலைசரத்தில்
  அறிமுகமான நான் //

  5 மாசத்துக்கு முன்னாடி தேவாவுக்கு
  அதிகமான அளவுல கொலை மிரட்டல்
  வந்ததாமே..? இதனால தானா.? # டவுட்டு

  ReplyDelete
 78. நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  (ஏம்பா அதானே சொல்லணும்)

  ReplyDelete
 79. வெங்கட்...@ நீங்கதானே கொலை மிரட்டல் விடுத்த ஆளே....!!! டவுட்டு கிளியர் ஆச்சா!

  ReplyDelete
 80. @ அருண்.,

  // நான் பதிவுலத்துல பிரபலம்
  ஆனதே ஒரு பிராப்ளமாலதான். //

  நீங்க பிரபலம் ஆனதே
  பதிவுலகத்துக்கு ஒரு பிராப்ளம்தான்..!!

  ஹி., ஹி., ஹி.!!

  ReplyDelete
 81. @கும்மி

  //// மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க...

  நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள், பாரதியாரின் முரசு பாடலில் வருபவை. //

  அப்பொ அவரு வேற இவரு வேறையா? # டவுட்

  ReplyDelete
 82. ஆடம் சூடுபிடிக்கட்டும்

  ReplyDelete
 83. @வெங்கட்

  //நீங்க பிரபலம் ஆனதே
  பதிவுலகத்துக்கு ஒரு பிராப்ளம்தான்..!!
  //

  அப்பொ அவரு பண்ண பிராப்ளம் எல்லாம் பிரபலம் பண்ண தான் இப்பொ வந்து இருக்காரா?? #டவுட்...

  ReplyDelete
 84. @karthikkumar

  என்னா மச்சி இவ்வளோ லேட்டு... சீக்கிரம் உன் கருத்த சொல்லு...

  ReplyDelete
 85. / அன்பரசன் said...
  நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  (ஏம்பா அதானே சொல்லணும்)//  என்ன நக்கலா ..?

  ReplyDelete
 86. @ தேவா.,

  // வெங்கட்...@ நீங்கதானே கொலை
  மிரட்டல் விடுத்த ஆளே....!!!
  டவுட்டு கிளியர் ஆச்சா! //

  ஆஹா.. நம்ம பேரை கெடுக்க
  சதி பண்றாங்களா.?!!

  அதான் நம்ம பேர்ல தேவாவுக்கு
  கொலை மிரட்டல் விட்டுக்காங்க..

  நீங்க ஒண்ணும் மனசுல வெச்சிக்காதீங்க
  தேவா.. எனக்கு தெரியும் அது யார்னு..

  நான் அவனை கவனிச்சுக்கிறேன்..

  " ஏய்...!! என்ன நம்மகிட்டயே
  உன் விளையாட்டை காட்றியா..?

  நம்ம மேல பயம் விட்டு போச்சா உனக்கு..?
  இல்ல ஆப்கானிஸ்தான்ல ஒளிஞ்சிட்டு
  இருக்கிற திமிரா..?
  பதில் சொல்லு ஓசாமா பின்லேடன்.."

  ReplyDelete
 87. //நம்ம மேல பயம் விட்டு போச்சா உனக்கு..?
  இல்ல ஆப்கானிஸ்தான்ல ஒளிஞ்சிட்டு
  இருக்கிற திமிரா..?
  பதில் சொல்லு ஓசாமா பின்லேடன்.."

  //

  விடுங்க தல ., அவன் ஏற்கெனவே நம்ம அருண் அண்ணனோட சினிமா புதிர் பதிவ படிச்சிட்டு இன்னும் விடை தெரியலை அப்படின்னு அழுதுட்டிருக்கான் ..

  ReplyDelete
 88. @ டெரர்.,

  // என்னா மச்சி இவ்வளோ லேட்டு...
  சீக்கிரம் உன் கருத்த சொல்லு...//

  அட இருங்க டெரர்..
  அவரே பாரதியார் கவிதை புக்கை
  தேடிட்டு இருக்காரு..!!

  @ அருண்.,

  இதுக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி
  பாரதியார் கூட எல்லாம் விளையாட
  கூடாதுங்கறது..!!

  ReplyDelete
 89. //இதுக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி
  பாரதியார் கூட எல்லாம் விளையாட
  கூடாதுங்கறது..!!

  //

  அப்படின்னா அவருக்கு பாரதியார் பத்தி ஒண்ணும் தெரியாது அப்படின்னு சொல்ல வரீங்களா ..?

  ReplyDelete
 90. @செல்வா

  //அப்படின்னா அவருக்கு பாரதியார் பத்தி ஒண்ணும் தெரியாது அப்படின்னு சொல்ல வரீங்களா ..? //

  இல்லை பாரதியாருக்கு இவர தெரியது சொல்றாரு...

  ReplyDelete
 91. //இல்லை பாரதியாருக்கு இவர தெரியது சொல்றாரு...//

  அப்படின்னா இவருக்கு பாரதியார் வயசு ஆகிடுச்சா .?

  ReplyDelete
 92. வலைச்சரத்தில் வடை வாங்கி செல்வா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 93. பலத்த கரகோஷத்தோடு வரவேற்பு..
  அசத்துங்க அருண்.

  ReplyDelete
 94. // எஸ்.கே said...
  வலைச்சரத்தில் வடை வாங்கி செல்வா! வாழ்த்துக்கள்!

  //

  நன்றிங்க ., எங்க இருந்தா என்ன ..? நமக்குத்தேவை வடை தானே ..!!

  ReplyDelete
 95. //நன்றிங்க ., எங்க இருந்தா என்ன ..? நமக்குத்தேவை வடை தானே //

  எல்லா இடங்களிலும் வடை வாங்கிய செல்வாவை இன்று முதல் வடை .செல்வா என்று அன்போடு அழைக்க படுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .

  ReplyDelete
 96. சிக்ஸ் அடிச்சா மட்டுந்தான் கை தட்டுவ்வ்வ்வ்வ்வேன்.

  ReplyDelete
 97. ///ப.செல்வக்குமார் said...

  // அன்பரசன் said...
  நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  (ஏம்பா அதானே சொல்லணும்)//


  என்ன நக்கலா ..?///

  இல்ல வழக்கமா அப்படித்தானே சொல்லுவோம்.
  அதான்.

  ReplyDelete
 98. @ சத்ரியன்.,

  // சிக்ஸ் அடிச்சா மட்டுந்தான்
  கை தட்டுவ்வ்வ்வ்வ்வேன். //

  அப்ப அருணை ஒவ்வொரு அடியா
  அடிச்சா கை தட்ட மாட்டீகளா.?
  தொடர்ச்சியா ஆறு அடி அடிக்கணுமா..?!!

  ReplyDelete
 99. adichu aadunga valthukkal !!!

  ReplyDelete
 100. வாழ்த்துக்கள் கலக்கலாக ஒரு வாரம் எழுதுங்கள்.முதல் நாள் ஆட்டமே அருமையா இருக்கு ப்ரோ.

  ReplyDelete
 101. @ காயத்ரி.,

  // வாழ்த்துக்கள் கலக்கலாக ஒரு வாரம்
  எழுதுங்கள்.முதல் நாள் ஆட்டமே
  அருமையா இருக்கு ப்ரோ. //

  உஷார்..!!

  காயத்ரி பேர்ல வேற யாரோ
  கமெண்ட் போடறாங்கப்பா..பின்ன
  கமெண்ட்ல ஒரு Spelling Mistake கூட இல்ல..

  ReplyDelete
 102. @வெங்கட்

  //காயத்ரி பேர்ல வேற யாரோ
  கமெண்ட் போடறாங்கப்பா..பின்ன
  கமெண்ட்ல ஒரு Spelling Mistake கூட இல்ல..//

  தல அது காயத்ரிதான். பாருங்க ஒரு லைன் புல்லா தப்பு.. ”முதல் நாள் ஆட்டமே அருமையா இருக்கு”

  ReplyDelete
 103. முதல் நாள் ஆட்டமே பயங்கர அருமையா இருக்கு!!!

  கலக்குங்க!!!!

  ReplyDelete
 104. பிள்ளையார் சுழி போட்டு களத்துல இறங்கியாச்சா..போட்டு தாக்கு..

  ReplyDelete
 105. நிறைய மசாலா நாளைக்கா...இரு ஒரு கோழி எடுத்துட்டு வரேன்

  ReplyDelete
 106. சூப்பர் சூப்பர்..

  ReplyDelete
 107. முதல் நாள் ஆட்டம் அருமை!

  ReplyDelete
 108. வாழ்த்துக்கள் நன்பரே

  ReplyDelete
 109. ithu valaicharam thanaa........ :)

  vazthukkal arun........

  ReplyDelete
 110. நல் வாழ்த்துக்கள். நண்பரே.

  ReplyDelete
 111. ஏற்ற ஆசிரியர் பணியினை செம்மையாக
  செய்திட, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
  அ.பி.!

  ReplyDelete
 112. வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

  ReplyDelete
 113. வாழ்த்துகள்

  சுய புராணம் அசத்தல்!

  ReplyDelete
 114. வாழ்த்துக்கள். அடிச்சு ஆடுங்க...

  ReplyDelete
 115. அருண்!ஆட்டம் அருமை!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது