07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 17, 2011

மிக்ஸர் மசாலா - 2

வணக்கம் ..,

    சென்ற பதிவில் பலதரப்பட்ட பதிவுகளின் அறிமுகத்தை பார்த்தோம் . இந்த பதிவிலும் அதன் தொடர்ச்சியை பார்ப்போம்...,


    ப்ளீஸ் ஆன்சர் மீ என வலைப்பூவை முன்னேற்ற வழிமுறைகளை நம்மிடம் கேட்பது போல .., பதிவுலகை கலாய்க்கிறார் “ப்ரீதம் கிருஷ்ணா”..,

   நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து பதிவுகள் எழுதி வருகிறார் “மனக்குரல்” சுதன் ...., சமசீர் கல்வி குறித்த அவரின் தெளிவான பார்வை இங்கே படியுங்கள் ...,

   அழகழகான காதல் கவிதைகள் எழுதி வருகிறார் ”மழைகால  தவளைகள் “ சிவசங்கர் .., “காதல் கொலை” என்னும் காத்திரமான கவிதையை படியுங்கள் ..,

   நாட்டின் அரசியல் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்கிறார் ”மானங்கெட்ட தமிழன்” சதீஷ் பாண்டியன்.., 

   தன் பெயரை போலவே எண்ணங்களை அழகாக பதிவு செய்கிறார் ”யோ வொய்ஸ்”.., அவரின் மனங்கவர்ந்த பாடல்களின் தொகுப்பை இப்படி வெளி இடுகிறார்..,

   வரிகையாக ஜோக் சொல்லி சிரிக்க வைப்பதில் வல்லவர் ”சிரிப்பு வருது”.., அதற்கு உதாரணம் இதோ...

   சினிமா சம்பந்தமான ஆராய்ச்சிகளில் வல்லவர் “டகால்ட்டி”.., அவரின் சினிமா கேரக்டர் குறித்த ஆராய்ச்சிகளை இங்கே பாருங்கள்..,

   பல்சுவையான பதிவுகளை எழுதி வருகிறார் ”திருப்பூர் சரவணகுமார்”.., தனது சொந்த ஊரான திருப்பூரின் சாயப்பட்டறைகள் குறித்த அவரின் பதிவு..,

    அழிந்த ஃபைல்கள் நினைத்து இனி வருந்த வேண்டியது இல்லை என அருமையான தொழில்நுட்ப வலைப்பதிவு மூலம் விளக்கி இருக்கிறார் “பச்சை தமிழன்”..,

     சிறப்பான சிறுகதைகள் எழுதி வருகிறார் ”புதுவை சந்திர ஹரி”.., அவரின் “புது செருப்பு” என்னும் இக்கதையை படித்து பாருங்கள் ..,

     உலக சினிமா விமர்சனங்களில் அழகாகவும் ஆழமாகவும் எழுது வருகிறார் ஜீ ...,

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே..,

3 comments:

  1. கலக்கலான பதிவர்கள் பலரினை அடையாளம் கண்டுகொண்டேன். அதற்காக தங்களுக்கு சிறப்பு நன்றி!

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது