07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 24, 2011

தொழில்நுட்பத் தமிழ்.தமிழில் தொழில்நுட்பத் தகவல்களைத் தரும் பதிவர்கள் இன்று இணையப் பரப்பில் நிறைய உள்ளார்கள். இவர்களால் புதிய பதிவர்கள் நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வலைப்பதிவு, இணையநுட்பங்கள், மென்பொருள் நுட்பங்கள் குறித்து நிறைய எழுதிவருகிறார்கள். மேலும் மேகக் கணினிநுட்பம் உள்ளிட்ட எதிர்கால நுட்பங்கள் குறித்த பதிவுகள் காலத்தின் தேவையாகிறது. தமிழ்த்துறை சார்ந்த நான் இணையத்தின் நுட்பங்கள் பல கற்றுக் கொண்டது தொழில்நுட்பப் பதிவர்களிடமிருந்துதான். அந்த அடிப்படையில் நான் நீண்ட காலமாக பார்வையிட்டுவரும் சில தொழில்நுட்பப் பதிவர்களை இன்று அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

84.பாடும் குயில் என்னும் வலைப்பதிவை நெடுங்காலமாகவே பார்வையிட்டு வருகிறேன். பல தளங்களில் கிடைத்த நுட்பமான தகவல்களைத் தொகுத்தளிக்கும் இவர் பதிவுகளை இவர் எந்த திரட்டிகளிலும் கூட இணைப்பதில்லை. இந்தப் பதிவிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

85.நண்பர் சூர்யகண்ணன் அவர்களை தமிழ் வலையுலகம் நன்கறியும். தமிழ்க்கம்யுட்டர் எனும் இதழில் கூட இவர் பதிவுகளைக் காணமுடிகிறது. “இணையத்தில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க“ இவர் சொல்லும் வழிமுறையை ஏற்கத்தக்கதாகவுள்ளது.


86.வந்தேமாதரம் சசி ஒவ்வொருநாளும் புதுபுது நுட்பங்களை அழகுத்தமிழில் தந்து வருகிறார். வலைப்பதிவு மற்றும் மென்பொருள் நுட்பங்கள் பலவற்றையும் இவரிடம் தான் கற்றேன். எனக்குத் தோன்றிய பல ஐயங்களையும் அவ்வப்போது தீர்த்து என் மனதில் நீங்காத இடம்பிடித்தவராவார்.

87. நண்பர் வேலன் பழகுதற்கு இனிய நண்பராவார். வியந்து நோக்கும் பதிவர்களுள் இவரும் ஒருவர். இவரது வலைப்பக்கம் பலமென்பொருள்களின் பயனை எளிய நடையில் தருவதாக அமைகிறது. “விரைந்து தட்டச்சு செய்ய“ இவர் சுட்டும் மென்பொருரள் பெரிதும் பயனளிப்பதாகவுள்ளது.


88.பொன்மலர் தொழில்நுட்பத் தகவல்களைத் தமிழில் தருபவர்களுள் குறிப்பித்தக்கவராகத் திகழ்கிறார். பல மென்பொருள் நுட்பங்களை இவர் வழி நான் அறிந்திருக்கிறேன்.
வலைப்பதிவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் குறித்த இவரது கட்டுரை என்னை மிகவும் கவர்ந்ததாகும்.

89. பலே பிரபுவின் பென்டிரைவை ராம் ஆக்க என்னும் கட்டுரை பயனுள்ளதாகவள்ளது.

90.தமிழ்க்கம்யுட்டர் என்னும் வலைப்பதிவு பதிவர்கள் செய்யும் ஐந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது. பதிவர்கள் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணையாக இப்பதிவு அமைகிறது.

91. சின்னவன் என்னும் வலைப்பதிவைப் பலரும் அறிந்திருப்பீர்கள். இதில் கடவுச்சொல்லின் வலிமையை அறிய இவர் சொல்லும் வழி சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.

92.நண்பர் செல்வமுரளி அவர்களின் க்ளவுட் கம்யுட்டிங் காலத்திற்கு ஏற்ற கட்டுரையாகவும் புதிய தொழில்நுட்பம் குறித்த சிந்தனைய முன்வைப்பதாகவும் உள்ளது.

93.சில வாரங்களுக்கு முன்னர் சிக்ஸ்த் சென்ஸ் டெக்னாலஜி என்று ஒரு காணொளியைப் பார்த்து வியந்துபோனேன். நண்பர் அபுல்பசர் இந்த தொழில்நுட்பம் பற்றிய கட்டுரையைத் தம் வலைப்பக்கதில் வெளியிட்டிருக்கிறார்.

94. என்னிடம் வலைப்பதிவின் அடிப்படை நுட்பங்களைக் கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்லும் வலைப்பதிவு நண்பர் மா.சிவக்குமார் அவர்களின் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் என்பதாகும்.

95.தமிழ்சிபியு என்னும் வலைப்பக்கத்தை நண்பர் ராஜ்குமார் அவர்கள் நடத்தி வருகிறார். இவரது கணினி மொழிகள் குறித்த கட்டுரை இவரது தொழில்நுட்ப அறிவுக்குத் தக்க சான்றாக அமைகிறது.

96.நண்பர் ரங்கராசன் அவர்களின் தமிழ்க்கணினி தரும் விண்டோசு எச்பிக்கான நுட்பங்கள் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன.

97.தமிழ் விக்கிப்பீடியா என்னும் வலைப்பதிவு விக்கிப்பீடியா குறித்த பல செய்திகளையும் வழங்குவதாக உள்ளது.

98. நண்பர் இரவி அவர்களின் இரவிடிரீம்ஸ் என்னும் வலைப்பதிவு விக்கிப்பீடியா குறித்த பல செய்திகளையும் பகிர்வதாகவுள்ளது.

99.நண்பர் சந்ரு அவர்களின் தொழி்ல்நுட்பம் குறித்த பதிவுகளுள் “இடுகைத் தலைப்புகள் பலவண்ணங்களி்ல் மாற“ என்னும் கட்டுரை வலைப்பதிவர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது.

100.கூதற்காற்று என்னும் வலைப்பதிவில் ப்ளாக்கரில் டிராப்டவுன் பார் உருவாக்குவது குறித்த கட்டுரை மிகவும் பயனளிப்பதாகவுள்ளது.

அன்பின் உறவுகளே தமிழில் தொழில்நுட்பத் தகவல்களைத் தரும் பதிவர்கள் பாராட்டுதலுக்குரியவர்களாவர். பல புதிய பதிவர்கள் தோன்றுவதற்கும் இவர்களின் பணி தேவையாகிறது. இவர்களின் பணியைப் போற்றுவோம். தமிழ்வலையுலகம் மேலும் வளர்ச்சிபெற துணைநிற்போம்.

24 comments:

 1. மிகப்பயனுள்ள பதிவு! நன்றி பாஸ்!

  ReplyDelete
 2. பயனுறும் பகிர்வுகள் அடங்கிய அறிமுகங்கள்/நன்றி.

  ReplyDelete
 3. பயனுள்ள பகிர்வுகளைக்கொடுத்த அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 4. பதிவு நல்லா இருக்கு.நைஸ்

  ReplyDelete
 5. நன்றி குணசீலன். மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. பயனுள்ள பகிர்வுகளைக்கொடுத்த அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 7. நன்றி குணசீலன்... நிறைய பயனுள்ள தளங்களையும் அறிந்துகொண்டேன் நன்றி

  ReplyDelete
 8. நிறைய புதிய தளங்கள்,
  அறிமுகங்கள்
  -நன்றி!

  ReplyDelete
 9. பதிவர்கள் அத்தனை பேருக்கும் உதவக்கூடிய தகவல்கள்!

  ReplyDelete
 10. அநேகமாக எல்லா தளங்களிலும் பதிந்து கொண்டேன். அனைத்தும் அருமையான தளங்கள்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. நன்றிகள் பகிர்வுக்கு சகோ . இந்த பட்டியலில் அடியேன் சின்னவனை சேர்த்தமைக்கு நன்றிகள் .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது