07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 22, 2011

நகைச்சுவைத் தமிழ்.


துன்பம் வரும் போது சிரிக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
எள்ளல், இளமை, பேதமை, மடன் காரணமாகவே சிரிப்புத் தோன்றும் என்பர் தொல்காப்பியர்.
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்!
சிரிப்பைத் தொலைத்தவர்கள் நிம்மதியைத் தேடுகிறார்கள்!
வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்!
சிரிப்பு இருக்கும் இடத்துக்குப் பெயர் சொர்க்கம்!
சிரிக்கத் தெரியாதவர்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்!
என சிரிப்பினைப் பற்றி பலரும் சிந்திக்கும் விதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

“உயிர்கள் பேசும் ஒரே மொழியாக சிரிப்பு இருக்கிறது“

62.சிரிப்பின் வகைகள் குறித்த வைரமுத்துவின் கவிதையை “தமிழ்த்தென்றல்“ என்னும் வலைப்பதிவு அறிமுகம் செய்கிறது.


63. தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

என சிரிப்பினை அடையாளப் படுத்துகிறார் அன்பர் ஜெயராஜன் இவரின் தென்றல் என்னும் பதிவைப் பலரும் பார்த்திருப்பீர்கள், பொன்மொழி, நகைச்சுவை, சிறுகதை என பல பயனுள்ள தகவல்களைத் தொகுத்து வழங்கி வருகிறார். நான் என் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது இடையிடையே சொல்ல இவரது பக்கத்துக்கு அடிக்கடி வருவதுண்டு.


64.அன்பு நண்பர் ப்ரியமுடன் வசந்த் வலையுலகம் நன்கறிந்த பதிவராவார். தன் தனித்துவமான சிந்தனைகளாலும், நகைச்சுவைத் திறனாலும் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தவராவார். இவரது இடுகைகளுள் “பிரபலங்கள்-எதிர்பிரபலங்கள்“ அதிகமாகப் பார்வையாளர்களைக் கவர்ந்தது.


65. நண்பர் வெங்கட் தற்போது நகைச்சுவைப் பதிவர்களுள் குறிப்பிடத்தக்கவராகவுள்ளார். இவரது பதிவு கோகுலத்தில் சூரியன் என்பதாகும்.இதில் எங்களைப் பார்த்த பாவமா இல்லையா? என்ற இடுகை வாழ்வியல் உண்மையை நகைச்சுவைவழி சொல்லும் இடுகையாகவுள்ளது.

66.நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் வலையுலகம் நன்கறிந்த பதிவராவார். இவரது பதிவுகளுள் “ப்ளாக் எழுத என்ன பிஎச்டி பட்டமா படிக்கனும்?“ என்ற இடுகை எனக்குப் பிடித்ததாக அமைந்தது.

67.நண்பர்கள் சேர்ந்து எழுதும் வலைப்பதிவு “நாழிகை“ என்பதாகும். இதில் “வீட்ல ஒரே காமமெடி“ என்ற இடுகை நகைச்சுவையுணர்வை வரவழைப்பதாகவுள்ளது.

68.நண்பர் தமிழ்கத்தோலிக்கன் அவர்களின் “நன்றி கெட்ட நாயே“ என்னும் இடுகையில் நாய் நன்றி உள்ளது என்பதை நகைச்சுவை உணர்வுடன் சொல்லியிருக்கிறார்.

69.அன்பர் காளிராஜன் அவர்களின் மஸாலா கார்னர் என்னும் வலைப்பதிவில் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நகைச்சுவைப் படங்கள் மூலம் அழகாகத் தந்து சிரிக்க வைத்துள்ளார்.

70.விகடகவி என்னும் வலைப்பதிவு நகைச்சுவைத் துணுக்குகளை தொகுத்தளிக்கும் பதிவாகவுள்ளது. அதில்,சிரிப்பு வருது சிரிப்பு வருது“ குறிப்பிடத்தக்க இடுகையாகும்.

71.அவர்கள் உண்மைகள் என்னும் வலைப்பதிவு படிக்க சிரிக்க சிந்திக்கத் தக்கதாகவுள்ளது. இதில் நீண்ட காலம் உயிர் வாழ வழி சொல்லப்பட்டிருக்கிறது.

72. அன்புடன் என்னும் வலைப்பக்கத்தைப் பாருங்களேன் அசைபடவழி சிரிப்பை வரவழைக்கிறது.

73.நாள்தோறும் வாய்விட்டு தாராளமாகச் சிரிக்க வேண்டும்.
இரத்தக் குழாய் பயன்தரும் முறையில் இயங்க, சிரிப்பு
உதவுகிறது என அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர் என்கிறது ராம்மலர் என்னும் வலைப்பக்கம்.பல்சுவைத் தகவல்களைக்கொண்ட இப்பக்கத்தை ஒவ்வொரு வலைப்பதிவர்களும் பார்த்துப் பயன்பெறவேண்டும்.

மகிழ்ச்சியின் திறவுகோல் சிரிப்பு!
நம் சிரிப்புக்காக நேரம் ஒதுக்கியவர்களுக்காக நாமும் சிறிது நேரம் ஒதுக்குவோமா!!

22 comments:

 1. தேடி பிடித்திருக்கீறீர்கள்...

  அருமையான தொகுப்பு..
  வாழ்த்துக்கள்..
  இரு பாலருக்கும்...

  ReplyDelete
 2. ஒரு சிலரைத்தவிர அத்தனைப்பேரும் புதியவர்கள்...


  தற்போது அனைவரையும் பின்பற்றுகிறேன்...

  நன்றி...

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் சௌந்தர்.

  ReplyDelete
 4. பல புதியவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. நகைச்சுவை நாயகர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 6. சில பதிவர்கள் புதிது.பார்க்கணும்.நன்றி குணா !

  ReplyDelete
 7. என்னை அறிமுகப்படுத்தியதற்க்கு
  நன்றி..!

  இன்றைய அறிமுகத்தில் எனக்கு சில
  பேர் புதிய அறிமுகங்கள்.. அவங்கள்
  தளத்தை உடனே சென்று பார்க்கிறேன்..

  ReplyDelete
 8. பல பதிவர்களை தொகுத்து வழங்கி இருக்கீங்க...நன்றிங்க மாப்ள!

  ReplyDelete
 9. நன்றி நண்பரே.... என்னை அறிமுகம் செய்ததற்கு.... மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

  ReplyDelete
 11. அடியேனுக்கு பிடிச்ச ( நகைச்சுவை ) வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு
  நன்றிங்க குணா.

  ReplyDelete
 12. நகைச்சுவைப் பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. தேடிப் பிடித்த இடுகைகள்! பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 14. தனக்குள் சிரிப்பவன் ஞானி .
  தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
  தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
  தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
  பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
  பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
  பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
  பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
  சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
  வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

  என சிரிப்பினை அடையாளப் படுத்துகிறார் அன்பர் ஜெயராஜன்
  நல்ல வரிகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது