07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 23, 2011

கொங்குத் தமிழ்.


காரைக்குடிப் பகுதியிலிருந்து பணிநிமித்தம் ஈரோடு வந்த நான் ஐந்தாவது ஆண்டாக கொங்குத்தமிழுடன் உறவாடி வருகிறேன். வந்த நாள் முதல் இந்த நாள் வரை கொங்குத்தமிழையும், மண்ணின் மரபுகளையும் பார்த்து வியந்து வருகிறேன்.

கொங்குத்தமிழ் என்பது கொஞ்சுதமிழ் என்பது போல மக்கள் பேச்சில் அன்பு குழைந்திருக்கிறது.
கண்ணு, தங்கம், ராஜா என்று இவர்கள் பேசும் முறை கொங்குத்தமிழில் எனக்குப்பிடித்த நடையாகும்.

கொங்கு என்பதற்கான பெயர்க்காரணத்தை இந்த மண்ணின் மைந்தர்களிடம் கேட்டால் அதைச் சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம். ஆளுக்கொரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

ஒருவர் சொல்கிறார்.. கொங்கு என்றால் தேன்ங்..இந்தப் பக்கம் தேன் அதிகமா இருக்கறதால இப்படிப் பேரு வந்தச்சுன் சொல்வாங்..

இன்னொருவர் சொல்கிறார்... கங்கு என்பதுதானுங் கொங்குன்னு மாறுச்சுன் சொல்வாங். கங்குன்னா எல்லைங். சேர,சோழ, பாண்டிய நாட்டின் எல்லையில இந்தப்பகுதி இருந்ததால கங்கு நாடு என்று இருந்து பின் கொங்கு நாடு என்று மாறுச்சுங். கொங்கர் ஆட்சிசெய்த பகுதிங்கறதால கொங்ர் நாடு என்று இருந்து கொங்கு நாடு என்றும் ஆகியிருக்குன்னு சொல்வாங்.

என்கிறார்.
நான் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்த போது கொங்குப் பகுதியில் இருந்துவந்த நண்பர் பேசும் மொழிநடையை பார்த்து என்ன இப்படி பேசுறாங்க அப்படின்னு பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த நண்பர் அருகாமையிலிருந்த மாமரத்தைப் பார்த்து இந்த “மாங்காயை பொறிச்சு“ சாப்பிடுவோமா என்றார் என்னது மாங்காய பொறிச்சி சாப்பிடுறீங்களா? என்று நான் சிரித்தசிரிப்பு இன்றும் என் நினைவுக்கு வருகிறது. மாங்காயை பறிச்சு, பறித்து என்பதை இவர்கள் பொறிச்சு என்று சொல்கிறார்கள் என்பதை இங்கு வந்தபோதுதான் முழுமையாக உணர்ந்தேன். இன்னும் அவர் ஒருமுறை “அவத்தக்கால“ என்றார் என்னடா இது அவத்தக்காலயா? அப்படின்னா என்ன? என்று கேட்டபோது அந்தப் பக்கம் என்று சொல்வதைத்தான் அவர் கொங்குத்தமிழில் அப்படிச் சொன்னேன் என்றார். இப்படி கொங்குத் தமிழில் பேசப்படும் சொற்களை நன்கு உற்று நோக்கினால் பழந்தமிழ்ச்சொற்கள் பலவும் இன்னும் இம்மொழிநடையில் வாழ்கிறது என்பதை நன்கு உணரமுடியும்.

வளம் நிறைந்த கொங்குத் தமிழ் பேசும் வலைப்பக்கங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

74. "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளை வழங்கிவரும் ஐயா ந.கணேசன் அவர்கள் தன் வலைப்பதிவுக்கு “தமிழ்க்கொங்கு“ என்றே பெயரிட்டுள்ளார்.தமிழ்மணம் திரட்டியின் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர்தமிழ்ப்பணியாற்றிவருகிறார்.தமிழ்ப்பற்றுள்ள இவரது ஆற்றலை “சந்தவசந்தம்“ மடற்குழுவிலும் பார்க்கமுடிகிறது.

75.எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!! என்று சொல்லும் நண்பர் பழமைபேசியைத் தமிழ் வலையுலகம் நன்கறியும். கொங்குத்தமிழ் பற்றி சொல்லும்போது இவரைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. தமிழின் மீதும் மண் மீதும் பற்றுள்ள இவரது பக்கம் “பழமைபேசி“ என்பதாகும்.இவருடைய “ஊர் மொழி“ கொங்குத் தமிழுடன் உறவாடி மகிழ்கிறது.


76.நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் தமிழ் வலையுலகம் நன்கறிந்த பதிவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இவரது வலைப்பக்கம் “கசியும் மௌனம்“ என்பதாகும். ஈரோட்டில் வலைப்பதிவர்கள் குழுமப் பெரும்பணியாற்றி வலைப்பதிவர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவராவார். கொங்குமண்ணின் மரபுகளை இவரது எழுத்துக்கள் தாங்கிநிற்கின்றன.

77.கொங்குநாட்டு மக்களின் பேச்சுவழக்கைப் பதிவு செய்துள்ள வலைப்பதிவு “கொங்குத் தமிழ்“ என்பதாகும்

78.கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து 41 வலைப்பதிவர்களைக் கொண்ட “ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்“ என்னும் வலைப்பதிவு கொங்குத்தமிழின் சங்கமமாக விளங்குகிறது.

79. கும்புட்டுகிறனுங்... நானுங் கதிர்வேலுங்... ஆத்தா அய்யன் பங்காளிக்கெல்லாம் நான் கதிருங். நம்ம சாமக்கோடங்கி தஞ்சாவூரு பத்தி நெம்பவே சொல்லீட்டாரு. செரி நாமுளும் கொங்கு பத்தி சொல்லோணுமல்லோ. என கொங்கு நாட்டை நமக்கு கொங்குமொழி நடையிலேயெ அறிமுகம் செய்கிறது“வருங்கால முதல்வர்“ என்னும் வலைப்பக்கம்.

80.பல வலைப்பதிவுகளில் நம் வலைப்பதிவின் தலைப்புக்குக் கீழே ஏதாவது பொன்மொழியையோ,சிந்தனைகளையோ இட்டுவைப்போம். கொங்கு வாசல் என்னும் வலைப்பக்கம் நம்மூர்ல மழைங்களா? என மண் வாசனை மாறாமல் கொங்குத்தமிழ் பேசுகிறது. இப்பதிவில் இடம்பெற்றுள்ள “கொங்கு வட்டார வழக்கு“ கொங்குத்தமிழின் சுவையைத் தெவிட்டாமல்த் தருகிறது.

81. "ஏனம்மா ஐயன் இருக்கறாருன்களா?"
"வா மணி. வா சோறு உங்கலாம்"
"இல்லை இருக்கட்டுங்க. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேங்க"
"ஊட்டுல அம்மணி நல்லா இருக்குதா? சிட்டாளு?"
"நல்லா இருக்கறாங்க"
"பொறவு என்ன சமாச்சாரம்" என கொங்குத்தமிழின் வாசம் நுகர்கிறது “ ஒரு சராசரியின் பக்கம்“

82.கொங்குத் தமிழ் தனக்கு மரியாதை சொல்லித்தந்தமையை நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் கீதா.

83.கொங்கு நாடு என்பது மேற்கு கங்கா வம்ச அரசர்கள் ஆண்ட பூமி. என்கிறது இரமேசு அவர்களின் இந்த வலைப்பக்கம்.


சென்னைத் தமிழ், திருநெல்வேலித்தமிழ், தஞ்சைத் தமிழ், செட்டிநாட்டுத்தமிழ் என வட்டார வழக்குகள் நிலத்துக்கு நிலம் வேறுபடுவது இயற்கை அதனை அறிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் நம் கடமையென்றே நினைக்கிறேன். அன்பு நணபர்களே நீங்களும் கொஞ்சம் கொங்குத் தமிழுடன் உறவாட அன்புடன் அழைக்கிறேன்.

20 comments:

 1. அறிமுகங்களும்,அறிமுகப்படுத்திய விதமும் அருமை.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 3. நீங்கள் சொன்னதைப் பார்த்தால் ஈரோடு பக்கம் வந்தால் தமிழிலேயே தடுமாறனும்போல இருக்கே !

  புதுப்புது தமிழ் அறுமுகங்கள்.நன்றி !

  ReplyDelete
 4. உங்கள் பூர்வீகம் காரைக்குடியா ? அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..நானும் காரைக்குடி தான் ,இப்போதும் கூட

  ReplyDelete
 5. கண்ணு வழமை போல் பதிவு கலக்குதுங்க

  ReplyDelete
 6. கொங்குநாட்டுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் முனைவர் அவர்கட்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள்.. நமது வலைப்பக்கத்தையும் (ஈரோடு தமிழ்) அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

  ReplyDelete
 8. காக்கை கரைவது ஒரே ஒலிபோல நமக்குத் தெரிந்தாலும் அவற்றுக்கும் மொழிச்சிக்கல் உண்டு என்கிறார்கள் பறவை நூலார். நம்ம ஊருக் காக்கை பக்கத்துக்கு ஊருக்குப் போனா அந்த ஊருக் காக்கை கத்துவது நம்ம ஊருக்காக்கைக்குப் புரிவதில்லையாம்.

  வருகைக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 9. நான் காரைக்குடி அருகில் கல்லல் என்னும் கிராமத்தைச் சார்ந்தவன் சுனில்.

  அழகப்பா பல்கலைக்கழகத்தில் தான் 10 வருடங்களாக ஆய்வு செய்து வந்தேன்.

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி கவியழகன்.

  ReplyDelete
 11. வருகைதந்து சிறப்பித்த நண்பர் பழமைபேசி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 12. வலைச்சர பணியை அழகாய் செய்து முடித்திருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. மிக்க நன்றிங்க குணா!

  ReplyDelete
 14. போட்டோவ எங்க புடிச்சீங்க?
  #வண்டி ஓட்டுறது அண்ணா& மாமா....
  அதான் கேட்டேன்...

  ReplyDelete
 15. அறிமுகங்களும்,அறிமுகப்படுத்திய விதமும் அருமை.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது