07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 31, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7என் கவிதையொன்று.... 

ஓர் பின்னிரவுப் பயணத்தில் 

நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.

காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.

சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.

மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.

சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.

(பெங்களூர் 1979)
பட உதவி : Google Images 

இன்னுமொரு கவிதை......

வாழ்க்கை

உலைபொங்கி கொதிவழிந்து
      பொறுக்குச் சுவடுகள்
               கோடிட்ட கலயம்....
பற்று நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.


மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...

கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
        உடையும் வரை.


ஒரு கணக்கு

நம்மாளு ஞொய்யாந்ஜி ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும், சம்பள உயர்வையோ, பதவி உயர்வையோ தராமல் இருந்தது அவர் பணிபுரிந்த அலுவலகம். ஒரு நாள் அவர் மேலதிகாரியைப் பார்த்து இதுபற்றி பேசப் போனார்.

மேலதிகாரி : என்ன ஞொய்யாந்ஜி? இன்னா விஷயம்.?

ஞொய்யாந்ஜி : சார் ! நாலு வருஷமா சம்பள உயர்வோ,
               பிரமோஷனோ இல்லாம இருக்கேன். உடனே
                அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. சார்

மேலதிகாரி:    எதுக்காக உனக்கு தர வேண்டும்?

ஞொய்யாந்ஜி  வேலை செஞ்சேன் சார்! வேலை..

மேலதிகாரி:   எப்போ செஞ்சே? நான் கேக்குறதுக்கெல்லாம்
              பதில் சொல்லு .. ஒரு வருசத்துக்கு எத்தினி நாள்?

ஞொய்யாந்ஜி:  365 சார்!

மேலதிகாரி: ஒரு நாளின் 24 மணி நேரத்துல எவ்வளவு நேரம்
             ஆபீஸ்ல இருப்பே?

ஞொய்யாந்ஜி: 8 மணி நேரம் சார்!

மேலதிகாரி: அதாவது ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம்
            இங்கிருக்கே. அப்பிடின்னா ஒரு வருஷத்தின்
            மூன்றிலொரு பங்கு 122 நாள் தான். சரியா?

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!


மேலதிகாரி: வாரத்துல லீவு எப்போ?

ஞொய்யாந்ஜி : சனி,ஞாயிறு ரெண்டு நாள் சார்!

மேலதிகாரி: வருஷத்துல மொத்தம் எத்தனை சனி ,ஞாயிறு?

ஞொய்யாந்ஜி: உம்... 52 சனி 52 ஞாயிறு மொத்தம் 104 நாள்

மேலதிகாரி: அப்போ ஏற்கெனவே நான் சொன்ன 122 நாளில் 104
             கழிச்சா மீதி 18 நாள் தான்

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!

மேலதிகாரி:  வருசத்துக்கு எத்தினி நாள் கேஷவல் லீவு எடுப்பே?

ஞொய்யாந்ஜி :12 நாள் சார்

மேலதிகாரி: 18இல் 12 போன மீதி 6 நாள் தான். அதுவுமில்லாம
             பொங்கல்,தீபாவளின்னு அரசு விடுமுறை 10 நாள்
             வேறு. அப்படின்னா வேலைநாள் எதுவுமே மீதி இல்லே.
           எப்படி சம்பள உயர்வு, பிரமோஷன் உனக்கு தருவது?

ஞொய்யாந்ஜி: அதானே? உங்களை தொந்தரவு பண்ணிட்டேன். 
               ரொம்ப சாரி சார்! வரேன்..


இனி சில  வலைத்தளங்கள் அறிமுகம் 

சங்கப்பலகை வலைப்பூவின் பதிவர் திரு. அறிவன். அரசியல், இலக்கியம் பற்றி ஆராய்ச்சி அணுகுமுறையுடன் எழுதுகிறார்.   வானவில் மனிதனில் வந்த காமச்சேறு எனும் அருணகிரி நாதர் பற்றிய என் பதிவில், இவர் இட்ட பின்னூட்டங்கள் இவர் நோக்கின் கூர்மையைப் புலப்படுத்துகின்றன.இவர் அதிகம் எழுத வேண்டும் எனும் பேராவல் எனக்குண்டு.

வெங்கட் நாகராஜ்  தலைநகரில் கால்பதித்த நற்றமிழன். எளிமையும், யதார்த்தமும் நிறைந்தது இவர் எழுத்து. இவரின் பார்வையின் வீச்சை உணர்ந்ததினால் சொல்வேன்.. இவர் ஒரு சிறந்த விமரிசகராய் பரிமானிக்க முடியும். களத்துல இறங்குங்க நண்பரே!


மனவிழி திரு சத்ரியன் அவர்களின் வலைப்பூ. கவிதைகள், நாட்டு நடப்பு என்று கொடி நாட்டும் பதிவுகள்.. கவிதைகள் சிக்கனமாய் ரசிக்கும் படி இருக்கின்றன.  சட்டு புட்டுன்னு இந்த வலைப்பூவைப் பார்த்துடுங்க.

பா.ராகவன்  பா.ராகவன் அவர்கள் அமுதசுரபி, கல்கி, குமுதம் போன்ற பல இதழ்களில் தடம் பதித்தவர். அவ்ர் அறிமுகம் பதிவே சுவையாக இருக்கிறது. நல்ல எழுத்தை பழக வேண்டுமெனில் இவ்வகை வலைப்பூக்கள் 'பாடத்திட்டம்' போன்றவை. கருத்தும் எழுத்தும் கலந்து காட்சியாய் மனத்துள் விரிவடையச செய்வது எளிதல்ல. எழுத்து முலாம் பூசும் வேலை அல்ல. அதற்கு பொன்னகை செய்யும் சூட்சமம் தேவை. இந்த தளத்தில் அது காணக் கிடைக்கின்றது.

அழியாச்சுடர்கள்  இந்த வலைப்பூவை தொடங்கி நடத்தும் அன்பர்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரம். இதை வலைப்பூ என்று சொல்ல மனம் வரவில்லை.. திராட்சைக் கொத்து?...  தேன் கூடு? நவரத்தின ஹாரம்? காலத்தின் பொக்கிஷம்??.. சொல்லத்தெரியவில்லை. சிறந்த படைப்புகள்  சிங்காரிக்கும் வலைமகுடம்.. சத்திரத்து விருந்துக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு..  அழியாச்ச்டர் அழைக்கிறது. அமிழ்ந்து முத்தெடுங்கள்....

28 comments:

 1. பின்னிரவுப் பயணக் கவிதை மிக அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நாளை மற்றுமொரு நாளே என்று சொல்வதா...ஒரு நாள் கழிந்தது என்று சொல்வதா...ரெண்டாவது கவிதை பிரமாதம்.
  அருமையான அறிமுகங்கள். வெங்கட் நாகராஜ் தவிர மற்ற தளங்கள் பார்த்துள்ளேன்.

  ReplyDelete
 3. அருமையான கவிதைகள்.
  நல்ல நகைச்சுவை.
  நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பின்னிரவுக் கவிதை சூப்பர்ப். :-)

  ReplyDelete
 5. நன்றி கலாநேசன்! அது பல வருடங்களுக்கு முந்தைய பயணம்... இன்னமும் முடியவில்லை

  ReplyDelete
 6. காலவெளி கரைவதில்லை ஸ்ரீராம்.. நாம் தான் மெல்லமெல்ல கரைந்தபடி இருக்கிறோம்.. நீரில் அமிழிந்த சர்க்கரை பொம்மையாய்...

  ReplyDelete
 7. நன்றி ரத்தினவேல் ஐயா!

  ReplyDelete
 8. நன்றி ஆர்.வீ.எஸ்!

  ReplyDelete
 9. //கலயம் தொடரும்,
  அலுக்காத ஆட்டம்.....
  உருண்டொரு நாள்
  உடையும் வரை.//

  மோகன்ஜி,

  அருமையான விளக்கம்.. வாழ்க்கை என்னும் தலைப்பிற்கு.

  ஞொய்யாஞ்ஜி ரொம்ப வெவரமான ஆளா தெரியுறார்.

  பக்தி இலக்கியத்தின் பக்கம் இனிமேல தான் தலைவைத்து படுக்க இருக்கிறேன். ஆர்வத்தை உண்டாக்கியதற்கு நன்றிங்க.

  எம் பேருக்கு முன்ன திரு.-வெல்லாம் ரொம்ம்ம்ம்ப அதிகம்ணே.

  பொடியன் நான்.

  ReplyDelete
 10. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வாங்க சத்ரியன்! பாராட்டுக்கு நன்றி!

  பக்தி இலக்கியம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானதல்ல.

  உணர்வும்,தமிழும் உச்சத்தை தொட்ட பங்களிப்பு.

  அவற்றை பக்தியையும் தாண்டி பார்க்கும் போதே அதன் வேறு பரிமாணங்கள் புலப்படும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  சத்ரியன்.. நீவிர் பொடியன் தான்... "சொக்குப் பொடி"யன்!

  ReplyDelete
 12. சேருமிடம் வந்தபின்னர்
  பேருந்து நின்றபின்னும்
  விரைந்திடும் உள்ளம்மட்டும்
  தீர்ந்திடாத கனவைத்தாங்கி
  சோர்ந்து செல்லும்.//

  ஒவ்வொரு பயணத்திலும் உணரும் உணர்வை கவிதையாக்கி வானைவில்லாய் காட்சிப்படுத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 13. வலைப்பூ என்று சொல்ல மனம் வரவில்லை.. திராட்சைக் கொத்து?... தேன் கூடு? நவரத்தின ஹாரம்? காலத்தின் பொக்கிஷம்??.. சொல்லத்தெரியவில்லை. சிறந்த படைப்புகள் சிங்காரிக்கும் வலைமகுடம்.. சத்திரத்து விருந்துக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு.. //

  தங்கள் வலைப்பூவும் இப்படித்தான் உணரவைக்கிறது.

  அருமையான தொகுப்புகள், ஆழ்ந்த முத்துக்குளிப்புக்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. வலைச்சரம், தமிழ் பூக்களின் தொகுப்பு ! அருமை வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 15. அன்பு மோகண்ணா...ஞொய்யாஞ்ஜி அப்பாஜி...பாவம்.சமபளம் கூட்டிக் குடுக்கலாம்ல..பொறுப்பா சரியா பதில் சொல்லிட்டார் !

  உடுண்டோடும் வாழ்வைச் சொல்லும் கவிதை வரிகள் அழகு !

  சத்ரியன் வலைப்பதிவு சிக்கனம் சரி....நாட்டு நடப்பு எப்பாச்சும்தானே வருது பிறகென்ன கொடி நாட்டுறார் அவர் !

  ReplyDelete
 16. பயண கவிதை தென்றல் . ஞொய்யாஜி ஒத்துக்கொள்ளும் நேர்மையை பாராட்டவேண்டும் ( அரசுப் பணி விடுப்பு சமாச்சாரத்தை அழகாக சொருகிய உங்களையும் )
  அறிவுசார் அறிமுகங்கள் ....நன்றிகள் ...

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.. இந்தக் கவிதையை என் இளமையின் முதல் படியில் நின்று எழுதியது. ஏதோ பழைய நினைவில் மீண்டும் பதிவிட்டேன்.

  ReplyDelete
 19. மிகவும் ரசித்திருக்கிறீர்கள் இராஜராஜேஸ்வரி மேடம். நன்றி!

  ReplyDelete
 20. நட சிவா! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 21. நன்றி ஹேமா!
  எதற்கு சத்ரியனை வம்புக்கு இழுக்கிறாய் ஹேமா.
  சத்ரியன் கொடிநாட்டுவதை பிறகு பார்ப்போம்.
  தொப்புள்கொடி உறவென்று சொல்லியபடி நாங்களெல்லாம் வானம் பார்த்தபடி தானே நின்றிருந்தோம்.. மனிதம் செத்து விட்டதா? வேதனை..

  ReplyDelete
 22. மிக்க நன்றி பத்மநாபன் ! நீங்கள் வருவீர்களோ என்று வாசற்படியிலேயே இல்லை உட்கார்ந்திருந்தேன்?

  ReplyDelete
 23. நன்றி மோகன்ஜி

  ReplyDelete
 24. மோகண்ணா...நான் என்னமோ பகிடி சொல்ல என்ன நீங்க.சந்தோஷமா இந்த வாரப் பணியைச் சரிவர நிறைச்சிருக்கீங்க.அப்புறமென்ன.இனி வானவில் மனிதனாய்ச் சந்திக்கலாம் !

  ReplyDelete
 25. //நன்றி ஹேமா!
  எதற்கு சத்ரியனை வம்புக்கு இழுக்கிறாய் ஹேமா.//

  மோகன்ஜி,

  பாவம் ஹேமா. சத்ரியனை வம்புக்கு இழுக்காம இருந்திருந்தாத் தான் நீங்க ”ஏன்?”-னு கேட்டிருக்கனும்.

  ReplyDelete
 26. //மோகண்ணா...நான் என்னமோ பகிடி சொல்ல என்ன நீங்க...//

  ஹேமா,

  மோகன் அண்ணாவுக்குச் சொல்லிட்டேன். நீங்க பயப்படாதேங்கோ...!

  ReplyDelete
 27. கவிதைகள் அருமை.

  அடியேனையும் நினைவில் வைத்திருந்து, என்னை ஊக்குவித்து, அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். தற்போது ஒரு பயிற்சி வகுப்பில் இருப்பதால் முன்னரே படிக்க முடியவில்லை.

  ReplyDelete
 28. அன்பு மோகன்ஜி,
  சங்கப்பலகையை வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு நன்றி.

  உங்கள் தளத்தில் விளைந்த சிந்தனைப் பரிமாற்றங்கள் மேலும் தெளிவும் மகிழ்வும் தந்தன.

  நேர மேலாண்மைப் பிரச்னைகளால் அதிகம் எழுத முடிவதில்லை.

  இத்தவறைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது