07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 3, 2011

டிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்

நறுக் - 6 

obama car driver


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வந்தார். தடபுடலாக பல ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். சொந்த ஊரில் இருப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக ஒரு சொகுசுக் காரில் பவனி வந்தார் ஒபாமா. தான் பயணித்துக் கொண்டிருந்த ப்ளஷர் காரை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. டிரைவரை பின்னாடி உட்காரச் சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு நகர்வலம் வந்தார். அழுத்து அழுத்தென்று அழுத்தி ஊரெங்கும் பறந்தார். ஒரு சின்சியர் டிராபிக் போலீஸ் அந்த வண்டியை மடக்கினார். உள்ளே டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்தவுடன் மிரண்டு "ஐயா"விற்கு போன் பண்ணினார்.

"சார் ஓவர் ஸ்பீட்ல போன ஒரு முக்கிய புள்ளிய பிடிச்சிருக்கேன்"

"யாருயா... கலெக்டரா..."

"இல்லீங்க..."

"மினிஸ்டரா?"

"இல்லீங்க..."

"முதலமைச்சரா?"

"இல்லீங்க.."

"கவர்னரா?"

"இல்லீங்க...."

"யோவ்.. வேற யாருயா சொல்லித்தொலை..."

[அட்டகாசமான அவரது பதில் கடைசியில்...]

**********
சிவகுமாரன் என்ற ஒரு கவிஞர் பதிவுலகில் சிங்கமென உலவுவது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். மனிதனுடைய எல்லா உணர்வுகளுக்கும் கவிதை எழுதும் அவரது பேனா. அவர் பக்திமணம் கமழ எழுதும் இன்னொரு வலைப்பூ அருட்கவி.

தக்குடு என்று ஒரு துடுக்கு. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை. அலுவலகத்தில் இவரது பதிவுகளை திருட்டுத்தனமாக படிப்பது கடினம். வாய்விட்டு சிரித்து மாட்டிக்கொள்வீர்கள். உம்மாச்சி காப்பாத்து என்று இன்னொரு பதிவில் பக்திப் பழமாகவும் எழுதுகிறார். கணேசா காப்பாத்து!

இது என் எழுத்து. இது என் கருத்து. இது என் மைத்துளிகள் என்று கவிதாப்பூர்வமாக எழுதுபவர் மாதங்கி.(मातंगी). திடீரென்று ஒரு நாள் தத்துவ விசாரணை நடக்கும் மறுநாள் துப்பாண்டி புராணம் இருக்கும். இசையில் தேர்ந்த ஞானம் பெற்றிருக்கிறார். அவரின் மைத்துளிகள் இங்கே.

பதிவுலகில் எல்.கேயைத் தெரியாதவர் எவருமிலர். ஒரு நாளில் எல்லா நண்பர்கள் பதிவுகளையும் படித்து சுருக்கமாக கருத்துரையிடுவார். ரெண்டு மூணு ப்ளாக் வைத்திருக்கிறார். கூடிய விரைவில் எழுத்துக்கு விடுமுறை விடப்போகிறேன் என்று மிரட்டுகிறார். ஓடிச்சென்று படித்துவிடுங்கள்.

தம்பி இளங்கோவுக்கு ஊரு கோயம்புத்தூரு. விழுதுகள் என்ற இயக்கத்தில் சமூகத் தொண்டுகள் புரிகிறார். அவ்வப்போது வலையில் எழுதி கலைத்தொண்டும் ஆற்றும் இப்படிக்கு இளங்கோவை இங்கே சென்று பாருங்கள். சிறு சிறு துளியால் பெரு வெள்ளம் ஆக்க எழுதுகிறார். ரெண்டு நாள் முன்பு எழுதிய ராமர், லெட்சுமணர், அனுமாரு நன்றாக இருக்கிறது.

சுரங்க ஊரான நெய்வேலியிலிருந்து பொக்கிஷமாக வெங்கட் நாகராஜ். தற்சமயம் டில்லிக்கு ராஜாவாக இருக்கிறார். மனைவியையும் பதிவிடச் சொல்லி கால்கட்டு போட்டுக்கொண்ட பதிவர்கள் மத்தியில் சந்தோஷமாக உலவுகிறார். தில்லியைப் பற்றி இருவருமே அவ்வப்போது எழுதுகிறார்கள்.

தற்போது விம்பிள்டன் பார்த்துக்கொண்டிருக்கும் மெட்ராஸ் பவன் உரிமையாளர் சிவகுமார் நன்றாக எழுதுகிறார். நிறைய படங்களுக்கு விமர்சனம் எழுதும் இவரை வருங்காலத்தில் பிலிம் மேக்கராக பார்க்க வாய்ப்பிருக்கிறது. இவரும் நண்பன்டா என்று இரண்டாவது வீடு ஒன்று வைத்துள்ளார்.

மன்னார்குடியில் இருந்து மொத்தம் ஐந்து வலைப்பதிவர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெசொவி என்று பெயர் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் சீனியர் ஒருவர், மன்னை மைந்தர்களில் ஒருவன் என்று மாதவன், மன்னார்குடி மதிலழகு என்றெழுதும் ராஜமன்னார்குடி , ஆயுத எழுத்தாக பல துறைகள் பற்றியும் பதிவெழுதும் கோப்லி என்கிற ஏ.ஆர்.ராஜகோபாலன், மன்னையின் செல்வன் சிவா என்று ஒரு பட்டாளமே வலை உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், நகைச்சுவை, கவிதை என்று பின்னி பெடலெடுக்கிறார்கள். மன்னையின் அனைத்து இடங்களுக்கும் போய்வந்தது போல இருக்கும்.

பதிவு ராஜராஜேஸ்வரி போல நீள்கிறது.

எங்கள் ப்ளாக் பல்சுவை பதிவுகள் வழங்கும் உங்கள் ப்ளாக். மூன்று பேர் சேர்ந்து எழுதுகிறார்கள். நிறைய புதிர், போட்டி என்று நடத்தி ஊக்குவிப்பார்கள்.
திருவாளர்கள் ஸ்ரீராம் மற்று கௌதமனை தெரியும். பத்மனாபனப் போல பதிவுலகம் முழுக்க சென்று ஊக்குவிப்பது ஸ்ரீராமின் பொழுபோக்கு. வாழ்க அவரது பணி. என்னுடைய ஜட்டிப் பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்தது அவரால் தான் எனக்கு தெரிய வந்தது.

ராஜபாளையம் லாஜி ஸாரி ராஜி. கோடை விடுமறை முடிந்து மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். அம்மணி இடும் பின்னூட்டங்கள் பதிவைப் பிளக்கின்றன. கதை, கவிதை போன்றவற்றை சுவையாக எழுதுகிறார்.

பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எழுத்துப் பணியை விடாமல் செவ்வனே செய்து வருபவர் வை. கோபாலக்ருஷ்ணன். வையகம் புகழ கதைகள் எழுதுகிறார். எவ்வளவு பார்ட் வரும் என 1 of 4  என்று தலைப்பில் போட்டு எழுதும் யதார்த்த கதைக்காரர். இவரது சிறுகதைகள் சில கல்கியில் வெளிவந்துள்ளது.

பொன்மாலைப் பொழுதில் எழுதிவருபவர் அண்ணன் கக்கு மாணிக்கம். கும்பகோணத்துக்காரர். அரசியில் திருடர்களை வஞ்சனை இல்லாமல் வைது பதிவுகள் போடுவார். வீரதீரப் புலி.

அவ்வப்போது எழுதும் சாய் ராம் கோபாலன். இவருக்கு தற்சமயம் கையில் ஆப்பரேஷன் நடந்துள்ளதால் இலக்கியப் பணி ஆற்றுவதற்கு கொஞ்சம் சமயம் பிடிக்கும். மனதில் பட்டதை அப்படியே ஒளிவுமறைவின்றி எழுதும் அசாத்திய துணிச்சல்காரர்.

யாதோ ரமணி எதையும் கவி புனைவதில் வல்லவர். கட்டுரையைக் கூட கவிதையாக எழுதுவார். வார்த்தைகள் இவர் கவிதைகளில் விளையாடும். இவர் எழுதிய ஜான் அப்துல் நாராயணன் எனக்கு விருப்பமான ஒன்று.

வானவில் எழுதும் வீடு திரும்பல் மோகன்குமார் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர். நீடா பார்ட்டி. நல்ல தரமான பல பதிவுகள் எழுதி திண்ணை போன்ற தளங்களில் வெளியிடுகிறார். தன்னம்பிக்கை பதிவுகள் பல எழுதுகிறார். அதுவே அவரது பலம்.

கொஞ்சநாளாக இவங்க வலையுலகத்துக்குப் பக்கம் வரவில்லை என்பதால் நானெல்லாம் தைரியமாக உலவ முடிகிறது. வித்யாவின் கிறுக்கல்கள் என்று எழுதுபவர். நல்ல நேர்த்தியான நடையில் அழகாக எழுதும் சகோதரி. சமீபத்தில் கண்ணில் படவேயில்லை. ரொம்பவும் ஆணி போலிருக்கிறது.

அமைதிச்சாரல் என்று புயலென எழுதும் ஒரு எழுத்தாளர். ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் புதுத் தெம்போடு எழுதுகிறார். படிக்கப் படிக்கப் பரவசம் இவர் எழுத்துக்களில். பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

*********
"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையே டிரைவரா வச்சுருக்கிற ஒரு பெரும்புள்ளி" என்றாரே பார்க்கலாம்.

பின் குறிப்பு: நறுக் நறுக்கென்று பல்லு படமால் கடித்த என்னை இத்தோடு வலைச்சரத்திலிருந்து சீனா சார் நறுக்கி விடப்போகிறார். வாய்ப்பளித்தமைக்கு அவருக்கு ஒரு நன்றி. என்னால் இயன்றவரை அளித்திருக்கிறேன் என்ற மன நிறைவோடு விடைபெறுகிறேன். மீண்டும் ஒருமுறை சீனா சாருக்கு ஒரு தானா. தாங்க்ஸ்ன்னு சொன்னேன்.

பட உதவி: http://www.sodahead.com . படத்துல ஒபாமா கார்லேர்ந்து வெளியில போறா மாதிரி.. நானும் ஜூட் விட்டுக்கறேன்.


-

31 comments:

 1. தெரிந்த பதிவர்களை உங்கள் பாணியில் அறிமுகப் படுத்தியிருப்பது அழகு.
  'எங்கள்' அறிமுகத்துக்கு நன்றி. சொந்தப் பாராட்டுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். (நீங்கள் உட்பட பல ப்ளாக்குகள் படிக்கவில்லை என்றால் நஷ்டம் எங்களுக்குத்தான்)

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். சிறப்பாக மேற்கொண்ட வேலையை முடித்திருக்கும் என் அன்பு இளவலுக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. வழக்கம்போல் எழுத்து நடை, பிரமாதம்! கீப் இட் அப், RVSM!

  ReplyDelete
 4. அருமையான அறிமுகங்கள். சில தெரியாதவை.. இனி தொடர்கிறேன்..
  அத்தோடு எமது மன்னையின் புகழ் போற்றும் சக வலைபதிவர்களையும்(
  என்னையும் சேர்த்து) அறிமுகம் செய்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 5. பெரும்பாலும் நான் வாசிக்கும் வலைப்பூக்கள் .... உங்கள் அறிமுகத்தில் மேலும் ஜொலிக்கிறார்கள் ... வாழ்த்துகள் ... நறுமணமும் நகைச்சுவையும் கமழ ஓரு வாரம் வலைச்சரம் தொடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள் ....

  ReplyDelete
 6. //மன்னார்குடியில் இருந்து மொத்தம் ஐந்து வலைப்பதிவர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். //

  ஆறு என்பது என் தாழ்மையான கருத்து..
  ஒங்களையும் சேர்த்துத்தான்...

  ReplyDelete
 7. பெரியவர்கள் மத்தியில் இந்தப் பொடியனையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்று. எல்லாப் பதிவுகளையும் பார்க்கலை. இன்றுதான் பாக்கணும்

  ReplyDelete
 8. சமுத்திரத்திலேருந்து எடுத்த முத்துக்களுக்கு நடுவில்
  இந்த சிப்பியும் உங்கள் கைகளில் மாட்டியிருக்கிறதா?

  அறிமுகத்திற்கு நன்றி

  பிற அறிமுகங்கள் பவர்ஃபுல்லான அறிமுகங்கள்

  ஒபாமா ஜோக் சூப்பர்!வாய் விட்டு சிரிச்சுட்டேன்.
  வீட்ல கூட எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாத்தாங்க

  ReplyDelete
 9. மதிலழகு மன்னார்குடிக்காரரின் நடையழ்கு மிகுந்த அருமையான நகைசுவைக்கதைகளுக்குள் பொதிந்து கொடுத்த அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. வழக்கம்போல் பிரமாதம்.

  ReplyDelete
 11. வணக்கம் சார். என்னை தாங்களும் நினைவு கூர்ந்து அடையாளம் காட்டியுள்ளதற்கு மிகவும் நன்றிகள்.

  // இவரது சிறுகதைகள் சில கல்கியில் வெளிவந்துள்ளது.//

  இந்த மேற்கண்ட வரிகளை மட்டும் தயவுசெய்து நீக்கி விடவும். என் சிறுகதைகள் ஏதும் இதுவரை கல்கியில் வந்தது இல்லை.

  சிறுகதைகள் தவிர வேறு சில மேட்டர்கள் தான் கல்கியில் வந்துள்ளன.

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும், தங்களுக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 12. //எங்கள் ப்ளாக்-"மூன்று பேர் சேர்ந்து எழுதுகிறார்கள்"//

  ஆ 'சிரி' யர்கள்:
  kg
  Kasu Sobhana
  ஸ்ரீராம்.
  kggouthaman
  raman

  ஐந்து பேர்..!

  ReplyDelete
 13. நன்றி நண்பனே
  என்னை வழிநடத்தி வரும்
  நீயே
  என்னை
  அறிமுகம் செய்தது
  நான் செய்த பாக்கியம்

  ஒபாமா ஜோக்
  வாய் விட்டு சிரிக்க வைத்தது
  மனம் நிறைந்த பணியாற்றி சென்றமைக்கு
  மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. எப்பவும் போல இன்னிக்கும் பதிவு அருமை.

  ReplyDelete
 15. ஒரு வாரமாக உங்கள் முத்தான எழுத்தில் நல்ல பல அறிமுகங்கள் மைனரே. எனக்குப் புதிய அறிமுகங்கள் ஆன எல்லோரையும் ஒவ்வொன்றாய் படிக்க முயற்சிக்கிறேன். சில நாட்களாக பதிவுகள் எல்லாவற்றையும் படிக்க முடியாத அளவு கைகள் கட்டிப் போடும் வேலை…

  இன்றைய பதிவில், எனக்கும் என் துணைக்கும் மீண்டுமொரு அறிமுகம் உங்கள் வார்த்தைகளில் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி மன்னை மைனரே….

  ReplyDelete
 16. @ஸ்ரீராம்.
  நன்றி ஸ்ரீராம். தங்களது தொடர் வாசிப்பிற்கு... ;-))

  ReplyDelete
 17. @மோகன்ஜி
  அண்ணலே! நன்றி.. ;-))

  ReplyDelete
 18. @பெசொவி
  நன்றி பெசொவி. உங்க கிட்டேயிருந்து இப்படி கமென்ட் வாங்கினாத்தான் உண்டு போலருக்கு... ;-))

  ReplyDelete
 19. @Madhavan Srinivasagopalan
  நன்றி மாதவா! ;-))

  ReplyDelete
 20. @பத்மநாபன்
  நன்றி பத்துஜி! உங்களைப் போன்றோர் அல்லவா என்னை ஜொலிக்க வைக்கிறார்கள். ;-))

  ReplyDelete
 21. @Madhavan Srinivasagopalan
  பாராட்டுக்கு நன்றி மாதவா! ;-)

  ReplyDelete
 22. @எல் கே
  ஆள் பொடியனைப் போல இருக்கீங்க.. பண்ற வேலையெல்லாம் 'படா படா' வா இருக்கு... ;-))

  ReplyDelete
 23. @raji
  உங்களுக்கு பெரிய கமென்ட்டு என்னோட வலையில... ;-))

  ReplyDelete
 24. @இராஜராஜேஸ்வரி
  நன்றிங்க மேடம்!

  ReplyDelete
 25. @சே.குமார்
  நன்றிங்க குமார்! ;-))

  ReplyDelete
 26. @வை.கோபாலகிருஷ்ணன்
  விடுங்க சார்! கல்கியில நிச்சயம் இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துக்குள்ள எழுதப்போறீங்க... ;-))

  ReplyDelete
 27. @ஸ்ரீராம்.
  ஐவருக்கு நன்றி. ;-))

  ReplyDelete
 28. @A.R.ராஜகோபாலன்
  நட்பே! என் வலைப்பூவில் உனக்கு கமென்ட் இருக்கு.. ;-))

  ReplyDelete
 29. @குணசேகரன்...
  வாரம் முழுக்க வந்து கை தட்டியதர்க்கு நன்றிங்க.. ;-))

  ReplyDelete
 30. @வெங்கட் நாகராஜ்
  தலை நகரத்திர்க்கு நன்றி. ;-))

  ReplyDelete
 31. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆசிரியரே :-))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது