07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 1, 2011

ஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்

six face

நறுக் - 4 

ஆறு+கழுத்துக்கு மேல....
"உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன?"

(ஆறு விரலைக் காட்டினார் அவர்)

"ஆறு"

"அதோட கழுத்துக்கு மேல இருக்கறதைச் சேர்த்துக்கோங்க"

"தலையா?"

"உஹூம்.. அது இல்ல.. முன் தல.. இது...இது..."

"ஓஹோ...முகம்... உங்க வீட்டுக்காரர் பேர் ஆறுமுகம் சரிதானுங்களா?"
(ம. தொகை கணக்கெடுக்கும் அதிகாரி நெஞ்சு பத பதைக்க அந்தப் பதிபக்தி நிறைந்த பெண்மணி சொன்ன பதில் கடைசியில்.....)

*********
சைக்கிள் என்று ஆயிரமாயிரம் கால் உள்ள 'வலை'சைக்கிளில் எழுதுபவர் மிருணா. நிறைய கவிதைகள் எழுதுகிறார். "இங்கே எழுத்தாக நான்" என்று கவித்துவமாக அறிமுகம் செய்து கொள்கிறார். சமீபத்தில் பயணம் என்ற தலைப்பில் இவர் எழுதுவது அற்புதமாக இருக்கிறது. இவரது எழுத்து ஆளில்லா சாலையிலே சுகமான ஜன்னலோரப் பயணம்.


திரு காஷ்யபன் அவர்கள் தீக்கதிர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தன் எழுத்துக்கு ஓய்வில்லாமல் தொய்வில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பெரியவர். எனது சேஷ்டைகளை ஒதுக்கிவிட்டு மரியாதையாக நான் படிக்கும் ஒரு ப்ளாக். http://kashyapan.blogspot.com/

இது என் ரஃப் நோட்டு என்று எழுதிவரும் பதிவர் டோடோ. ஜப்பானியப் பதிவரா என்று கேட்கிறீர்களா? இல்லை. அருந்தமிழ்ப் பதிவர். ஆங்கிலப் படங்களையும் பாடல்களையும் பற்றிக் கூட ஒரு பதிவு வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய ஒரு கிளாஸ் அஞ்சலி நன்றாக இருக்கிறது. ஒரு கிளாஸ் சைசில் சிறிய சிறிய கவிதைகள் ரம்மாக. ச்சே. ரம்மியமாக எழுதுகிறார்.  திகட்டாமல் இருக்கிறது.

The Roots என்று தான் சுய விவரத்தில் போட்டிருந்தது. நல்ல ஆணி வேர். ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான தனது அப்பத்தா கதையை நமக்காக உண்மை புதிததன்று  என்ற தனது வலைத்தளத்தில் ப்ரசூரித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

கென்யாவிலிருந்து ராகவன் எழுதும் வலைத்தளம் கூடல்கூத்தன்.ப்ளாக்ஸ்போட் .காம்.  வால்நட்சத்திரம்  என்ற இவரது சமீபத்திய கதை அற்புதமாக இருக்கிறது. ரசிகன் என்ற தளத்திலிருந்து என்கிறார்....

பிரசன்னா ராஜன் ஒரு பயோ மெடிக்கல் பொறியாளர். ஒளியுடையோன் என்ற வலைப்பூவில் அவர் எழுத்துக்களால் ஒலியெழுப்பாமல் பிரசன்ன ஒளி எழுப்புகிறார். மாசத்துக்கு ஓரிருமுறை எண்ணங்களை பதிவாக பிரசவிக்கிறார். அற்புதமான நடையில் மிளிர்கிறார். ஒலக சினிமா நிறைய பார்க்கிறார். ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடல என்ற இவரது சிறுகதையை மார்கோனி படிக்கவேண்டும். ரேடியோவின் பல பயன்பாடுகள் தெள்ளெனத் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.

சங்கப்பலகையில் எழுதிவருபவர் திரு. அறிவன். அல்லவை தள்ளி நல்லவை கொள்ள என்று உப தலைப்பு வைத்திருக்கிறார்.  பெண் எழுத்துப் பற்றி பொன் எழுத்தாக அவர் எழுதியதின் சுட்டி இங்கே. நிறைய அரசியல் எழுதுகிறார். தமிழில் நன்கு தேறியவர் என்பது அவரது தேர்ந்த எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு முறையாவது சங்கப்பலகையில் உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருக்கும்.

*********
"அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."
இது இரா முருகனின் ராயர் காப்பி கிளப்பில் இருந்து சுட்டது.

-

22 comments:

 1. "அந்த நாயை எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க...."

  ஹா...ஹா....ஹா....

  மறுபடி நல்ல அறிமுகங்கள் ஆர் வி எஸ்.

  ReplyDelete
 2. @ஸ்ரீராம்.
  ஹா...ஹா...
  நன்றி ஸ்ரீராம்! ;-))

  ReplyDelete
 3. @♔ம.தி.சுதா♔
  நன்றி சகோதரா! ;-))

  ReplyDelete
 4. ரஃப் நோட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும். - சிமுலேஷன்

  ReplyDelete
 5. தலைப்புல இருக்குற
  பூஜ்ஜியம், ஒன்று --
  இதுக்கு இன்னைக்குத்தான் அர்த்தம் புரியுது.. பைனரி கோட் ...!!

  ReplyDelete
 6. ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம் -- 100 -- நான்கு (இரண்டடிமானத்தில்)

  ReplyDelete
 7. @Simulation
  ஆமாம். நன்றாக எழுதுகிறார்! ;-)

  ReplyDelete
 8. @Madhavan Srinivasagopalan
  கரீட்டு மாதவா! ;-))

  ReplyDelete
 9. தினம் தினம் புதிய [எனக்கு] பதிவர்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி மைனரே...

  “அந்த நாயை எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க!” :))))

  ReplyDelete
 10. ஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்"//

  ந்ல்லா சுடுது.

  ReplyDelete
 11. எல்லாருமே எனக்கு புது அறிமுகங்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
  ***********
  "அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."

  அடப்பாவமே!

  ReplyDelete
 12. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. இன்றைய அறிமுகங்களும் தேர்ந்தெடுத்த அறிமுகங்கள் .... இந்த மாதிரி வலைப்பூக்கள் இருப்பது தமிழ் மொழிக்கு பெருமை..அறிமுகத்துக்கு நன்றிகள் பல வாழ்த்துகள் ...

  ReplyDelete
 14. //"அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."//

  நன்றியுள்ள கணவன் போல! அதான் குறிப்பால(“நாய்”) உணர்த்தறாங்க அந்த அம்மிணி.

  ReplyDelete
 15. @வெங்கட் நாகராஜ்
  நெட்ல ரொம்பவும் அலைந்து திரிந்தேன் தல! பாராட்டுக்கு நன்றி. ;-)

  ReplyDelete
 16. @இராஜராஜேஸ்வரி
  ஹா.ஹா. நன்றிங்க மேடம்! ;-))

  ReplyDelete
 17. @raji
  என்னதிது... அடப்பாவமேன்னு ஒரு ரியாக்ஷன்!!! அப்டி போடு! அப்படின்னு போடணும்...
  சும்மா ஜோக்குக்கு... நன்றி.. ;-))

  ReplyDelete
 18. @Lakshmi
  நன்றிங்க மேடம்! ;-))

  ReplyDelete
 19. @பத்மநாபன்
  பத்துஜி! நாளைக்கும் நாளன்னிக்கும் இருக்கு பாருங்க சரவெடி.... அப்புறம் தெரியும்.... ;-))))

  ReplyDelete
 20. @சத்ரியன்
  நன்றியுள்ள கணவனாகவும் இருக்கலாம்.. இல்லைன்னா வாலை ஆட்டும் கணவனாகக் கூட இருக்கலாம்.. சரியா சத்ரியரே? ;-)))
  கருத்துக்கு நன்றிங்க... ;-)))

  ReplyDelete
 21. நண்பர் ஆர்விஎஸ்,

  எதுவோ தேட உங்களது வலைச்சரப் பதிவில் இறங்க நேர்ந்தது.

  என்னுடைய பதிவை வலைச்சரத்தில் சுட்டியதற்கு நன்றி.

  நாம் இருக்கும் சூழலை மாற்றியமைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று ஆழமாக நான் நம்புகிறேன்.

  எனவேதான்,பொழுது கழிகின்றது என்றாலும் அரசாண்மை,சமூகம்,அரசியல் பற்றிய பார்வை அதிகம் என்னுடைய பதிவுகளில் தெரியலாம்.

  நன்றி மீண்டும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது