சசிகலாவிடமிருந்து, செய்தாலி வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கிறார்!
➦➠ by:
* அறிமுகம்
அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த "தென்றல்" வலைப்பூ சகோதிரி சசிகலா அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று, ஒவ்வொரு நாள் இடுகையிலும், தமிழ் மாதங்கள், உலக அதிசயங்கள், வான் கோள்கள், மாவட்டங்கள், நதிகள், பழங்கள், இசைக்கருவிகள் என அவைகளைப் பற்றிய சிறப்புகளை மிகுந்த தேடலுடன் ஆர்வத்துடன் தொகுத்து எழுதி, தனது மனங்கவர்ந்த இடுகைகளையும் விதவிதமான தலைப்புகளில் தொகுத்து "இன்னும் ஒரு வாரத்திற்கு ஆசிரியராக தொடர மாட்டாரா" என வாசகர்கள் பின்னூட்டங்களில் ஆர்வத்துடன் கேட்கும் வகையில் அனைவரையும் கவர்ந்து விட்டார் சசிகலா.
அவரது அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது இடுகைகள் எழுதி 350-க்கும் மேல் மறுமொழிகளைப் பெற்று தனது வலைச்சரப் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறும் சசிகலா அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக "செய்தாலி" என்னும் வலைப்பூவை எழுதிவரும் நிஜாமுதீன் என்ற செய்யது அலி(செய்தாலி) அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிறு கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த ஏழு வருடங்களாக துபாயில் பணியாற்றி வருகிறார். மே-2010-இல் துவங்கிய தனது செய்தாலி வலைப்பூவில் கவிதைகளை மட்டுமே இயற்றி வருகிறார். இவரது வலைப்பூ முழுதும் கவிதை படைப்புகள் நிறைந்து வாசிப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

செய்தாலி அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் சசிகலா...
நல்வாழ்த்துக்கள் செய்தாலி...
வாழ்க வளமுடன்
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பான வலைச்சரப் பணியை மேற்கொண்ட சகோதரி சசிகலாவிற்கு எனது வாழ்த்துகள்..இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் தோழர் செய்தாலி அவர்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்..
ReplyDeleteமிகச்சிறப்பான பதிவுகளால் தனது ஆசிரியர் பணியை திறம்பட செய்து முடித்த சசிகலா அக்காவுக்கு வாழ்த்துக்கள், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் நண்பர் "செய்தாலி" அவர்கள் தனது பணியை சிறப்பாய் செய்துமுடிக்க நல்வாழ்த்துக்கள் ..!
ReplyDeletesako! Sasikala avarkalukkum-seythali avarkalukkum vaazhthukkal!
ReplyDeleteதனது மாறுபட்ட சிந்தனை மற்றும் கடின உழைப்பால் கடந்த வாரத்தை அலங்கரித்த சகோதரி சசிகலா அவர்களுக்கு நன்றி! அடுத்து வர இருக்கும் செய்தாலி (எங்கூருக் காரராக்கும்!) வரவேற்கிறோம்!
ReplyDeleteவருக வருக நண்பர் செய்தாலி அவர்களே! சுவாரஸ்யமான ஒரு வாரத்தை எங்களுக்குத் தருக! என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு!
ReplyDeleteகடந்த ஒரு வாரம் அசத்திபுட்டீங்க பாராட்டுக்கள் சென்று மீண்டும் வருக சகோ.
ReplyDeleteவாங்க நண்பா ரொம்ப எதிர்பார்போடு ஆவலுடன் உங்கள் வரவை...வாழ்த்துக்கள்
சிறப்பாக பல்சுவையோடு பகிர்ந்த சசிகலாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் செய்தாலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
படைப்பு முழுவதும் கவிதை
அறிமுகங்களும் கவிதை நயத்தோடு இருக்கும் இல்லையா?
வாழ்த்துக்கள்
ஜலீலாகமால்
ஏற்றுக்கொண்ட பணியை நிறைவாக செய்த சசிகலாவுக்கு வாழ்த்துக்கள். புதிய பொறுப்பேற்கும் செய்தாலி அவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeletewelcome to new blog moderator
ReplyDeleteஅருமையான பதிவு ...
ReplyDeleteஉங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib