07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 20, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் நீச்சல்காரன், ஏற்ற பணியினை சிறப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் பல கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் மூலம் பல பதிவர்களை அறிமுகம் செய்து, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 70க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நமதருமை நண்பர்,ஜெயிக்கப்பிறந்தவனான தேவா. இவர் WARRIOR என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். இவர் இது வரை எழுபதுக்கும் அதிகமான இடுகைகள் இட்டிருக்கிறார். பலவேறு தலைப்புகளில் எழுதி வருகிறார். இவரை எண்பதுக்கும் மேலான பதிவர்கள் பின் தொடருகின்றனர். மூன்றே மாதத்தில் இவர் வலையுலகில் ஒரு முக்கிய பதிவர் ஆகி விட்டார்.

நண்பர் தேவா துபாயில் ஒர் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி என்னும் கிராமம்.வரலாற்று நாவல்களில் அதீத ஆர்வமுடையவர். தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டவர். திருவாச்கம், தேவாரம், மணிமேகலை,நாலடியார், குறுந்தொகை, திருமந்திரம், சிலப்பதிகாரம் ஆகியவை இவரது வீட்டில் உள்ள சிறு நூலகத்தினை அலங்கரிக்கும் நூல்கள்.


நண்வர் தேவாவினை வருக வருக என வரவேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறு மொழி

    ReplyDelete
  2. வாங்க தேவான்னா வந்து கலக்குங்க.

    ReplyDelete
  3. வாங்க பாஸ் , நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே . இந்த வாரம் உங்களின் பணியால் சிறப்பாக அமையட்டும் . அய்யா சீனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. கலக்க போகும் தேவாவுக்கு நல் வரவும் வாழ்த்துகளும்..!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது