07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 29, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!! தொடர்ச்சி.

நேற்று இடப்பட்ட பதிவு பலபேருக்கு தெரிந்தாலும் சில பேருக்கு பயனுள்ளதாக இருந்ததாக பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.அதனால்,இன்னும் சில எழுத்துலக பிரம்மாக்களை இன்று பெருமைப்படுத்தலாம்.(அவர்களை அறிமுகப்படுத்த நாம் யார்..?!)

பாமரன் அவர்கள் கம்யூனிச பார்வையில் சமகால நிகழ்வுகளை நக்கலான தொனியில் எழுத்தில் கொண்டு வரும் எழுத்தாளர்.நகைச்சுவையாக இருந்தாலும் சமூகம் குறித்த கோபத்தை இவரது எழுத்தில் காணலாம்.

கல்யாண்ஜி
கவிதைகள்,கதைகள்,பத்திரிக்கையாளர்,சினிமா உதவி இயக்குனர் என இவருக்கு பல முகங்கள்.தற்போது புதிய தலைமுறை இதழில் பணியாற்றி வருகிறார்.இவருடைய பிரபலங்களுடனான நேர்காணல்களை படித்து பாருங்கள்.சுவாரசியமாக இருக்கும்.


என்.சொக்கன்
காந்தி கொலை வழக்கு பற்றியும் எழுதுகிறார்.கம்யூட்டர் கையேடும் எழுதுகிறார்.சிலப்பதிகாரமும் எழுதுகிறார்.பட்டியல் போடமுடியாத அளவிற்கு நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பிரபலங்களின் வாழ்க்கைச்சரித்திரங்களை இவருடைய புத்தகங்களில் படிக்கும்போது நமக்கும் உத்வேகம் வரும்.ட்விட்டரிலும் கலக்குகிறார்.


பேயோன்
சமகால எழுத்தாளரான இவர் உலக இலக்கியத்தின் உள்ளூர் கிளை என முகவுரையிலேயே சுவாரசியமானவர்.ட்விட்டரில் இவர் எழுதியவை ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது.குறிப்பிடத்தகுந்த ஓவியரும் கூட.  :)


முகில்
கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணை ஆசிரியராக பணிபுரியும் இவருடைய புத்தகங்கள் நம்மை படிக்க தூண்டுபவை.அகம்,புறம்,அந்தப்புரம் ஒரு உதாரணம்.


அ.முத்துலிங்கம்
விஞ்ஞானமும்,சார்ட்டட் அக்கவுண்டட் படிப்பையும் முடித்து,ஐ.நாவில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுவிட்டு இப்போது எழுத்தாளராக உள்ள திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடைய தளம்.தமிழ்நாட்டின் பல எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை சிலாகிக்கிறார்கள்.ஏன் என்பதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


ப்ரியன்
எண்ணங்களை உணர்வுகளை எழுத்தாக்கி மகிழும் ஓர் தமிழ் குழந்தை என தன்னைப்பற்றி கூறுகிறார் ப்ரியன் கவிதைகள் எழுதும் வெங்கடேஷ்.கவிதைகள் ரசிக்க வைக்கின்றன.


அழகன்
காதல்காரா என்ற வலைப்பூவில் காதலும் காதல் சார்ந்த உளறல்களையும் கவிதையாக வடித்து வைத்தருக்கிறார் இவர்.புகைப்பட ஆர்வலரும் கூட..

ஆசிரியர்களின் மீது இப்போதுதான் எனக்கு மதிப்பு கூடுகிறது.ஒரு வார ஆசிரியர் பணிக்கே நான் நிறைய படிக்கவேண்டியதாயிற்று.முழுநேர ஆசிரியர்களை நினைத்தால் மரியாதையாகவும்,பாவமாகவும் உள்ளது.எப்படியோ வலைச்சர ஆசிரியர் பணியை வேலைப்பளு என்னை அழுத்தியபோதும் நசுங்கிவிடாமல் என்னளவில் சிறப்பாக செய்திருக்கிறேன் (அத நாங்க சொல்லணும்) என்று நினைக்கிறேன்.அடுத்து விரிவுரையாளர்,பேராசிரியர்,கல்லூரி தலைவர் என்று அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உங்கள் ஆசிகள் தேவை.(திருந்தவே மாட்டானா..?!)ஹி..ஹி...

நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று என்னையும் நம்ம்ம்பி இந்த வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும், பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்த இணைய நண்பர்களுக்கும்
நன்றி..!! நன்றி..!! நன்றி..!!







8 comments:

  1. கல்யாண்ஜி வலைப்பூ வைத்திருப்பது இன்றுதான் தெரியும். நன்றி தேவா..

    ReplyDelete
  2. நண்பர் சேலம் தேவா அவர்களுக்கு, ஒரு வார கால ஆசிரியர் பணியை மிக சிறப்பாய் செய்தீர்கள்...ஒவ்வொரு அறிமுகமும் அருமை...தொகுத்த விதமும் அருமை......தெரியாத பல பதிவர்களை தெரிந்து கொண்டேன்..வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. சிறப்பாக அறிமுகங்கள் தந்து பல்வேறு பதிவுகள் மூலம் பல்வேறு பதிவர்களை அறிமுகம் செய்து இன்று விடைப்பெறும் தேவாவிற்கு என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. நன்றி! வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  5. எல்லாருக்கும் வாழ்த்துகள், தேவாவுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. தேவா சார் வெளிப்படையா ஒரு உண்மைய சொல்றேன் நீங்க கொடுத்து இருக்குற பதிவர்கள் தளம் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்ல நன்றி நண்பா

    ReplyDelete
  7. இந்த ஒரு வாரம் முழுதும் ஆதரவு தந்த அனைத்து நல்இதயங்களுக்கும்,பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி..!!

    @ சசிகுமார்
    பட்..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..!! :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது