07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 21, 2011

கவிதைத் தமிழ்.


கவிதை என்றதும் யார் யாரோ புகழ் பெற்ற கவிஞர்கள் நினைவில் வந்து செல்கிறார்கள்!
ஒவ்வொருவரும் ஏதேதோ பாடுபொருளில் தன் அறிவுக்கு எட்டியவரை கவிதை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.இவர்கள் சொல்லாமல் விட்டுச் சென்ற கவிதைகளை நான் ஒவ்வொரு குழந்தையின் சிறுசிறு செயல்களிலும்,அசைவிலும், சிரிப்பிலும், அழுகையிலும் பார்க்கிறேன் அதனால் தான் கவித்தமிழுக்கு பெரிய பெரிய கவிஞர்களின் நிழற்படங்களை வைக்காமல்,

நான் மதிக்கும் மாபெரும் கவிஞரான குழந்தையின் நிழற்படத்தை வைத்தேன்.


கண்ணதாசன் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை தாம் சொல்லும் கவிதைகளில் சங்கஇலக்கியச் சாயல் இருப்பதை என்னால் காணமுடிகிறது.

42.மாதவிப் பந்தல் வலையுலகம் நன்கறிந்த வலைப்பதிவாகும் இதில் “தமிழ் சினிமாவிலே சங்க இலக்கியம்“ என்னும் இடுகை இதனை மெய்பிப்பதாக அமையும்.

தென்றல், வாடை, கொண்டல், கோடை எனப் பல பெயர் சொல்லி அழைத்தாலும் காற்று ஒன்றுதானே!!
அதுபோல மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ, சென்ரியு, நறுக்கு எனப் பல பெயர்சொல்லி அழைத்தாலும் கவிதை என்பதும் ஒன்றுதானே!
இத்தனை காலங்கள் கடந்தும் நம்மோடும் இருக்கிறது கவிதை
நமக்குப் பின்னும் இருக்கும் வேறு ஏதோ பெயரோடு...

புகழ் பெற்ற கவிஞர்கள்


43. கவிஞர் வைரமுத்து
******
44. கவிஞர் தாமரை
******
45. கவிஞர் அறிவுமதி
******
46. கவிக்கோ அப்துல் ரகுமான்
******
47. தபூ சங்கர்
******
48. தமிழ்க் கவிஞர்களின் பட்டியல்
******
49. யுகபாரதி அவர்களின் வலைப்பக்கம்
******
வலையுலகம் ஈன்றெடுத்த இளங்கவிஞர்கள்


50.கவிஞர் ஹேமா உங்களால் நன்கு அறியப்பட்டவராவார். இவர் ஈழக் கவிதைகளால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர். இவரின் வலைப்பதிவுக்கு “வானம் வெளித்த பின்னும்“ என்று பெயரிட்டுள்ளார். குடியிருப்புகள் என்னும் கவிதை இவரது கவிதைகளில் என்னை மிகவம் கவர்ந்த கவிதையாகும்.
******
51. எழுத்தோசை தமிழரசி வலையுலகம் நன்கறிந்த வலைப்பதிவராவார்.இவரது கவிதைகள் இவருக்கு உலகெங்கும் நட்புகளைத் தேடித்தந்தது. ஆங்கிலம் படித்தவராக இருந்தாலும் தமிழின் மீது தீராத பற்றுடையவர். பெயருக்கு ஏற்றார்போல தமிழுக்கு அரசியாக இருக்க முயற்சி செய்பவர் இவரது கவிதைகளுள்“எல்லாம் உணர்ந்தபோது“ என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும்.
******
52. யாழினி அவர்களின் “யாழினிது“ என்னும் தளத்தில் நான் விரும்பிப்படித்த கவிதை “ மனிதா நீ எப்போது மனிதனாவாய்?“
******
53.ஸாதிகா அவர்களின் “எல்லாப் புகழும் இறைவனுக்கே“ என்னும் வலைப்பதிவில் “பெற்ற மனம் பித்து“ என்னும் கவிதை கல் மனதையும் உருகச் செய்வதாகவுள்ளது.
******
54.நண்பர் சத்ரியன் வலையுலகம் நன்கறி்ந்த கவிஞராவார் இவரது வலைப்பதிவுக்கு “மனவிழி“ என்று பெயரிட்டுள்ளார். இவரது கவிதைகளில் “ஆதலால் என் கணவ“ என்னும் கவிதை என்னை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்ததது.
******
55. அன்பர் திலீபன் அவர்களின் “நமனை அஞ்சோம்“ என்னும் வலைப்பதிவில் “மழையின் பரிணாமங்கள்“ என்ற கவிதை அவரது திறனுக்குத் தக்க சான்றாகவுள்ளது.
******
56. தமிழன் வலை என்ற வலைப்பக்கத்தில் “ எங்களை மன்னியுங்கள் ஐயா“ என்னும் கவிதை சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
******
57.அமைதிச்சாரலின் “கவிதை நேரமிது“ என்ற வலைப்பக்கத்தை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அதில் “தாள ஸ்வரங்கள்“ என்னும் கவிதை குறிப்பித்தக்கதாகவுள்ளது.
******
58. நண்பர் அரசன் அவர்களின் “கரைசேரா அலைகள்“ பதிவில் அவர் எழுதிய “நகர வாழ்வு“ என்ற கவிதை நரகவாழ்வை அடையாளம் காட்டுவதாகவுள்ளது.
******
59.தமிழ்க்காதலன் அவர்களின் “இதயச் சாரல்“ என்னும் வலைப்பதிவில் “விழிகள் தேடும் விடியல்“ மிகவும் ரசிக்கத்தக்க கவிதையாக உள்ளது.
******
60.கவிநாவின் வலைக்கு இவர் “கனவில் தொலைந்த நிஜங்கள் என்று பெயரிட்டுள்ளார். இதில் “நேற்றிரவு பெய்த மழையில்“ நானும் தலைதுவட்டிக் கொண்டேன்.
******
61.நண்பர் மகேசின் “என்னவள் அம்மு“ என்னும் வலைப்பதிவில் உன் அழகைப் பார்க்கையில் காதல் நயம் தோய இருக்கிறது.

******
62.புலவர்.சா.இராமாநுசம் அவர்கள் நல்ல தமிழ்புலமை வாய்க்கப்பட்டவராவார்.மரபின் வழியே கவிபாட இவர் உருவாக்கிய வலைப்பதிவு கவிதைகள் என்பதாகும்.இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் மரபுக்கவிதையின் சுவடுகளுடன் இருக்கும்.இவர் இடும் கருத்துரைகள் கூட பழந்தமிழ் மொழிநடையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.சான்றாக இறுதி மூச்சு உள்ளவரை என்ற கவிதையைப் பாருங்கள்.

அன்பின் உறவுகளே நான் விரும்பிப் படித்த பக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் என் மகிழ்சி இருமடங்காகிவிட்டது. இந்தப் பதிவர்களின் பக்கம் சென்று பாருங்கள் கவித்தமிழ் உங்களைக் கொஞ்சும். அவர்களுக்கு நீங்கள் கருத்துரையிடும்போது உங்கள் மகிழ்ச்சி பல மடங்காகும் என நம்புகிறேன்.

30 comments:

  1. கவித் தமிழ் அருமை.

    குறிப்பாக தபுசங்கர்.

    அனைத்துமே நல்ல தேர்வு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவித் தமிழின் விளக்கம் மிக அருமை.அறிமுகங்களிற்கு நன்றி.
    Vetha.Elangathilakam
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. முதல் நன்றி நானே :-)))

    என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  4. முனைவரே!
    முதற்கண் நன்றி!
    வேர்களைத் தேடிவரும் விழுதுகளில்
    நானும் ஒருவன்
    என்னையும் அறிமுகப்படுத்திய தங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றி!
    புலவர் ஆச இராமாநுசம்

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் முனைவரே...
    எனது நண்பன் தமிழ்க்காதலனை அறிமுகம் செய்தமைக்கு அவன் சார்பாக நன்றி.

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவி.

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி புலவரே தங்கள் தமிழ்ச்சேவை தொடர மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. //தென்றல், வாடை, கொண்டல், கோடை எனப் பல பெயர் சொல்லி அழைத்தாலும் காற்று ஒன்றுதானே!!
    அதுபோல மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ, சென்ரியு, நறுக்கு எனப் பல பெயர்சொல்லி அழைத்தாலும் கவிதை என்பதும் ஒன்றுதானே!//

    இதுதான்
    குணா!

    ReplyDelete
  10. முனைவர் கையில் என் தமிழும் ரசிக்கப்பட்டிருக்கிறது.மிகவும் மகிழ்ச்சி குணா !

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  12. வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி.குறிப்பாக “பெற்ற மனம் பித்து”கவிதையை குறிப்பிட்டு என்னை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.வலைச்சர ஆசிரியப்பணி இனிதே நிறைவு செய்ய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    பிறருக்கு தரும் பின்னூட்டங்களையே கவிதை நடையில் அளித்து வரும் புலவர் சா இராமாநுசம் மிக நல்லதொரு தேர்வு. அதற்கொரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  14. viruthu vangiyathai pondra santhosham..aasiriyar kaiyal arimugam verenna vendum agam magizhthen guna nandri nandri..indraiya arimugamgalil palar nanbargal palar pudhumugamgal vilasam sendra vevaram arigiren veraivil...

    ReplyDelete
  15. நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

    ReplyDelete
  16. அழகான கவிதைப் பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி இராஜேஸ்வரி.

    ReplyDelete
  18. அடுத்தவரைப் பாராட்ட நல்ல மனம் வேண்டும் .அது உங்களிடம் இருப்பதில் மகிழ்கின்றேன்.
    The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
    Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  20. சிறப்பான அறிமுகங்கள் அறிமுகப் படுத்திய தங்களுக்கும் இங்கு அறிமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது