07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 11, 2012

பிளாக்கர்ர்ர்....மெக்கானிக்ஸ்ஸ்ஸ்ஸ்...!


அனைவருக்கும் வணக்கம்... ஒரு தேசத்தின் வளர்ச்சி.... அறிவியல் துறையில்... அந்த தேசம் பெற்றிருக்கும் வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது..! அறிவியல் துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கும்... கம்ப்யூட்டர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..! ஒரு நாடு பொருளாதாரத்திலும் தகவல் தொழில்நுட்ப துறையிலும்... வளர்ச்சியடைய விரும்பினால்... அந்த நாடு.... கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவது... தவிர்க்க இயலாததாகிறது...! தற்போதைய சூழ்நிலையில்... உலகில் உள்ள... அனைத்து நாடுகளும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த துவங்கிவிட்டன... இவ்வாறு... பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பழுதடைந்து உபயோகமற்றவையாக மாறி.... இறுதியில் குப்பையாக மாறுகிறது.!

பிளாஸ்டிக்.. போன்ற அழியாக் குப்பைகளால் ஏற்கனவே... குப்பைமேடாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகம்.... இனி வரும் காலங்களில் பெருகிவரும் இந்த கம்ப்யூட்டர் குப்பைகளால்... மெகா குப்பை மேடாக காத்திருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை...! பலவிதமான சுற்றுப்புறச்சூழல்... சீர்கேட்டை உண்டாக்கும் மின்னணு குப்பைகள் என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் குப்பைகளை... முறையாக அகற்ற வழி தெரியாமல் இப்போதே உலக நாடுகள் தடுமாற ஆரம்பித்து விட்டன...!

இந்தியாவில் மட்டும் தோராயமாக ஆண்டுக்கு 25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள்... பயன்படுத்த தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டு குப்பையாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிறது சமீபத்திய புள்ளிவிபரங்கள்.... என்றால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எத்தனை கம்ப்யூட்டர்கள் குப்பையாக மாறிக்கொண்டிருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்..! பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை... சரி செய்ய ஆகும் பணத்தில் ஒரு புதிய கம்ப்யூட்டரையே வாங்கி விடலாம் என்பதால்.... யாரும் பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை சரி செய்து பயன்படுத்த முன் வருவதில்லை...!

அமெரிக்கா.. ஜப்பான்.. ஜெர்மனி... போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள ஓரளவு பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை இந்தியா.. சீனா.. பாகிஸ்தான்.. பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து... பணம் ஈட்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல்.... மின்னணு குப்பைகள்... விசயத்திலிருந்தும் ஓரளவிற்கு தப்பிக்கொள்கிறது..! இந்த பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகளான சீனா.. இந்தியா..  உள்ளிட்ட ஆசிய நாடுகள் தான் மின்னணு குப்பைகள் விசயத்தில் எதிர்காலத்தில் அதிக அளவில் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு தவிக்க போகும் நாடுகள் ஆகும்..!

கம்ப்யூட்டர்களில் உள்ள சர்க்யூட் போர்டு (Circuit Board) ... மானிட்டர் (Monitor) ... கேத்தோடு-ரே-ட்யூப் (Cathode Ray Tube) ... பேட்டரி (Battery) ஆகியவற்றில்... காப்பர் (Copper).. துத்தநாகம் (Zing).. பெரிலியம்(Beryllium) போன்ற ரசாயன பொருட்கள் பெருமளவில் அடங்கியுள்ளன.. இவை கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் ஆவியாகி காற்றில் கலந்து மனிதர்களுக்கு எண்ணற்ற சுகாதார கேடுகளை ஏற்படுத்த வல்லவை.! அதோடு மானிட்டரில் இருந்து வெளியேறும்... காரீய ஆக்ஸைடு (Lead Oxides) மற்றும் பேட்டரிகளில் இருந்து வெளியேறும்... பாலி குளோரினேட்.... பைபீனல் புரோமினேட் போன்றவை எதிர்காலத்தில் மனிதனது ஆரோக்கிய வாழ்விற்கு வேட்டு வைக்கும் முக்கிய காரணிகளாக திகழப்போகின்றன என்றால் மிகையில்லை..!

கம்ப்யூட்டர்களின் பெரும்பாலான பாகங்கள்... பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தான் தயாரிக்கப்படுகின்றன... இந்த பிளாஸ்டிக்குகள் எக்காலத்திலும் மக்கி அழிவதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழலையும் வெகுவாக பாதிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது..! அந்த வகையில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருக்கும் போதும் சரி பயன்பாட்டிற்க்கு பிறகும் சரி எண்ணற்ற தீமைகளை மனித குலத்திற்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத நிஜம்..! ஃபிரிட்ஜ்.. டீவி.. வாஷிங்மெஷின்.. மின்சார அடுப்புகள்.. குழந்தைகள் விளையாடும் எலெக்ட்ரானிக் பொம்மைகள் ஆகியவையும் கம்ப்யூட்டர்களோடு இணைந்து மின்னணு குப்பைகளாய் மாறி நம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வேட்டு வைக்க காத்துக்கொண்டிருக்கின்றன.... ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்ப்யூட்டர்கள் நிச்சயம் தேவைதான்.. அதே நேரம்.. அவை மின்னணு குப்பைகளாய் மாறி மனித குலத்தின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு கேள்விக்குறியாய் நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது தானே நண்பர்களே.! இன்னும் எழுதலாம் பக்கம் பக்கமாய்... ஆனால் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.! இனி தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்..!
--- 
அறிமுகம்-4; வலைத்தளம்: http://tvs50.blogspot.com/
பதிவர்: tvs50

என் வாசிப்பு எல்லையில்.. ஒரு தொழில்நுட்ப பதிவரின் பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்தவர் டிவிஎஸ்-50-யாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.! தொழில்நுட்ப பதிவுகளில் இவர் காட்டிய எளிமை.. இவர்... பதிவிடுவதை நிறுத்தி  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்.. இன்று வரையில் எந்த தொழில்நுட்ப பதிவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டச் செய்திருக்கிறது. பீட் பர்னர் குறித்து இவர் எழுதிய பிளாக்கின் வாசகர்களைஅதிகரிக்க நிரந்தரமாக்க என்ற இடுகையைத்தான் நான் முதன் முதலாக கூகிள் வழித்தேடல் மூலமாக படிக்க நேர்ந்தது.! பிளாக்கின் உள்ளேயே படங்கள் திறக்க, மற்றும் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க மற்றும் பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட மேலும் வாசிக்க என்பவை குறித்தெல்லாம் அன்றே (அப்போது நான் இணையம் பற்றி கூட அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை) அவர் எழுதிய இடுகைகள் என்னை பொருத்தவரை வியப்பிற்குரியது. இவர் பதிவு எழுதுவதை நிறுத்துவதற்குறிய காரணம் எதுவாக இருந்தாலும் அவற்றை கடந்து மீண்டும் எழுதவர வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது!

அறிமுகம்-5; வலைத்தளம்: http://www.bloggernanban.com/
பதிவர்: அப்துல் பாஸித்

டிவிஎஸ்-ஸிடம் நான் கண்ட அதே எளிமை பிளாக்கர் நண்பனிடமும் இருக்கிறது.! சற்றேறக்குறைய இவரது பிளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி என்ற இடுகையைத்தான் முதலில் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இவரது ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற தொடர் இடுகை மூலம் பிளாக்கர் வடிவமைப்பு பற்றி நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன் என்றால் மிகையில்லை.! அதைப்போல பேஸ்புக்கில் கப்பலேரும் மானம் மற்றும் அறிவது நல்லது கூகிள் பாதுகாப்பு என்ற இடுகைகள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டியவை என்று கருதுகிறேன்! சகபதிவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்களை தீர்த்துவைப்பதில் இவர் காட்டும் வேகம்... பதிவுலகில் இவருக்கென்ற ஒரு அடையாளத்தை எற்படுத்திக்கொண்டிருக்கிறது!

அறிமுகம்-6; வலைத்தளம்: http://www.vandhemadharam.com/
பதிவர்: சசிகுமார்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் சந்தாதாரர்கள்.. ஆயிரத்தி ஐநூறை நெருங்கும் பின்தொடர்பாளர்கள் என்ற வியக்கத்தகு சாதனைக்கு சொந்தக்காரர் வந்தேமாதரம் சசி. பதிவு எழுதும் அனைவரும் பல்வேறு பேஸ்புக் குழுமங்களில் இணைந்திருப்போம் (என்னை தவிர... அது என்ன மாயமோ தெரியலை இதுவரை எந்த குரூப்பும் நம்மளை சேர்த்துக்கலை ஹி ஹி ஹி) அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழுமங்களில் இணைந்திருந்தால் பதிவுகளை ஒரே கிளிக்கில்அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்வது எப்படி என்ற இவரது இடுகையை வாசிக்க தவற வேண்டாம்! வலைப்பூவின் பேஜ்வியுஸ் அதிகரிக்க RECOMMENDED FOR U என்ற விட்ஜெட் நிறுவுவது குறிப்பிடும் அவரது இடுகையையும் வாசித்து பயன் பெறுங்கள். பிளாக்கரில் Subscribe விட்ஜெட் நிறுவுவது எப்படி என்ற இடுகையும் நீங்கள் வாசிக்க வேண்டிய ஒன்று தான்! வலைத்தளம் வைத்திருக்கும் எல்லோருக்கும் பயன்படும் இடுகையான உங்கள் வலைப்பூ வைரசினால்பாதிக்கப்பட்டுள்ளா என்பதை கண்டறிய நம் வலைத்தளத்தை அடிக்கடி ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுதல் இன்றியமையாதது. அந்த வகையில் இந்த இடுகையும் அதி முக்கியமானது!

இன்று நான் அறிமுகப்படுத்திய மூவரையும் அறிமுகப் பதிவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. ஏனெனில் இவர்கள் மூவரும் ஏற்கனவே சிகரம் தொட்டவர்கள்..! இவர்களை நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.! எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால் நாளை மீண்டும் ஏதாவது ஒரு தகவலுடனும்.. என்னை கவர்ந்த சில பதிவர்களுடனும் வருவேன்.. மீண்டும் சந்திப்போம் ... நன்றி.. வணக்கம்...!

38 comments:

  1. கணினி பற்றிய விளக்கமும் அதோடு ஒன்றிய பதிவர்களும் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அற்புதமான தகவல்களோடு, பெரிய மெக்கானிக்குகள் பற்றி சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்

    வாங்க தனபாலன் சார்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

    @ Sasi Kala

    வாங்க சகோ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  4. @ Prabu Krishna

    வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  5. கவலைக்குரிய தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். வல்லரசு நாடுகள் வளரும் நாடுகளை தங்கள் கழிவுகளைக் கொட்டும் குப்பை மேடாகத்தான் பார்க்கின்றன. இது போன்ற கழிவுகளை இறக்குமதி செய்வதை அரசு தடை செய்வது தான் சரியானது.

    tvs தளத்தை நானும் கூகுள் தேடல் மூலம் தான் பார்த்தேன். சிறந்த தொழில்நுட்ப பதிவர். மீண்டும் எழுத வர வேண்டும் என்பதே என் ஆசையும்.

    நண்பர் சசிகுமார் அவர்களின் சாதனையும் பிரமிக்கக் கூடியது.

    இவர்களுக்கு இடையில் எண்ணையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  6. ஆம். இந்த மூவரும் அறிமுகம் தேவைப்படாதவர்கள். என் நண்பரான ப்ளாக்கர் நண்பன் பற்றி உங்கள் மூலம் படித்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் நல்லறிமுகங்கள். அறிமுகம் பெற்றவர்களுக்கும் உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கம்பியூட்டர் குப்பைகள் பற்றி எழுதி மிரட்டி விட்டீர்கள்

    நண்பர்கள் மூவரும் டெக்னிகல் ஜித்தர்கள் !

    ReplyDelete
  8. சில பெரிய IT கம்பெனிகள் E-Waste Disposal முறைப்படி செய்கின்றன! அதாவது காசு கொடுத்து பழைய கணிப்பொறிகளை விற்கின்றன! (மறுசுழற்சிக்கு!) :)

    நல்ல மீள் அறிமுகங்கள்! :)

    ReplyDelete
  9. மின் குப்பைகள் (e-waste)பற்றிய விவரத்திற்கு நன்றி.
    அறிமுகம் செய்துள்ள பதிவர்கள் மூவரின் பதிவுகளைப் படித்துப் பயன் பெற்றவன் நான். இவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  10. கண்டிப்பாக எல்லாருமே படித்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அனைவருக்கும் வாழ்துகள்.

    ReplyDelete
  11. ஒரு கணக்காளர் குப்பையை கிளப்புகிறார்...-:)

    TVS இவ்வளவு நாள் தெரியாது போச்சு...தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள். கணினி குறித்த தகவல்களும் நன்று.

    ReplyDelete
  13. மின்னனு குப்பைகள் இந்தியாவின் துயரமாக மாறுவதற்குள் விழித்துக் கொள்ளவேண்டும் அருமையான பதிவு!

    ReplyDelete
  14. கம்யூட்டர்கழிவுகள் குறித்த கட்டுரை அருமை
    அறிமுகப் படுத்தியுள்ள வலைத்தளங்கள்
    அனைத்தும் மிக்க பயனுள்ளவை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. @ வெளங்காதவன்™

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. @ Abdul Basith

    நிச்சயமாய் அரசு விழித்துக்கொள்ளும் என்று நம்புவோம்..! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    @ பால கணேஷ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..!

    @ மோகன் குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

    ReplyDelete
  17. @ Karthik Somalinga

    கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

    @ வலைஞன்

    இங்கேயும் வந்துட்டீங்கலா.. வாங்க வாங்க :) :)

    @ வே.நடனசபாபதி

    தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி ஐயா.!

    ReplyDelete
  18. @ Lakshmi

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா.!

    @ ரெவெரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!

    @ ராமலக்ஷ்மி

    தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!

    ReplyDelete
  19. @ s suresh

    வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.!

    @ Ramani

    வாங்க ரமணி ஐயா.. தங்களின் தொடர் ஆதரவு என்னை உற்சாகப்படுத்துகிறது...!வருகைக்கும் கருத்திற்க்கும் வாக்குக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  20. முதலில் வலைசரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்றத்துக்கு வாழ்த்துக்கள்.இந்த மும்மூர்த்திகளினால் என்னுடைய வலைபதிவையும் சிறப்பானதாக்க முடிந்தது

    ReplyDelete
  21. @ அன்பை தேடி,,அன்பு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!

    ReplyDelete
  22. tvs தளத்தை இப்போது தான் அறிகிறேன் நல்ல தளம் நன்றி

    ReplyDelete
  23. @ PREM.S

    இந்த பதிர்விர்க்கான ஒரு சின்ன மன நிறைவு உங்கள் கருத்துரைகளில் இருந்து கிடைக்கபெற்றேன்...! :) :)

    ReplyDelete
  24. இந்த மூன்று பேரின் தளங்களையும் பெரும்பாலான பதிவர்கள் அறிந்திருப்பார்கள். அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. நல்ல அறிமுகங்கள்...
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  26. பொதுவாக தொழில் நுட்பத் தளங்கள் என்றால் நான் தேடிப்படிப்பது அதிகம்...

    மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  27. @ விச்சு

    வாங்க விச்சு சார்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!

    @ சே. குமார்

    வாங்க குமார்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

    ReplyDelete
  28. @ ♔ம.தி.சுதா♔

    வாங்க ம.தி.சுதா... தாங்கள் இங்கும் வந்தும் என்னை உற்சாகபடுத்துவது மனதிற்கு மகிச்சியை தருகிறது.. மிக்க நன்றி!

    ReplyDelete
  29. மின்னணு குப்பைகள் பற்றி மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்,, இதுவரை யாரும் பெரிதாக எழுதாத விடயம் அது...

    வலைச்சரத்தில் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. nalla sonneenga!

    computer patriya theemaikalai!

    puthiya arimukangal vaazhthukkal!

    ReplyDelete
  31. வரலாற்றுச் சுவடுகள் அல்லவா ! எனவேதான் அறிமுகமும் வரலாறாகவே உள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. @ Riyas

    வாங்க ரியாஸ்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    @ Seeni

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. @ புலவர் சா இராமாநுசம்

    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா.!

    ReplyDelete
  34. மின்னணுக் குப்பைகளைப் பற்றி மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் நண்பரே. ஆனால் தாங்கள் கம்ப்யூட்டர் என்ற சொல்லுக்கு கணினி என்ற அழகான தமிழ் சொல் இருக்கிறது என்பதை மறந்துவிட்டீர்கள் என்பதை தாழ்மையுடன் நினைவுப் படுத்த விரும்புகிறேன்...

    ReplyDelete
  35. @ இரவின் புன்னகை

    இதனை யாராவது ஒருவர் நினைவூட்டுவார்கள் என்று நம்பிகையுடன் காத்திருந்தேன் நண்பரே., ஒருவரும் அதை பற்றி குறிப்பிடவேயில்லை கடைசிவரை., இப்போது நீங்களாவது குறிப்பிட்டீர்களே., மிக்க மகிழ்ச்சி :)

    [கணினி என்ற சொல் என் நினைவில் வந்தது பதிவை போஸ்ட் செய்த பின்புதான்]

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது