07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 6, 2008

நம்மால் முடியாதது, இவங்களால் முடியும்!

இந்த ஒரு வாரமா எனக்கு இதே வேலையா போச்சு! எத பத்தி சொல்றேன்னு தெரியுதா, போஸ்ட்களுக்கு தலைப்பு வைக்கறத பத்தி தான்! புதுசா தலைப்பு இருக்கனும் ஆனா, எழுதுவதற்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இருக்கனும்! எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்படின்னு நானும் என் மனசாட்சியும் ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி எங்களுக்குள்ளேயே நடத்தி கொண்டோம்!

ஆனா, இதைவிட கஷ்டம் ஒரு பக்க கதை எழுதுவது! இப்ப இருக்குற அவசரமான நவீன காலத்தில், fast food காலத்தில், திடீர் சாம்பார், திடீர் ரசம் எல்லாம் வந்துவிட்டது. எந்த வேலையாக இருந்தாலும் சீக்கிரம் முடித்துவிட்டு போய்கிட்டே இருக்கனும் என்று தான் எல்லாரும் நினைக்கிறோம். அப்படிப்பட்ட காலத்திற்கு ஏற்ப, இப்போ ஒரு பக்க கதை எழுதும் பதிவர்கள் நிறைய பேர் இருக்காங்க...

எனக்கு கதை படிக்க பிடிக்கும். கதை தலைப்பு என்னை ஈர்க்கனும்! முதல் பத்தி படித்தவுடன் என்னுள் ஆவலை தூண்டோனும்! இப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அந்த கதைய...ம்ம்ம்...சாரி! பிடிப்பதில்லை!படிப்பதில்லை!

ஆனா, நம்ம வலைப்பூ உலகில் ஏகப்பட்ட ஒரு நிமிடக்கதை/ ஒரு பக்கம் கதை எழுதும் வித்தகர்கள் உள்ளனர்.

இதில் பெயர் போனவர் நம்ம வினையூக்கி தான்! எவ்வளவு! எத்தன கதைகள். இப்போ சமீபத்தில் எழுதிய கதை. படித்தவுடனே நம் மனதில் ஒரு தாக்கம். 'அட' என்று ஆச்சிரியத்தில் நம்மை ஆழ்த்தும் கதைகள்.
http://vinaiooki.blogspot.com/2008/07/blog-post.html

எப்படி தான் யோசிப்பாங்களோ? ரூம் போட்டா, போடாமலா? ஒன்னும் தெரியல்ல.. ஆனா கதை மட்டும் அருமையா வந்துடும்! நான் ஒரு பதிவு எழுதவே மூச்சு வாங்கும். நம்ம இம்சை அரசிய பாருங்க, கதையும் எழுதி அதில் ஒரு கருத்தும் வைத்து, பின்னி பெடல் எடுப்பார். http://imsaiarasi.blogspot.com/2007/12/blog-post_15.html

எனக்கு கதை பிடிக்கனும்ன்னா, இந்த தலைப்பு விஷயத்த பத்தி சொன்னேல, அந்த ரகத்தை சேர்ந்தது தான் 'நித்யா, எனக்கு பயமா இருக்கு'. பதிவர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய கதை. தலைப்பே ஆவலை தூண்டியது. படித்து பார்த்து 'அட அழகா இருக்குது கதை' என்று சொல்ல வைத்தது.

பல தருணங்களில் கதைகள் படித்து முடித்த பிறகு, மனசுக்குள் ஒரு வலி கலந்த ஒரு சுகம் ஏற்படும்! நம் ஆழ்மனங்களை தொடும் வல்லமை படைத்த கதைகள் ஏராளம். அப்படிப்பட்டது தான் கார்த்திகேயன் எழுதிய அழகிய அம்மு.

http://vijayabharathi.blogspot.com/2006/10/this-is-my-first-attempt-towards-short.html
இந்த வலைப்பக்கத்துக்கு சொந்தக்காரர் ஒரு மருத்துவர். தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து கொண்டு இருக்கிறார் டாக்டர் விஜி. இவங்க கதை எழுதுவதில் அதுவும் மர்ம கதைகள், பேய் கதைகள் எழுதுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய முதல் கதையே நல்லா இருந்துச்சு.

last but not the least அதிக அறிமுகம் தேவைப்படாத நம்ம திவ்ஸ். நான் அவரை அப்படி தான் அழைப்பேன். மனசுக்குள் மத்தாப்பூ என்பது வலைப்பக்கம் மட்டும் அல்ல... எழுத்துகள் வழி மத்தாப்பூ வரவழைக்கும் ஆற்றல் பெற்றவர். கதை எழுதுவார் பாருங்க.. படித்து கொண்டே இருக்கலாம். romance, love, relationships போன்ற கதை எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே!
கதைகளுக்கு ஏற்ப படங்களுடன் போட்டு, அசத்திடுவார்!

http://manasukulmaththaapu.blogspot.com/2008/06/blog-post_11.html

அதாங்க, நம்மில் பலரால் முடியாத ஒன்றை இவர்களால் மட்டுமே செய்ய முடிகிறது? கதை எழுதுவதே கஷ்டம், அதிலும் ஒரு பக்க கதை எழுதுவது மகா கஷ்டம். நமக்கு கஷ்டமாக இருப்பதை இவங்க இஷ்டத்தோடு செய்வதை பார்த்து நாம் வாழ்த்துவோம்! :)

11 comments:

 1. மீ த பர்ஸ்ட்டு...... :)

  ReplyDelete
 2. நல்ல கதை சொல்லிகளை தேடி பிடிச்சு இருக்கீங்க... எல்லாரும் ந்ல்லா எழுதுற ஆட்கள்... :)

  ReplyDelete
 3. திரும்பவும் அதேதாங்க...சூப்பர் கலெக்ஷன்...

  சரீஈஈஈஈ....இவங்களுக்கு பட்டங்கள் எதுவும் இல்லியா????

  ReplyDelete
 4. நிறையக்கதை படிக்கலாம்...:)

  ReplyDelete
 5. எல்லோருமே நல்லா கதை அளப்பாங்க அதுலயும் நம்ம திவ்யா மாஸ்டர்...:)

  ReplyDelete
 6. ஃஃநம்மால் முடியாதது, ஃஃ
  இப்படி சொல்லி ஒரு நல்ல link collection ஒன்னு குடுத்திருக்கீங்களே!!! சூப்பரு

  ReplyDelete
 7. சபாஷ், அருமையான தொகுப்பு.

  ReplyDelete
 8. ஆஹா...தொகுப்பு சூப்பரா இருக்கு. தினமும் ஒரு பதிவு தான் என்றாலும் மிக அருமையான பதிவுகள்.

  ReplyDelete
 9. எனதருமை தோழி காயத்ரிக்கு
  நன்றி சொல்ல
  வார்த்தைகள் என் மனதில்
  அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.......
  அவைகளை பிடித்து சேர்த்து
  கவிசரம் தொடுக்க போதிய நேரம் இல்லை.......

  என் எழுத்துக்களை ரசிக்கும் உன் ரசிப்பிற்கும்,
  தொடர்ந்து உற்சாகமளிக்கும் உன் ஆதரவிற்கும்
  மேலான உன் நட்பிற்கும்
  என் மனமார்ந்த நன்றி காயத்ரி!!!

  ReplyDelete
 10. @திவஸ்

  //அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.......
  அவைகளை பிடித்து சேர்த்து
  கவிசரம் தொடுக்க போதிய நேரம் இல்லை.......///

  ஹாஹா...:)

  ReplyDelete
 11. வினையூக்கியின் மறந்தபடியே ஒரு நினைவு" படித்தது விட்டு அதன் தாக்கத்தில் மறந்தபடி நேற்று சென்றுவிட்ட நான் நினைவு வந்து வந்தேன் இன்று பின்னூட்டமிட. ஆமாங்க தலைப்பு வைக்கிறதைப் பத்தி நீங்க சொன்னதுக்கும் அந்தக் கடைசிப் பத்திக்கும் என் வோட்டையும் சேர்த்துக்குங்க!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது