07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2008

காதலிக்க போறேன்..காப்பாத்த வாங்க..

என்னடா காதலிக்க போறேங்குறான்.காப்பாத்த வாங்கங்கறான்..இவனுக்கு என்ன தான் வேணும்..ஒரு பதிவையும் உறுப்படியா போட வழியில்லாம எல்லாத்துக்கும் நம்மளையும் கூப்பிட்டு மொக்கை போடுறான்னு பாக்கறீங்களா?.. நோ நோ அழக்கூடாது..

இந்த காதல் இருக்கே..சும்மா சொல்லக்கூடாதுங்க...காதல்னு ஒரு வார்த்தையோட நீ நான்னு எதை சேர்த்தாலும் கவிதையா மாறி மனசுக்கு இதமா இருக்கும்..இங்க நம்ம நண்பர்களும் அப்படி தான்...சும்மா காதல்னு வந்தாலே வார்த்தைகளை கோர்த்து காதலுக்கு இனிமையை சேர்த்து விடுவார்கள்.

சரி யாரெல்லாம் இப்படி காதல் காதல்னு சுத்திட்டிருக்காங்க அப்படீன்னு

பார்க்கலாம்..நீங்களும் வரீங்க தானே?முதலாவதா நான் சொல்ல நினைக்கிறது கோகுலன்..இவர் இணைய குழுமங்களில் கோகுலனின் காதல் காதல் காதல் என கலக்கு கலக்குன்னு கலக்குவார்..கவிதைவரிகளில் காதல் கன்னாபின்னாவென்று பெருக்கெடுத்து ஓடும்..ஒரு அழகான காதல் இரண்டற கலத்தலென்பது ன்னு சொல்லியிருக்க்கார்..ஐயோ பறவைகளின் வழியாய் காதலை

//ஒன்றாய் பறக்கையிலும்

ஒன்றின் இறகு விசிறித்தரும்

காற்றேமற்றொன்றின் சுவாசம்//என்ன அழகாக சொல்லியிருக்கார்..இன்னொன்னு பாருங்களேன்..இந்த காதல் இவரை என்ன பாடு படுத்தியிருக்குமென..வந்தாலும் வரலாம்.. தூக்கம் வராம எப்படி தத்தளிக்கிறார்னு பாருங்களேன்..காதல் ரொம்ப தான் படுத்துதுன்னுநினைக்கிறேன்..அடுத்தது நம்ம பாசக்காரபய மீறான்..சம்பன் குளத்தான்னு வலைப்பூவீல் காதலை பிச்சி பிச்சி உதறராருங்க..மெல்லதிறந்தது (காதல்) கனவு ன்னு ஆரம்பிச்சு அந்த கவிதையில் காதல் அழகா ? காதலி அழகான்னு திக்கு முக்காட தான் வெச்சுடறாரு...

//
#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. ! //காதலை பிரசவத்தோடு ஒப்பிட்டு அழகாய் எழுதியிருக்கிறார்..சரி இந்த பதிவுல இந்த ரெண்டு காதலர்களை பார்த்தோம்..இந்த பாகம் மட்டும் இன்னொன்னா போடுடான்னு மனசு சொல்லுது..சொன்னா கேட்டூ தானே ஆகணும்..இல்லன்னா தமிழ் மாங்கனியோட மனசாட்சி மாதிரி எல்லார் மத்தியிலும் உண்மையெல்லாம் சொல்லிடுச்சுன்னா என்ன பண்றது சாமி..

அதனால மக்களே அடுத்த பாகத்தில் இன்னும் பல நண்பர்களோடு வருகிறேன்...

6 comments:

 1. ஆகா ஆகா - காதலர்கள் - கோகுலனும் மீறானும் காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்கள் = அருமையான பதிவு - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஒரே ஒரு குரல் சத்தமா தான் இருக்கு...

  அடுத்த பதிவுல நீங்களும் வருவீங்களா சாமி...

  ReplyDelete
 3. அதனால மக்களே அடுத்த பாகத்தில் இன்னும் பல நண்பர்களோடு வருகிறேன்...


  காப்பாத்துன்னு குரல் கேட்டு ஓடி வந்தேன். சுட்டிகள் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 4. //காப்பாத்துன்னு குரல் கேட்டு ஓடி வந்தேன். சுட்டிகள் நல்லா இருக்குங்க.
  //

  ஆஹா தென்றல் வந்துடுச்சு....ஆசையில் அடுத்த பதிவு போடுறேன்....

  ReplyDelete
 5. நல்ல தொகுப்பு... வேற ஏதாவது மொக்கை போடலாம் என்னா முடியல்ல சரி பொழைச்சு போங்க

  ReplyDelete
 6. /
  "காதலிக்க போறேன்..காப்பாத்த வாங்க.."
  /

  அடிவாங்கறதுக்கு ஆள் சேத்தற மாதிரி தலைப்பு இருந்தாலும் கோகுலன், மீறான் அன்வர் பதிவு சுட்டிகள் இனிமை.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது