07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 21, 2008

நான் இறக்கப்போகிறேன்

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/

"நான் இறக்கப்போகிறேன்" - என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக எழுது வருகிறார்.

அருமை, நன்றாக உள்ளது என்று ஏதோ பின்னூட்டம் போடவேண்டுமே என்று போடாமல் எனது பல பதிவுகளுக்கும் நிறைவாக பின்னூட்டமிடுகிறாரே! யாரிவர்? ஏன் இந்த தலைப்பில் தனது வலைப்பூவின் தலைப்பை இவர் இப்படி வைத்திருக்கிறார் என்று யோசித்து அதைப் பற்றி கேட்டுத் தெரிய நேரமின்றி அப்படியே விட்டு விட்டேன்.

பலர் இந்த தலைப்பை மாற்ற பின்னூட்டங்களிட்டாலும் இவர் தன்ன்னுடைய வலைப்பூவின் தலைப்பை பல மாதங்களக மாற்றவே இல்லை. விலாசம் அதுவே தான் என்றலும், தனது வலைப்பூவின் பெயரை மட்டும் சில மாதங்களுக்கு முன்னர் "அன்புடன் அருணா" என்று மாற்றியிருக்கிறார்.

"நான் இறக்கப்போகிறேன்" என்ற வாசகம் கேட்கும்போது ஒரு பயமும் எதிர்மறை எண்ணங்களும் வந்தாலும் "அது நிஜம் தானே! இந்த புரிதல் ஒவ்வொரு நாளும் உணர்ந்தால் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதியே என்று எனது அறிவு என்னை மண்டையில் தட்டிச் சொன்னதினால், நான் அருணாவிடம் எதையும் பேசவில்லை.

புதிய தலைப்பிலேயே அவருடைய பெயர் உள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆம் இவர் பெயர் அருணா. தூத்துக்குடியை சேர்ந்த இவர் தற்போது ரஜஸ்தானில் தனது இனிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.

அங்கிருக்கும் சிறப்பான பள்ளி ஒன்றில் உதவித் தலமை ஆசிரியராக இருக்கிறார். இவர் எம்.ஏ. , பி.எட். எம் பில் என மூன்று கல்வி முத்திரையை பெற்றவர். கணவர் மார்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) பணியில் உள்ளார். அவர் பெயரும் சுரேஷ் தான். இந்த தம்பதியருக்கு இறைவன் அளித்த இரண்டு பிள்ளைகளும் அங்கேயே படித்து வருகிறார்கள். நேற்றைய முந்தினம் இந்த தம்பதியர் தங்களின் 21 ஆம் வருட திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த இனிய தாம்பத்தியம் நூறுவருடங்கள் காண பிரார்த்தனை செய்கிறேன். இதை வாசிக்கின்றவர்களும் வாழ்த்துங்கள்.

அருணா, வலைப்பூ ஆரம்பித்த வேளையில் தமிழ்மணம் இவரின் பதிவுகளை எடுத்துக்கொள்ள சில தொழில்நுட்ப காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. அப்போது என்னுடன் பேச ஆரம்பித்தார்கள். நான் அந்தோணியின் ப்ராஜக்ட் எடுத்த வேளை அது! அப்போது அந்தோணியிடம் பலர் பேசினால் தான் அவனுடைய மனம் மகிழும், தன்னை பலர் நேசிக்கிறார்கள் என்று உணர்வான், வாழ்க்கையில் சந்தோஷம் மலரும் - என்பதற்காக எனது நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என எல்லோரிடமும் அந்தோணியிடம் நேரம் கிடைக்கும்போது பேசச் சொன்னேன். எல்லோரும் பேசினார்கள். ஆனால் சிலரைத் தவிர யாரும் இரண்டு முறைக்குமேல் பேசவில்லை:-)

ஆனால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து, ஏறத்தாழ தினமும் அந்தோணியிடம் பேசி நல்ல ஊக்கம் கொடுத்து வருகிறார், அருணா!
அந்தோணி இவர்களை "அம்மா" என்று அன்போடு அழைக்கும் அளவிற்கு பாசத்தை அள்ளிக்கொடுத்து வருபவர் இந்த அருணா!

சில மாதங்களுக்கு முன் இவரும் இவருடைய கணவர் திரு சுரேஷ அவர்களும் என்னை சென்னையில் சந்திக்க வேண்டும் என்ற போது, நேரம் இருந்தால் சந்திப்போம் ஆனால் நிச்சயம் அந்தோணியை நீங்கள் இருவரும் சந்தித்தே ஆக வேண்டும் என்றேன். அதன்படி அப்படியே செய்தார்கள். அன்று காலை முதல் காத்திருந்த அந்தோணி இப்படி ஒரு தாய்ப்பாசம் தரும் அருணாவை நேரடியாகக் கண்டதுமே சந்தோஷத்தால் அழுது விட்டான், பாவம்! தொலைபேசியில் நான் திரு சுரேஷுக்கு நன்றி சொன்னேன். அருணாவிற்கு நன்றி சொல்ல தேவையென்ன என்ற கேள்வியால அருணாவிடம் நன்றி சொல்லவில்லை!

அருணாவைப் போன்றவர்கள் பலர் இன்னமும் இந்த பூமியில் இருப்பதால் தான் இயற்கை இந்த அளவிற்காவது நம்மை காப்பாற்றிக்கொண்டு வருகிறதோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

நான் செய்யும் சின்னச் சின்ன சமுதாய சேவைகளுக்கு எனக்கு ஊக்கம் தந்து பாராட்டி உதவ முன் வரும் பலரில் மூத்தவர்கள் எனது இனிய தோழி இந்த அருணா என்று மிகவும் சந்தோஷமாக தெரிவிக்கிறேன், அதில் பெருமிதம் கொள்கிறேன்!

ஆனால் இதுவரையில் நானும் அருணாவும் ஒருமுறை கூட சந்தித்தே இல்லை! சேவை தானே முக்கியம் சந்திப்பில் என்ன இருக்கிறது என்ற எனது கேள்விக்கு சின்னக் குழந்தையைப் போல் அருணா சிரிப்பார்கள். அவரோடு அவரின் கணவர் திரு சுரேஷ் அவர்களும்!

எனது நண்பர்கள் பட்டியலில் நான் சந்திக்காதவர்கள் தான் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு கவலையும் இல்லை! சொர்கத்தில் எல்லோரையும் நிச்சயம் சந்திப்பேன்/சந்திப்போம்!!! :-)

அருணா தனது எட்டாவது வகுப்பு காலம் முதல் கவிதை கட்டுரைகள் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை அறுபதிற்கு மேலாக கவிதைகள் அச்சிடாமல் இருக்கிறது. விரைவில் இவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிட நான் வாழ்த்துகிறேன். படிக்கின்ற காலதில் இவருடைய படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்துள்ளன. இது மட்டுமின்றி மங்கையர் மலர், தினமலர் ஆகியவைகளிலும் இவருடைய படைப்புகள் வெளியிட்டுள்ளன.

குடும்பம், வேலை என இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் இணையதளம் இவருக்கு மாபெரும் ஆறுதலாக உள்ளது என்கிறார். பலருக்கு உதவி செய்யவும் நண்பர்கள் பலரோடு இணையம் வழி பேச முடிவதும், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் இணையதளம் பெரிதும் உதவுகிறது என்கிறா அருணா!

மேல் குறிப்பிட்ட அருணாவின் வலைப்பூவிற்கு நீங்கள் சென்று பாருங்கள். அவர்கள் எழுதியதில் எனக்கு பிடித்தவைகளின் சுட்டிகளை போடுங்கள் என்றால் நான் எல்லாவற்றையும் இட நேரிடும் என்பதால் தான் உங்களை அவர்களின் வலைப்ப்புவிற்கு அழைக்கிறேன்.

எம்.பில் என்ற படிப்பில் சமூகசேவைப் பற்றி படித்து சான்றிதழ் வாங்குவதோடு நின்று விடாமல் தொடர்ந்து எல்லோருக்கும் உதவி செய்ய காத்திருந்து உதவி செய்து வரும் இந்த பாசம் நிறைந்த உள்ளம் கொண்ட திருமதி அருணா அவர்களுக்கு உங்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் வழங்குவீர்கள்
என்ற நம்பிக்கையில்...
என் சுரேஷ்

9 comments:

 1. திரு தமிழ்நெஞசம் அவர்களுக்கு வணக்கம்.

  தமிழும் அன்பும் நிறைந்த உங்களை தம்ழன்புநெஞம் என்று அழைக்கத் தோன்றுகிறது!

  சம்பந்தப்பட்ட சுட்டிகள் என்று இரண்டு பதிவகளை தந்தமைக்கு நன்றி. நாம் கூட இத்தனை வருடங்களாக மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசியிலும் பேசினாலும் இதுவரை சந்தித்ததே இல்லை!!!

  அடுத்த முறை நீங்கள் சென்னை வருகையில் நிச்சயம் சந்திக்க இறைவன் அருள்புரியட்டும்.

  ReplyDelete
 2. எந்த சாதனையுமே இன்னும் செய்திருக்காத எனக்கு இவ்வ்ளோ பெரிய அறிமுகமா??????.........
  இருந்தாலும் ரொம்ப நன்றி இந்த அறிமுகத்திற்கு...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. //எந்த சாதனையுமே இன்னும் செய்திருக்காத எனக்கு இவ்வ்ளோ பெரிய அறிமுகமா??????.........//

  என்ன அருணா இப்படி கேட்டு விட்டீர்கள்? எம் என்று கூட எழுதத்தெரியாமல் பல கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் எம்.ஏ. பி.எட். எம்.பில் இவைகளை படித்துள்ளீர்கள்.

  தலமை ஆசிரியர், நல்ல மனைவி, இரு செல்வங்களை பெற்றெடுத்த தாய்,
  நல்லாசிரியர், நல்ல மகள், உதவும் பேருள்ளம் கொண்டவர்கள் என நீண்டு செல்கிறது உங்கள் சாதனைப் பட்டியல்.

  இருப்பினும் உங்கள் தன்னடக்கத்தை இந்த வலைச்சரம் பாராட்டிப் பதிவு செய்து மகிழ்கிறது

  அன்புடன்
  என் சுரேஷ்

  ReplyDelete
 4. அது மட்டுமா அண்ணா...
  தான் எனும் அந்த "Self Ego" இல்லாமல் ஒருவரால், வாழ முடியும் என்று எனக்கு நிரூபித்துக் காட்டியவர்கள் இவர்கள்.

  நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் இவர்கள் என்னைப் பற்றி ஒரு மிக அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிரார்கள்..

  ReplyDelete
 5. அந்தோணி முத்து said...
  //அது மட்டுமா அண்ணா...
  தான் எனும் அந்த "Self Ego" இல்லாமல் ஒருவரால், வாழ முடியும் என்று எனக்கு நிரூபித்துக் காட்டியவர்கள் இவர்கள்.//

  என்னப்பா வஞ்சப் புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே??!!(அதுதான்பா உள்குத்து எதுவும் இல்லையே?)
  hahaha......

  என் மேல் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி அந்தோணிமுத்து.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 6. நல்லவர்களை நல்ல முறையில் அறிமுகப் படுத்தும் வித்தியாசமான வலைச்சர ஆசிரியர் நண்பர் சுரேஷிற்கு பாராட்டுகள்.

  அருணா போன்றவர்களின் பதிவினிற்கு நான் போகாத காரணம் அவரது வலிப்பூவின் பெயர்தான். அது அவர்கள் விருப்பம், இருப்பினும் ஏதோ என்னைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது.

  செல்கிறேன் அவர்து வலைப்பூவினிற்கும் - ஏனெனில் அவரது நல்லுள்ளத்தினைப் பாராட்டி.

  ReplyDelete
 7. //அருணா போன்றவர்களின் பதிவினிற்கு நான் போகாத காரணம் அவரது வலிப்பூவின் பெயர்தான்.//

  ஐயோ.....வலைப் பூவின் பெயருக்காகவா இத்தனை நாள் என் வலைப்பூவிற்கு வராமல் இருந்தீர்கள்?
  மாற்றிக் கொண்டால் போயிற்று.....அதற்காக வராமல் இருந்து விடாதீர்கள் ஐயா.உங்களை மாதிரியான நல்ல உள்ளங்களின் வருகைக்காக என் வலைப்பூ காத்துக் கொண்டு இருக்கிறது.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 8. சீனா ஐயா என் அன்புத் தோழி அருணாவின் வலைப்பூ செல்ல எனது பதிவு பாதையிட்டதில் மகிழ்கிறதென் மனம்.

  சந்தோஷமுடன்
  என் சுரேஷ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது