07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 24, 2008

நன்றியும் - வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் என் சுரேஷ் அவர்கள் 16 பதிவுகள் இட்டு - பல நல்ல உள்ளங்களை அறிமுகப் படுத்தி, அவர்களது பதிவுகளையும் சுட்டிக் காட்டி, வித்தியாசமான முறையில் ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு வலைச்சரம் சார்பில் நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து 25ம் நாள் தொடங்கும் இவ்வாரத்தினிற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அருமை நண்பர் ஸ்ரீ அவர்கள் இசைந்துள்ளார்கள்.

காதல் கிறுக்கனாக சின்ன சின்ன காதலை கவிதையாக்கி தந்துவரும் ஒற்றை அன்றில் இவர்.பொட்டி தட்டும் பணியில் பெங்களூருவில் இருந்து மாற்றலாகி தமிழ் சென்னை வந்திறங்கி இருக்கும் இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் ரசம் சொட்டுகிறது. இவரின் தாவணிக்கவிதைகளும், முத்தக்கவிதைகளூம் பல தேவதைகளை கிறங்க வைக்கும் .வலைத்தளமெங்கும் இதயங்களை சிதறவிட்டிருக்கும் ஸ்ரீ யின் இதயங்கவர்ந்த பதிவுகளை இவ்வாரம் காணலாம்..


அவரை வலைச்சரத்தின் சார்பில் வருக வருக என வரவேற்று - அவரது மனங்கவர்ந்த பதிவர்களைப் பற்றி அறிமுகம் செய்க என கேட்டுக் கொள்கிறேன்.

சீனா
----------------------------------------------------------------

3 comments:

 1. சோதனை மறு மொழி

  ReplyDelete
 2. நன்றி பாராட்டின சீனா ஐயாவிற்கு மிக்க நன்றி.
  இந்த வார ஆசிரியரை அன்போடு வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன், பாசமுடன்...
  என் சுரேஷ்

  ReplyDelete
 3. சுரேஷ் அண்ணனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் சொல்வதோடு, ஸ்ரீ அண்ணனை வரவேற்கிறோம்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது