07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 3, 2008

ஹாலோ மக்கள்ஸ்!

hi hi hi hi (vivek's styleல படிங்க)

அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தமிழ்மாங்கனி. இந்த வாரத்தில் என் பதிவுகளை தான் நீங்க பாக்க போறீங்க..(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)

முதல என்னைய பத்தி சொல்லிடுறேன்... சரி சரி அதுக்கு முன்னாடி, இந்த அறிமுகம் பதிவுல என்னைய பத்தி மேலும் சொல்ல, நான் வந்தே தீருவேன்னு ஒருத்தங்க ரொம்ப அடம்பிடிச்சாங்க. அவங்க வேறு யாரும் இல்ல.... என் மனசாட்சி தான்! ஹிஹிஹி....என் மனசாட்சியும் வந்து இருக்கு. எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க!!

மனசாட்சி: ஹலோ வணக்கம் மக்களே!

நான்: என்னைய பத்தி அறிமுகம் செஞ்சுகிட்டு இருந்தேன். நீ அதுக்குள்ள வந்துட்டே.

மனசாட்சி: ஆமா, இவங்க பெரிய புதுமுக ஹீரோயின்! உனக்கு அறிமுகம் வேற....

நான்: ஏய் nonsense மாதிரி பேசாதே! முதல் பதிவு என்னைய பத்தி சொன்னா தான் மக்களுக்கு என்னைய பத்தி நல்லா தெரிஞ்சுப்பாங்க...

அன்பு சக பதிவர்களே, என் புனைபெயர் தான் தமிழ்மாங்கனி. இயற்பெயர், நயன் தாரா, சிம்ரன், ஜோதிகா என்று சொல்ல தான் ஆசை. இருந்தாலும், இதைவிட ஒரு அழகான பெயருக்கு சொந்தக்காரி, இயற்பெயர் காயத்ரி. சிங்கையில் பிறந்து, வளர்ந்து...

மனசாட்சி: ஏய், நிறுத்து, பிறந்த, ஒகே ஒத்துக்குறோம். வளர்ந்தியா?? ஹாஹா....வளர்ந்தேன்னு மட்டும் சொல்லாத...

நான்: ஓய், என்ன கிண்டலா? இந்த வயசுக்கு இந்த உயரம் போதும்! மனசாட்சி பேசுறத்த கண்டுக்காதீங்க.. சரி என் மேட்டருக்கு வறேன். சிங்கையில் இப்போது bsc maths 3rd yr படிக்குறேன்.

மனசாட்சி: காலேஜுக்கு போயிட்டு போயிட்டு வர, படிக்கிறீயா இல்லையான்னு எனக்கு தானே தெரியும்!

நான்: ஏய், நீ அடங்க மாட்டீயா!

மனசாட்சி: same to u!

நான்: குறுக்க குறுக்க பேசாம, என் அறிமுகத்த முடிக்கவிடுறீயா! அப்பரம்.. எங்கவிட்டேன்.. ஆ.. படிச்சுகிட்டு இருக்கேன். நான் வலைப்பூ எழுத ஆரம்பித்து 3 வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அடிக்கடி எழுதும் பழக்கம் சமீபத்தில் தான் ஒட்டிகிச்சு!

மனசாட்சி: அத ஏன் கேட்குறீங்க மக்களே. ரொம்ப முத்திபோச்சு பைத்தியம். எத பாத்தாலும், என்கிட்ட சொல்லுவா, "இத பத்தி ப்ளாக்ல எழுதனும்". அன்னிக்கு ஒரு சின்ன புள்ளைங்க பார்க்ல சைக்கிள் ஓட்டிகிட்டு இருக்கும்போது, கீழே விழுந்துட்டா, அத பாத்துட்டும்... இதை தான் சொன்னா!! முடியல என்னால...

நான்: ஏய் மனஸ்!

மனசாட்சி: என்னது...மனஸ்சா???

நான்: ஆமா, நாங்கலாம் யூத்.. அப்படி தான் ஷாட்டா ஸ்டைலா கூப்பிடுவோம்!

மனசாட்சி: அட பாவிகளா? நீங்களாம் திருந்தவே மாட்டீங்களா?

நான்: முதன் முதலில் ஆரம்பித்தது http://www.enpoems.blogspot.com/

என் கவிதைகளை மட்டும் இந்த ப்ளாக்கில் போடலாம் என்று ஆரம்பித்தேன். ஆனா, அதுக்கு அப்பரம்... ஏதோ ஓரளவுக்கு கதை எழுத முயற்சித்தேன், திரைவிமர்சனம், அனுபவங்கள் என்று எல்லாம் கலவையும் சேர்ந்துடுச்சு! சமீபத்தில் தான் 150வது பதிவை வெற்றிகரமாக எழுதி போட்டேன். அதை படிக்க இங்கே செல்லவும். 150வது பதிவு

என் ப்ளாக்கில் எனக்கு பிடித்த சில பதிவுகளின் சுட்டியும் 150வது போஸ்ட் பதிவில் உள்ளது.

மனசாட்சி: நான் தாங்க எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு தடவையும் எழுதும்போது 'இது நல்லா இருக்குமா? நல்லா வருமா? ஏதாச்சு தப்பா போயிடுமா? எத்தன hits வரும்? அப்படி இப்படின்னு என்னைய போட்டு கொன்னு எடுத்துடுவா! பெரிய இம்சை இவ!

நான்: ஓய் மனஸ், சும்மா உள்ள இருக்கும் உனக்கும் என்ன தெரியும், வெளி உலகத்துல வாழும் எங்களுக்கு தான் பதிவு எழுதும் கஷ்டம் புரியும்!:)))

நான்: அப்பரம், நான் எழுதிய கலாய்த்தல் பதிவு ஒன்றை படித்துவிட்டு, மை ஃபிரண்ட் பயமறியா பாவையர் சங்கத்துல சேர அழைப்பு வச்சாங்க. சரி அங்கயும் எழுத ஆரம்பித்தேன். ஏதோ என்னால முடிஞ்ச சேவை...

மனசாட்சி: கண்டிப்பா இந்த நாட்டுக்கு தேவையே இல்ல....

நான்: நீ சும்மாவே இருக்கமாட்டீயா. என் imageயை totalலா damage பண்ணிகிட்டு இருக்கே...

மனசாட்சி: சரி விடு விடு! இதலாம் அரசியல சகஜமப்பா... அப்பரம் தமிழ்மாங்கனி ஒரு ஜோக் வலைப்பக்கம் ஆரம்பிச்சா... http://www.enjokes.blogspot.com/

ஆனா... ஏன் அடிக்கடி ஜோக் போட மாட்டேங்குற?

நான்: நான் என்ன மனஸ் பண்றது? டைமே கிடையாது! இந்த வலைச்சாரத்தில் நல்லா எழுதனும்னு யோசிச்சு யோசிச்சு.... இதுக்கே டைம் சரியா இருக்கு!

மனசாட்சி: ஆமா...லூசுத்தனமா உன் விளையாட்டு புத்திய காட்டாம, வலைச்சாரத்தில் நல்ல பதிவா போட்டு புன்னியத்த தேடிக்கோ!

நான்: எனக்கு நல்லா வேணும் இதலாம்!! ஓகே, அப்பரம் என்னை பத்தி வேற என்ன சொல்லலாம்.....ம்ம்ம்.... சூப்பரா சமைப்பேன்! ஆமாங்க.. சூப்பரா சுடுதண்ணி
வைப்பேன்!

மனசாட்சி: அட த்தூ... வெட்கமா இல்ல உனக்கு! இப்படி சொல்ல... சமையல் குறிப்பு பத்தி எத்தனையோ பதிவு இருக்கு! அத பாத்து படிச்சு செஞ்சு பாரு!!!

நான்: ஏய் தேங்கஸ் மனஸ்!

மனசாட்சி: என்ன, சமைக்க போறீயா? வெரி குட்!

நான்: இல்ல இல்ல.... வலைச்சாரத்துல அடுத்த பதிவு என்ன போடலாம்னு தெரியல... நீ சூப்பரா ஒரு ஐடியா கொடுத்துட்டே. சமையல் வலைப்பக்கங்கள் பத்தி தான் அடுத்த பதிவு! ஐடியா கொடுத்ததற்கு நன்றி மனஸ்!

இதுக்கு தான் சொல்றது... ஆளுக்கு ஒரு மனசாட்சி வேணும்னு!!!

மனசாட்சி: நீ திருந்தவே மாட்ட போல தெரியுது!:))

101 comments:

 1. ஆஹா நான் தான் பர்ஸ்ட்டா?

  ReplyDelete
 2. தங்கமாங்கனி....ஸாரி தமிழ்மாங்கனி நீங்க தான் இந்த வார ஆசிரியரா? தெரியாம போச்சே....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. //hi hi hi hi (vivek's styleல படிங்க)//

  ஆஹா....அப்படியே படிச்சிடுவோம்:)

  ReplyDelete
 4. //அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தமிழ்மாங்கனி. இந்த வாரத்தில் என் பதிவுகளை தான் நீங்க பாக்க போறீங்க..(//


  புத்திசாலி பொண்ணுமா நீ....நாங்க பார்க்க மட்டும் தான் செய்வோம்....படிக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சி வச்சிருக்கியே:)

  ReplyDelete
 5. .///.(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)//

  அம்மா...தாயே....இங்க நான் சுவத்தில் முட்டிக்கிறேன்:))

  ReplyDelete
 6. ///முதல என்னைய பத்தி சொல்லிடுறேன்... //

  அதுக்கப்புறம் யாரை பத்தி சொல்லுவீங்க????

  ReplyDelete
 7. ///சரி சரி அதுக்கு முன்னாடி, இந்த அறிமுகம் பதிவுல என்னைய பத்தி மேலும் சொல்ல, நான் வந்தே தீருவேன்னு ஒருத்தங்க ரொம்ப அடம்பிடிச்சாங்க. அவங்க வேறு யாரும் இல்ல.... என் மனசாட்சி தான்! //

  இது வேறயா? நீங்க சொல்லுறத கேட்டாலே தலைய பிச்சிக்க தோணும்....இதில மனசாட்சி வேறயா??? நல்லா இருங்க:)

  ReplyDelete
 8. //ஹிஹிஹி....என் மனசாட்சியும் வந்து இருக்கு. எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க!!//

  ஆமா நீங்க பதிவு எழுத வந்தீங்களா.....இல்ல ஏதும் ஸ்டேஜ் ஷோ பண்ண வந்தீங்களா....சரி நான் கை தட்டிடுறேன்......கேக்குதா?

  ReplyDelete
 9. //மனசாட்சி: ஹலோ வணக்கம் மக்களே!//

  வணக்கமுங்க!

  ReplyDelete
 10. ஹேய் அவசரக்குடுக்கை - என்ன அவசரம்

  நான் இன்னும் போனவார ஆசிரியருக்கு நன்றி சொல்லி வழியனுப்பலே - உன்னை வரவேற்றுப் பதிவு போடலே - அதுக்குள்ளே முந்திட்டியா - ம்ம்ம்ம்

  சரி சரி - அடுத்த பதிவு நான் போட்டப்புறம் தான் போடனூம் - ஆமா

  ஏம்பா நல்லவா ? நீய்யாச்சும் சொல்லக்கூடாதா ?

  ReplyDelete
 11. //நான்: என்னைய பத்தி அறிமுகம் செஞ்சுகிட்டு இருந்தேன். நீ அதுக்குள்ள வந்துட்டே.//

  உங்களை மட்டும் தனியா விட்டா அடுத்தவங்க பாடு கஷ்டம்னு மனசாட்சிக்கு தெரிஞ்சிடுச்சி போல:)

  வாழ்க மனசாட்சி:)

  ReplyDelete
 12. //மனசாட்சி: ஆமா, இவங்க பெரிய புதுமுக ஹீரோயின்! உனக்கு அறிமுகம் வேற....//

  அதானே....நீங்க சரோஜாதேவி காலத்து ஆளாச்சே.....உங்களுக்கு எதுக்கு அறிமுகம்????

  ReplyDelete
 13. //மனசாட்சி: ஏய், நிறுத்து, பிறந்த, ஒகே ஒத்துக்குறோம். வளர்ந்தியா?? ஹாஹா....வளர்ந்தேன்னு மட்டும் சொல்லாத...

  நான்: ஓய், என்ன கிண்டலா? இந்த வயசுக்கு இந்த உயரம் போதும்! //

  அப்ப நீங்க அப்பு கமலியா?(அப்பு கமல்...அப்பு கமலி ...சரி தானே?)

  ReplyDelete
 14. //மனசாட்சி: அத ஏன் கேட்குறீங்க மக்களே. ரொம்ப முத்திபோச்சு பைத்தியம்.//

  ஆஹா...நீங்க வுட் பிரிட்ஜ் ல இருக்கீங்களா? மீ த எஸ்கேப்பு...(தப்பிச்சேன்டா சாமி)

  ReplyDelete
 15. அடுத்து அசத்தப்போவது யாருன்னு பாக்க வந்தேன்.
  பெயரிலேயே எனக்குப் பிடித்த மாங்கனியை வைத்திருக்கும் தமிழ்மாங்கனி!
  பங்கனபள்ளி மாங்கனி போன்ற சுவையோடு நல்ல பல பதிவுகள் போட்டு அசத்துங்க. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 16. நிஜமா நல்லவன், உங்களை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சிட்டாரு!!!!

  ReplyDelete
 17. கலக்கலா இருக்குங்க!

  அடேயப்பா..!
  இப்படியும் லந்து பண்ணிக்கிட்டே பெருமைப்படுத்திக்கலாமா?

  வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. சீனா அவர்களே!
  உங்கள் வார்த்தைகளிலிருந்து நான் பாஸாயிடேன்னு தெரியுது.
  "ஆத்தா!நான் பாஸாயிட்டேன்!!"
  அது போதும் எனக்கு.

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் தங்கமாங்கனி !

  ஓ! சாரி!

  வாழ்த்துக்கள் தமிழ் மாங்கனி

  ReplyDelete
 20. ///ஆயில்யன் said...
  வாழ்த்துக்கள் தங்கமாங்கனி !
  ஓ! சாரி!
  வாழ்த்துக்கள் தமிழ் மாங்கனி///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே சொல்லிக்கிறேன்

  ReplyDelete
 21. அந்த மனசாட்டி உண்மை இப்படி போட்டு உடைக்குதேப்பா... தங்க மாங்கனி பாட்டிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. ///நிஜமா நல்லவன் said...
  //மனசாட்சி: அத ஏன் கேட்குறீங்க மக்களே. ரொம்ப முத்திபோச்சு பைத்தியம்.//
  ஆஹா...நீங்க வுட் பிரிட்ஜ் ல இருக்கீங்களா? மீ த எஸ்கேப்பு...(தப்பிச்சேன்டா சாமி)///
  அண்ணே! நீங்க வுட் பிரிட்ஜில் இருந்த கதையைச் சொல்லலியா?.... ;))

  ReplyDelete
 23. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா...( துள்சி ஸ்டைலில் படிக்கவும்:-))))

  வாங்க வாங்க, மாங்கனி
  எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

  கலக்குங்க!!!

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் தமிழ்மாங்கனி.

  நிஜமா நல்லவன் பின்னிப் பெடலெடுக்கறீங்க. பதிவின் ஒவ்வொரு வரிகளும், உங்களின் அலப்பரையோடு சேர்ந்து வைரங்களாக ஜொலிக்கிறது :))

  ReplyDelete
 25. ///தமிழ் பிரியன் said...
  ///நிஜமா நல்லவன் said...
  //மனசாட்சி: அத ஏன் கேட்குறீங்க மக்களே. ரொம்ப முத்திபோச்சு பைத்தியம்.//
  ஆஹா...நீங்க வுட் பிரிட்ஜ் ல இருக்கீங்களா? மீ த எஸ்கேப்பு...(தப்பிச்சேன்டா சாமி)///
  அண்ணே! நீங்க வுட் பிரிட்ஜில் இருந்த கதையைச் சொல்லலியா?.... ;))//  ஆமாம் அண்ணே நான் கொஞ்ச நாள் அங்க வாலண்டியரா வேலை பார்த்தப்போ தினமும் உங்க வார்டுக்கு வந்து உங்களண்ட கதைத்துக்கொண்டே ஜாலியா பொழு போக்கின அந்த நாட்களை மறக்கமுடியுமா....அதிலும் அந்த பச்ச உடுப்ப நீங்க தினமும் கிழிச்சிக்கிறதும்....கடைசில யானை சங்கிலியால உங்களை கட்டிப்போட்டதும்.....நீங்க பண்ணின அழிச்சாட்டியமும் மறக்க முடியுமா..... சொல்லிட்டேன்....போதுமா???

  ReplyDelete
 26. தமிழ் மாங்கனி புதுமையான முறையில் என்ட்ரி, அட்டகாசம் போங்க! உங்களை அறிய எங்கு செல்ல வேண்டுமென சுட்டியிருப்பதும் அருமை. கண்டிப்பாக அவற்றைப் பார்த்து விட்டு மறுபடி வருவேன்.

  //(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)//
  அடிச்சுக்கும் போது 'டொங் டொங்'னு சத்தம் வருது, ஏன்னா நீங்கதான் மக்கள் எங்களை "ஹாலோ"னு சொல்லிட்டீங்களே...:))!
  //hi hi hi hi (vivek's styleல //
  எடுத்துப்பீங்கதானே..:)!

  ReplyDelete
 27. //சுரேகா.. said...
  கலக்கலா இருக்குங்க!

  அடேயப்பா..!
  இப்படியும் லந்து பண்ணிக்கிட்டே பெருமைப்படுத்திக்கலாமா?

  வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்!//

  சுரேகா....உங்க வாழ்த்தில் பெரிய உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே.....தமிழ் மாங்கனிக்கு வாழ்த்து சொல்லாம வலைச்சரத்துக்கு வாழ்த்து சொல்லுறத பார்த்தா எப்படியாவது தமிழ் மாங்கனிகிட்ட இருந்து வலைச்சரம் தப்பி பிழைக்கனும்கிற மாதிரி இருக்கே:)

  ReplyDelete
 28. ///
  ராமலக்ஷ்மி said...
  //(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)//

  அடிச்சுக்கும் போது 'டொங் டொங்'னு சத்தம் வருது, ஏன்னா நீங்கதான் மக்கள் எங்களை "ஹாலோ"னு சொல்லிட்டீங்களே...:))!
  //

  ஆஹா அக்கா....கலக்கிட்டீங்க....நான் இதை கவனிக்காம போய்ட்டேனே:)

  ReplyDelete
 29. //சதங்கா (Sathanga) said...
  வாழ்த்துக்கள் தமிழ்மாங்கனி.

  நிஜமா நல்லவன் பின்னிப் பெடலெடுக்கறீங்க. //

  அட நீங்க வேற(அப்ப சதங்கா யாருன்னு கேக்காதீங்க).....பின்னி பெடலெடுக்கிறது தமிழ் மாங்கனி தாங்க..... நான் இவங்க பதிவு எல்லாம் படிச்சிட்டு சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி இதுக்கும் மேல படிச்ச தாங்காதுடா சாமின்னு பின்னங்கால் பிடரில அடிக்க தெறிச்சி ஓடிருக்கேன்......:)

  ReplyDelete
 30. //தமிழ் பிரியன் said...
  அந்த மனசாட்டி உண்மை இப்படி போட்டு உடைக்குதேப்பா... தங்க மாங்கனி பாட்டிக்கு வாழ்த்துக்கள்!//

  உங்க வாழ்த்தை பார்த்தா .....தங்க மாங்கனி பாட்டி தான் ....தமிழ் மாங்கனிக்கு பதிவு எழுதி கொடுக்கிற மாதிரி இருக்கே....:)

  ReplyDelete
 31. ///துளசி கோபால் said...
  ஹைய்யா ஹைய்யா ஹைய்யா...( துள்சி ஸ்டைலில் படிக்கவும்:-))))

  வாங்க வாங்க, மாங்கனி
  எனக்கு ரொம்பப் பிடிக்கும்.//


  வாங்க டீச்சர்....நலமா இருக்கீங்களா?தமிழ் உங்களுக்கு பிடிக்காதா???மாங்கனி மட்டும் பிடிக்கும்னு சொல்லி இருக்கீங்க:)

  ReplyDelete
 32. //நானானி said...
  நிஜமா நல்லவன், உங்களை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சிட்டாரு!!!!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

  ReplyDelete
 33. ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கு ! அசத்துங்க !

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. ////அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தமிழ்மாங்கனி. இந்த வாரத்தில் என் பதிவுகளை தான் நீங்க பாக்க போறீங்க..(//


  புத்திசாலி பொண்ணுமா நீ....நாங்க பார்க்க மட்டும் தான் செய்வோம்....படிக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சி வச்சிருக்கியே:)//

  Repeatae :))

  ReplyDelete
 36. // bsc maths //

  அட நம்ம கோஷ்டி... :)

  ReplyDelete
 37. நீ திருந்தவே மாட்ட போல தெரியுது!

  ReplyDelete
 38. /
  நிஜமா நல்லவன் said...
  ஆஹா நான் தான் பர்ஸ்ட்டா?
  /

  ஆமாப்பா ஆமாம்

  ReplyDelete
 39. தங்கமாங்கனி....ஸாரி தமிழ்மாங்கனி நீங்க தான் இந்த வார ஆசிரியரா? தெரியாம போச்சே....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 40. //hi hi hi hi (vivek's styleல படிங்க)//

  சரி ரைட்டு

  ReplyDelete
 41. .///.(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)//

  நானு நானு
  :))))

  ReplyDelete
 42. ///முதல என்னைய பத்தி சொல்லிடுறேன்... //

  அதுக்கப்புறம் யாரை பத்தி சொல்லுவீங்க????

  ReplyDelete
 43. /
  நிஜமா நல்லவன் said...
  //ஹிஹிஹி....என் மனசாட்சியும் வந்து இருக்கு. எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க!!//

  ஆமா நீங்க பதிவு எழுத வந்தீங்களா.....இல்ல ஏதும் ஸ்டேஜ் ஷோ பண்ண வந்தீங்களா....

  /

  ரிப்பீட்டு
  :))))

  ReplyDelete
 44. //மனசாட்சி: ஹலோ வணக்கம் மக்களே!//

  வணக்கமுங்க!

  ReplyDelete
 45. /
  cheena (சீனா) said...
  ஹேய் அவசரக்குடுக்கை -
  /

  டபுள், ட்ரிப்புள் ரிப்ப்பீட்டு
  :)))

  ReplyDelete
 46. /
  நானானி said...
  அடுத்து அசத்தப்போவது யாருன்னு பாக்க வந்தேன்.
  பெயரிலேயே எனக்குப் பிடித்த மாங்கனியை வைத்திருக்கும் தமிழ்மாங்கனி!
  /

  கரகாட்டகாரன்.....................

  ReplyDelete
 47. சிங்கைப்பதிவரா நீங்க?
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. @ நிஜமா நல்லவன்

  //அம்மா...தாயே....இங்க நான் சுவத்தில் முட்டிக்கிறேன்:))//

  வெரி குட்!! பாத்து பாத்து, உள்ளே இருக்கும் மண்ணு வெளியே வந்துட போகுது:)))

  //ஆமா நீங்க பதிவு எழுத வந்தீங்களா.....இல்ல ஏதும் ஸ்டேஜ் ஷோ பண்ண வந்தீங்களா....சரி நான் கை தட்டிடுறேன்//

  ஓ இங்க பதிவு எழுதனுமா? சாரி சாரி... ஸ்டேஜ் ஷோ பண்ணலாம்னு நினைச்சேன்! :)))

  (எங்களுக்கும் ஏதோ கொஞ்ச வரும்ல- அதான்ப்பா கிண்டலு!!:)

  ReplyDelete
 49. @சீனா

  //ஏம்பா நல்லவா ? நீய்யாச்சும் சொல்லக்கூடாதா ?//

  அவர் நல்லவரா? இல்ல கெட்டவரா??

  ReplyDelete
 50. @நிஜமா நல்லவன்

  //நீங்க சரோஜாதேவி காலத்து ஆளாச்சே.....உங்களுக்கு எதுக்கு அறிமுகம்????//

  நோ.. நாங்க, சரோஜா சாமானிக்கலோ காலத்து ஆளு!!

  ReplyDelete
 51. @நானானி

  //அடுத்து அசத்தப்போவது யாருன்னு பாக்க வந்தேன்.//

  அதுக்கு நீங்க சன் டிவி பக்கம்ல போனும்.. எப்படி இந்த பக்கம் வந்தீங்க:))

  ReplyDelete
 52. @நானானி,

  //பங்கனபள்ளி மாங்கனி போன்ற சுவையோடு நல்ல பல பதிவுகள் போட்டு அசத்துங்க. வாழ்த்துக்கள்!!!//

  வாழ்த்துகளுக்கு நன்றிங்க...

  //நிஜமா நல்லவன், உங்களை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சிட்டாரு!!!!//

  பாசக்கார புள்ள!

  ReplyDelete
 53. @சுரேகா

  //அடேயப்பா..!
  இப்படியும் லந்து பண்ணிக்கிட்டே பெருமைப்படுத்திக்கலாமா?//

  ஏதோ நம்மாள முடிஞ்சது...:)

  ReplyDelete
 54. @ராமலட்சுமி

  //தமிழ் மாங்கனி புதுமையான முறையில் என்ட்ரி, அட்டகாசம் போங்க!//

  நன்றி! நன்றி!:)

  ReplyDelete
 55. @மங்களூர் சிவா சித்தப்பு

  //டபுள், ட்ரிப்புள் ரிப்ப்பீட்டு
  :)))//

  நோட் பண்ணி வச்சுகிட்டேன். போட்ட கும்மி பத்தலன்னு நினைக்கிறேன். வறேன்ய்யா.. இந்தா வறேன்!:)

  ReplyDelete
 56. அட, நம்ம தமிழ்! கலக்கலா நுழைஞ்சிருக்கீங்க. அசத்துங்க!

  ReplyDelete
 57. @கவிநயா

  //அட, நம்ம தமிழ்//

  இல்ல, இது பிரெஞ்சு மொழி! ஹாஹாஹா...just kidding!:)

  //கலக்கலா நுழைஞ்சிருக்கீங்க. அசத்துங்க!//

  நன்றி நன்றி நன்றி:)

  ReplyDelete
 58. ///அழகான பெயருக்கு சொந்தக்காரி, இயற்பெயர் காயத்ரி. ///

  ஆமாங்க நல்ல பெயர் எனக்கும் பிடிக்கும்...

  ReplyDelete
 59. \\\
  மனசாட்சி: நீ திருந்தவே மாட்ட போல தெரியுது!:))
  ///

  ரிப்பீட்டு...:)

  ReplyDelete
 60. சிவா மாதிரி மத்தவங்க போட்ட கமன்ட்ஸ் போடுறத விட இது பெட்டருல்ல...

  ReplyDelete
 61. வாழ்த்துக்கள் காயத்ரி...

  ReplyDelete
 62. நான் ரசிக்கிற பின்னூட்ட சிங்கங்களில் சிவாவும் ஒருவர் என்ன இருந்தாலும் அவருக்கென்று ஒரு டச் வைத்திருப்பார் சில நேரங்களில் தனியா உக்காந்து ரொம்ப நேரம் சிரிச்சிருக்கேன் அதனாலேயே அவரை கலாய்க்கலாம்னு ட்ரை பண்ணுவேன் முடியறதில்லை...:))

  அண்ணே போதுமாண்ணே...;)

  ReplyDelete
 63. தமிழ் மாங்கனி ( இங்கிலிஷ் மாங்கனி வேறு இருக்கா என்ன ) - என்னாப - அந்த மனஸ் சும்மா ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கு - தலைலே குட்டி ஒரு ஒரமா உக்காத்தி வை - ஆமா !

  77

  ReplyDelete
 64. 100

  நூறு !

  Hundred !

  போதுமா

  ReplyDelete
 65. ராஜபாளையத்தில் சப்பட்டை மாங்கனி சீசன் முடிந்துவிட்டதே என்று நினைத்தேன். ஆஹா! ஒரு வாரத்திற்கு தமிழ் மாங்கனி.

  சகாதேவன்

  ReplyDelete
 66. ஹாஹா.. சூப்பரு பாப்பா... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது... ;)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது