07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 25, 2008

ஸ்ரீயாகிய நான்

வணக்கம் நண்பர்களே,
இந்த வாரம் வலைச்சரத்தின் பொறுப்பை எனக்குத் தந்த நண்பர் சீனாவுக்கு நன்றிகள். எல்லோருக்கும் எனது அன்பு கல‌ந்த வணக்கம். அன்பர் சீனா அறிமுகப்படுத்தியது சற்று மிகைப்படுத்திவிட்டாரோ எனத் தோன்றுகிற‌து.

நான் ஸ்ரீ. உங்களில் ஒருவனாக "ஒற்றை அன்றில்" என்கிற தளத்தை இயக்கி வருகிறேன். நல்ல ரசனை என சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு ரசனை உள்ள ஒரு சராசரி நான். ரொம்ப பொறுமை (இது சோம்போறித்தனத்துக்கு நானிட்டுக்கொண்ட மற்றொரு பெயர்). ஒரு வேளை இந்த குணம் தான் நான் அதிகம் கவிதைகளை வாசிக்க வைத்துவிட்டது என நினைக்கிறேன். பெரிய பதிவுகள் என்றால் கொஞ்சம் தயங்கித்தயங்கி வாசிப்பேன். எவ்வளவு சுவாரசியமாய் இருப்பினும் பதிவுகள் பெரிதாய் இருந்தால் படிப்பார்களா என்கிற‌ கேள்வி என் ஆழ்மனதில் அடிக்கடி துளிர்ப்பதால் என் அனைத்துப் பதிவுகளையும் ரொம்ப சுருக்கமாக எழுதும் பழக்கமுள்ளவன். சில நேரங்களில் பிய்த்து எறிய‌ப்படும் உணவை கல் என நினைத்து சிற‌கடித்துப் பறக்கும் காக்கை போல நிறைய அழகான பதிவுகளை அதன் நீளம் காரணமாக என்னையறியாமல் தவறவிட்டும் இருக்கிறேன்.

என் தளத்தில் நீங்கள் பார்க்கும் வாக்கியம் "காதலன்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே!". அதுவே என்னை முழுதாய்ச் சொல்லும். காதல் கவிதைகள் மேல் ஒரு விதமான ஈர்ப்பு. அவை நான்கு எல்லது ஐந்து வரிக்குட்பட்டு இருந்து அதற்குள்ளே கொஞ்சம் சோகத்தை புகுத்தி இருந்தால் மெய்சிலிர்த்துவிடும். அப்படி சின்னச் சின்ன காதல் கவிதைகளை வெகுவாக ரசிப்பவன்.

நான் வ‌லைப்பூ துவங்கியது என்னவோ ஒரு விபத்து போல் நடந்தேறிய ஒன்று தான். மெல்ல மெல்ல என் தரத்தை ஒவ்வொரு பதிவில் உயர்த்திக்கொள்வது போலான ஒருவித பிரம்மையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக 80 பதிவுகள் பதித்து விட்டேன். எழுதுவது எனது தேனீர்க் கோப்பை இல்லை என்பது எனக்குத் தெரியாமலில்லை. அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முயற்சித்ததும் இல்லை. இருப்பினும் தளம் துவங்கியத்ற்காக வாரம் ஒரு பதிவு வெளியிட வேண்டும் எனும் நோக்கத்தில் கடந்த 6 மாதங்களாக புதன்கிழமைகள் தோறும் பதிவெழுதுகிறேன். எனக்குப் பிடித்த சில பதிவுகளை பகிர்ந்துகொள்ள இன்று கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தேன். சில பதிவுகள் படித்து சிரிக்கவும் செய்தேன். எனது சில பதிவுகள் கீழே....


பேசாமல் எழுதுவதை நிறுத்தி விடுமோம் என நினைத்து 2 மாதகாலம் நிறுத்தினேன். பின்பொரு நாள் திருக்குறளில் காமத்துப்பாலை விடுத்து மற்ற இரு பாலோடு காதலை சேர்த்து ஒரு குளம்பி (காஃபி) போட்டால் என்ன என்கிற அபத்தமான நினைப்போடு எழுதிய பதிவு "காதல் பால்". இந்த வருடத்தின் முதல் தேதி மீண்டும் எழுத ஆரம்பித்தேன் சிறு இடைவேளைக்கு பின்.

என்னுடைய தளத்தில் எனக்குப்பிடித்த சில கவிதை தொகுப்புகள்

காதல் தினம்,
தூங்காத இதயம் ரெண்டு,
தாவணிக் கவிதைகள்.

மேல் சொன்னது போல சாதாரண தமிழில் எழுதுவது சலித்து போக‌ சில புது வார்த்தைகள் தேடி
பதிவிட்டது தான் அழகான அகராதி,

கிராமிய நடையில் முயற்சித்தவை
நாக்கறுந்த மணி,
நேத்து பெஞ்ச மழை.

கோவத்தில் எழுதும் சில பதிவுகளை "கொலைவெறி" என்பேன். அதில்
சொல்லாத வாழ்த்து,
கன்னத்துப்பூச்சி இவையும் அடக்கம்.

இது போன்று
நல்லதோர் காதல் செய்தே!,
காதல் காலம், கதையும்,
ஒரு சின்ன பாடல் முயற்சியும் செய்ததுண்டு.

பெரிய பதிவுகள் எழுத மாட்டேன் என சொல்லியும் இவ்வளவு பெரிதாய் பதிவெழுதியதுக்கு மன்னிக்கவும். வரும் நாட்களில் நான் ரசித்த சில அருமையான கவிதைகளோடு வருகிறேன்.

நன்றிகள்.
-‍ஸ்ரீ.

11 comments:

 1. அன்புள்ள ஸ்ரீ,

  அன்போடு வரவேற்கிறேன். நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  வாழ்த்துக்களுடன்
  என் சுரேஷ்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஸ்ரீ!

  ReplyDelete
 3. அடப் பாவி!!! இப்படி சொல்லாம அமுக்கமா இருந்திட்டியே???? இருந்தாலும் அக்காவின் அன்பு வாழ்த்துக்கள்!!
  அன்புடன் அருணா

  ReplyDelete
 4. நன்றிங்க சுரேஷ், தமிழ் ப்ரியன்.

  அக்கா உங்க கிட்ட சொன்னதா ஒரு நியாபகம் கா. சொல்லலையா? :(
  வாழ்த்துக்கு நன்றிங்க :)

  ReplyDelete
 5. அன்பின் ஸ்ரீ

  நீண்ட பதிவுகளுக்கு நானும் எதிரி. இருப்பினும் தேவைப்படின் எழுதுவதில் தவறில்லை.

  நான் இதுவரை உன்னுடைய வலைப்பூவினில் மறு மொழி இடவில்லை. விரைவினில் துவக்குகிறேன்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஸ்ரீ!!

  ReplyDelete
 7. நன்றி திவ்யா ஜி.

  அன்பர் சீனா, நன்றி. பதிவுகள் பெரிதாக இருந்தாலும் சுவாரசியம் குறையாமல் இருக்க வேண்டும் என்பது தான் என் அவா. முடிந்தவரை நல்ல பதிவுகளை சுட்டிக்காட முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீ அண்ணன் சின்னச்சின்னதா எழுதியாலும் ரொம்ப பெரிய யெரிய ரசிகர் வட்டம் உங்களுக்கு இருப்பது உண்மை அதில் நானும் ஒருவன்..

  வாழ்த்துக்கள் அண்ணன்...

  ReplyDelete
 9. நன்றிங்க தமிழன் ஆனா ஒரு சின்ன திருத்தம் அண்ணன் இல்லை தம்பி :)

  ReplyDelete
 10. வாங்க ஸ்ரீ.. எங்க ஆளை காணும் என்று பார்த்தால் இங்க இருக்கீங்களா..
  உன்னுடைய ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...
  ஆனால் பினிசிங் சரி இல்லையே.. :D

  தொடர்ந்து எழுதுங்க.. வந்து படிக்கிறேன்.. :)

  ReplyDelete
 11. நன்றி மஹா தொடர்ந்து படிங்க‌ :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது