07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 23, 2008

கல்யாணமாலை!!!திருமணம் என்பதும் இந்தியாவின் பார்வையில் அது மாபெரும் செல்வாகத் தெரிகிறது.
இந்தியாவில் திருமணத்தன்று மட்டும் எல்லோரும் ஜமீந்தார்கள் போல் இருப்பதைக் கண்டு ஒ சரி, இந்த ஒரு நாளாவது இவர்கள் இப்படி இருந்து போகட்டுமே என்ற மகிழ்ச்சி மனதின் ஒருபுறம் வந்தாலும், அடுத்த நொடியே, அட!வட்டிக்கு வாங்கி இப்படி இவர்களில் பலர் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய இந்த சமூகம் நிர்பந்தப்படுத்திகறதோ? இது தேவை தானா? இவர்களுக்கு வேறென்ன வழி ? இவர்களைச் சொல்லி என்ன பலன்? - என்றெல்லாம் யோசனைகள் குவிகிறது கேள்விகளின் வடிவங்களில்?????

திருமண வயதானாதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து பார்ப்பதில் பெரியவர்களுக்கு ஒரு ஆசை கடமை என்பதைச் சொல்லக் கேட்கும் போதெல்லாம் அதில் ஒரு தவறு இருப்பது போல் ஒரு காலத்திற்கு பிறகு யாருக்கும் தோன்றக்கூடும். தனக்கு பிடித்த ஒரு துணையை தேர்ந்தெடுப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முழுமையான ஆசைகளை சுதந்திரத்தை நமது நாட்டில் பெரியவர்கள் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்வியை, ஒவ்வொரு நாளும் தாய் தந்தையருக்கு தெரியாமல் பதிவுத்திருமணங்கள் இரகசியமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பெரியவர்கள் முழுமையான சுதந்திரத்தை கொடுக்க முன்வர தடையாக இருக்கும் காரணங்கள் என்ன என்ன? - ஜாதி, மதம், இனம், நிறம் பொருளாதார அந்தஸ்து, குடும்பத்தைப் பற்றின சரித்திர/கடந்தகாலச் செயதிகள், அடுத்த பிள்ளைகளுடைய நிலை பற்றின கவலை... என்றெல்லாம் பல சொன்னாலும் இருமனங்கள் சேராமல் ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவரோடு வாழவேண்டின கொடுமைக்கு பலரை தள்ளி விடுவதில் என்ன நியாயம் தான் இருக்கிறது என்ற ஒரு கேள்வி மனதில் வந்து போவதை தடை செய்ய முடியவில்லை.

இப்போது அதிகமும் சொந்தத்தில் திருமணம் செய்வதில்லை. சொந்தத்தில் திருமணம் செய்வது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரியவர்களாக பார்த்து சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பதில் ஓர் நல்ல எண்ணம் இருப்பதென்னவென்றால் திருமணம் செய்பவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒரு முன்பரிசயம் இருக்கும் என்பது தான். அஸ்ஸலா சொந்தமா என்ற கேளிவிக்கே அர்த்தமின்றி பெரியவர்களால் நடத்தப்படும் திருமணங்களில் அதிகமும் ஒருவருக்கொருவர் பழக்கமின்றி தான் இப்பொதெல்லாம் அதிகமும் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

அந்த காலத்தில்... என்று சத்தமாக வாதங்கள் வரக்கூடும். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன், கணவனே கண்கண்ட தெயவம் என்றெல்லாம் சொல்லிவைத்து எமாற்றப்பட்டதால் அடிமைகளாக பெண்கள் அத்தனை கஷட்டங்களையும் சகித்து வாழ்ந்தார்கள். (இன்றைய 2008 -லும் இதிலிருந்து பெரிய விடுதலை ஒன்றும்
கிடைத்தது போல் தெரியவில்லை!)

ஆண்கள் அதிகமும் இன்றுபோல் அந்த காலத்தில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அதிகமாக அடிமைத்தனத்தில் விழுந்து விடாத காலம் அந்தக் காலம் என்கிறார்கள், இன்றைய பெரியவர்கள். இது போன்ற பல காரணங்களால் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பல காலம் வெற்றி பெற்றது.

பெண்கள் படித்து முன்னேறி, தன்னைப் பற்றின ஒரு புரிதல் ஏற்பட்டு, தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?. ஆனால் அதிகமும் இந்த எதிர்பார்ப்புகள், தாய் தந்தையர் மீதுள்ள மரியாதை, பாசம் இவைகளால் மனதிற்குள் ஒளித்துவைத்துக் கொண்டு பெரியவர்களாக பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள் பெண்கள் - இதற்கு பல கட்டிமேளங்களும் சாட்சி! இதே நிலை ஆண்களுக்கும் இல்லாமல் இல்லை!

காதல் என்றாலே பாவம் என்றது ஒரு காலம். காதலித்து திருமணம் செய்தால் குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைப்பது,சொத்து வழங்காமல் ஏமாற்றுவது, குழந்தை பிறந்ததும் சேருவது போன்ற அடுத்த கட்டப் பரிணாமம். பிறகு காதலிப்பது ஒன்னும் தப்பில்ல.. ஆனால் நம்ம குடும்பத்திற்கு ஏற்றது போல் இருக்கணும் என்ற நிலை. அந்த குறைவான சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக இருப்பதை என்ன சொல்ல!
குடும்பத்திற்கு ஏற்றது போல் என்பதில் ஜாதி, மதம், நிறம், இனம், பொருளாதார அந்தஸ்து என்ற பல அளவுகோல்கள் இதில் அடங்கும். மிக கஷட்டப்பட்டு வீட்டிற்கு ஏற்றது போல் ஒரு துணையை காட்டி சம்மதம் கிடைக்கும் சிலர் பாக்கியசாலிகளே!

பதினாறு வயது முதல் இருபத்தியொன்று வயது வரை சில ஹார்மோன்களின் குழப்பத்தை அறியாமையின் சில முட்டாள் தீர்மானங்கள் என்று பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதுள்ள பாசத்தால் கூறும் நிஜத்தை போற்றவேண்டியது தான்! இந்த வயதில் கல்வி தான் முக்கியம்; வாழ்க்கையின் திருமணம் போன்ற முக்கிய தீர்மானஙகளை எடுக்கும் நேரமல்ல என்று உணர்த்த கல்வித் திட்டங்களும் குடும்ப சூழ்நிலைகளும் இன்றும் முழுமையாக இருக்கிறதா என்ற ஒரு கேள்விக்கு என்ன பதில் தான் உள்ளது?

ஏமாற்றும் அழகர்களிடம்/ அழகிகளிடம் பிள்ளைகள் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பெரியவர்கள் பயப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் பிள்ளைகளிடம் இந்த வயதில் மிகவும் பாசமாக இருக்க வேண்டின தாய் தந்தையர்கள் அதிகமும் ஒரு வார்த்தை சிரித்துக்கூட பேசாத நிலை பல இல்லங்களிலும் இருக்கிறதே என்பது மிகவும் கவலையான செய்தி.

100% பெண்களின் சம்மதம் பெற்றுத் தான் இந்தியாவில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடந்தேருகிறதா - இல்லை! காதலை எதிர்த்து கொடுமை செய்வதில் கூட பெரியவர்களின் பாசத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால் மாட்டுச்சந்தை, பங்குச்சந்தை போன்ற ஒரு சந்தையாக "கல்யாணமாலை" போன்ற நிகழ்ச்சியில் தங்கள் பிள்ளைகளை அறிமுகம் செய்து, ஏதோ இயந்திரத்தின் கான்பிகரேஷன் சொல்வது போல் தங்கள் பிள்ளைகளைப் பற்றி சொல்லி, இப்படியெல்லாம் இருக்கவேண்டும் ஒரு பொருள் என்று வணிகம் பேசுவது போல் எதிர்பார்ப்புகளைச் சொல்லி, பணத்தை செலவு செய்யும் பெரியவர்களைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"கல்யாணமாலை" நிகழ்ச்சி மற்றும் பல மாற்றிமோனியல் டாட் காமும்கள் 110 கோடி மக்கள் நிறைந்த இந்திய நாட்டில் பல கோடி பணத்தை ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க இந்த பெரியவர்கள் பலியாடுகள் ஆகிரார்களே என்பது பெரிய கவலை!

ஒருவருக்கு ஒருவர் ஒரு பழக்கமும் இன்றி, ஜாதி, மதம், இனம், போன்ற பட்டியல் மட்டும் சேர்க்கை பெற்றால் மற்றும் ரகசிய கொடுக்கல் வாங்கள் இவை வெற்றிபெற்றுவிட்டால் உடனே இதற்கு ஏற்பாடு செய்த "கல்யாணமாலை" போன்ற நிறுவனத்திற்கு வருமானம், பிறகு உடனே திருமணம்! அட இது எப்படி சரியாகும் என்று புரியாத புதிராகவே உள்ளது.

இன்னமும் இந்தியாவில் ஐந்து நாள் திருமண நிகழ்ச்சிகள் உண்டு. குறைந்தபட்சம் ஒருநாள் முழுக்க திருமணநிகழ்ச்சி என்பது ஏறத்தாழ எல்லா இடங்களிலும் உண்டு. இப்படியெல்லாம் படுத்தினால் தான் தம்பதியர்கள் பிரியமாட்டார்கள் என்று மரபு ஒருவேளை நினைத்திருக்கலாம்.

ஆனால் அந்த காலத்திலும் இந்த காலத்திலும் கணவனோ மனைவியோ பல விஷய்ஙகளை சகித்துத் தான் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை! எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க இயலாது என்பது நியாயமான நிஜமே! ஆனால் விவாகரத்து செய்துகொள்ளாமல் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கசப்புடன் இன்னமும் வாழ்ந்து வரும் சில தம்பதியரைப் பார்த்து வியப்படைந்து போகாமல் வேறென்ன செய்ய முடியும்.

திருமணம் என்பது மிகவும் ஒரு நல்ல நிகழ்ச்சி. அதை தரகர்களிடம் அடமானம் வைத்து, இருமனங்களை அடிமையாக்கி வரும் "கல்யாணமாலை" போன்ற நிகழ்ச்சிகளை வாரா வாரம் ரசித்துப் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பெண்ணின் முழு சம்மதத்துடன் எல்லா திருமணங்களும் நடந்தேறட்டும். திருமணச்செலவை எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அந்த அளவிற்கு சமுதாயமும் நாடும் முன்னேறும். படிப்பு முடிந்து நல்ல வேலைக்கு சேர்ந்த பிறகும், படிக்க முடியாதவர்கள் தங்களுடைய முதிர்ச்சியான புரிதல் அடைந்த பிறகு, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணையை திருமணம் செய்து கொடுக்கும் ஒரு விஸ்தாரமான மனம் பெரியோர்கள் எல்லோருக்கும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இன்றைய இளம் தம்பதியர்கள் வருங்காலத்தில் "கல்யாணமாலை" போன்ற நிறுவனங்களுக்கு அடிமைப்படாமல் பிள்ளைகளுடைய உண்மை உணர்வுகளை புரிந்துகொண்டால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்!

வாழ்த்துக்களுடன்...

என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது