07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 17, 2008

திரு சிவசுப்ரமணியன்


அன்பினியே தோழர்களே,

வணக்கம்..

சிவா,உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன்... அவர் சொல்வதைக் வாசித்துக் கேளுங்கள். உங்களுடைய இனிய வாழ்த்துக்களால் அன்புடன் இந்த இளம் எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள்!!!

அன்புடன் என் சுரேஷ்


பெயர் சிவசுப்பிரமணியன்.
வயது: 25.
எனது சொந்த ஊர்: மாட்டுச்சந்தைக்கும், முறுக்கிற்கும் புகழ் பெற்ற மணப்பாறை

சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம். எழுத தொடங்கியது காதலால். சிறிது சிறிதாக, கல்லூரியில் என்னை மேன்படுத்தியது சத்தியபால் என்பவர். என் கல்லூரி இதழ்களிலும், கல்லூரி போட்டிகளிலும் என்னை எழுத வைத்தவர் தான் சத்தியபால். நான் ரசிகனான முதல் கவிஞர் "காதல் பாடகன்" என்ற சத்தியபால் தான். 2006 ஆம் வருடம் என் வலைப்பூவை ஆரம்பித்தேன். 'அன்புடன்' குழும நன்பர்கள மற்றும் வலையுலக நன்பர்களின் பின்னூட்டங்களின் மூலம் என் எழுத்துக்களின் கூர்மையை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக் கொண்டு வருகிறேன்.

தற்போது நான் இருப்பது பெங்களூரில்(பணிநிமித்தமாக). ஒரு மனித வள மேன்பாடு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

நான் எழுதுபவை
என்னுடைய எழுத்துகளில் அதிகம் காணப்படுவது காதல். நான் எழுத் தொடங்கியது என் காதலால் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். "காதல்...காதல்...காதல்.." என்ற தலைப்பில் என் காதல் உணர்ச்சிகளை பதிவு செய்து வருகிறேன். நான் எழுத ஆரம்பித்த நாள் முதல் என்னை பெரிதும் ஆட்கொண்டது காதல் தான். எந்த காதல் எனக்கும் எழுதும் வரத்தை கொடுத்ததோ அந்த காதலுக்கு நான் அணிவிக்கும் மாலை தான் என் காதல் கவிதைகள்.

இப்போது கொஞ்சம் காலமாக கட்டுரை எழுத முயற்சி செய்து வருகிறேன். அதன் முதற்படியாக "நானும் என் தேவதைகளும்" என்ற தலைப்பில், இது நாள் வரையில் என் வாழ்வில் சந்தித்த, என்னை கவர்ந்த பெண்களை பற்றி எழுதி வருகிறேன்.

என் தேவதைகள் யார்? எனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய தேவதைகளாக நான் கூறப் போகும் பெண்கள் யார்? எப்படி எனக்கு தேவதைகளாக காட்சியளிக்கின்றனர்?

இவைதான் இந்த இழையின் தளம். எவ்வளவோ நாள் மனக் குடைச்சலில் நான் எழுத நினைதது தான் இந்த தலைப்பு. என் தேவதைகளா வலம் இந்த இழையில் வருபவர்கள் என் தாயார், பாட்டி, தங்கை, தோழிகள், காதலிகள்(???) என பலர்.

"என் பார்வையில்" என்ற வரிசையில், இந்த உலகம் பற்றிய எனது பார்வையை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறேன். என் கோபம், ஆசை, ஆச்சரியம், ஆதங்கம், வருத்தம் என என் எல்லா உணர்ச்சிகளையும் இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் தாங்கி நிற்கின்றன.

கவிதைகளும் கட்டுரைகளும் கலந்து ஒரு கதம்பமாக இருந்தாலும், அவை அனைத்தும் என் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான். இந்த தலைப்பில் அரசியலும் உள்ளது, ஆன்மீகமும் உள்ளது, அறிவியலும் உள்ளது, தோழமையும் உள்ளது. நட்பை மையமாக கொண்ட என் கவிதைகளும் இதில் தான் வருகின்றன. என் தேடல்களும் இதில் தான் வருகின்றன. "தேடல்" என்ற தனி தலைப்பில் நம் மனித இனத்தை பற்றியும், இந்த உலகத்தின் தொடக்கம் பற்றியும், பல கலாச்சரங்கள் பற்றியும், சில விடுவிக்க முடியாத புதிர்கள் பற்றியும் எழுதி வருகிறேன்.

"Scribbles" என்ற தலைப்பில் நான் எழுத முயற்சித்த ஐந்து ஆங்கிலக் கவிதைகள் உண்டு. ஆங்கிலத்திலேயே சிந்திக்க மனம் ஒப்பாததால் அவை இன்னும் வளராமல் இருக்கின்றன.


என் வலைப்பூ: http://sivakumarz.blogspot.com/

எனக்கு பிடித்தவை

படிப்பது, எழுதுவது
புதிய நண்பர்களை தேடுதல்... நண்பர்களோடு அரட்டை அடித்தல்....
புகைப்படங்கள் எடுப்பது, சேகரிப்பது, வடிவமைப்பது..
சு-டோ-கூ மற்றும் காக்குரோ போன்ற எண்கணித விளையாட்டுகள் விளையாடுவது

எனது வலைப்பூ : http://sivakumarz.blogspot.com
பிடித்த கவிதைகள்

முதல் காதல் - http://sivakumarz.blogspot.com/2008/07/blog-post_08.html

மெய் பொய்யாக - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_07.html
எதிர்பார்ப்புகள் - http://sivakumarz.blogspot.com/2007/01/blog-post_25.html

கால இயந்திரம் - http://sivakumarz.blogspot.com/2008/03/blog-post_20.html

எனது ஈழக் கனவு - http://sivakumarz.blogspot.com/2006/10/blog-post_15.html

பிடித்த கட்டுரைகள்


திருநங்கையர் - http://sivakumarz.blogspot.com/2008/06/blog-post_27.html

தேடல் - காலம் - http://sivakumarz.blogspot.com/2008/04/blog-post_25.html

தனியார் செய்தி நிறுவனங்கள் - அவசர உதவிக்கா? ஆதாயத்திற்கா?
பெங்களூர் குண்டுவெடிப்பு - மாறுபட்ட பார்வை - http://sivakumarz.blogspot.com/2008/07/blog-post_26.html

தேடல் - நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில்? - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_31.html

தேடல் - துவக்கம் - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_09.html

தேடல் - மனிதன் - http://sivakumarz.blogspot.com/2008/05/blog-post_21.html

5 comments:

  1. சென்ற வாரமே வலைச்சரத்தில் என்னை பற்றி எழுதி இருந்தாலும் சுரேஷ் அண்ணாவின் மூலம் என்னை முறையாக அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணனுக்கு என் நன்றிகள் பல. என் பதிவுகளை படித்துவிட்டு பதிலிடவும். உங்கள் பின்னூட்டங்கள் தான் என் எழுத்தை மேலும் கூர்மையடைய செய்யும். நன்றி .

    ReplyDelete
  2. சிவசுப்ரமணியன் அண்ணே குழும மெயில்களில் உங்க பெயர் எனக்கு அறிமுகம் உண்டு. உங்க வலைப்பூ முகவரி சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன மங்களூர்காரரே... எப்போ பெங்களூர் வரப் போறீங்க

    ReplyDelete
  4. ஆகா ஆகா - சுரெஷின் அடுத்த அருமையான பதிவு. அருமை நண்பன் சிவாவினைப் பற்றிய அறிமுகப் பதிவு. சிவாவின் பதிவினில் உள்ள அனைத்து ( 90 விழுக்காடு ) இடுகைகளைஇயும் படித்தவன் என்ற உரிமையில் - சிவாவினைப் பாராட்டுகிறேன். நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி சீனா ஐயா.. உங்களை மாதிரி பெரியவங்க ஆசியினால தான் எழுத முடியுது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது