07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 24, 2008

நன்றிகள் சமர்ப்பிக்கிறேன்...!!!

அன்பினிய உள்ளங்களே,

வலைச்சரத்தில் எனக்கு ஒருவார காலம் ஆசிரியர் பதவி தந்து என்னை பெருமையடையச் செய்த சீனா ஐயாவிற்கு எனது முதல் நன்றியை சந்தோஷமுடன் சமர்ப்பிக்கிறேன்.

15- அல்லது 16 பதிவுகள் தான் இட்டிருந்தேன் என்றாலும் அதற்குள் பலசுட்டிகள் இருந்தன. ஆக எனது மனதின் நிறைவின் தாகத்த்தை தீர்த்துக்கொண்ட சுகம் என்னை சமாதானப் படுத்துகிறது

எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு எனக்கு ஊக்கம் தந்த எல்லா பதிவர்களுக்கும் எனது அன்பான நன்றி மலர்களை சமர்ப்பித்து மகிழ்கிறேன். நீங்கள் மட்டும் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால்......!!! அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! - நன்றி, நன்றி, நன்றி !!!!

அழகி டாட் காம் நிறுவனர் திரு. பா விஸ்வநாதன் அவர்களைப் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும் என்று எனக்கு அன்புக்கட்டளை இட்ட நண்பர்களுக்கு நன்றி.

அருணா எனது தோழி தான் என்றாலும், அவர்களைப் பற்றி எழுத நான் தொலைபேசியில் அழைத்து, இருபதற்கும் மேலான அவசரக்கேள்விகள் கேட்டேன். வேலை பாரம் இருவருக்கும். நான் சென்னையில், அவர் ராஜஸ்தானில் - இருப்பினும் எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்தார்கள். சொந்த தோழியின் விவரங்கள் அறிந்துகொள்ள இந்த வலைச்சரம் உதிவிறறே! நன்றி வலைச்சரமே!!

ராமலகஷ்மி அவர்களைப் பற்றி எழுதின "முத்துச்சரம்" என்ற பதிவிற்கு அனேகமான பின்னுட்டங்கள் வந்துள்ளது. இவர்களைப் பற்றி எழுத என் மனதில் தோன்ற வைத்த இறைவனுக்கு என் சிறப்பான நன்றி பல..! என்னை பாராட்டி நன்றி தெரிவித்த எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி பல!

கவிஞர் சக்தி சக்திதாசனைப் பற்றி எழுத முதல்நாள் முதல் யோசித்தேன். ஆனால் அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இன்றிரவு தான் அவரோடு பேச முடிந்தது. பேசியதும் ஒரு பதிவினை இட்டேன். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் காய்ச்சலின்றி மகிழ்ச்சியில் இப்போது, எப்போதும்போல்!!!

இந்த ஒரு வாரத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. பல புதிய வலைப்பூக்கள் என் மனதின் நண்பர்களாகின. சந்தோஷமாக இருக்கு!!!

இருப்பினும் பிரியும் வேளை, என் மனதில் கவலை இல்லாமல் இலலை! இன்னமும் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்ற பாரமும் என்னை வாட்டுகிறது. என்ன செய்வது? காலம் அதன் ஓட்டத்தை அதன் சுயவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. 18 ஆம் தேதி நேற்று ஆரம்பித்ததுபோல் எனக்குத் தோன்றுகிறது. எனது சில பதிவுகளுக்குள் ஒருவாரம் சட்டென்று முடிவடைகிறது. அதிசயமானது காலம்!!!!

இரண்டாம் சுற்றில் ஆசிரியராக வர வாய்ப்பு வரும்; அப்போது நிச்சயம் முதலில் நானே வருகிறேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

இனி- எங்கு, எப்படி, சந்திப்போம் - என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை என்றாலும், "இறைவா எங்களை அவ்வப்போது இந்த இணையம் வழி சந்திக்க ஆசீர்வதியும்" என்ற பிரார்த்தனையோடு விடைபெறுகிறேன்.

இறைவனின் அன்பும் சமாதானமும் உங்கள் எல்லோருக்கும் இன்றும் என்றும் இருக்க என் இனிய பிரார்த்தனைகள்.

பாசமுடன்
என் சுரேஷ்

3 comments:

 1. அருமை நண்ப சுரேஷ்

  இறைவனின் ஆசிர்வாதம் எப்பொழுதும் தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்.

  அழகாக, ஒரு புதிய முறையில், மனங்கவர்ந்த பதிவர்களை மற்றவர்களின் மனம் மகிழும் வண்ணம் அறிமுகப் படுத்திய விதம் அருமை அருமை.

  அத்தனை நல்ல உள்ளங்களையும் அறிமுகப் படுத்தியமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. தங்கள் வலைச் சரம் வித்தியாசமாக வெகு அருமையாக அமைந்தது. மனித நேயத்தை முன்னிறுத்தும் பதிவுகள், அழகி பற்றிய இன்ஃபர்மேடிவ் பதிவு என கலவையாக இருந்தது. வாழ்த்துக்கள். நான் சற்றும் எதிர்பாராத விதமாக எனது வலைப்பூவைப் பற்றிய பதிவினை வெளியிட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இத்தனை பேரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னைச் செதுக்கிக் கொள்ள நான் எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி எதுவுமே சாதித்திராத நான் இந்த வலையுலகில் சம்பாதித்தது உங்கள் போன்றோரின் ஊக்கத்தையும் அன்பையும்தான். இது என்றும் தொடர்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 3. இனிமையான வார்த்தைகளால் எனது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தின சீனா ஐயாவிற்கும் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் எனது பலகோடி நன்றிகள்.

  வாழ்க வளமுடன்
  என் சுரேஷ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது