07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 1, 2010

முதற்பேறு

வலைச்சரத்திற்கு வாசகனாக வந்து சென்றுள்ளேன் ஆனால் வாசகனே வாத்தியாரக வருவது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பதிவர்களை பட்டைதீட்டுவதற்கு இப்படியொரு பாட்டையை அமைத்திருப்பது வரவேற்கதக்கது.
இந்த வாய்ப்பைத் தந்த ஐயா சீனா அவர்களுக்கும் குழுமத்தினர்களுக்கும் இனி ஒரு வாரக்காலத்திற்கு வாசிக்கப்போகும் பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்பித்துக் கொண்டு...

மாணவ அனுபங்களை ஆசிரியராக உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என்னைப்பற்றி சொல்வதற்கு இருந்தாலும் இல்லை என்றாலும் நான் என்னை அறிந்த விதத்தை இங்கு கூறலாம்.

நிகழ்வுகளின் நிழல்கள் இது எனது வலைதளம் பல அனுபவங்களை சுற்றுலாக்களை தொடராக தொட்டிருக்கிறேன் அப்படி தொட்டதில் என் மனதை கவர்ந்த நாடுகளை சுற்றிருக்கிறேன்.கதைகளையும் கட்டுரைகளையும் கட்டிருக்கிறேன்.
நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் என்னால் சிரிக்கத்தான் முடியும் உங்களை சிரிக்கவைக்க முடியுமா? என்றால் ஒரே ஒரு இடுக்கையில் முயற்சி செய்தேன் சிரித்தீர்களா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் எனக்கு இருந்தாலும் கவிதைக்கும் என்னுடன் வருவதற்கு ஆர்வம் இருக்கவேண்டும் அல்லவா
6வது அறிவு இது கவிதைக்காக ஆரம்பிக்கப்பட்ட வலை. அதில் விளைந்திருப்பது கவிதைதானா? என்பதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். (அப்பா..தப்பிச்சேன்)

கிளிக்..கிளிக்..கிளிக்.. யாரோ எடுத்த புகைப்படங்களாக இருந்தாலும் நானும் நீங்களும் இரசிப்பதற்கு இந்த வலையை விரித்திருக்கிறேன்.
(ஓசில பிளாக் கொடுக்குறாங்கங்குறதுனால இத்தனையான்னு கேட்கப்படாது)
இந்த மூன்றும் என் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளமாக இருக்கிறது.
மனிதர்களுக்கு இருக்கும் மகா திறமைகளை வார்த்தைகளால் மட்டுமல்ல புகைப்படங்களிலும் வண்ணமலர்களாய் வடிவம் காட்ட முடிகிறது.

இந்த வலைதளங்களின் மூலமாக எனக்கு நல்ல இதயங்கள் கிடைத்திருக்கிறது. இதோ(ஐயா சீனாவின் மூலம்) கிடைக்கவும் போகிறது.
நமக்கு கிடைக்ககூடிய நண்பர்களை பொருத்துதான் நமது வாழ்க்கையில் பெறக்கூடிய நன்மைகள்.

எழுத்தின் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்தாலும் அந்த ஆர்வத்திற்கு தண்ணீர் ஊற்றி கலையெடுத்து உரம்போட்டது வளர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் என்று சொல்வது மிகையல்ல.

புத்தருக்கு ஞானம் வந்தது போதிமரம் என்பார்கள் ஆனால் என்னைப்போன்ற பலர் கற்பதற்கு பாலைவனம் இன்றும் போதித்துக் கொண்டுதானிருக்கிறது.
மனிதநேயத்தை காக்கும் மனிதர்களாய்.

பாலை எனக்கும் தமிழுக்கும் சாலைப்போட்டது இங்கு பொருள் சம்பாதித்தோமோ இல்லையோ தமிழை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற மனதிருப்தி அமீரகப் பதிவர்களின் உள்ளத்தில் இல்லம் அமைத்திருக்கிறது.

பெருசா தத்துவம் சொல்றதா யாரும் நினைக்க வேண்டாம் இதெல்லாம் பாலைவன உலறல்கள். வறட்சியான பூமியாக இருந்தாலும் பலருக்கு வளமான வாழ்க்கையை தந்துக் கொண்டிருக்கிறது.

இதுமுதல்பேறு
அது சுகப்பேறாக இருக்கவேண்டும் என்பதில்
அக்கரை எனக்கு
இக்கரை வந்து
நீங்கள் தரும் சக்கரையை
சுவைப்பதற்கு நான்
வைகரை வருகிறேன்.

நன்றி.........என்னுடன் இவ்வளவு தூரம் வந்தமைக்கு.!

23 comments:

  1. அன்பின் இஸ்மத் - அருமையான சுய அறிமுகம் - சுட்டிகள் சரியாக வேலை செய்ய வில்லை போலிருக்கிறதே - சரி பார்க்கவும். நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

    ReplyDelete
  2. வருக வருக....

    ReplyDelete
  3. வாழ்த்துகள் இஸ்மத் :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரரே!உங்களது எழுதுத்துப்புலமையை வலைச்சர ஆசிரியர் பணியிலும் காட்டுங்கள்.காண காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  5. அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தொடக்கமே சிறப்பாக இருக்கிறது, வரும் பதிவுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அட, நீங்கதான் இந்த வார வலைச்சர ஆசிரியரா!! வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாங்க வாங்க :)


    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் பிரியாணி பாய் :))

    ReplyDelete
  10. வாழ்த்துகள் இஸ்மத்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்..!! வரும் பதிவுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் இஸ்மத்.

    ReplyDelete
  13. அண்ணன், வாழ்த்துக்கள் அண்ணன்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்களை அள்ளித்தந்த

    ஐயா சீனா,
    கலாநேசன்,
    இராமசாமி கண்ணன்,
    சகோதரி ஸாதிகா,
    துளசிகோபால்,
    சகோதரி சித்ரா,
    ராஜாகமால்,
    நட்புடன் ஜமால்,
    சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
    சகோதரி ஹுசேனம்மா,
    அப்துல்மாலிக்,
    சென்ஷி,
    செல்வராஜ் ஜெகதீசன்,
    ஜெய்லானி,
    சே.குமார்,
    இராகவன் நைஜிரியா,
    நிஜாமுதீன்,
    ஸ்டார்ஜன்,

    உங்க அத்தனை பேர்களுக்கும் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நன்றி...
    விஜய்,
    அன்பரசன்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் இஸ்மத் பாய்

    ReplyDelete
  19. வாழ்த்துகள் இஸ்மத் பாய்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது