07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 19, 2010

சனிக்கிழமை எலி சேட்டை

எலி: எம்மா இந்த புறாவா வறுக்கவா? இல்ல பொரிக்கவா?
பயிண்டரம்மா: புறாவா டேய் எலி இது மைனா டா 
எலி: அப்படியா, டெக்னாலஜி ரொம்ப வளர்ந்திருச்சுமா புறாவா அனுப்பினா பொரிச்சு தின்னுருவோம்னு எவனோ மைனாவில தூது அனுப்பியிருக்கான். இருந்தாலும் பரவாயில்ல மைனாவ பிரியாணி போட்டுருவோம்.
பயிண்டரம்மா: தூதா! அது என்னனு சொல்லி?
எலி: இருங்க வாசிக்கிறேன், "அன்புக்குரிய வலைச்சர ஆசிரியருக்கு,
நான் ரொம்ப நாளா வலைச்சரத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீப காலமாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று ரீமிக்ஸ் என்கிற பேரில் இந்த வார ஆசிரியர் போடும் மொக்கையால் அட்கொள்ளா துயரில் டெம்ப்ரவரியாக படிப்பதை நிறுத்தியுள்ளேன். அதனால் அந்த ஆசிரியரை ஞாயறு மாலைக்குள் பணி நீக்கம் செய்ய வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உடனே என்னக் காரணம் என்று நீங்கள் கேட்டால் மேலே படிக்கவும்.
ஏழாவது அறிவு என்று ஒரு பதிவர் அருமையாக கவிதைகளை எழுதுகிறார், சிறிய வரிகளில் சிறப்பாக சொல்லும் இவரை அறிமுகப்படுத்தவில்லை.
 மன விழி என்று குறுகிய வரிகளில் நிறைவாக மனதில் தங்கும் வரிகளை எழுதும் இவரையும் அறிமுகப்படுத்தவில்லை
 அனுபவ சித்தன் குறிப்பு என்று சிறு சிறு கவிதைகளை பெரிய ரசனையோடு எழுதும் இவரையும் அறிமுகம் செய்யவில்லை 
தமிழனின் வாசல் என்று எட்டு வரிக்கவிதையை நளினத்தோடு எழுதும் ஒரு கவிஞரையும் அறிமுகம் செய்யவில்லை.
கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற மொழியோடு வார்த்தைகளால் நம்மைக் கட்டிப்போரும் ஒரு பதிவரையும் அறிமுகப்படுத்தவில்லை.
ஒற்றைச் சிறகின் பயணம் என்று வெகுநாட்களுக்கு முன்பு வரை சிறப்பாக எழுதிவந்த ஒரு பதிவரை அடையாளப்படுத்தவில்லை.
எளிய தலைப்புகளில் வலிய கருத்துக்களைச் சொல்லும் இந்த பதிவரையும் இனம் காட்டித் தரவில்லை.
ஆகையால் இவ்வார ஆசிரியரை கடுமையாக ......."
அட இது அட்ரஸ் மாறிவந்த கடிதாசி, நாங்கூட நமக்கு வந்ததோனு நினைச்சுட்டேன். 
பயிண்டரம்மா: ஆனால் இவர் குறிப்பிடுற பதிவர்கள் எல்லாம் சூப்பரு. சரி சரி மைனாவிலையே கட்டிவிடு சேர வேண்டிய இடத்தில சேர்ந்தா சரி.
எலி: அம்மா கட்டிவிட்டா அப்ப மைனா!
பயிண்டரம்மா: கட்டிவிடாலேனா நைனாகிட்ட சொல்லிருவேன்!  

{ப்ளாக்பட்டி ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் போன் செய்து எலி கேட்கிறார்}
எலி: ஏப்பா போஸ்ட் மாஸ்டரே! வரிஅச்சு நகர்லயிருந்து ஏதாவது கடிதாசி வந்துச்சா?
போ.மா.: இல்லையே சார் ரெண்டு நாளா எந்த கடுதாசியும் வரலையே! சபாஸ் சூப்பரு.
எலி: ஹலோ இது போஸ்ட் ஆபிஸ்தான, எதுக்கு சபாஸ்?
போ.மா.:சாரி சார், கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன் இந்த மாணவியப் பத்திப் படிச்சுகிட்டுயிருந்தேன் அதான்.
எலி: சரி சரி கடுதாசி வந்தா அனுப்பிவையுங்க 
போ.மா.:திருந்தவே மாட்டேங்களாட! ஒருதடவ சொன்னா தொரியாதா?
எலி: இங்க பாருங்க நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டுறீங்க ?
போ.மா.:அய்யோ சாரி சார், விபத்துக்களைப் பத்திய அருமையான பதிவைப் படிச்சதும் கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்.
எலி: சரி அப்படியே உங்க ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லிருங்க 
போ.மா.:அதுக்கு சட்டத்தை தயிரியமா அனுகுங்க 
எலி: சம்மந்தமில்லாம பேசிறீங்க எதுக்கு சட்டத்தை அணுகனும் இது குடியுரிமைதானே
போ.மா.:அய்யோ நான் உங்கள் சொல்ல சார், இணைய பாதுகாப்புப் பத்தி படிச்சேன்ன அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.
எலி: ஒக்கே என்ன வச்சு காமெடி பண்ணலைலே 
போ.மா.:பார்த்தா பாவமாத் தான் இருக்கு 
எலி: எனது பாவமிருக்கா சார் எனக்கு வந்தா கடுதாசிய படுச்சு பார்த்துட்டேங்களா
போ.மா.:சார் திரும்ப சாரி நான் மதுரை பெரியாஸ்பத்திரி பத்திப் படிச்சேனா அதான் கொஞ்சம் எமோசன் 
எலி: சார் ரொம்ப கோவம் வரவைக்காதீங்க சார்
போ.மா.:நீ கோவப்பட்டால் நானும் கோவப்படுவேன்.
எலி: இப்ப என்ன சொல்லப் போறீங்க 
போ.மா.:மறுபடியும் சரிசார் இந்த முன்னேற்ற பதிவைப் படிச்சதும் எமோஷன் ஆகிட்டேன்.
எலி: சரி வெண்ணை
போ.மா.:இங்க பாருங்க எலி, இப்படியெல்லாம் திட்டுனா உங்க கடுதாசிய கொடுக்க மாட்டேன்.
எலி: சார் நானும் ஒரு நல்ல கவிதைய படிச்சுட்டு அதோட பேரத்தான் சொன்னேன்.



கண்ட்ரோல் பாண்டியன்: என்ன எலி நம்ம பதிவர்களோட பதிவெல்லாம் வாசிச்சேங்களா?
எலி: ஆமா எதிரின்னு ஒரு பதிவப் படுச்சேன் உடனே சாவிக் கட்டைய மன்னிச்சுருலாம்னு தோனுச்சு
கண்ட்ரோல் பாண்டியன்: அய்யா! வில்லன் இல்லாட்டி கதை நகராதுய்யா  அந்தப் பதிவு நிஜ வாழ்க்கைக்குப் போருந்தும்ய்யா
எலி: அப்புறம் திடீர் உறவுகளைப் பத்திப் படிச்சேன்யா அந்த திரைக்கைய நண்பனா ஆக்கிகலாமனு யோசிச்சேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: ஆக்கிக் கலாம் ஆனா திரைக்கை உன்னை புரிஞ்சுக்கனும்ல
எலி: அடுத்து கட்டபொம்மனைப் பற்றிப் படித்தேன்ய  அப்படியே பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடிருலாம்னு நினைச்சேன்யா
கண்ட்ரோல் பாண்டியன்: ஏப்பா எலி நம்ம கதைய முடிச்சுக் கொடுத்துட்டு என்கவேனாம் போ மகராசா
எலி:  ஞாபகக் குறிப்பைப் பற்றிப் படிச்சேன்யா அந்த ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன்யா 
கண்ட்ரோல் பாண்டியன்: இங்க பாரு நீ நல்ல நல்ல பதிவெல்லாம் படிக்கிற சரி ஆனால் நம்ம கதைக்கு ஏத்தமாதிரி மட்டும் நடந்துக்கோ 
கரச்சான்: எலி வரிஅச்சு நகரிலிருந்து கடிதாசி வந்திருச்சு! வந்து பாரு.
எலி: சீக்கிரம் பிரி எங்க மாமனாரு என்ன சொல்லிருக்காருன்னு படி!
கண்ட்ரோல் பாண்டியன்: எ எலி உனக்கு இன்னம் அந்த நினைப்பு இருக்கா!
எலி: ஆமா ஒரு கதையினு இருந்தா எப்படியும் க்ளைமேக்ஸ்ல ஒரு ஹீரோயின் எனக்குத்தான். அப்புறம் ஒரு டுயட் அப்புறம் இது மாதிரி கலாய்க்கிற கவிதை எல்லாம் எழுதணும் அப்படின்னு காதல்கோட்டை ரேஞ்சுக்கு நினச்சுகிட்டுயிருக்கேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: உண்மையில இந்த கடுதாசியில் அந்த சாவிக் கட்டை தேடுற புதையலுக்கான பாஸ்வேர்ட் க்ளு இருக்கு இங்க பாரு எலி உன்னோட சேட்டையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு எங்களோட சேர்ந்து அந்த புதையல எடுக்கிற வழியப் பாரு அப்பத்தான் உனக்கு அந்த பேனாவைத் தருவோம்.
கண்ட்ரோல் பாண்டியன்: சரி அந்த வரிஅச்சு தலைவர் அட்மின்னுக்கு நாளைக்கு நம்ம ரெண்டு ஊரும் சேர்ந்து புதையலை எடுக்கலாம்னு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க 

புதையல் வேட்டை நாளையுடன் நிறையும்...


எடிட்டர் கார்னர்:


திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்
செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்
புதன்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்
வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்

ப்ளாக்பட்டியை சேர்ந்த கதாப்பாத்திரங்கள்.
எலி
கண்ட்ரோல் பாண்டியன்
அட்டை
கரச்சான்,
பயிண்டரம்மா:


ஜீரோ கோட்டை சேர்ந்த கதாப்பாத்திரங்கள்.
சாவிக் கட்டை
திரைக்கை


வரிஅச்சு நகரச் சேர்ந்த கதாப்பாத்திரம்
அட்மின்
இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்

5 comments:

  1. இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
    -நீச்சல்காரன்


    ..... ha,ha,ha,ha,ha....good one.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னையையும் குறிப்பிட்டதுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  3. திங்கட்கிழமையிலிருந்து நடந்துவரும்
    மினி சீரியலும் விளம்பர இடைவேளையும்
    அரு...மை!

    ReplyDelete
  4. எலியின் வேட்டை தொடர்கிறது ...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது