07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 19, 2010

கள்ளக்காதல் - வலைச்சரம் #2

கள்ளக்காதல் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். காதலென்று வந்த பிறகு கள்ளக்காதல் என்ன நல்ல காதல் என்ன?

அறுபது வயதுக்குட்பட்ட யார் கொலைசெய்யப்பட்டாலும் காவல் துறை கள்ளக்காதல் என்ற கோணத்தில் விசாரிக்க தவறுவதேயில்லை. பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு கள்ள உறவுகளே காரணமாய் இருப்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.

தினத்தந்தியில் தொடர்ந்து கள்ளக்காதல் செய்திகளை விரும்பி வாசிக்கும் டீ கடை டக்கால்டி ரொம்ப வருத்தப்படுகிறார். சமுதாயம் சின்னாபின்னமாகிவிட்டதாம். அழுகிறார். பெண்கள் எல்லாம் ஒழுக்கம் தவறி தொட்டு தாலிகட்டிய கணவனையே கொன்றுவிடுவதாய் வேதனைப்படுகிறார்.

இப்படி வேதனைப்பட்டு புலம்புகிறவர்களை நாம் இரண்டு கோஷ்டிகளாக பிரிக்கலாம்.

1. கள்ளக்காதலை கண்டு புலம்புகிறவர்கள்.
2. கள்ளக்காதலால் விளையும் கொலைகளை கண்டு புலம்புகிறவர்கள்.

இரண்டும் பிரிவுக்கும் கோட்ஸேவுக்கும் காந்திக்குமான வேறுபாடு உண்டு. ஹிட்லருக்கும் மண்டேலாவுக்குமான வேறுபாடு.

கள்ளக்காதலில் ஈடுபடுவர்களை பாவிகள் என்று நீங்கள் கருதினால் நீங்கள் ஒரு வடிகட்டிய பாஸிஸ்டு.

இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கள்ளக்காதல் பற்றி எப்போதாவது பேச முற்பட்டால் முதலில் இந்த இரண்டில் நீங்கள் எந்த கோஷ்டி என்று முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக ஒருவனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அவன் அலுவலகத்தில் ஒரு பெண் (வனிதா) சுமாராகத்தான் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு அவள் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வந்துவிடுகிறது. வரக்கூடாதென்று சொன்னால் நீங்கள் ஒரு பாஸிஸ்டு. வரும். ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கும்போது ஈர்ப்பு வரும். வரவே இல்லை என்றால் நீங்கள் சித்த வைத்திய சாலையை அணுகுவது உசிதம்.

வந்தும் அதன் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு தொடராமல் இருப்பவன் புத்திசாலி. - ஒதுங்கிக்கொள்ளலாம்.

பின்விளைவுகளை சமாளிக்கத் தெரிந்தவன் பாக்கியசாலி. -
இறங்கி கும்மி அடிக்கலாம்.

சரி ஹீரோவுக்கு வனிதா மேல் ஈர்ப்பு. அவள் போகும்போது வரும்போது கவனிக்கிறான். அவளையே பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவளோடு பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இரவில் தன் மனைவியோடு புணரும்போது அவளையே நினைத்துக்கொள்கிறான். இதுவரை ஹீரோவுக்கும் வனிதாவுக்கும் இடையே இருப்பது கள்ளக்காதலா?

நெவர்.

அடுத்து ஒரு படி மேலே. வனிதாவும் ஹீரோவை கவனிக்கிறாள். வனிதா திருமணம் ஆகாதவள். ஹீரோ மேல் அவளுக்கும் ஒரு ஈர்ப்பு வருகிறது. இருவரும் கேபிட்டேரியாவில் சந்தித்து பேசுகிறார்கள். நம்பர் பரிமாறுகிறார்கள். செல்போனில் பேசிக்கொள்கிறார்கள். அவன் அவள் அழகை வர்ணிக்கிறான். அவள் அதையே விரும்புகிறாள். இருவரும் ஒரு நாள் சினிமாவுக்கு போகிறார்கள். அவன் அவளுக்கு பூ வாங்கிக்கொடுக்கிறான். அவளும் அதை ஒரு மனதாக தலையில் வைத்துக்கொள்கிறாள் - திருமணம் ஆன ஆணோடு ஒரு பெண்ணுக்கு என்ன சகவாசம் என்று கேட்பவரா நீங்கள். நீங்களும் ஒரு பாஸிஸ்டு தான்.
தன் மனம் விரும்பிய எந்த ஒரு ஆடவனோடும் இச்சை வளர்த்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.

இப்படியே அவர்களது தொடர்பு வலுவடைந்து தனியாக சினிமா பீச் என்று சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சினி ஞாயிறுகளில் ஹீரோ வனிதாவுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். ஹீரோ வனிதாவை குஷிப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் . இப்போது இது கள்ளக்காதலா? லேசா. லைட்டா?.ஓ.கே.

இனி ஹீரோ மனைவி வனிதா இவர்கள் மூவரும் கள்ளக்காதல் கொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

முதலில் வனிதா கொலைசெய்யப்படுகிறாள். வனிதாவை ஹீரோ அல்லது அவனது மனைவி கொன்றிருக்கவேண்டும். முதலில் ஹீரோ வனிதாவை கொன்றுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

ஹீரோ எதற்காக கொலை செய்வார்?

பொதுவாக இரண்டு காரணங்களுக்காக கொலைகள் செய்யப்படுகின்றன. ஒன்று தன்னை காப்பாற்றிக்கொள்ள இன்னொன்று பழி வாங்க.

#1 - பாதுகாப்பிற்காக கொலை செய்தல்.

மனைவிக்கு விஷயம் தெரியாது. ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை வனிதா ஒரு நாள் கண்டுபிடிக்கிறாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறாள். ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் ஹீரோ திருமணமானவன் என்று தெரிந்தும் வனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாரு வற்புறுத்துகிறாள். அதே சமயம் தன்னுடைய இந்த உறவு வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார் ஹீரோ (த்தா...அஞ்சுறாராமா? ஏன் அவ கூட சுத்தும் போது அஞ்சலையா? என்று கேட்பவரா நீங்கள். நீங்கள் ஒரு அறைகுறை பாஸிஸ்டு.கூடிய விரைவில் முழு பாஸிஸ்டு ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது).

அல்லது வனிதா ஹீரோவோடு சுற்றிய புகைப்படங்களை கைப்பற்றி அதை ஹீரோவின் மனைவிக்கு அனுப்பப்போவதாக பயமுறுத்தலாம். பிளாக் மெயில் செய்யலாம்.

இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் ஆபத்தில் சிக்கிவிட்டதாக ஹீரோ உணர்ந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை செய்யலாம்.

இங்கும் ஒரு முரண். பணக்காரர்கள் இதே ரீதியில் கொலை செய்வதுண்டு. ஆனால் தப்பித்துவிடுவார்கள். சட்டம் நம் கையில். ஆனால் ஏழைகள் அழுதபடியே சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கதற கதற தீர்ப்பிடப்படுவார்கள். நாம் தினத்தந்தியில் படித்து (ஒக்கால படுத்த இல்ல சாவு) என்று சபிப்போம்.

மேற்சொன்ன சினாரியோவில் கள்ளக்காதலுக்காக கொலை நடந்ததா? ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை நடந்ததா? ஆபத்தை ஏற்படுத்தியது கள்ளக்காதல் அல்ல. நமது மனது. மூளையை நம்பி வாழாமல் மனதையும் சென்டிமென்டையும் நம்பி ஏமாந்து போகும் தப்பு தப்பாக முடிவெடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன மனம். அந்த மனம் தான் வனிதாவை திருமணத்திற்கு வற்புறுத்த வைத்தது. அவள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அல்லது இதுவரை செய்தது பாவம் என்று ஒதுங்கி வாழ்ந்திருக்கலாம்.

போட்டோவை காட்டி வனிதா மிரட்டியிருந்தால் ஹீரோ என்ன செய்திருக்க முடியும்?

கிரைம். இங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கள்ளக்காதல் என்பது இயல்பான ஒன்று. அதை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியாதவர்கள் தொடர்கிறபோது புத்திசாலித்தனமாக கையாளவேண்டும். கள்ளக்காதல் பற்றிய போதிய புரிதலும் அதன் எல்லைகளும் தெரியாமல் வெறும் மனதைக்கொண்டு தங்களை இயக்கி மூளையை கழட்டி வைத்துவிட்டு செயல்படும் சிலர் இப்படி தங்களையும் எதிராளியையும் அவர்களின் தலைமுறையையும் துயரத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு.

இங்கும் பணம் பிரதானம். ஏழைகள் அறியாமையில் ஏதோ ஒரு ஆத்திரத்தில் படாரென கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் தண்டனை அனுபவித்து தங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கி தங்களை சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்குகிறார்கள்.

முன்பெல்லாம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லிப்பார்த்தார்கள். இப்போது பாதுகாப்போடு உறவுகொள் என்கிறார்கள். கள்ளக்காதலுக்கும் அதே தான். பாதுகாப்போடு உறவு கொள். இல்லையா அதிலிருந்து வெளியே வர கொலை மட்டுமே தீர்வல்ல. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் இல்லை என்று ஸ்லாகிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். அங்கே கலாசாரம் என்ற கன்ட்ராவி கிடையாது. பாதுகாப்பாக கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். அற்ப வீம்புக்கு கத்தியை தூக்கி கோடாரியை தூக்கி கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் ஜெயிலில் வாட நம்மை போல் அயல் நாட்டினர் என்ன முட்டாள்களா?

மேலும் அங்கே இது போன்ற சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ள தீர்த்து வைக்க வழி இருக்கிறது. இங்கே காவல் நிலையத்திற்கு போய்
"அந்த பொண்ணோட நான் தெரியாம தொடர்பு வச்சுகிட்டேன். இப்போ அவ போட்டோ எடுத்து என்ன மிரட்டுறான்னு சொல்லிப்பாருங்க. உங்க நிலைமை அதோ கதி தான்."

எனவே கள்ளக்காதலை இன்னொரு நூறு ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் தவிர்ப்பது நலம். இல்லையேல் பாதுகாப்போடு புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.

என் மனதில் இந்த டாப்பிக் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இப்போ கண்ண கட்டுது. ஆக குட் பை.

டிஸ்கி: இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.

---------------------

அறிமுகங்கள்

1. எனக்கு சத்யராஜ் மிக பிடித்த நடிகர். மிக பிடித்த பேச்சாளர் இல்லை. அவரது நக்கல் நடிப்புக்கு நான் ரசிகன். குறிப்பாக எல்லா வித கேரக்டரும் பொருந்திப்போகிற ஒரு கதாபாத்திரம் அவர். அவரது பெயரில் ஒரு வலைப்பூவா? அதிக பதிவுகள் இல்லாத போதும் இவரது ஆரம்பமே அசத்துகிரது. தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

திரும்பவும் Dr. விஜய்

2.சில முதல்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வதுண்டு. முதல் முத்தம் முதல் காதல் முதல் கன்ட்ராவி இப்படி. ஆனால் இவர் தொகுத்திருப்பது பாடகர்களின் முதல் பாடல்கள். அருமையான இந்த தொகுப்பு வியக்க வைக்கிறது.

பாட்கர்களின் முதல் பாடல்கள்.

3. இந்த பதிவர் ஒரு மாணவி என்று நினைக்கிறேன். இவர் விடுத்த கொலைமிரட்டல் படித்தால் மிரண்டு போய்விடுவீர்கள்.

4.நமீதா திரைவிமர்சனம். ஹாப்பாயில். என்று அதிரடியாக கடையில் அசத்தி வருபவர் கட்ஸ்.

5.மங்குனி அமைச்சரை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபமாக பெண்களின் வாக்குகளை அள்ளும் விதமாக அவர் எழுதிய ஒரு உஷார் பதிவு விழிப்புணர்வு.

6. கிரைம் பிரியரான எனக்கு இவரது துப்பறியும் பதிவுகள் நல்ல தீனி.

அடுத்த பதிவில் சாரு என்ற புதிய பதிவரையும் லக்கிலுக் என்ற கத்துகுட்டியையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

19 comments:

 1. //அடுத்த பதிவில் சாரு என்ற புதிய பதிவரையும் லக்கிலுக் என்ற கத்துகுட்டியையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.//

  அட்ரா சக்கை அட்ரா சக்கை, இந்த ஒரு வாரத்தில் இன்னும் வேறெ என்னென்ன இருக்கோ

  பிரபல பதிவர் லக்கிலுக்கை கலாய்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 2. கலக்கலா அறிமுகப் paduththureenga .... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. // பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது.//

  சிந்தனைக்குரிய கருத்து.

  ReplyDelete
 4. //ஈர்ப்பு வரும். வரவே இல்லை என்றால் நீங்கள் சித்த வைத்திய சாலையை அணுகுவது உசிதம்.//

  அடப்பாவமே! ஏண்ணே, இங்கிலிஷ் மருந்து கை குடுக்காதா?

  ReplyDelete
 5. இருவரின் மனம் பொருந்தியபின் தான் காதல் பிறக்கிறது. எனவே கள்ளக்காதல் என்பதை நானும் மறுக்கிறேன்.

  அதே சமயம் நம் சமுதாய அமைப்பு, குடும்ப அமைப்பில் அன்புப் பரிமாற்றம் இல்லாததே, திசை மாறக்காரணம்.

  அன்பை பகிர்வோம்.

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு முன்னே, உங்கள் பாணியிலான கருத்துக்களும் சுவை!

  ReplyDelete
 7. சரியான கோணம்.பத்து வருடங்களுக்கு முன்பு எய்ட்ஸ் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் அதை நடத்திய பெண்மணி ஒருவனுக்கு ஒருத்தி என்று நூல் விட்டுக் கொண்டிருக்க ''அதெல்லாம் இரண்டாயிரம் வருசமா வள்ளுவர்.ஏசு எல்லாம் சொல்லியே கேட்கலே.காண்டம் பத்திச் சொல்லிக் கொடுங்க'என்று பேசி 'கலாச்சாரத்தைக் கெடுக்க வந்த கழிசடை'என்ற உயரிய பட்டத்தைப் பெற்றேன்.அந்தப் பட்டத்தை அப்படியே உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete
 8. //பிரபல பதிவர் லக்கிலுக்கை கலாய்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்//

  பிரபல பதிவருன்னாலே நமக்கு பபபயம் :)

  ReplyDelete
 9. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
  என் கட்டுரையின் சாராம்சம் இது தான்.
  கள்ளக்காதல் வேண்டுமானால் கலாசார பிரச்சனையாக இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அதன் பொருட்டு அரங்கேறும் கொலைகளுக்கு உளவியல் ரீதியான பிரச்சனையே அன்றி வேறொன்றும் இல்லை.

  ReplyDelete
 10. //'கலாச்சாரத்தைக் கெடுக்க வந்த கழிசடை'என்ற //

  பட்டமளிப்பு விழா எப்போது?

  ReplyDelete
 11. அருமையான தொகுப்பு. மறுபடி கதை படிக்க ஒரு இடம் கிடச்சிருச்சு எனக்கு. தேன்க்ஸ் ணா..:)

  ReplyDelete
 12. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி விசா.

  ReplyDelete
 13. தலைப்பே இது விசா எழுதுனதுன்னு கண்டுபிடிக்க உதவுகிறது :).

  நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 14. நன்றி விசா.
  நீங்கள் என்னை அறிமுக படுத்துனைதை விட மிக சந்தோஷமான விஷயம் இந்த வாரம் முழுதும் உங்கள் பதிவுகளை படிக்க போகிறேன் என்பது தான்.

  தொடர்ந்து கலக்குங்கள்.

  எப்படியெல்லாம் பாதுகாப்பா புத்திசாலித்தனமா கள்ள காதல் வசுகிறது அப்படிங்கறத பத்தி இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சிருந்து விலாவரியா உங்க விலாசத்தோடு எழுதி இருதீங்கன்னா நிறைய பேருக்கு இப்போ இல்லைனாலும், பின்னாளில் உதவியா இருந்து இருக்கும். ஏன்னா, தமிழ் பேப்பர்ல கள்ள காதல் column -ன்னு தனியா போடுற அளவுக்கு நிறைய கள்ள காதல் செய்தி வருது. அப்படி போட்டா, அது sports column - விட ரொம்ப பெருசாவும் இருக்கும்.

  அதனால் நீங்க மறுபடியும் உங்க கள்ள காதல கண்டின்யு பண்ணுவீங்கன்னு (Writing ;-)) நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

  ReplyDelete
 15. அன்பின் விசா - நீண்டதொரு இடுகை - காதலை அலசி ஆராய்ந்து போடப்பட்ட இடுகை - இவ்வளவு எழுதிய பிறகும் இன்னும் நெரெய எழுத இருக்குன்னு ஒரு டிஸ்கி வேற . ம்ம்ம்ம்ம்ம்ம்

  புதிய அறிமுகச் சுட்டிகள் அனைத்திற்கும் சென்று வருகிறேன்.

  நல்வாழ்த்துகள் விசா -

  நட்புடன் சீனா

  ReplyDelete
 16. அன்பின் விசா - நீண்டதொரு இடுகை - காதலை அலசி ஆராய்ந்து போடப்பட்ட இடுகை - இவ்வளவு எழுதிய பிறகும் இன்னும் நெரெய எழுத இருக்குன்னு ஒரு டிஸ்கி வேற . ம்ம்ம்ம்ம்ம்ம்

  புதிய அறிமுகச் சுட்டிகள் அனைத்திற்கும் சென்று வருகிறேன்.

  நல்வாழ்த்துகள் விசா -

  நட்புடன் சீனா

  ReplyDelete
 17. யப்பா ..!! பெரிய பதிவு...இருங்க படிச்சிட்டு வரேன் ..!!! :-)

  ReplyDelete
 18. அடடா சாருவையும் அறிமுகப்படுத்தப் பொறிங்களா... முதலில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி (பாடகர்களின் முதல் பாடல் - (1)).... இதற்கெ வியந்த பாராட்டியுள்ளமைக்க நன்றி அனால் இதை விட பெரிய தொகுப்பு இன்னம் இருக்கிறது பாகம் 2 ஆக வெளியிடப் போகிறேன்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது