07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 9, 2010

சாப்பிடலாம் வாங்க

மனுஷன் ஓடி ஆடி வியர்வை சிந்தி உழைக்கறதெல்லாம் எதுக்காக இந்த அரை சான் வயித்துக்குதானேன்னு என் மாமா சொல்லுவாரு. பழைய சாதம் பச்சை வெங்காயமா இருந்தாலும் சரி பப்பரப்பா என பரப்பி வைத்திருக்கும் பஃபேவாக இருந்தாலும் சரி உணவை ரசித்து உண்பது எனக்குப் பிடிக்கும். இன்று உணவகங்களை அறிமுகப்படுத்தும் பதிவுகள் சிலவற்றையும், ருசியான, அதே சமயம் சிம்பிளான உணவுக்குறிப்புகள் தரும் பதிவுகள் சிலவற்றையும் பார்ப்போம்.

தலைநகரத்தில் வசிக்கும் விக்னேஷ்வரி எப்போவாவது சில உணவகங்களைப் பற்றி பதிவிடுகிறார். சைனீஸ் உணவகத்தைப் பற்றி பஞ்சாபியின் கவரேஜ்.

சென்னையிலிருக்கும் மெஸ்கள், குறிப்பிட்ட ஏரியாவாசிகளுக்கும் மட்டுமே பரிச்சயமான பல நல்ல ஹோட்டல்களை அறிமுகப்படுத்துகிறார் கேபிள் சங்கர். சாம்பிளுக்கு சைதாப்பேட்டை வடைகறியை சுவையுங்கள்.

எங்கே போனால் என்ன சாப்பிடலாம் என்று ஒரு டேட்டாபேஸ் வைத்திருக்கிறார் சரவணக்குமரன். இந்தப் பதிவில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன ஸ்பெஷல் என்ற தகவலிருக்கிறது.

எங்க வீட்டு சமையல் என்ற பெயரில் சமையல் குறிப்புகளையும் கொடுக்கிறார் கவிதா. இந்த நீர் உருண்டையும் எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு பார்க்கும்போதே டக்கராக இருக்கிறது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்று விளக்கும் சங்கரி மேடத்தின் காளான் சாப்ஸ். முயற்சித்து பார்த்தேன். நன்றாக வந்திருந்தது.

இவர்களோடு என் பங்கிற்கு சென்னையில் நான் ரசித்த உணவகங்களைப் பற்றி என் தளத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

அதோடு கையேந்திபவன்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இங்கே.

11 comments:

 1. ஆகா சாப்பாட்டை பற்றிய ஆராய்ச்சியா?

  நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல சுவையான அறிமுகங்கள்!

  ReplyDelete
 3. சாப்பாடு ..? அதானே முக்கியம்...!!

  ReplyDelete
 4. நல்ல நல்ல டாபிக்ல பின்னிட்டீங்க! பாராட்டுக்கள், வித்யா!

  ReplyDelete
 5. எங்க காணோமே ன்னு பார்த்தேன்...!;)

  ReplyDelete
 6. :) வித்து.. ரொம்ப மரியாதையோட தங்களின் இடுகை இங்கே சேர்க்கப்பட்டதுள்ளது ன்னு மெயில் அனுப்பி இருக்கீங்க பாருங்க. எனக்கா இம்புட்டு மரியாதை ன்னு?? ஒரே ஆச்சர்யமா போச்சி... :))))

  நன்றி.. :))

  ReplyDelete
 7. நல்ல பதிவு.. :)

  ReplyDelete
 8. ஆகா என்னையும் சேத்துக்கிட்டீங்களா வித்யா, நன்றி.....நன்றி....எல்லாமே சூப்பர் டிப்ஸ்.....வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. முதல் முறையா நம்மளை சினிமா தவிர.. ஒரு புது விஷயத்துல பகிர்ந்திட்டதுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 10. அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 11. நல்ல சுவையான அறிமுகங்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது