கிராபிக் டிசைனிங் கத்துக்கனுமா?
➦➠ by:
சுகுமார் சுவாமிநாதன்
வலையுலகில் அறிவூட்டும் பதிவுகளை பகிர்வோர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறான பதிவுகளுக்கு ஹிட்ஸ் அவ்வளவாக வரவில்லையென்றாலும், இவர்களது பதிவுகள் காலம் கடந்தும் தேடப்படும் கட்டுரைகளாக நிற்கும். வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று அறிவூட்டும் பதிவுகளில் முதல்கட்டமாக கணிணி வரைகலையினை கற்றுத்தரும் பதிவுகள் குறித்து அறிமுகப்படுத்துகிறேன்.
கிராபிக் டிசைனர்கள் எனப்படும் வரைகலை பணியாளர்களின் முக்கிய மென்பொருளாக விளங்குவது போட்டோஷாப். இதை வைத்து திருமண ஆல்பங்கள் டிசைன் செய்யலாம், சாலைகளை அலங்கரிக்கும் (!) பிளக்ஸ் பேனர்கள் டிசைன் பண்ணலாம். வலைதளங்களுக்கு, மொபைல் போன்களுக்கு என இன்னும் பல்வேறு தளங்களில் இயங்கும் வரைகலை பணியாளர்களும் இந்த மென்பொருள் குறித்து அறியாமல் இருக்க மாட்டார்கள்.
இதனை நீங்கள் வீட்டிலிருந்தே கற்கலாம். ஒரு குழந்தைக்கு சொல்லித் தருவது போல பதிவர் வேலன் அவர்கள் போட்டோஷாப் குறித்தும் பல இதர கணிணி மென்பொருட்கள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அயராத இவரது முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.
எஸ்.கே இயக்கி வரும் மனம்+ வலைத்தளத்தில் அருமையான காரியம் செய்கிறார். அனிமேஷன் சாப்ட்வேரான அடோப் ஃபிளாஷ் குறித்த செயல்முறை கற்றல்களை பதிவிடுகிறார். முயன்று பாருங்கள் மிக எளிதாக இருக்கிறது. இவர் தொடர்ந்து எழுத வேண்டிக்கொள்கிறேன். பல பல பலருக்கு இவரது பதிவுகள் பயன்பட போகிறது.
போட்டோஷாப்பில் புகைப்படங்களை மெருகேற்றுவது குறித்த கலர் கரெக்ஷன் உள்ளிட்ட அருமையான வழிமுறைகளை சொல்லித்தருகிறார் பதிவர் மகேஷ். இந்த டெக்னிக்குகள் குறித்து இவர் குறைவாகவே பதிவிட்டிருந்தாலும் இவை ஆச்சரியப்படுத்தும் அசாதாரண வழிமுறைகள். இவர் இதுபோன்ற பதிவுகளை நிறைய தர வேண்டும் என்பது எனது ஆவல்.
போட்டோஷாப் உள்ளிட்ட இதர கணிணி பயன்பாடுகளுக்கு உதவக்கூடிய அறிவூட்டும் பதிவுகள் கற்போம் கற்பிப்போம் என்பதை கருத்தாக கொண்ட இந்த வலைதளத்திலும் கொட்டிக்கிடக்கிறது. படித்து பயன்பெறலாம்.
கற்றுக்கொள்ள எளிதாகவும், வரைகலையாளர்களுக்கு அவசியமானதாகவும் விளங்கும், அடோப் இன் டிசைன், அடோப் இல்லஸ்ட்டிரேட்டர் போன்ற மென்பொருட்கள் குறித்த செயல்முறை கற்றல் பதிவுகள் அனேகமாய் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். தெரிந்தவர்கள் இவை குறித்தும் பதிவிட்டால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வரைகலை பதிவர்கள் யாரையேனும் நான் தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும்..
நாளை சந்திப்போம்
அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை
|
|
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ReplyDeleteThank you very much.
ReplyDeleteநல்லதொரு தகவல் மிக்க நன்றி...
ReplyDeleteஉபயோகமான பதிவுங்ணா. ஆங்கிலத்தில் இது போல பல இருந்தாலும், தமிழ் மொழியில் கற்கும்போது அதன் சுவையே அலாதி. நல்ல தலைப்புகளில் பதிவுகளை தருகிறீர்கள், நன்றி.
ReplyDeleteபோட்டோசாப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளும்வண்ணம் படங்களுடன்
ReplyDeleteகற்றுத்தருகிறார் http://tamilpctraining.blogspot.com/ சென்று படித்து பயனடையுங்கள்
நான் ரொம்ப எதிர்பார்த்த பதிவு. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சுகுமார்.
ReplyDeletethanks
ReplyDeleteபயனுள்ள பதிவு.
ReplyDelete// ம.தி.சுதா //
ReplyDeleteநன்றி பாஸ்...
OMK...
ReplyDeleteMe too... ?
Thank you boss! :)