07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 1, 2010

வெள்ளித்திரை மலர்கள்

எந்த பத்திரிக்கையை எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலும் வாசிக்கப்படும் பகுதி - சினிமாவை பற்றியதாகத்தான் இருக்கும். அதில் அப்படியொரு கவர்ச்சி இருக்கிறது. வலையுலகிலும் அதே நிலைதான். ஹிட்ஸ் அதிகம் கிடைப்பது, சினிமா சம்பந்தமான பதிவாகத்தான் இருக்கும். அப்படியான சினிமாத்துறை பற்றிய பதிவுகளை இன்று காணலாம்.

பத்திரிக்கையாளர் அந்தணனின் வலைப்பூவில், சினிமாக்காரர்கள் பற்றிய நகைச்சுவை துணுக்குகள் கொட்டி கிடக்கின்றது. டி.ஆருடன் நெருங்கி பழகியவர் என்பதை டி.ஆர். பற்றிய பதிவுகள் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் கலகலப்பாக இருக்கிறது.

அடுத்து பத்திரிக்கையாளர் உதயசூரியன் வலைப்பூவை சுடச்சுட பார்த்துவிடலாம். ஹீரோவாகவும் நடித்த வில்லன் நடிகர் மன்சூரலிகானின் காமெடி கூத்துகளை இங்கே உதயசூரியன் சொல்லியிருக்கிறார். படா தமாசு!

எழுத்தாளர் தமிழ்மகன், திரையுலகத்தினருடனான தனது அனுபவங்களை முன்பு நிறைய எழுதி வந்தார். தற்போது தனது ஹாட் நாவலான ‘வெட்டுப்புலி’யால் பிஸியாக இருக்கிறார். அதை பற்றிய பதிவுகளே வருகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தையே சிரிக்க வைத்த கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு வசனம் எழுதியவரின் நிலை, பின்னாளில் வருத்ததிற்குரியதாக இருந்ததை இப்பதிவில் எழுதியது யோசிக்க வைத்தது.

எழுத்தாளர் அஜயன்பாலா, தமிழ் சினிமாவில் வில்லன்கள் அடைந்து வரும் மாற்றங்கள் பற்றி எழுதிய இக்கட்டுரை சுவையானது. உலக சினிமா பற்றி இவர் எழுதும் கட்டுரைகள் உலகத்தரமானவை.

ரஜினியைப் பற்றி ஒரு செய்தியும் தவறவிடாமல் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், பத்திரிக்கையாளர் வினோவின் ‘என்வழி’யை தொடர வேண்டும். ரஜினி பற்றிய செய்தி, எங்கிருந்தாலும் இங்கு வந்துவிடும். ரஜினி எப்பொழுதோ எழுதியதுக்கூட, இங்கே வாசிக்க கிடைக்கும். இது போல. ரஜினி ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத வலைத்தளம்.

வலையுலகில் சினிமா பற்றிய புள்ளிவிவரங்களை, தகவல்களை சுவாரஸ்யமாக பல பதிவுகளில் எழுதியவர் முரளிகண்ணன். தற்போது இவருடைய பதிவுவரத்து குறைந்துவிட்டாலும், சமீபத்தில் எழுதிய ’திரையுலக சகோதர-சகோதரிகள்’ பற்றிய இப்பதிவு, இவர் எப்பொழுது பார்மில் இருப்பதை காட்டுகிறது.

ஆழமான சமூக கருத்துக்களுடன் கூடிய எழுத்துக்கு சொந்தக்காரராகிய சுகுணா திவாகர், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பற்றி சீரியஸாக எழுதிய பதிவுகள், அவருடைய ரசிகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டியது. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் போதும், அதை பற்றி அவருக்கே உரிய பார்வையில் அவர் எழுதும் விமர்சனப்பதிவுகள் - காத்திருந்து வாசிக்க தூண்டுபவை.

தமிழ் திரையுலக வரலாற்றில் இது ஒரு முக்கிய பதிவு. ஏன், கல்வெட்டு என்று கூட சொல்லலாம். ‘இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை...’ டைப் பதிவென்றாலும், உண்மைத்தமிழன் ரொம்ப உழைச்சிருக்காரு!

பதிவர் முரளிகுமார் பத்மநாபன் அவர்கள் ராம்கோபால் பற்றியும், அவருடைய இயக்கம் பற்றியும் இப்பதிவில் சொல்லியிருக்கிறார். வரவிருக்கும் ரத்த சரித்திரத்தின் முன்னோட்டமாக இப்பதிவு இருக்கிறது.

இன்னும் நிறைய சினிமா தொடர்பான வலைப்பூக்கள் இருக்கின்றன. என்ன, எல்லாம் ‘எந்திர’மயமாகவே இருக்கிறது!

.

5 comments:

 1. அட! அட! சினிமாவைப் பற்றி இத்தனை வலைப்பக்கங்களா! எல்லோமே புதுசுங்கண்ணா நமக்கு! அறிமுகம் செய்ஞ்சதுக்கு நன்றிங்கண்ணா!

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள்! நன்றிங்க!

  ReplyDelete
 3. சினிமாவைப் பற்றி இத்தனை வலைப்பக்கங்களா! அனைவரையும் அருமையா அறிமுகம் செஞ்சுருக்கீங்க.. நன்றி.

  ReplyDelete
 4. புதியதும் இருக்கு பார்க்கலாம் :-))

  ReplyDelete
 5. நன்றி வசந்தகுமார், எஸ்.கே., ஜிஜி, ஜெய்லானி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது