07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 25, 2010

வரம் தரும் வலைச்சரம்ஒரு ஆச்சர்யமான உண்மையை சொல்லப்போனால், "என்னடா வலைச்சரத்தில் எழுத நம்மை அழைக்கவில்லையே" என நான் சமீபத்தில்தான் யோசித்தேன்.  நாம் எவை குறித்து நம் எண்ணங்களை செலுத்துகிறோமோ, அவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டு அவைகளை கையில் கிடைக்கபெறுகிறோம் என்கிற பிரபஞ்ச விதிப்படி நான் யோசித்த இரண்டே வாரங்களில் ஆனந்த அதிர்ச்சியாக சீனா ஐயா அவர்களிடமிருந்து மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. 


இரண்டு ஆண்டுகளாக வலைமனை என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறேன். அதிகமாக நகைச்சுவை சார்ந்த பதிவுகளே இருக்கும். முதன் முதலில் ஒரு நாள் ஐ.பி.எல் குறித்து போட்டோ கமெண்ட்ஸ் போடப் போய் அதற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.  மற்ற போதைகளை போல் அல்லாமல் பாராட்டு போதை மனிதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தது. பின்னூட்டங்கள், ஓட்டுகள் எல்லாம் தந்த உற்சாகத்தில் தொடர்ந்து நகைச்சுவை போட்டோ கமெண்டுகள் அதிகம் பதிவிட்டேன். பல நண்பர்களின் அறிவுறுத்தலின்படி இந்த வருடம் அதிகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 


நான்-பிக்ஷன் வகை புத்தகங்களை படிப்பதில் எனக்கு அலாதியான பிரியம். சமீபகாலங்களில் தொடர்ச்சியாக புத்தகங்கள் குறித்து  பதிவிட்டு வருகிறேன். 


வலைச்சர அறிமுகத்தில் எனது வலைப்பூ குறித்த சுட்டிகள் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு பதிவர்களை பற்றி குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.


எனக்கு அறிமுகமான முதல் வலைப்பூ சிங்கப்பூரை சார்ந்த பதிவர் எம்.எஸ்.வி முத்து அவர்களின் குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன். சமூக அக்கறை கொண்ட பதிவுகள், அறிவியல் சார்ந்த பதிவுகள் தருவதில் இவர் நிபுணர்.


பதிவுலகம் பற்றிய விழிப்புணர்வையும், திரட்டிகளில் இணைப்பது போன்ற இதர வலைப்பூ விஷயங்களையும் அறியத்தந்தவர் அண்ணன் கேபிள் சங்கர். ஏதாவது சந்தேகம் என்றால் எப்போது போன் செய்தாலும் விளக்கி சொல்வார். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் புதுசு பழசு என பார்க்க மாட்டார். பல பதிவர்கள் உயரம் செல்ல இவர் ஸ்பிரிங் பேட் போல செயல்படுபவர்.


இனி வலைச்சர அறிமுக பதிவில் எனது வலைப்பூ குறித்த சில சுட்டிகள்.


எனது வலைப்பூவில் எனக்கு பிடித்த பதிவுகள்


சென்னை சூப்பர் கிங் விஸ்வநாதன் ஆனந்த்மறையவில்லை மைக்கேல் ஜாக்சன்
மறைந்தது நாகேஷ் மட்டுமல்ல
வலைமனை ஹாட் சிப்ஸ்எனது வலைப்பூவில் அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்


தமிழக அரசு வழங்கும் எந்திரன்

ஐபில் 2010 போட்டோ கமெண்ட்ஸ்
ஜுஜு அனிமேஷனில் சுறா பட விளம்பரம்
சென்னையில் பயங்கரம் - பதிவர்கள் அட்டகாசம்
எந்த அளவிற்கு ஒரு விஷயத்தை பெறுகிறோமோ அதே நேரத்தில் அதை திருப்பியும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் சீரான ஓட்டம் நம்முள் எப்பொழுதும் பொங்கிப் பெருகி பாய்ந்து கொண்டிருக்கும் என்றொரு தத்துவ நியதி உண்டு. நிறைய நண்பர்களின், முகம் தெரியாத வாசகர்களின் ஓட்டுக்களை, பின்னூட்டங்களை, வாழ்த்துக்களை, பாராட்டுகளை பெற்றிருப்போம். ஆனால் அதே அளவு பிறர் குறித்த அறிமுகங்களை, அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய வாழ்த்துக்களை, பாராட்டுக்களை திருப்பிக்கொடுக்க வழிவகை செய்யும் இந்த வலைச்சர வாரம் ஒரு வரம் தரும் வரப்பிரசாதம்.


வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் சீனா ஜயா அவர்களுக்கும், இதர வலைச்சரக்குழுவினர் கயல்விழி முத்துலட்சுமி மற்றும் பொன்ஸ் பூர்ணா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


நாளை சந்திப்போம்.அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

21 comments:

 1. கலக்குங்க சுகுமார். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நான் தான் முன்னமே சொன்னேனில்லையா.. உனக்கு நல்லா எழுத வரும்னு.. இப்ப பாரு.. ஆல் த பெஸ்ட்

  ReplyDelete
 3. வாழ்த்துகள் சுகுமார். பணி தொடர்க..

  ReplyDelete
 4. தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

  http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. வாழ்த்துகள் சுகுமார்ஜி!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. வாழ்த்துகள் சுகுமார் அவர்களே ! அறிமுகங்கள் அனைத்தும் அபாரம். வாரம் முழுதும் ரசிக்கிறோம். நன்றி.
  பி.கு.:
  //நாம் எவை குறித்து நம் எண்ணங்களை செலுத்துகிறோமோ, அவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டு அவைகளை கையில் கிடைக்கபெறுகிறோம் என்கிற பிரபஞ்ச விதிப்படி //

  யூ-ட்யூபில் RSA Animate - Smile or Die என்ற தலைப்பில் http://www.youtube.com/watch?v=u5um8QWWRvo வரைபடச்சொற்பொழிவுக் குறும்-படத்தைப் பார்த்துவிட்டு அது கிளப்பிய சிந்தனைகளோடு வலைச்சரத்துக்கு வந்தால், இங்கே நீர் எழுதிய (மேலே மேற்கோள் காட்டியுள்ள) வரி அப்படத்தின் கருத்தினை ஒட்டியே இருந்தது குறித்து ஆச்சரியப்பட்டேன்...

  ReplyDelete
 9. நன்றி .. ரமேஷ் ...

  ReplyDelete
 10. கேபிள் சங்கர் / shortfilmindia

  என்றென்றுமுள்ள தங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 11. ஆதிமூலகிருஷ்ணன்..
  நன்றி தலைவா,...

  ReplyDelete
 12. அன்பரசன்..
  நன்றி...

  ReplyDelete
 13. நன்றி வசந்த்ஜி... :)

  ReplyDelete
 14. எஸ்.கே..
  மிக்க நன்றி....

  ReplyDelete
 15. அவனடிமை..
  தங்கள் அன்பிற்கு நன்றி.. தங்கள் காணொளி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி...

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 17. இனிய வாழ்த்து(க்)கள், வலைச்சர ஆசிரியரே!

  ReplyDelete
 18. // Jaleela Kamal ///
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 19. / துளசி கோபால் //
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது